Thottal Thodarum

Jun 30, 2010

மிளகா

milagai-03

மதுரைக்கார பசங்க நட்புக்காக உசுரையே கொடுப்பாய்ங்கனு பஞ்ச் லைன் போட்டிருக்காங்க.. அதுக்காகவே ஒரு கதையை ரெடி பண்ணியிருக்காங்க. ரொம்ப நாளைக்கு பிறகு இயக்குனர் ரவிமரியா இயக்கியிருக்கிற படம். மிளகா


milagai-01

நட்ராஜ் மிளகா மண்டி ஓனரோட பையன். வீட்டுல பொறுப்பில்லாம, ஆனா ஊருக்கும், நட்புக்கும் பொறுப்பா இருக்கிறவரு. அவருடய நட்பு கும்பல்,சிங்கம்புலி, ஜெகன், இன்னும் ரெண்டு பேர். அதில் ஒருவர் வாய் பேச முடியாதவர். நண்பனின் கடனை வசூல் செய்ய உதவும் நட்ராஜை பார்த்து ஊரில் உள்ள ரவுடி பிரதர்ஸின் கஸ்டடியில் இருக்கும் ஒரு பெண், நட்ராஜை வைத்து தன்னை காத்துக் கொள்ள நினைக்கிறாள். அதற்காக அவர் தன்னை காதலிப்பதாய் பிரச்சனையை கிளம்பிவிட, அதில் மாட்டுகிறார் நட்ராஜ்.. மீதி என்ன எனபது வெள்ளிதிரையில்.

 milagai-04

நட்ராஜ் ஒரு மினி ரஜினி என மனதில் நினைத்துக் கொண்டு, அதே போல பேசுகிறார், சண்டை போடுகிறார், மார்கெட்டில் வடக்கத்தி பெண்ணுடன் நடனம் ஆடுகிறார். எல்லா சகவாசங்கள்  இருந்தாலும், நண்பர்களுக்கு என்றால் உயிரை கொடுக்கிறார். திடீரென கருப்பண்ண சாமி பக்தனாகி உக்கிரம் கொண்டு அருவாளெடுக்கிறார். ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வரும் ஆசையோடு எல்லாவற்றையும் செய்திருகிறார். சில சமயங்களில் சரிபட்டு வந்தாலும், காதல் காட்சிகளில் முடியல.

படம் நெடுக மீண்டும் தன் ஸ்பாண்டேனிட்டியான டயலாக்குகளால் அதிரவும், புன்முறுவல் பூக்கவும் செய்திருக்கிறார் சிங்கம்புலி. இவர்களுக்கெல்லாம் பைனாஸ்செய்யும் நண்பராக இயக்குனர் ஜெகன். அந்த வாய் பேச முடியாதவர் “பே..பே” என்று சொல்வதை விளக்கும் இடங்களில் சிங்கம்புலி அட்டகாசம்.  அந்த வாய் பேச முடியாதவர் சிவாஜியின் பழைய  படத்தை போட்டு சாமி முன்னால் சிவாஜி அ..அம்மா..அப்பா, கடவுள் என்பதை, பார்த்து இவரும் பேச விரும்பும் காட்சி சிரிப்பை  வரவழைத்தாலும் லேசாக நெருடுகிறது.
milagai-10 வழக்கம் போல வில்லன்கள், அடியாட்கள், ஏய்…எய்ய்… என்ற கத்தல்கள், வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க, மாப்ள,  அருவாள் என்று டெம்ப்ளேட் மதுரை பட வரிசையில் காட்சிகள் அணிவகுத்திருக்கிறது. மூன்று வில்லன்களில் நான் கடவுள் பிச்சைக்கார முதலாளி மட்டும் நினைவில் நிற்பார். கதாநாயகி இருவர், முதல் பாதியில் டூயட் பாடுவதற்கும், ஒன் சைட் லவ் செய்வதற்கு ஒருத்தியும், இன்னொருவர் மெயின் ஹிரோயினும். இரண்டாவது கதாநாயகிக்கு வழக்கம் போல் தொப்புளூக்கு கீழே பாவடை கட்டி ஹீரோ மீது உரசி உரசி பேசிவிட்டு, ஹீரோ காதல் செய்வது வேறு ஒருத்தியை என்று தெரிந்ததும் விட்டுக் கொடுத்து அழுவதும் என்பதுமாய் இருக்கிறார். கதாநாயகி கோரிப்பாளையும் கதாநாயகி. யாரும் தமிழ் பெண்களை பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை இதில் விலக்கிக் கொள்ளலாம். பெரிதாய் ஏதும் சொல்ல முடியாவிட்டாலும், குறையொன்றும் இல்லை. இவரை ஏன் பிரதர்ஸ் கோஷ்டி தங்கள் கட்டுப்பாட்டில்  வைத்திருக்கிறது என்பதற்கான ப்ளாஷ்பேக் கொஞ்சம் பில்டப் அதிகமாகவே செய்தாலும். தெரியும் போது இண்ட்ரஸ்டிங் ட்விஸ்ட்தான்.

நட்ராஜை தேடி வில்லன் கோஷ்டிகள் வீட்டிற்கு போக அங்கே வந்த ரவுடிகளை பார்த்ததும் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே வந்த அவரது பாட்டியும், அப்பாவும், அவர்களுடனே சேர்ந்து மதுரைவரை பஸ்ஸ்டாண்டிலும், ஊரிலுமாய் நட்ராஜுனுடய பாட்டியை தேடுவதாய் அலைவதும், நடுநடுவே பாட்டி நட்ராஜிடம் பேசும் வசங்களும் இண்ட்ரஸ்டிங்.

என்ன தான் பரபரப்பாய் கதை சொல்ல முயற்சித்திருந்தாலும், என்பதுகளில் வெளியான படங்கள் போலவே இருப்பது பெரிய மைனஸ். தூசு கிளம்பத்தான் செய்கிறது.

மிளகா - காரமில்லை

கேபிள் சங்கர்

Jun 29, 2010

கொத்து பரோட்டா-29/06/10

வர வர..  நான் எதை எழுதினாலும்  காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுறானுவுக.. இது போல அவ்வப்போது சில சமங்களில் பல பேருக்கு நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது என்றாலும். சமீப காலமாய் என்னுடய திரைவிமர்சனங்களை எல்லாம் கொஞ்சம் கூட மாற்றாமல்  காப்பி பேஸ்ட் எடுத்து பதிவிடும் பதிவர்கள் அதிகமாகிவிட்டார்கள். நான் எழுதறதையெல்லாம் எடுத்து போடுவதை பார்த்தால் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. அவ்வளளளவூ நல்லாவா எழுதறேன்?.  எப்படியும் நீங்கள் எழுதியது இல்லை என்று நீங்கள் அடுத்து எழுதும் முதல் வரியிலேயே தெரிந்து விடும். ஒரு சிறிய வேண்டுகோள் தயவு செய்து என் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கையும் காப்பி பேஸ்ட் எடுக்கும் போது சரி செய்து போட்டால் தன்யனாவேன்..
#######################################################
போன வாரம் காரில் பெங்களூர் சென்றோம், ஒரு அழுத்து அழுத்திவிட்டு நிமிர்ந்தால் ஒரு டோல் வந்துவிடுகிறது. 35,40 என்று பணம் வாங்குகிறார்கள். இங்கிருந்து கர்நாடகா எல்லைக்குள் சுமார் நான்கைந்து இடங்களில் கப்பம் கட்டிவிட்டுத்தான் போக முடியும். கணக்கு பார்த்தால் பெட்ரோல் போட்டு தனியாக காரில் போவதற்கு பதிலாய் ப்ளைட்டில் போவது சீப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. வெண்ணெய் போன்ற ரோடுகளில் ஆங்காங்கே சிறு சிறு இடறல்களை தவிர.. ஸ்மூத்.
#######################################################
இந்த வார சந்தோஷம்
cinema viyabaram ad திருப்பூர்
 பதிவர் முரளிகுமார் பத்மநாபன், செம்மொழி மாநாட்டில் என்னுடய புத்தகமான “சினிமா வியாபாரம்” புத்தகத்தை வாங்கியதை பற்றி பேசிக் கொண்டிருந்தார். வந்த இரண்டு நாட்களில் 38 புத்தகங்கள் விற்றிருப்பதாக சொன்னதாக சொன்னார். ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. அதை விட பெரிய சந்தோஷம் அவர் சொன்ன ஒரு விஷயம். அங்கே டிஸ்ப்ளேயில் சுற்றி சுஜாதாவின் புத்தகங்களுக்கு நடுவே “சினிமா வியாபாரம்” டிஸ்ப்ளேயில் வைக்கப்பட்டிருந்தது என்று அவர் சொன்னதுதான்.. என் “தல”யின் புத்தகங்களுக்கு நடுவே.. அஹா.. நன்றி முரளிகுமார் பத்மநாபன். சமீபத்தில் உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்.
#######################################################
இன்னொரு சந்தோஷம்.
நாளை காலை ஜெயாடிவியில் காலை மலர் நிகழ்ச்சியில் என்னுடய பேட்டி வருகிறது. காலை சுமார் 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
#############################################################
 சென்ற முறை பெங்களூர் சென்று வந்ததிற்கும் இம்முறைக்கு பெரிய வித்யாசம் இல்லை. மிகக் குறுகிய கால பயணமே.. பெரும்பாலான நேரங்களில் காரிலேயே கழிந்துவிட்டது. பெங்களூர் ஒவ்வொரு முறையும் மேலும், தன்னை புதுப்பித்துக் கொள்ள விழைந்து கொண்டிருக்கும் நகரமாய் மாற த்ரூவே எலிவேட்டர்களும், பிரிட்ஜுகளும், மேலும் பல ஒன்வேக்களூமாய் தன் சுயத்தை இழந்து வெயில் எரிகிறது. மாறாதது பெங்களூரின் பெண்கள் மட்டுமே.. புதுசு புதுசாய் புஷ்பித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ப்ரிஜ் கனியாய் , உயரமாய், குள்ளமாய், தட்டையாய், அபரிமிதமாய், நேர் பார்வையாய், சிவக்காத கன்னங்களுமாய், அலட்சியமாய், உடல் வழுக்கிய டைட்சும், மனம் சுளுக்கும் கண்களுமாய், ம்ஹும்… பெ”ண்”களூர்.
#######################################################
இந்த வார குறும்படம்
காமெடி செய்வது அவ்வளவு சுலபமான வேலை கிடையாது. அதிலும் ரசிக்கக்கூடிய வகையில்… நளன் இயக்கியுள்ள இக்குறும்படம் செம இண்ட்ரஸ்டிங்..
#######################################################
இந்த வார விளம்பரம்

அந்த சிறுவனின் முகபாவங்களை பாருங்கள்… அவர்கள் சொல்ல வந்த செய்தி.. மிக இலகுவாய் உங்களை அடையும்..
#####################################################
இந்த வார தத்துவம்
வாழ்க்கையில் மிக சோகமானது என்னவென்றால் உங்களுடய குறிக்கோளை அடையாமலிருப்பதல்ல.. குறிக்கோளே.. இல்லாமலிருப்பதுதான்.
#######################################################
இந்த வார அட்வைஸ்
குரல் உயர்த்தி பேசுவதை விட, உன்னுடய வாதத்தின் தரத்தை மேம்படுத்து, அது உன்னை எதிர்த்து பேசுபவர்களுக்கு அதைரியத்தை வரவழைக்கும்.
#######################################################
ஏஜோக்
ஒரு ஊரில் வயதான பாதிரியார் இருந்தார். ஊரில் உள்ள முக்கால் வாசி பேர் பாவமன்னிப்பாக தாங்கள் செய்த அடல்டரி விஷயமாகவே சொல்ல, வெறுத்துபோன பாதிரியார் இனியொருவர் இதுபற்றி பாவமன்னிப்பு கேட்டால் தான் விலகி விடுவதாய் சொல்லவே, மக்கள் ஒரு கோட் வேர்ட் ஏற்பாடு செய்து கொண்டனர். ”தடுக்கி விழுந்துவிட்டதாக” சொல்வார்கள். அந்த பாதிரியார் இறந்த பிறகு புதிதாய் பதவியேற்றவர் மரியாதை நிமித்தமாய் மேயரை போய் சந்தித்தார். இந்த தடுக்கி விழுந்த மேட்டரை ஏதோ ப்ளாட்பார்ம் சரியில்லாம தடுக்கிவிழுவதாய் நினைத்து சொல்ல, அவர் சிரித்தார். பாதிரியார் மேயரிடம் “நீங்கள் இதை ஜோக்காக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்கள் மனைவியே போன வாரம் மூன்று முறை தடுக்கி விழுந்திருக்கிறார்” என்றார்.
#######################################################

Jun 28, 2010

பெ”ண்”களூர் படங்கள்

Photo0132
பதிவர் சென், ஆதி, அப்துல்லா

Photo0130
  அவுட் ஆப் போகஸ் ஜோசப்பூ, வெண்பூ, கார்க்கி

Photo0131
Photo0133
மங்களூர் சிவா, ஜீவ்ஸ், சென், ஜோசப்பு பால்ராஜ்

Photo0134
  அதே மங்சிங், ஜீவ்ஸ்,ஜோசப், சந்தோஷ்

Photo0135
நமிதாவே பாலோசெய்யும் பிரபல டி.பி.சி.டி.யுடன்..

மேலும் படங்கள். விரைவில்…. 
கேபிள் சங்கர்


டிஸ்கி: கொத்து பரோட்டா நாளை வெளிவரும்

Jun 26, 2010

களவாணி

kalava2 களவாணி போக்கிரித்தனம், செய்து திரியும் இளைஞர்களை குறித்து சொல்லும் தஞ்சை மாவட்டத்துக்காரர்களின் சொல்வடை. வழக்கமாய் உழன்று சேறாகிய மதுரையிலிருந்து சினிமா களத்திருந்து, தஞ்சைக்கு மாற்றியதற்கு நன்றி சொல்ல வேண்டும்.

விமல் +2 பெயிலாகிவிட்டு, துபாயிலிருந்து அப்பா அனுப்பும் காசை குடித்தும், சீட்டாடியும், பெண்களை சைட் அடித்துக் கொண்டும், நண்பர்களூடன் களவாணித்தனமான வேலைகளை செய்து கொண்டு திரியும் இளைஞன். இவன் இப்படி இலக்கில்லாம திரிவதை அவர் ஜாதகத்தின் காரணமாய் தான் செய்கிறான் என்று சாக்கு சொல்லிக் கொண்டு அவனுக்கு ஆதரவு கொடுக்கும் அம்மா சரண்யாவும், அவன் தங்கை.


kalava1
படத்தின் முதல் பாதி முழுவதும் விமலும், அவன் நண்பர்களும் சேர்ந்து களவாணித்தனம் செய்வதும், குடித்துவிட்டு கலாட்டா செய்வதும், காசுக்காக ஆட்டையை போடுவதுமாகத்தான் போய்ய்ய்ய்ய்ய்ய்க் கொண்டிருக்கிறது. ஓரிரு விஷயஙக்ள் ரசிக்க முடிந்தாலும், படம் முழுவதும் லைவாக எடுக்கிறேன் என்கிற கிளிஷேவை விட முடியாமல் ஒரே ப்ரேமில் நாலைந்து பேர் பேசுவதும், ஓவ்ர்லாப்பில் கத்துவதும் ஸ்…. முடியலப்பா.. தயவு செஞ்சு யாராவது ஒருத்தரை பேசவிடுங்களேன். எல்லா நேரத்திலேயும் இயல்பான வாழ்வில் நான்கைந்துபேரா? யார் சொல்வதையும் கேட்காமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்?.

பின்பு வழக்கமாய் ஒரு பெண்ணை பார்த்ததும் காதல் வருகிறது. ஒட்டாத காதல் பார்த்த முதல் நாளே என்னை கட்டிக்கிறேன்னு சொல்லு என்று கேட்பது ஓவர் என்றால் அதான் முதல் சீனிலேயே கேட்டுட்டாச்சே.. எப்படியும் ஹீரோயின் காதலிச்சுதான் ஆகணும் என்கிற நினைப்பில் திரைக்கதை படு மொக்கையாய் காதல் காட்சிகளில் பரிமளிக்கிறது. இதற்கு நடுவில் ஊர் பிரச்சனை, சாமி சிலை பிரச்சனை என்று பில்டப் செய்கிறார்கள். ஹீரோயினுக்கு ரவுடி அண்ணன் ஒருவனை வெளிப்படுத்த, இடைவேளை வேளை வரை பொறுமையை சோதிக்கிறார்கள். இம்மாதிரியான படங்களுக்கும் மிக இயல்பான காமெடியும், நல்ல அழுத்தமான காதல் காட்சிகளும், நல்ல பாடல்களூம் மிக, மிக அவசியம்.
படம் ரெண்டாவது பாதியில் கொஞ்சமாய் காதல் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க ஆரம்பிக்கும் முன்னரே வந்த சுவடில் திசை மாறி.. வில்லன், ஹீரோயின் கல்யாணம், சவால், ஊர் பிரச்சனை என்று ஒரு மாதிரி அத்திரி புத்திரியாய் முடிந்துவிடுகிறது. ஏதோ முன் பாதிக்கு இரண்டாவது பரவாயில்லை..

கதாநாயகனாய் பசங்க விமல், அந்த வேஷ்டி சட்டையும், தாடியுமாய் அசல் தஞ்சாவூர்கார குசும்புகளை ஓடுகிறது முகத்தில்.  கதாநாயகி ஓவியா.. க்யூட்டாக இருக்கிறார். வில்லனாக வரும் நண்பர் உதவி இயக்குனரின் நடிப்பு கச்சிதம், அவரது உயரமும், ஆகிருதியும் சரியாக சூட்டாகி பில்டப்பை கொடுக்கிறது.

படத்தில் பாடல்கள் காட்சிகள் இல்லாமல் முழுவதுமாய் இல்லாமல் ஆரம்பித்து ஓவர்லாப்பில் போடுவது நன்றாகவேயிருந்தாலும், பல சமயங்களில் ரிலீப் ஆக மாட்டேன் என்கிறது திரைக்கதை. கஞ்சா கருப்பு முதல் பாகத்தில் கடுப்படித்தாலும்.. இரண்டாவது பாதியில் முதற்பாதி காட்சிகளின் ரிப்பீட் புன்னகையை வரவழைக்கிறது. சில இடங்களில் சிரிப்பையும்..
kalava4 கதை, திரைக்கதை வசனமெழுதி இயக்கியிருப்பவர் சற்குணம். படத்தில் மிகப்பெரிய லெட்டவுன் எதுவென்றால் திரைக்கதை தான். கொஞ்சம் கூட சுவாரஸ்யமில்லாத முதல் பாதி திரைக்கதை. இரண்டாம் பாதியில் விழுந்து, விழுந்து எழுந்திருக்கிறது. ஒரிரு கேரக்டர்களை தவிர வேறு யாரும் தஞ்சை ஸ்லாங்கை பேச மாட்டென் என்கிறார்கள். எல்லாரும் வந்திட்டாய்ங்க. போய்ட்டாய்ங்க என்று மதுரை தமிழ் பேசி கொல்கிறார்கள். Give Us A Break Man..
அதே போல் க்ளைமாக்ஸில் கஞ்சா கருப்பு வந்துதான் ஹீரோயின் கல்யாணம் முன் கூட்டியே மாற்ற பட்டது தெரியவரும். ஆனால் அதற்கு முன்னரே இவர்கள் தெரிந்தது போல் பேசிக் கொள்ளவது எப்படி?

ஹீரோயின் அண்ணன் வந்ததும் பெரிதாய் ஏதோ வரப்போகுது என்று பில்டப் ஏறியது. அடுத்து வரும் காட்சிகளில் சுருதி குறைந்து, க்ளைமாக்ஸில் பஞ்சராகிவிடுவது ம்ஹும்.இடைவேளைக்கு பிறகு நடக்கும் சண்டை காட்சியில் விமலை திருவிழாவில் கொலை செய்ய முயற்சித்து முதுகு, மார்பு, கை காலெல்லாம் வெட்டு பட்டு அலையும் நேரத்தில் ஊர் ஏதும் பிரச்சனை செய்யவில்லை. விமலின் பெற்றோர்களும் ஒன்றும் கேட்கவில்லை. சம்மந்தமேயில்லாமல் க்ளைமாக்ஸுக்கு கொஞ்சம் முன்னால் திடீரென வந்து வீட்டிற்கு கிரகபிரவேசம் எனும் போது வருகிறார்கள்.


kalava3
பள்ஸ் பாயிண்டுகளாய் சொல்ல வேண்டுமென்றால் படத்தில் ஆங்காங்கே வரும் சின்னச் சின்ன காட்சிகளில் உள்ள ஐடியாக்களை சொல்லலாம். குறிப்பாக, கதாநாயகியின் அண்ணன் அவளை தேடி அலைகையில் சட்டென்று சைக்கிளோடு அவளை தூக்கி எதிர்பக்கம் பஸ்ஸுக்குள் போட்டு, ஒரு கையில் சைக்கிளோடு புட்போர்ட் அடித்து, அடுத்த ஸ்டாப்பிங்கில் இறக்கிவிடும் காட்சியும், கஞ்சா கருப்பின் முன் பாதி காட்சிகளை வைத்தே க்ளைமாக்ஸுக்கு உயிர் கொடுத்திருக்கும் இடங்களிலும், ஆங்காங்கே சில்லரையாய் சிதறும் குசும்புத்தனமான வசனங்களூம் தான். இயக்குனர் படத்திற்கு நிச்சயம் உயிராய் இருக்கும் என்று நினைத்து வைத்த ”அறிக்கி க்கும் LC112 கூட்டு” மேட்டர் எடுபடாமல் போய்விட்டது. அதை சரியாக பயன்படுத்தாத திரைக்கதையினால் தான்.

இன்னொரு பள்ஸ் பாயிண்ட் ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு. தஞ்சையின் பசுமையை கண்ணுக்கு குளீர்ச்சியாய் வழங்கியிருக்கிறார். பூ படப் புகழ் எஸ்.எஸ்.குமரனின் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் கேட்கும் படியாக ஹிட் ஆகியிருந்தாலும், படத்தில் அப்பாடல்களை பெரிதாக உபயோகபடுத்தவில்லை. போட்ட பாடலும் விஷுவல் இருக்கும் அளவிற்கு பாட்டு இல்லை. பின்னணி இசை ஓகே. ஆரம்பத்திலிருந்தே சிரியஸ் படமாகவும் இல்லாமல், காமெடி படமாகவும் இல்லாமல், காதல் கதையாகவும் இல்லாமல், மூணும் கெட்ட்டானாக திரைக்கதை போவதால் நகைச்சுவையாக முடியும் க்ளைமாக்ஸ் சரியான முறையில் ஏறாமல் போகிறது.  படத்தின் குழுவில் என் நண்பர்கள் மூலம் கேள்வி பட்டது. படத்தின் ஒரிஜினல் திரைக்கதை இதுவல்ல என்று. இயக்குனரே எங்கு காம்பரமைஸ் ஆனீர்கள்?
களவாணி- Average
கேபிள் சங்கர்

Jun 25, 2010

திட்டக்குடி

thittakudi movie latest stills (2) அழுக்கடைந்த டவுசர் தெரிய கட்டிய லுங்கி, மூணு மாச தாடி, வாயில் பீடி, மிச்ச நேரத்தில் சாராயம், ஊரோர இடிந்த வீட்டில் போகிற வருகிற பெண்களையெல்லாம் நொட்டிக் கொண்டிருந்தால்,சட்டை காலரை மேலே தூக்கி விட்டபடி, கொஞ்சம் கால் அகட்டி பின் பக்கமாய் சாய்ந்தபடி “ஏய்.. என்ன மாப்ள்..?” என்று பேசிவிட்டால் பருத்திவீரன் டைப்பில் ஒருகதை ரெடி..

வேலு சின்ன வயதிலேயே தறுதலையாய் ரஜினி, கமல் குருப் போட்டுசினிமா பார்த்து கெட்டொழிந்து, படிப்பை விட்டவன். கொளுத்து வேலைக்கு போக ஆரம்பிக்கிறான். கையில் காசு பார்க்க ஆரம்பித்தவுடன், குடி, கூத்தி என்று பார்க்கிற சித்தாள்கள், ஐயிட்டங்களையெல்லாம் ஊரோரமாகவும், அவர்ரவ்ர் வீட்டில் போயும், கட்டிட இடிபாடுகிடையேவும் நொட்டிக் கொண்டு அலைகிறான். தனக்கு தொழில் கற்றுக் கொடுத்த குருவான மேஸ்திரியின் பெண் வயதுக்கு வந்ததும், அவளை காதலிப்பதாய் சொல்லி, மிகவும் முயற்சி செய்து, ஒரு நாள் மேட்டர் முடித்துவிட்டு, கையில் காசை திணிக்கிறான். அனுபவித்துவிட்டு காசு கொடுத்தவனை கல்யானம் செய்ய மாட்டேன் என்கிறாள் அவள். ஒரு கட்டத்தில் திடீரென திருந்தி வாழ ஆரமித்து அவளை கல்யாணம் செய்ய இருக்க, திடீரென குடும்ப பிரச்சனையில் கல்யாணத்துகு போக முடியாமல், அவளை வேறு ஓருவனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒருவனுக்கு தகுந்த நீதி எழவு சொல்லியிருக்கிறார்கள்.

thittakudi-wallpaper-03
படம்  பூராவும், சாராய வாசனையும், விந்து வாசனையும் மூச்சடைக்கிறது. படம் நெடுக கதாநாயகனும், அவனது நண்பனும், யாராவது ஒரு அயிட்டத்தையோ, அல்லது சித்தாளையோ, அல்லது கதாநாயகியை மேட்டர் செய்ய முயற்சியோ செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கதாநாயகியின் அப்பா அவர் வயதிற்கு ஒரு மிடில் ஏஜ், சித்தாளுடன் தொடுப்பு வைத்திருக்கிறார். ஊரில் இருக்கும் அயிட்டம் சுஜிபாலாவுக்கு ஊர் சிறு வயது பெண்கள் எல்லாம் சேர்ந்து எவ்வளவுநாள் தான் இப்படியே இருக்கிறதுன்னு யோசிச்சு ஒருத்தனை கல்யாணம் செய்து வைக்க கிளம்புகிறார்கள். கதாநாயகி முதல் காட்சியில் எட்டி உதைக்கப்பட்ட ஒருவனுக்கு மனைவியாக்கப் படுகிறாள், அவன் குடிக்காக அவளை விபச்சாரியாக்கி விடுகிறான். கதாநாயகனின் அண்ணி, சோளக்காட்டில், கதாநாயகியின் முறைப் பையனுடன், மேட்டர் செய்து கொண்டிருக்கிறாள், அதை பார்த்துவிட்டதால் பொம்பளை பொறுக்கி கதாநாயகன் மேல் பழி போட, உச்சபட்ச கொடுமையாய், பெற்ற தாயே தன் முந்தானையை மூடிக் கொண்டு 
சோறு போடுகிறாள்.

thittakudi-wallpaper-02
ராவாக படம் எடுக்கிறோம் என்றோ, இல்லை லைவாக படம் எடுக்கிறோம் என்றோ, மிகவும் பீல் செய்து எடுக்குறோம் என்று எடுத்து முடியல…… ஒரு காமுக, பொறுப்பில்லாத ஒருவனால், ஒரு அப்பாவி பெண் வாழ்விழக்கிறாள், தன்னை கெடுத்து காசு கொடுத்தவனை என்னால் திருமணம் செய்ய முடியாது என்று சொல்லும் பெண்ணை பற்றிய கதை என்றால் அதுவும் இல்லை. அப்படி வீராப்பாய் பேசிய பெண் சம்மந்தமேயில்லாமல் ஒரு ஊரறிந்த குடிகாரனை கல்யாணம் செய்து, விபச்சாரியாவது படு சினிமாத்தனம். ஏனென்றால் வீட்டை விட்டு ஓடிப் போய் தனியாய் வேலை செய்து சம்பாதிக்கும் அளவுக்கு மனதிடம் உள்ள ஒரு பெண், இதற்கு ஒத்துக் கொள்ளவே மாட்டாள். கதாநாயகன் எவளோ ஒரு விலைமகள் இனிமே காசு எடுத்துட்டு இங்கே வராதே என்று சொன்னதாலேயே, மனம் திருந்துவது, கதாநாயகிக்கு கல்யாணம் ஆனதும், குடிகாரனாய் அலைவதும், தன் க்ண்முன்னே அவளை ஒரு க்ளாஸ் சாராயத்துக்காக விலை பேசுவதை பார்த்துக் கொண்டிருப்பதும், தேவையில்லாமல் அண்ணிக்கு கள்ளத்தொடர்பு மேட்டர், அம்மா சந்தேகப்படுவது என்று திரைக்கதை அபத்த உச்சங்கள் ஏராளம்,, ஏராளம்.  அதிலும் கதாநாயகனின் அப்பா கேரக்டருக்கும், மேஸ்திரிக்கு ஏதோ பல வருட பகை ஓடுகிறது என்று பில்டப் செய்துவிட்டு என்னவென்று பார்த்தால் சீட்டாடும் போது தோற்கிறவர்கள் பணமில்லை என்றால் எல்லா உடைகளையும், அவிழ்த்துவைத்து விட்டு போக வேண்டும் என்று சொன்னதை அவர் செயல் படுத்தியதால் தானாமாம் கிரகக் கொடுமைடா சாமி.. இருக்குற கொடுமையிலேயே பெரிய கொடுமை, பெற்ற தாயின் கண்களூக்கு மகன் காமுகனாய் தெரியவதற்காக, முழு மாராப்பு விளக்கி, தனியாய் ஒரு அம்மாவின் முலைகளூக்கு க்ளோஸ் கட் செய்த கொடுமையை என்னவென்று சொல்வது.
Thittakudi130510_1 ஒரு தாய் தன் மகனை காமுகனாய் சந்தேகப்பட்டால், அதை ஒரே ஷாட்டில் எழுந்து சாப்பாடு போடும் போதே, இழுத்து போர்த்திக் சொருகிக் கொண்டு வந்து நின்றாளே போதாதா.. ம்ஹும் இப்படி புலம்பிக் கொண்டேயிருக்க, கோபப்பட நிறைய இருக்கிறது.

பாராட்டக்கூடிய விஷயங்கள் என்றால், இயல்பான கிராமத்து பெண்ணை கண் முன்னே வளையவிட்டதும், அவரது வெட்கமும், விரகமும், கூடிய காதல் காட்சிகள்.  இன்னொருவர் ஒளிப்பதிவாளர் கருப்பையா..  அந்த கிராமத்துக் குளம், பகல், இரவு நேரக் காட்சிகள், சோளக்காட்டுக்குள் வரும் பாடல் காட்சிகள். என்று படத்தை சினிமாவாக பார்க்க வைத்த அவருக்கு பாராட்டுக்கள்.
திட்டக்குடி - எரிச்சல்
கேபிள் சங்கர்

Jun 24, 2010

எண்டர் கவிதைகள்-9

cute girl
ஆயிரம் பேர் கூட்டத்திலிருக்க,


என்னிடம் மட்டும் நேரம் கேட்டவள்..


நீ மட்டுமே எனக்கு ஸ்பெஷல் என்றவள்..


பதினாறு வோல்ட் மின்சாரமாய்


பஞ்சு முத்தமிட்டவள்..


நெஞ்சு அடிச்சுக்குது பாரென்று


மூச்சடைக்க வைத்தவள்.


நேரில் பேச முடியாததை


எஸ்.எம்.எஸ்ஸில் பேசியவளை


கண்டு கொண்டேன் வேறொரு


ஆயிரத்தில் ஒருவனுடன்.


கூட்டத்தில் உனக்குத்தான்


என்னை தெரியவில்லை..கேபிள் சங்கர்

Jun 23, 2010

ஆங்கிலத்தில் பதிவர்கள் செம்மொழி கலந்துரையாடல் ஒளிபரப்பு.

NDTV_Hindu NDTV HINDU  என்கிற சேனலில் செம்மொழி மாநாட்டுக்கு செலவு செய்யப்படும், சுமார் 350 கோடி தேவையா? இவ்வளவு பெரிய மார்கெட்டிங் தேவையா?,தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்களா? தமிழ் மொழியை கடை பெயர் பலகையில் போடச் சொல்லி கட்டாயப்படுத்துதல் நியாயமா..? வழக்குறைஞ்சர்கள் தமிழில் கோர்ட்டில் வாதிடுவது குறித்தான போராட்டம் தேவைதானா? தமிழர்கள் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்களா? தமிழ் தமிழ் என்று பேசி உசுப்பேற்றிவிட்டு தமிழகத்தை இன்னொரு மஹாராஷ்ட்ராவாக உருவாக்க நினைக்கிறார்களா? என்பது போன்ற சூடான கேள்விகளுக்கு தமிழில் பதிவெழுதும் பதிவர்களாகிய, அப்துல்லா, வெண்பூ, நர்சிம், கார்க்கி, ஆதி, மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆகியோருடன் உங்கள் கேபிள் பங்கு கொள்ளும் கலந்துரையாடல்..
இன்று மாலை 5.30 மணிக்கு என்.டி.டி.வி ஹிந்து சேனலில் ஒளிபரப்பாகிறது.
இதன் மறு ஒளிபரப்பு நாளை காலை 7.00 மணீக்கும், இரண்டாம் பாகம், நாளை மாலை 5.30 ம்ணிக்கும், அதன் மறு ஒளிபரப்பு அடுத்த நாள் காலை 7.00 மணிக்கும் ஒளிபரப்பாகும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
வால்க டமில்..
டிஸ்கி: யாராவது புண்ணியவான் முடிஞ்சா ரெக்கார்ட் செஞ்சு போடுங்கப்பா..
கேபிள் சங்கர்

சாப்பாட்டுக்கடை பதிவை படிக்க...

சாப்பாட்டுக்கடை

இட்லி என்றவுடன் நமக்கு எல்லாம் ஞாபகம் வருவது.. மதுரை ப்ளாட்பார இட்லிகடைகளும், ரத்னா பவன் இட்லி சாம்பாரும்,  முருகன் இட்லிக் கடையும்தான். அதுவும் சமீப வருடங்களில் இட்லிக்கு க்யூ கட்டி வெயிட் செய்து சாப்பிடுகிற ஒரு உணவகமாகிவிட்டது முருகன் இட்லிக் கடை. சென்னை முழுவதும் பல இடங்களில் அவர்களது ப்ராஞ்சுகள் திறக்கப்பட்டாகிவிட்டது என்றாலும், ஒரு இட்லிக்கு 8 ரூபாய் வாங்கினாலும் கூட்டம் குறைந்த பாடில்லை.
Photo0084
இப்போது நார்த் உஸ்மான் சாலையில் உள்ள அவர்களது ப்ராஞ்சில் மாலையில் மட்டும் ப்ஃபே சிஸ்டத்தில் உபசரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பெரியவர்களுக்கு 112 ரூபாயும், சிறுவர்களுக்கு 56  வாங்குகிறார்கள்..
.
இட்லி, பொங்கல், சக்கரை பொங்கல், மெதுவடை, தோசை, மசால் தோசை, பட்டர் தோசை, நெய் தோசை, பொடி தோசை, மற்றும் எல்லா வகையான ஊத்தப்பம், ரவா தோசை,  சாம்பார், நான்கு வகை சட்னி, ம்ற்றும் பொடியுடன் என்று எல்லா டிபன் அயிட்டங்களும் அன்லிமிட்டாக த்ருகிறார்கள். எவ்வளவுதான் மோசமாக சாப்பிடுபவராக இருந்தாலும் இங்கு சாப்பிடுவது லாபம் தான்.
Photo0086 ஏனென்றால் இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு தோசை சாப்பிட்டால் குறைந்த பட்சம் நூறு ரூபாய் ஆகிவிடும் இவர்களது உணவகத்தில், இதில் பொடிக்கு தனியே மூன்று ரூபாயோ, ஐந்து ரூபாயோ..அப்படியிருக்க, வகை தொகை இல்லாமல் சுமார் இருபத்திரண்டு அயிட்டங்கள் 112 ரூபாய்க்கு என்றால் தரை ரேட்.. காபி, பால், அல்லது ஜிகர்தண்டாவோடு. விரைவில் விலையேற்றி விடுவார்கள் என்று தோன்றுகிறது. இட்லி மட்டும் ஒரு மாற்று குறைவாகவே இருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. ஒரு நடை போயிட்டு வந்திருங்க.. அருமையான டின்னரை கொண்டாடுங்க.. மாலை 7-10.30 மணி வரை.. பேஸ்மெண்டில்.
கேபிள் சங்கர்

Jun 21, 2010

கொத்து பரோட்டா –21/06/10

இந்த வார சந்தோஷம்
ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சிக்கு இன்று பதினோரு மணிக்கு படப்பிடிப்புக்கு அழைத்திருக்கிறார்கள். ஒளிபரப்பு நேரம், மற்ற விவரங்களை படப்பிடிப்பு முடிந்து தெரிந்து கொண்டு உங்களூக்கு சொல்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுடன்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மிழ் கம்ப்யூட்டர் இதழில் என்னை பற்றியும், என் ப்ளாக்கை பற்றியும் எழுதியிருக்கிறார்கள். இதற்காக என்னை பேட்டி  எடுத்த பதிவர் விக்கிக்கு நன்றி. அதே போல் நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஷோபாசக்தி, லக்கியுடன், நம்ம ப்ளாக்கை பற்றியும்   ப்ளாக் என்கிற வகையில் எல்லோருடய டெம்ப்ளேடையும் எடுத்து போட்டு இருக்கிறார்கள். நான் இரண்டையும் பார்க்கவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பதிவர் டி.வி.ஆரின் ”கலைஞர் எனும் கலைஞன்” புத்தக வெளியீட்டு விழா சிறப்பாய் நடந்தது. கலைமகள் ஆசிரியர் வெளியிட, அஜயன் பாலா பெற்றுக் கொண்டார். இந்த ’இலக்கிய’ சிறப்பு மிக்க விழாவில் ஹைலைட்டான விஷயம் ’அண்ணே’ அப்துல்லா வாழ்த்துரை வழங்கியதும், டிவிஆரின் நகைச்சுவையான ஏற்புரையும் தான். பின்னாளில் பெரிய புத்தகமாகவே போடப்பட வேண்டிய புத்தகம். மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவுக்கு நிறைய பதிவர்கள் வந்திருந்து சிறப்பித்தது மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் வாங்கக்கூடிய 20 ரூபாய் விலையில் புத்தகம் இருப்பது சிறப்பு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழகமே ராவண ஜுரத்திலிருந்து மீண்டிருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ராவண அலையில் அடித்து போகப்பட்டது ஓர் இரவு போன்ற சிறு படங்கள் தான். எலலா தியேட்டர்காரர்களும், கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் இல்லாமல், ஓரளவுக்கு வெளியே தெரிய ஆரம்பிக்கிற நேரத்தில் படத்தை எடுத்துவிட்டார்கள். அவர்களை பொறுத்தவரை இம்மாதிரியான சின்னப்படங்களை ஓட்டுவதை விட பெரிய படங்களுக்கான ஓப்பனிங் கல்லா கட்டும் என்பதால் முதல் உரிமை பெரிய படங்களுக்குத்தான். காரணம் ஹோல்ட் ஓவர்.. இதை பற்றி தெரிந்து கொள்ள.. சினிமா வியாபாரம் படியுங்கள்.. ஹி..ஹி.. ஒரு விளம்பரம் தான்…
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார செய்தி
தென்னாப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து முதல் போட்டியில் தென்கொரியா க்ரீசை வெற்றி கொண்டது. அந்த வெற்றியை கொரியர்கள் கோலாகலமாய் கொண்டாடியிருக்கிறார்கள். தெருக்களில், வீடுகளில், ஹோட்டல்களில், பார்களில் என்று குடித்தும் ஆடிப் பாடியும் கொண்டாடியிருக்க, அதே விதமான கொண்டாட்டம் படுக்கையறைகளிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் மட்டும் வழக்கமாய் விற்கும் காண்டம் சேல்ஸை விட ஐந்து மடங்கு விற்றிருக்கிறதாம். What a News…….
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Photo0123 Photo0124
நண்பர் அஜயன் பாலா டிவிஆரின் புத்தக வெளியீட்டு பின் திடீர் என்று போன் செய்தார். ”கேபிள் உன்னுடன் கவிஞர் நா.முத்துக்குமார் பேசணுங்கிறார்” என்று சொல்லிவிட்டு போனை அவரிடம் கொடுத்தார். ஏற்கனவே அப்துல்லா மூலம் அறிமுக செய்விக்கபட்டிருந்தாலும் பெரிதாய் பேசிக் கொண்டதில்லை. “சாப்டீங்களா” என்று கேட்டார். இல்லை என்றதும் “அப்ப க்ரீன் பார்க் வந்திருங்க” என்றார். நான், அப்துல்லா, கார்க்கி, மூவரும் க்ரீன் பார்க்கில் அவரை  சந்தித்தோம். மிக இனிமையான சந்திப்பு. இரவு 12 மணி வரை நீண்டது. கொசுறுச் செய்தி  கவிஞரும், அண்ணன் அப்துல்லாவும் ஒரே ரூம் மேட்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் 2
ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் 2 வின் முடிவுகள் முன்பே மேட்ச் பிக்ஸிங் போல பிக்ஸ் செய்யப்பட்டது என்று ஒரு அணி புரளியை கிளப்பிவிட்டுக் கொண்டேயிருந்தது. வெற்றி பெற்ற அல்கா அஜித்தின் பைனல்ஸ் பர்பாமென்ஸை பார்க்காதவர்கள் பாருங்கள். பார்த்து விட்டு சொல்லுங்கள். இது வின்னிங் பெர்மாமென்ஸா இல்லை பிக்ஸிங்கா என்று..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இநத வார விளம்பரம்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்

ளன் இயக்கியிருக்கும் இக்குறும்படத்தில், இன்ட்ரஸ்டிங்கான, விஷுவலுடன், ஒரு த்ரில்லர் படத்துக்கான மேக்கிங் ஸ்டைலை, முயன்ற வரை முயற்சித்து அதை காமெடியாக்கியிருக்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏஜோக்
ரு வயதான இத்தாலியன் சர்ச் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்க வந்தான்.
“பாதர்.. இரண்டாவது உலகப் போரின் ஆரம்பிக்கும் போது ஒரு பெண் ஜெர்மனியர்களிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறு என்னிடம் வந்தாள். ஜெர்மனியர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அவளை என்னுடய வீட்டின் அடித்தளத்தில் ஒளிந்திருக்க சொன்னேன். ஜெர்மனியர்கள் வந்து தேடும் போது அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.” என்றான்
பாதிரி: அருமையான காரியம் செய்தாய் மகனே.. இறைவன் உன்னை ரட்சிப்பார்.
இத்தாலியன்: ஆனால் ஒரு தவறு செய்துவிட்டேன்.
பாதிரி: என்ன?
இத்தாலியன்: அவளீன் அழகில் மயங்கி உன்னை அவர்களிடமிருந்து காப்பாற்றும் நாள் வரை நீ என்னுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். என்று அவளிடம் உற்வு வைத்துக் கொண்டேன்.
பாதிரி : இது ஒரு வகையில் தவறாக இருந்தாலும். அவள் உயிரை காப்பாற்றியமைக்காக இறைவன் உன்னை மன்னிப்பார் மகனே.. பிறகென்ன.?
இத்தாலியன்: நான் போர் முடிந்துவிட்டது என்று சொல்ல வேண்டியது அவசியமா? என்றான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்

Jun 19, 2010

ராவணன் – திரை விமர்சனம்

raavanan 1 மொத்த இந்தியாவே எதிர்பார்த்த படம். தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழிகளில் வெளியாகியிருக்கிற படம். சமீப காலங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவின் சிட்டி பார்டர் தியேட்டர்களை சேர்த்து சுமார் 35க்கும் மேற்பட்ட தியேட்டர்கள், வெளியாகியிருக்கும் படம். இப்படி ரசிகர்கள் மட்டுமில்லாமல், மொத்த திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த படம். ராவணன்.

raav pri
எல்லோருக்கும் தெரிந்த இராமாயண கதைதான். மணிக்கு ஏதும் புதிதில்லை, ரோஜா, தளபதி, என்று ஏற்கனவே அவர் பயணித்த களம் தான். ராவணனை நல்லவனாக காட்டியிருக்கும் படம். இதற்கு முன்னர் ஆர்.எஸ்.மனோகர் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தில் இராவணனை நல்லவனாக காட்டியிருப்பார். அது ஒரு காலத்தில் மிகப் பெரிய ஹிட் நாடகம்.

raavan (1)


வீரா என்கிற வீரய்யா திருநெல்வேலிக்கு பக்கத்தில் ஒரு கிராமத்தில் மேட்டுக்குடியினரையும், போலீஸாரையும் எதிர்த்தும், போராடுபவன், போலீஸுக்கு அவன் ஒரு தீவிரவாதி, ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கோ அவன் காவல் தெய்வம். போலீஸ் எஸ்.பியான பிருதிவிராஜின் மனைவி ராகினி என்கிற ஐஸ்வர்யாவை கடத்துகிறான். ஏற்கனவே வீராவின் மீது வெறுப்பை உமிழும் பிருதிவிராஜுக்கு மேலும் ஆத்திரம் வந்து, மனைவியை கண்டுபிடிக்க காட்டுக்குள் தன் படையுடன் இறங்குகிறார். பதினாக்கு நாட்கள் தன் பாதுகாப்பில் கடத்தி வரப்பட்ட ஐஸ்வர்யாவை சில பல பிரச்சனைகளூக்கு பிறகு திரும்பி அனுப்புகிறான். பிருதிவிராஜ், பதினாக்கு நாள் அவனுடன் இருந்தாயே அவனுடன் ஏதாவது என்று கேட்க, பாலிகிராப் டெஸ்ட் செய்ய சொல்லி வற்புறுத்துகிறான். மனம் ஒடிந்த ஐஸ்வர்யா வீராவை தேடி போகிறாள். நடந்தது என்ன..? என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாய் இருந்தாலும் நிச்சயம் வெள்ளித்திரையில் பார்த்தால் மட்டுமே ரசிக்க முடியும்.
Raavanan tamil movie stills-02 வீராவாக  விக்ரம், அசத்தலான பாடிலேங்குவேஜ், ஐஸை கடத்தி வரும் போது இருக்கும் பரபரப்பாகட்டும், தன் மீது பயமேயில்லாமல் தன் உயிர் பற்றியும் பயம் இல்லாத பெண்ணை பார்த்து ஆச்சர்யபடும் நேரமாகட்டும், தனக்கே தெரியாமல் மயக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் மயங்கி, கிறங்கி போவதாகட்டும், தன்னுடன் இருந்துவிடுகிறாயா? என்று கேட்கும் இடமாகட்டும். ஐஸ் மேலிருக்கும் காதலை கண்களிலும், உடல்மொழியில் மட்டுமே வெளிப்படுத்தி அசத்துக்கிறார். முக்கியமாய் க்ளைமாக்ஸில் ஐஸ் திரும்பி வந்ததும் அவர் காட்டும் எக்ஸ்ப்ரெஷன் இருக்கிறதே.. உலகத்தரம். மனுஷன் பின்னியெடுக்கிறார். ஆனால் “பக்..பக்’கென கோழி கத்துவது போலும், டண் டண் டண் என்று வாயால் ஆக்ரோஷமாய் தாளம் போடும் கேரிக்கேச்சர்கள் எடுபடவில்லை. அதெல்லாம்  அவரை ஒரு டெரராக காட்ட நினைத்தது வி.இ.நீராய் தான் முடிந்திருக்கிறது.

ஐஸ் முகத்தில் வயது தெரிகிறது. ஆனால் அம்மணியின் பர்பார்மன்ஸில் மற்றதெல்லாம் தெரியாமல் போகிறது. படத்துக்கு இவர் தான் ஆணிவேர். அம்மணீ அதகள படுத்தியிருக்கிறார். வீராவின் இன்னொரு பக்கத்தை பார்த்து கொஞ்சம், கொஞ்சமாய் நெகிழும் இடத்தில், சாமியிடம் வேண்டிக் கொள்ளும் இடம், நெருக்கத்தில் சஞ்சலப்படும் இடம. க்ளைமாக்ஸில் நான் உன் கூட தங்கிவிட்டால் என் புருஷனை கொல்லாமல் விடுவாயா?என்று கேட்கும் இடத்தில். என்று படம் முழுவதும் இவரின் ராஜ்ஜியம் தான்.

எஸ்.பியாக பிருதிவிராஜ். ஆரம்பக் காட்சியிலிருந்தே வீராவின் மேல் வன்மத்துடன் அலைகிறார்.  ஒரு சில நெருக்கமான காட்சிகளில் ஐஸ்ஸுடன் குலாவுகிறார். ஐஸ்ஸை சந்தேகப்படும் காட்சியில் நச். படத்தில் பிரபு, கார்த்திக், ரஞ்சிதா, ப்ரியாமணி என்று ஏகப்பட்ட நடிகர் பட்டாளம் இருக்கிறது.
Raavanan (7) படத்தின் ஒளிப்பதிவாளர்களின் சந்தோஷ்சிவன்/ மணிகண்டனின் கைவண்ணம். படம் முழுவதும் ஆர்ப்பாட்டமே நடத்தியிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட். ‘உசுரே போகுதே” பாடல் எல்லார் மனதையும் உருக்க வைக்கும். ஆனால் பாடல் போஸ்ட் ஆன இடம் தான் கொஞ்சம் வழுக்கல். பின்னணி இசை நிச்சயம் பேசப்படும்.

ராமாயணத்தின் இன்ஸ்ப்ரேஷன் என்பதால் கதை பெயர் போடப்படவில்லை என்று நினைக்கிறேன். வசனம் சுஹாசினி. வழக்கமான மணி படத்தின் அளவுகளை விட அதிகமே. ஆனால் பெரிய தாக்கம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில இடங்களில் வசனங்கள் புரியவில்லை.


Raavanan (4)
மணி ரத்னம். இவர் ஒரு படம் செய்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் மனிதர். என் ஆதர்ச நாயகன். சினிமாவை வசனங்கள் மூலமாய் வெளிப்படுத்தாமல், மிகக் குறைவாய் பேசி விஷுவல் மொழியாக்கிய ஜித்தன். இப்படத்திலும் தன் கைவரிசையை காட்ட தவறவில்லை.  ஆரம்ப காட்சியில் மலையிலிருந்து குதிக்கும் காட்சியிலிருந்து இவர் காட்ட ஆரம்பிக்கும்  பிரம்மிப்பு படம் முடியும் வரை இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாய் விக்ரம், ஜஸ்ஸுக்குமிடையே சலனங்கள் ஏற்படும் காட்சி.. சிம்ப்ளி சூப்பர். எங்குமே உடலால் தீண்டப்படாமல் அவர்களுக்கு ஏற்படும் உணர்வுகளை திரையில் இவ்வளவு அழகாய் கொண்டு வர முடியுமா? ஒரு மாதிரியான எக்ஸ்டஸியில் கண்கள் கலங்கியது எனக்கு. அற்புதமான இதுவரை திரையில் காட்டவேபடாத லொக்கேஷன்கள். மழை பெய்து கொண்டேயிருக்கும் காடு, மலைவாழ் ஜனங்கள். என்று படம் நெடுக விஷுவல் அண்ட் டெக்னிக்கல் அட்டகாசங்கள் மணிக்கே உரித்தானது.
 Raavanan tamil movie stills-07 எல்லாமே ப்ளஸாக இருக்கும் படத்தில் மிகப் பெரிய லெட்டவுன் திரைக்கதைதான். முதல் பாதியில்  கடத்தும் காட்சியை விட்டு விட்டு பார்த்தால் ரொம்ப நேரம் என்ன செய்வது என்றே தெரியாமல் வெட்டியாய் தான் போகிறது. அதே போல இரண்டாம் பாதி வந்ததும் கொஞ்சம் ஜெர்க் அடித்து பரபரக்கிறது. க்ளைமாக்ஸ் வரும் போது நிமிர்ந்து உட்கார வைக்கும் படம் பொத்தென விழுந்துவிடுகிறது என்பதை வருத்ததுடன் சொல்ல வேண்டித்தானிருக்கிறது. 

ராமனின்  மனைவியான சீதைக்கு தன்னை கடத்திய இராவணன் மீது ஒரு சிறு சஞ்சலம் வந்தது. அதுவும் அவனின் அன்பால், அவனின் குணத்தால். தன்னை பத்திரமாக திரும்பி அனுப்பிய பின் சந்தேகப்படும் ராமனை விட அவன் உயர்ந்தவன் என்று முடிவு செய்து இராவணனிடம் போனாள். இந்த இடம் தான் அட்டகாசம். ஆனால் அதற்கு பிறகு நடக்கும் முடிவு சினிமாத்தனம். அல்லது மணியின் தைரியமின்மை என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்போது சீதையான ஐஸ் கேரக்டர் தன் கணவனிடம் தன்னை பற்றி வீரா தப்பாய் சொல்லியிருக்க மாட்டான் என்று உறுதியாக சொல்லிவிட்டு வீராவை பார்க்க போனாளோ.. அப்போதே ராமன் கேரக்டரான பிரிதிவி செத்ததற்கு சமம். இதற்கு பிறகு ஐஸை தொடர்ந்து பட்டாலியனோடு வந்து கொல்வது எல்லாம்.. ம்ஹும்..

படத்தில் நாம் ஒட்டமுடியாமல் போவதற்கான காரணங்கள் நிறைய. முதலில் வீராவும் அவன் சார்ந்த இடமாக சொல்லப்படுகிற திருநெல்வேலி மாவட்ட, எப்போதும் மழை பெய்யும் மலை கிராமம். பின்பு அங்கு சொல்லப்படுகிற தீவிரவாத மேட்டுக்குடி, பிரச்சனைகள். கதை களமாக காட்டப்படும் இடங்கள், என்று எல்லாமே டப் செய்யப்பட்ட படம் பார்ப்பது போல் உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. நிச்சயம் இப்படட்தை ஹிந்தியில் பார்க்கும் போது இம்மாதிரியான உணர்வு இருக்காது என்று தோன்றுகிறது. 
Raavanan-Stills-011 கார்த்திக் கேரக்டர் தான் அனுமன் கேரக்டர் என்று பிரிதிவிக்கு காட்டில் வழி காட்டும் போதே தெரிந்துவிடுகிறது. பின் எதற்கு ஆரம்ப காட்சியில் மரத்துக்கு மரம் தாவி காட்ட வேண்டிய நிர்பந்தம். அதை விட காமெடி ஐஸ் இருக்கும் இடத்தில் அவர் புருஷன் அனுப்பிய ஆள் அடையாள அட்டை வேண்டுமானால் காட்டுகிறேன் என்று சொல்லுமிடம், அதே போல் ப்ரியாமணியை போலீஸார் தூக்கிக் கொண்டு போகும் போது சூர்பனைகையை தான் இது என்பதை சொல்லாமல் சொல்வதை போல, “இப்ப என்ன செய்யட்டும் உன்  மூக்கை அறுக்கட்டுமா” என்று போலீஸ் பேசும் வசனம் எல்லாம் மணி சார்.. உங்களிடமிருந்தா..?

அட்டகாசமான லொக்கேஷன், அருமையான நடிகர்கள், டெக்னிக்கலாய் மிரட்டும் ஸ்ட்ராங் டீம்,  என்று எல்லாம் இருந்து ஜிவன் குறைந்தே இருக்கிறான் ராவணன்.  இருந்தாலும் தியேட்டரில் பார்த்தே ஆக வேண்டிய படம் என்பதை மறுக்க முடியாது.

ராவணன் -  A Extrodinary Film Without Life

டிஸ்கி: நிச்சயம் இப்படம் உலக பட விழாக்களில் பெரிய வெற்றியை பெரும் என்பது என் எண்ணம்.

கேபிள் சங்கர்

Jun 18, 2010

கற்றது களவு - திரை விமர்சனம்

katrathu-kalavu-movie-posters-01 நல்லவனாய் வாழ்ந்து ஏதுவும் சாதிக்காமல், ஏமாற்றப்பட்டு வாழ்வதை விட அவர்களை ஏமாற்றி வாழ்வது மேல் என்று முடிவெடுக்கும் இளைஞனின் கதை. முடிந்த வரை விறுவிறுப்பாக சொல்லியிருக்க வேண்டிய கதை.

ஒரு ருபாய் முதலீட்டில் ஸ்டூடண்ட் பேங்க் ஆரம்பிக்க நினைத்து அந்த ப்ராஜக்டை சந்தான பாரதியிடம் கொடுக்க, அவர் அந்த ப்ராஜக்டை தன் ப்ராஜெக்ட் என்று பில்டப் செய்து சுவாகாவாக்கிவிடுகிறார். இதனால் காண்டாகும் ஹீரோ, புதியதாய் ஒரு காதலியுடன் சேர்ந்து அவனையும், மற்றும் பலரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான். ஒரு கட்டத்தில் மந்திரி ஒருவரிடம் டகால்டி வேளை செய்துவிட, அவர்கள் துரத்த, இன்னொரு பக்கம் லோக்கல் போலீஸ் ஆபீசரும், டெல்லி ஐ.பி ஆபீசரும் துரத்த, இவர்கள் தங்களை காத்துக் கொள்ள ஓடுகிறார்கள். முடிவு என்னவாயிற்று என்பதை வெள்ளித்திரையில் பார்க்க..

அலிபாபா ஹீரோ கிருஷ்ணா, படம் நெடுக ஓடுகிறார், சில இடங்களில் நடிக்க முயற்சித்திருகிறார். பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. கதாநாயகி விஜயலஷ்மி கொஞ்சம் சதை போட்டிருக்கிறார். சம்மந்தமில்லாத காட்சிகளில் க்ளிவேஜ் காட்டுகிறார். படத்தில் இம்ப்ரஸிவான நடிப்பு என்றால் அது சம்பத்தின் நடிப்பும், அந்த ஐபி ஆபீஸ்ரும்தான். நிஜமாகவே இம்ப்ரசிவ்.
katrathu-kalavu-movie posters (2) படத்தின் முக்கியமான ஒருவர் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா.. மனுஷன் முதல் பாதியில் மிரட்டியிருக்கிறார். பாலின் இசையில் இரைச்சல் அதிகம். சம்மந்தமேயில்லாத இடங்களில் எல்லாம் பாடல் வருவது எரிச்சலாய் இருக்கிறது.

மிக விறுவிறுப்பாக போக வேண்டிய கதையில், திரைக்கதையால் நிறைய இடங்களில் ஸ்பீட் ப்ரேக்கர்கள்.முக்கியமாய் அந்த கஞ்சா கருப்பு ட்ராக் படு எரிச்சலாய் இருக்கிறது. விஜயலஷ்மி எதற்காக கிருஷ்னாவின் தவறான காரியங்களுக்கெல்லாம் உடந்தையாகிறாள் என்பதற்கு விளக்கமேயில்லை. முதல் ஐடியாவாவது பரவாயில்லை, அதற்கு அடுத்ததாய் நடத்தும் சம்பவங்கள் எல்லாம் சவசவ..  பாதி படத்திலேயே ஹீரோ தப்பித்துவிட போகிறான் என்று உணர்வதால் பின்னால் வரும் காட்சிகளில் சுவாரஸ்யம் போய் விடுகிறது. ஆங்காங்கே போய் விட்டு வரும் திரைக்கதைக்கு பதிலாய் ஸ்டெரெயிட் நேரேஷனில் சொல்லியிருந்தால் கொஞ்சமாவது இண்ட்ரஸ்ட் இருந்திருக்கும்.


கற்றது களவு –இன்னும் ட்ரையினிங் பத்தலை


கேபிள் சங்கர்

Jun 17, 2010

சூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி

Vijay-tv-Super-Singer-Junior-2-2010-contestants-Nithyashri-Srikanth-VishnucharanSrinisha-Srihari-Priyankaசூப்பர் சிங்கர் ஜுனியர் 2வின் பைனல்ஸ் Y.M.C.A க்ரவுண்டில் லைவ்வாக நடைபெற இருக்கிறது. தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆரவாரத்தை, ஆர்வத்தை, எழுப்பியிருப்பது நிஜம். நிகழ்ச்சியை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் ஆதரித்தும், எதிர்த்தும் இருந்தாலும், பெரு வாரியான மக்களால் பார்க்கப் படுகிற நிகழ்ச்சியாக இருக்கிறது என்பது உண்மை.

ஆரம்பித்த போது மிகவும் ஆவரேஜாக ஆரம்பித்த நிகழ்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து, எலிமினேஷன் ரவுண்ட், வைல்ட் கார்டு ரவுண்ட், குவாட்டர் பைனல் என்று  வர ஆரம்பித்தவுடன், போட்டியாளர்களீடையே, மிக கடுமையான போட்டியும், ரசிகர்களிடையே அந்த பெண், நன்றாக பாடினாள், ஸ்ரீகாந்த நல்லா பாடினான் என்று ப்ரியங்கா நல்லாத்தான் பாடினாள் என்று தங்கள் வீட்டு பிள்ளைகளை போல நினைத்து உரிமையுடன் பேச ஆரம்பித்தார்கள். வழக்கமாய் விஜய் டிவியின் விளம்பர இம்சை தாங்காமல் பார்ப்பதை தவிர்ப்பவன் நான். அதையும் மீறி சில சமயம் டிவியிலும், இணையத்தில் யூடூபிலும் தொடர்ந்து எல்லா நிகழ்ச்சியையும் பார்த்து வருகிறேன்.

நிறைய வீடுகளில் மாலை நேரத்தில் கடந்த ஒண்ணரை மாதமாய் விளம்பர இடைவேளையில்தான் மத்த நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள். இதை என்னால் நிருபிக்க முடியும். அடிப்படையில் மக்களின் பல்ஸ் எனக்கு நன்றாக தெரியும்.  எப்படி தெரியும் என்பதை பிறகு சொல்கிறேன்.
sun_tv_in இதனால் எப்படி சன் டிவியின் டி.ஆர்.பி குறைய ஆரம்பித்தது என்று கேட்கிறீர்களா? மாலை வேளை ப்ரைம் டைம் எனப்படும் 7-9.30 வரையிலான நிகழ்ச்சிகளில் சன் டிவியின் நிகழ்ச்சிகள் மட்டுமே தமிழ் நாட்டில் 20 புள்ளிகளுக்கு மேலாக டி.ஆர்பி ரேட்டிங் வரும் நிகழ்ச்சிகளாகும். இது பல ஆண்டுகளாய் இருந்து வரும் உண்மை. மெட்டி ஒலி, அரசி, கோலங்கள் காலங்களில் எல்லாம் 29 புள்ளி வரை கூட டி.ஆர்.பி ஏறியிருக்கிறது.  தன் ப்ரைம் டைம் நிகழ்ச்சிகளுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் உடனடியாய் அதை கவனிக்க ஆரம்பித்துவிடும், ஒன்று அதே போல ஒரு நிகழ்ச்சியை கொண்டு வந்தோ, அல்லது.. பின் வழியாக போட்டியாளரை கவிழ்த்தோ என்பது வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும்.

கலக்க போவது யாரு? என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்தது விஜய் டிவி, அதன் வெற்றியை பார்த்து இவர்கள் ஆரம்பித்தது அசத்த போவது யாரு? அதே போல் ஜோடி நெ.1.,  நடுவே சில இசை போட்டிகள், மானாட மயிலாடவுக்கு போட்டியாக நிகழ்ச்சிகள் என்று ஏதேதோ உட்டாலக்கடி அடித்து பார்த்தும், பெரியதாய் பப்பு வேகவில்லை. அதிலும், கலைஞரின் மானாட மயிலாடவுக்கும், சூப்பர் சிங்கர் ஜூனியர் 2வுக்கும் எதிராய் எதுவுமே செல்ப் எடுக்க வில்லை.

எங்கே ஜிடிவி தங்களுக்கு போட்டியாக வருமோ என்று நினைப்பதற்குள் அதன் சேனலை கொஞ்ச காலம் தங்களுடய நெட்வொர்கில் காட்டாமல் இருந்து, பின்பு கொஞ்சம் பின்னாடி வரும் நான் ப்ரைம் சேனல்களீல் ஒளிபரப்பி, அதனுடய ரீச்சை குறைத்தார்கள். சென்னை போன்ற நகரங்களில் செட்டாப் பாக்ஸுகளில் சிறிது காலம் கழித்தே ஒளிபரப்பினார்கள். அப்படி ஒளிபரப்பியும், தமிழ் சேனல்களின் தொகுப்பில் அது இடம் பெறாது. தனியே சம்மந்தமில்லாமல், ஸ்போர்ட்ஸ் சேனல் பேக்கேஜுக்கு பக்கத்தில் வரும். வழக்கமாய் தமிழ் சேனலை மட்டுமே பார்க்கும் பார்வையாளர்கள் கொஞ்ச காலம் தேடிவிட்டு,  வழக்கமான சேனல்களில் செட்டிலாகிவிடுவார்கள். அது மட்டுமில்லாமல் இந்த நேரங்களில் சேனல் காரர்களும் சோர்ந்து போய் தங்கள் நிகழ்ச்சிகளின் தரத்தை மேம்படுத்தாமல் விட்டுவிட, சந்தைக் கடையில் ஒரு மந்தைக்கடையாய் விடுகிறது.

ஆனால் அந்த விஷயத்தில் விஜய் கொஞ்சமும் விடாமல் சீரியல்களில் கவனம் செலுத்தாமல் தங்களுடய வித்யாசமான கேம் ஷோக்களினால் மக்களிடையே கொஞ்சம், கொஞ்சமாய் நற்பெயர் எடுக்க ஆரம்பித்தது. இவர்களுடயை எல்லா நிகழ்ச்சிகளும் ஹிந்தி ஸ்டார் ப்ளஸின் தமிழாக்கம் தான் என்றாலும், நிகழ்ச்சியின் தரம் பாராட்டக்கூடியது. என்ன எழவு இந்த விளம்பர இம்சைதான் இருக்கிறதிலேயே பெரிய எழவு..

சன்னும் தனியா ஒரு டீமை ஏற்பாடு செய்து வெறும் கேம் ஷோக்களுக்காக ஒரு பெரிய குழுவை நிர்ணையித்திருப்பதாக கேள்வி, அதனுடய முதல் நிகழ்ச்சிதான் டீலா நோ..டீலா.. எனக்கு தெரிந்து அது பெரிய அளவில் செல்ஃப் எடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் சமீப கால சூப்பர் சிங்கர் ஜூனியர்2வின் ரீச் அபாரமாகி இவர்களுடய பல ப்ரைம் டைம் சீரியல்களின் டி.ஆர்.பியை பெரிய அளவில் டெண்ட் ஏற்படுத்தவே வேறு வழியில்லாமல், உடனடியாய் தங்களுக்கு சீரியல் தயாரிக்கும் தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர்களை அழைத்து, என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ, கொஞ்சம் கூட நிகழ்ச்சியின் டெம்போவை குறைக்காமல் தயாரியுங்கள் என்று மீட்டிங் நடத்தும் அளவுக்கு போயிருக்கிறது.  என்னதான் முதலிடத்தில் உள்ள சேனல் என்றாலும், கொஞ்சமும் சலைக்காமல் இப்படி போராடும் இவர்களுடய ஆட்டிட்யூட் என்னை அசர வைக்கிறது. I Like their Attitude..

தங்கள் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் குறைய ஆரம்பித்ததனால் நிறைய சீரியல்களில் திடீர் திருப்பஙக்ளை எல்லாம் 17ஆம் தேதிக்கு பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து இருக்கிற ஒரு வாரத்தை எப்படி கழிப்பது என்று புதிதாய் சிந்தித்து ஒப்பேற்றி வருவது சன்னுக்கு தெரிந்தே இந்த் மீட்டிங்.. அவர்களுக்கு தங்கள் சேனல் டி.ஆர்.பி குறைகிறதே என்று அல்லாட்டம். இவர்களுக்கு காசு போகுதே என்ற கவலை. டி.ஆர்.பி. குறைந்தால் விளம்பர வருமானம் குறைந்து விடும். விளம்பர வருமானம் குறைந்தால் தயாரிப்பு செலவில் அடிபடும்.  என்று சங்கிலித் தொடர் பிரச்சனைக்ள் ஏராளம். சன் நிகழ்ச்சிகளை குவாலிட்டியை பற்றி பேசுமே தவிர, அவர்கள் கட்டும் ஸ்லாட் பீஸில் ஏதும் சலுகை தராத பட்சத்தில் தயாரிப்பாளர்கள் ஒரு வாரத்தை ஓட்டுவதை தான் செய்ய நினைப்பார்கள்.

ஆனால் அதே வேளையில் இவர்களது பேக் டோர் விஷயத்தை பற்றியும் சொல்லித்தான் ஆக வேண்டும். வழக்கப்படி திடீரென விஜய் டிவி சேனல் செட்டாப்பாக்ஸில் தமிழ் தொகுப்பிலிருந்து காணாமல் போய், ஜீ தமிழுக்கு செய்தது போல தனியாக சம்மந்தமில்லாத ஒரு பொக்கேவுக்கு முன்னால் போடப்பட்டது. மக்களின் பல்ஸ் எனக்கு தெரியும் என்றேனே.. அது இப்படித்தான் ஒரே நாளில் ஏகப்பட்ட போன்கள் மக்கள் ஏன் விஜய் டிவி வரவில்லை என்று.. உடனடியாய் நாங்கள் தேடிப்பார்க்க, தள்ளிபோடப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாய எந்த சேனலி வருகிறது என்று போன் செய்யும் மக்களுக்கு தெரிய படுத்தினோம். இம்மாதிரியான முயற்சியெல்லாம் கல்யாணத்தின் போது சீப்பை ஒளித்து வைப்பதற்கு சமம் என்றாலும் இதையும் விடாது செய்யத்தான் செய்கிறார்கள்.

வழக்கமாய் மக்களிடையே பைனல்ஸுக்கும், வைல்ட் கார்டுக்கு மட்டுமே மக்களீடையே ஓட்டு பெறும் முறை இருந்த நிலையில், இம்முறை நிகழ்ச்சியின் வெற்றியை தக்க வைக்க, மேலும் பார்வையாளர்களை பங்கு பெற செய்து, நிகழ்ச்சியின் பார்வையாளர்களை தக்க வைத்து கொண்டது விஜய் டிவியின் மார்கெட்டிங் குழு.

இவ்வாறு செய்வதால் எஸ்.எம்.எஸ் மூலமாய் வருமானத்துக்கு வருமானம். பார்வையாளர்களும் குறைய மாட்டார்கள். இன்றைக்கு இரவு ஒளிபரப்பப்படும், நிகழ்ச்சி, மறுநாள் மதியம் மறு ஒளிபரப்பும் செய்கிறார்கள். இதற்கும் குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள் இருக்கவே..  செய்தது.

ஒரு பக்கம் போட்டி சேனல்கள், மறுபக்கம் அவர்களை எதிர்கொள்ளும்படியான நிகழ்ச்சிகளை தயாரிகக் வேண்டிய கட்டாயம், என்று பயங்கரமான வியூகத்தில்தான் சன் இப்போது புதிய இசை நிகழ்ச்சியை வழங்க இருக்கிறது. இது கூட ஹிந்தியில் ஸ்டாரில் மியூசிக் கா முக்காப்லா என்கிற நிகழ்ச்சியின் உட்டாலக்கடிதான்.  வருகிற 26ஆம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. சின்மயி தொகுத்து வழங்கப்போகும் நிகழ்ச்சி, அடுத்து விஜய் ஆரம்பிக்கும் சூப்பர் சிங்கருக்கு இது சரியான பதிலடியை தருமா? என்று பார்போம். இமமாதிரியான குவாலிட்டியான போட்டியில் ஈடுபடுவதை விட்டு விட்டு டி.ஆர்.பிக்காக இரண்டாம் நிலை முயற்சிகளுக்கு கீழிறங்க வேண்டுமா..?
கேபிள் சங்கர்

Jun 16, 2010

சாப்பாட்டுக்கடை

அசைவ உணவு வகைகளுக்கு நிறைய உணவகங்கள் இருக்கிறது. ஆனால் சைவ உணவகங்களுக்கு நிஜமாகவே டிமாண்ட் தான். அதிலும் வெறும், தோசை, இட்லி என்று தேடினால் நிறைய கிடைக்கும். ஆனால் பொதுவாக நல்ல மெனு, நல்ல சாப்பாடு, சைட் டிஷ், நியாயமான விலை என்று தேடினால் கிடைப்பது அரிது. அதுவும் சைவ உணவகங்களில்.
Photo0065
அந்த வகையில் எல்லா வகையிலும் சிறநத உணவகம் சென்னை, சாலிக்கிராம,  அருணாச்சலம் ரோடில் மோகன் ஸ்டூடியோ எதிரிலுல்ள, கருணாஸ் சைவ உணவகம். மாலையில் சுடச்சுட, இட்லி, தோசை, அடை, ரவா தோசை, கொத்து பரோட்டா, என்று கலந்து கட்டி அட்டகாசப் படுத்தும் மெனு. சம்பார், சட்னி, கார சட்னி, இத்துடன் காரக்குழம்பு ஒன்று இவர்கள் ஸ்பெஷாலிட்டி. அதே போல மதிய சாப்பாடு. பொரியல், கூட்டு, அப்பளம், வத்தக்குழம்பு என்று நியாயமான விலையில் சுவையான சாப்பாடு, நிச்சயம் அடுத்த நாள் காலையிலோ, இரவிலோ வயிற்றை கெடுக்காத சாப்பாடு. இட்லி காரக்குழம்பு காம்பினேஷன் அடிச்சிக்க முடியாது.
Photo0063 விஜய் டிவியின் நீயா நானாவில் கலந்து கொள்ள போய்விட்டு, நேரமாகும் என்பதை தெரிந்து கொண்டு, நான், அப்துல்லா, தண்டோரா மணீஜி, நர்சிம், சூர்யா ஆகியோர் கிளம்பினோம். அவர்களுக்கு நான் தான் இந்த உணவகத்தை ரெகமெண்ட் செய்தேன். ஏதோ ஒரு நம்பிக்கையில் உள் நுழைந்தவர்களுக்கு பரம் திருப்தி. நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பார்கலாமே..
கேபிள் சங்கர்

Jun 15, 2010

”பிட்” உலகம்

drogam-nadanthathu-enna-28 தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்திலேயும் “பிட்” படங்கள் என்று அழைக்கப்படும் “சாப்ட் ஃபோர்ன்” வகையறா படங்களுக்கு பெரிய மவுசு இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இம்மாதிரியான படங்களுக்கான தியேட்டர்கள் ஊரோரத்திலோ, அல்லது நகரின் முக்கிய தெருவிலோ, இருக்கத்தான் செய்கிறது.

என்பதுகளில் தான் இம்மாதிரியான படங்களுக்கு ஒரு மவுசு வர ஆரம்பித்தது. அதுவும் மலையாள படங்கள் தான் இம்மாதிரியான சாப்ட் ஃபோர்ன் படங்களுக்கான சப்ளையர்களாக இருந்த்து. “அவளோட ராவுகள்” படம் என்னவோ நல்ல படம் தான் ஆனால் பெயரும், படத்தின் கருவும் கொஞ்சம் செக்ஸியாக இருந்தததினால், சென்னையின் முக்கிய தியேட்டரான ஆனந்த் தியேட்டரில் நூறு நாள் ஓடியது என்று நினைக்கிறேன்.

அதன் பிறகு அஞ்சரைக்குள்ள வண்டி, மாமனாரின் இன்ப வெறி, சாரவலையம், என்றெல்லாம் மலையாள படங்கள், வீடியோவின் வரவால் டல்லடித்துக் கொண்டிருந்த திரை உலகை காப்பாற்றி கொண்டிருந்தது இம்மாதிரியான படங்கள் தான். பல தியேட்டர்களை மூடி விழாவிலிருந்து காப்பாற்றியதும் இம்மாதிரியான படங்கள் தான.

சாதாரணமாகவே செக்ஸ் கதை களன்களை மட்டுமே  அடிப்படையாய் கொண்டு தயாரிக்கப்படும் இம்மாதிரியான படங்களுக்கு மொழி ஒரு பிரச்சனையாக இருந்தது கிடையாது. மிக குறைந்த செலவில் ஒரு வீட்டிற்குள்ளோ, அல்லது ஒரு மலை வீட்டிலோ, லோ லைட்டில் வயதான கணவன், இளம் மனைவி, பக்கத்துவீட்டு இளைஞன், அல்லது விடலை வேலைக்காரப் பையன் என்ற டெம்ப்ளேட் கதைகளை புது புது நடிகைகளை வைத்து தோலுறித்து காட்டி வந்தார்கள். மலையாள திரைப்படங்களின் வரவேற்பை பார்த்த ஹிந்தி பட உலகமும் அதன் ப்ங்குக்கு “ஜவானி, திவானி” போன்ற படங்களை அள்ளி விட, ஒரு கட்டத்தில் இம்மாதிரி படஙக்ளுக்கான தியேட்டர்கள் தான் அதிகமோ என்று தோன்றுமளவுக்கு எங்கெங்கு காணினும் பிட் படமாகவே காட்சியளித்தது.

drogam-nadanthathu-enna-wallpaper95

இம்மாதிரி படங்களில் நேரடியாய் உடலுறவு காட்சிகள் இல்லாவிட்டாலும், சென்சார் செய்து வந்த பிறகு கட் செய்யப்பட்ட காட்சிகளை மீண்டும் இணைத்து வெற்றி பெற்றார்கள் விநியோகஸ்தர்கள். பின்பு அது போதாமல், ஸ்மால் டைம் நடிகைகளை வைத்து ஃபோர்னோ படங்களையே எடுத்து, அதை தனியாக படத்துக்கு சம்பந்தமேயிலலாத் இடத்தில் இடைவேளைக்கு முன் ஒன்று, பின்பு ஒன்று என்று ஒளிபரப்பி, ”அதை” காட்டி முடிந்ததும், படத்தை முடித்து, கல்லா கட்டி கொண்டிருந்தார்கள். சென்னையில் இதற்காகவே திருவெற்றியூர், போரூர், பரங்கிமலை, ஆலந்தூர், என்று ஏகப்பட்ட இடங்களில் பிரபலமான தியேட்டர்கள் உண்டு. இம்மாதிரியான தியேட்டர்கள் ஒவ்வொரு நகரங்களிலும், நிச்சயம் இருக்கும்.

வீடியோவின் ஆக்டோபஸ் வளர்ச்சியால் இரண்டு  மணி நேர போர்னோ படங்களே மக்களுக்கு முப்பது, நாற்பது ரூபாய்க்கு கிடைக்கவே, இம்மாதிரியான படங்களுக்கு மவுசு குறைய ஆரம்பித்தது.  90களில் குறைய ஆரம்பித்த மவுசு.. நடுவில் ஒன்றுமேயில்லாமல் போய் கூட இருந்தது, கடந்த ரெண்டு வருடங்களாய் மீண்டும், தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது.

எப்போதெல்லாம் திரையுலகம் டல்லடிக்கிறதோ.. அப்போதெல்லாம் இப்படங்கள் வலைய வரும். அது மட்டுமில்லாமல் டிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சி ஓரு பக்கம் நல்ல சின்ன திரைப்படங்கள் வருவதற்கான அறிகுறியை காட்டினாலும், பெரிதும் உதவுவது இம்மாதிரியான தயாரிப்பாளர்களுக்குதான்.
 drogam-nadanthathu-enna-wallpaper79

சென்ற வருடம் சத்தமேயில்லாமல் சென்னையில் மட்டுமில்லாமல் தமிழ் நாடெங்கும் போட்ட காசுக்கு மேல் வசூலான படம் வேலு பிரபாகரனின் “காதல் கதை” அதற்கு பிறகு வெறும் போஸ்டரை மட்டுமே வைத்து சரியான ஓப்பனிங் கலக்‌ஷனை பெற்ற படம் “மாதவி”. இவர்கள் எல்லாம் அடுத்த படத்தை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வேலு பிரபாகரன் இப்போது டிஜிட்டல் கேமராவில் மிக குறைந்த பொருட் செலவில் படப்பிடிப்பில் இருக்கிறார். ஏற்கனவே காதல் கதையில் பெற்ற வெற்றி. இவரின் அடுத்த படத்துக்கு டிமாண்டை ஏற்படுத்தி விட்டது.

இப்போது அந்த வரிசையில் “துரோகம்” நடந்த்து என்ன?, மிக அருமையாய், டெம்ப்ட் செய்யும் வகையில் டிசைன் செய்யப்பட்ட போஸ்டர்கள், ப்ளாக் அண்ட் ரெட்டில் கண்ணில் “குத்தும்” போஸ்டர்கள், பேப்பர் விளம்பரங்கள். போன 11ம் தேதி ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதே பதினோராம் தேதி ஓர் இரவு என்கிற படமும் ரிலீஸாகியிருக்க, இவர்களுக்கு ரெண்டே தியேட்டரில் காலே அரைககால் ஷோ டைம்மிங்கே கிடைக்க, துரோகத்துக்கு, சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் சுமார் 18 பிரிண்டுகள் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. என் நண்பர் ஒருவரிடம் கேட்டேன் முதல் ரெண்டு ஷோ செம ஓப்பனிங்காம்.  தியேட்டர்காரர்களே இம்மாதிரியான படஙக்ளுக்குதான் முக்யத்துவம் தருகிறார்கள். ஏனென்றால் பெரும்பாலான தியேட்டர்களில் ஷேர் முறை மட்டுமே இருப்பதால், நல்ல ஓப்பனிங் உள்ள திரைபடங்களை வெளீயிட்டாலே அன்றி அவர்களுக்கு கல்லா கட்டாது. புதிதாய் வரும் சின்ன திரைப்படங்களுக்கு மவுத் டாக் போய் படம் பார்க்க வருவதற்குள் தியேட்டரிலிருந்து படம் போய்விட்டிருக்கும் பரிதாப நிலை வந்திருக்கும். இந்த வியாபார முறை பற்றி நான் ஏற்கனவே “சினிமா வியாபரத்தில் எழுதியிருக்கிறேன்.

சவுத்ரி, குஞ்சுமோன், குட்நைட் மோகன், ஆஸ்கார் ரவிசந்திரன் போன்றவர்கள் ஒரு காலத்தில், இம்மாதிரி படஙக்ளை தயாரித்தோ, விநியோகம் செய்து சம்பாதித்துதான் இந்நிலைக்கு வந்திருக்கிறார்கள். பல நேரங்களில் திரையுலகில் பல பேருடைய வாழ்க்கையை காப்பாற்றி, காலம் தள்ளியதே “பிட்” படங்களினால் தான் என்றே சொல்லலாம்.எப்போதெல்லாம் இம்மாதிரி படங்கள் ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் திரையுலகம் தள்ளாட்டமிடுகிறது என்பதை சொல்லும் அறிகுறியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேபிள் சங்கர்

Jun 14, 2010

கொத்து பரோட்டா- 13/06/10

இந்த வார சந்தோஷம்.

Cinema Viyabaram சாவகாசமாய் ஒரு மாலை நேர கிழக்கு மொட்டை மாடி சந்திப்பில், சினிமாவை பற்றிய வியாபாரங்களை பற்றி பேசிக் கொண்டிருந்த போது பத்ரி “ஏன் நீங்க இதை புத்தகமா எழுதக்கூடாது?” என்றார். முதலில் நானா? புத்தகமா? என்று லேசாக மலைத்தாலும், சரி என்றேன்.  அடுத்த சில நாட்களிலேயே பத்ரி  என்னன்ன  மேட்டர்களை கவர் செய்ய முடியும் என்று ஒரு மெயில் அனுப்ப, பதிவுலகில் தொடராய் எழுத ஆரம்பித்து ஏகோபித்த வரவேற்பை பெற்ற  ”சினிமா வியாபாரம்” தொடர், இப்போது  புத்தகமாய் வெளிவந்துவிட்டது. பதிவில் எழுதாத மேலும் பல புதிய, அறிய தகவல்களுடன்.. என்னுடய முதல் புத்தகமான “லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவுக்கு” கொடுத்த அதே ஆதரவையும், அன்பையும் இதற்கும் எதிர் நோக்கி..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ட்டோ பர்மிட் இப்போது எந்தவிதமான தடையும் இல்லாமல் கிடைக்க அரசு வழி செய்திருக்கிறது. ஒரு காலத்தில் பர்மிட்டை வாங்கி வைத்துக் கொண்டு சேட்டுகள், அதிக விலைக்கு பீரிமியத்தில் விற்ற காலத்தில் பர்மிட்டோடு கூடிய ஆட்டோக்கள் அதிக விலையாயின. ஆனால் இப்போதோ எல்லோருக்கும் கிடைக்ககூடிய வகையில் அமைந்ததும், ஆட்டோ ஓட்டுனர்கள் பேசிக் கொள்வது என்னவென்றால் “இனிமே ஆட்டோ பெருத்துரும்” என்பதுதான். எனக்கென்னவோ இவர்கள் மீட்டர் போடாமல் செய்யும் அராஜகத்தை ஒழிக்க அரசின் உள்குத்து சட்டமோ என்றுதான் தோன்றுகிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நே
ற்று பூகம்பம் எபெக்ட்.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. எல்லா நாட்டிலேயும் பூகம்பம் உண்டாகுது.. ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் இறந்து போறாங்க.. ஆனா இந்த அரசியல்வாதிகள்.. பிரபலமான நடிகர்கள், மீடியா ஆட்கள் இறந்து போனதா தகவலே இருக்கிறதில்லையே.. அவங்களெல்லாம் அவ்வளவு நல்லவங்களா..?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நே
ற்றிரவு பரிசல் போன் செய்திருந்தார், பக்கத்திலிருந்த நண்பர் நான் பேசுகிறேன் என்று போனை வாங்கி குரலை மாற்றி பேசினார். போனை என்னிடம் கொடுக்க சொல்லிய பரிசல், பேசியது யார் என்று சரியாக சொன்னார்.. “எப்படிண்ணே..? கண்டுபிடிச்சீங்க..? என்றது. இதோ நீங்க பேசினமாதிரி பேசினதை வச்சித்தான்.  என்னதான் குரலை மாத்தினாலும் கொண்டையை மறைக்க முடியலைல்லே..? என்றாரே பார்கலாம்.. அவர் யார் என்று ஒரு க்ளூ இருக்கிறது..?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார கடுப்பு
சனி இரவு சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் ஆன்லைனில் இருந்த நண்பர்களீடம் அவர்களும் உணர்ந்தார்களா? என்று உறுதிபடுத்திக் கொண்டு, தமிழ் மணத்திற்கும், ட்விட்டருக்கும் வந்தால் பதிவே போட்டிருந்தார்கள். ஆனால் நம் தமிழ் நாட்டு பிரபல செய்தி சேனல்களீல் இரண்டரை மணி வரையில் நிலநடுக்கம் பற்றி செய்தியோ, அல்லது முக்கிய செய்திக்கான ஸ்குரோலிங்கோ ஏதுவும் ஓடவில்லை. இவனுங்கல்லாம் நியூஸ் சேனல் நடத்துறானுங்க.. அதையும் நாம பாத்திட்டிருக்கோம்..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார தத்துவம்
மற்றவர்களின் இதயத்தில் இடம் பிடிக்க, உங்கள் ஈகோ கொஞ்சம் இறக்குங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார அறிவுரை
கண்ணா.. நல்லா சொல்றேன் கேட்டுக்க..  “கும்ம்னு” இருக்கிற பொண்ணை விட, “கம்ம்னு” இருக்கிற பொண்ணை கட்டிக்க அப்பத்தான் உன் வாழ்க்கை “ஜம்முனு” இருக்கும்.. எப்பூடீ..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார குறும்படம்.
வழக்கமாய் தமிழில் குறும்படங்கள் எடுப்பவர்கள் த்ரில்லரோ, ஹாரர் படங்களையோ எடுப்பதற்கு பெரிதாய் முயல்வதில்லை. இக்குழுவினர் ஒரு ஹாரர் குறும்படத்தை கொடுத்துள்ளனர். மிக நல்ல முயற்சி..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார விளம்பரம்
நல்ல நகைச்சுவையான விளம்பரம்.. நத்திங் சீரியஸ்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏஜோக்
ப்பா தன் பெண்ணின் பாய் ப்ரெண்டை பற்றி சொல்கையில்’அவனை பார்த்தால் நல்லவனாக தெரியவில்லை.. மோசமான பையனாக தெரிகிறது.. அவனுடன் பழகாதே..” என்றார்.
மகள்: அப்பா அவன் ரொம்ப நல்லவனப்பா..
அப்பா: எப்படி சொல்றே?
மகள் : நான் அவனோட பழகி ரெண்டு மாசம் தான் ஆவுது. மாசா மாசம் எனக்கு வர்ற உடம்பு பிரச்சனையை அவன் வராம நிறுத்திட்டான். அப்ப அவன் நல்லவன் தானே.. என்றாள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேபிள் சங்கர்

Jun 13, 2010

சென்னையில் பூமி அதிர்ச்சி..

நேற்றிரவு சுமார் 12.55 இருக்கும் திடீரென நான் உட்கார்ந்திருந்த சேர் லேசாக அதிர்ந்து, நகர்வதுபோலிருக்க.. சிறி து நேரத்தில் நான் உணர்ந்தேன். பூமி அதிர்வென.. சில நொடிகள் தொடர்ந்து அதிர, எல்லோரையும் எழுப்பலாம் என்று நினைப்பதற்குள்.. நின்று விட்டது.. கடவுளே..

Jun 12, 2010

ஓர் இரவு – திரை விமர்சனம்

orreravuuthemovie தமிழ் சினிமாவில்.. ஏன் இந்திய சினிமாவில் முதல் முறையாய் பாயிண்ட் ஆப் வீயூவில் எடுக்கப்பட்ட படம். பாயிண்ட் ஆப் வியூ என்றால்? பெரிதாய் வேறொன்றும் இல்லை… கதையின் நாயகன் கண் தான் கேமரா என்று வைத்துக் கொள்வோம் அவன் மூலம்பார்க்கும் பார்வையின் மூலம் கதை சொல்லப்பட்டிருக்கிறது அது தான் பாயிண்ட் ஆஃப் வியூ என்பதாகும்.

நகுலன் பொன்னுசாமி இறந்துவிடுகிறான். மிஸ்ட்ரி டிவி என்கிற டிவியில் நகுலனின் இறப்பு பற்றிய ஒரு நிகழ்ச்சியில் ஆரம்பிக்கிறது. யார் இந்த நகுலன் பொன்னுசாமி?
orr eravu நகுலன் பொன்னுசாமி ஒரு வெற்றிகரமான பாராநார்மல் ஆசாமி. ஆவி, பேய், பூதம் போன்ற அமானுஷ்யங்களை பற்றி ஆராய்ச்சி செய்பவன். அதற்காகவே லண்டனுக்கு சென்று படித்தவன். இதுவரை 18 கேஸ்களை வெற்றிகரமாக முடித்த அவனுக்கு 19வது கேஸாய், ஆனந்த் என்கிற ஒரு தொழிலதிபர் தான் வாங்கி வைத்திருக்கும் மூணாறு பங்களாவில் ஏதோ அமானுஷ்யங்கள் இருப்பதாய் சொல்லி, அதை கண்டுபிடித்து தரச் சொல்லி பணிக்கிறார்.

பகலில் பார்த்தாலே நடு முதுகில் சில்லிட வைக்கும் பாழடைந்த பங்களா. அங்கிருக்கும் அமானுஷ்யங்களை பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு நாள் இரவு தங்க முடிவெடுத்து, அங்கிருக்கும் அறைகளை எல்லாம் தன் சி.சி.டிவி நெட்வொர்க்குள் அமைத்து தன் எலக்ட்ரானிக் சங்கதிகளுடன் களம் இறங்குகிறான். எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் கடைசி இரண்டு நிமிடங்களில் நடக்கும் விஷயங்களில் நகுலன் பொன்னுசாமியின் வாழ்க்கையையே  திருப்பி போட்டு விடுகிறது
orr eravu1 ப்ளேர் விச் ப்ராஜெக்ட், பாராநார்மல் ஆக்டிவிட்டி, போன்ற படஙக்ளை  தலையில் வைத்து கொண்டாடிய நாம், நிச்சயம் இந்த தமிழ்படத்தையும் கொண்டாட வேண்டும். அவ்வளவு டெடிகேஷனோடு உழைத்திருக்கிறார்கள் இப்படக்குழுவினர்.

படம் ஆரம்பத்திலிருந்தே நம்மை கூடவே பயணிக்க வைக்கும் உத்தி மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. நகுலன் சிகரெட் பிடித்தால் நாமும் பிடிக்கிறோம், அவன் சோம்பல் முறித்தால் நாமும் சோம்பல் முறிக்கிறோம். அவன் பதட்டம் அடைந்தால் நாமும் அடைக்கிறோம்.  ஒரு டாகு பிலிம் போன்ற முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் உத்தி பாராட்டத்தக்கது. நடு நடுவே படத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் முயற்சிக்கு வெற்றியையே கொடுக்கிறது.

படத்தின் ஹீரோ.. ஒளிப்பதிவாளர் சதீஷ்.. பாயிண்ட் ஆப் வீயுவில் மூணாறின் விஷுவலாகட்டும், அந்த ஹேங்கிங் பிரிட்ஜ்  காட்சியாகட்டும், பேய் வீட்டை ஒரு சாதாரண மனநிலையோடு பார்க்கும் பார்வைக்கும், அதே வீட்டை பதட்டத்தோடு பார்க்கும் பார்வைக்கும் தன் கேமரா மூலமா உணர்வுகளை வெளிப்படுத்தி நடு முதுகில் ஐஸ் உறைய வைக்கும் அவருக்கு ஒரு சபாஷ்..
orr eravu2  வெங்கட் பிரபு ஷங்கரின் பிண்ணனி இசை, ஹரிஷங்கரின் எடிட்டிங் என்று டெக்னிக்கல் டிபார்ட்மெண்ட்கள் அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டு உழைத்திருக்கிறது. கதை திரைக்கதை வசனம் இயக்கம். ஹரிஷ், ஹரி ஷங்கர், கிருஷ்ண சேகர். எனக்கு தெரிந்து இரட்டையர்கள் இயக்கி பார்த்திருக்கிறோம். தமிழ் சினிமாவில் முதல் முறையாய் மூன்று இயக்குனர்கள் இயக்கியிருக்கிறார்கள்.

டிஜிட்டலில் படமெடுக்கிறோம் என்று வழக்கமான மதுரை, அரிவாள், பாட்டு, காமெடி என்று போகாமல் டிஜிட்டல் சினிமாவுக்கான சரியான கதை களத்தை கையிலெடுத்துக் கொண்டு, ஜெயித்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பாயிண்ட் ஆப் வீயூ என்று முடிவெடுத்தவுடன் அதற்கேற்றார் போன்ற ஷாட் டிவிஷன்கள், கேரக்டர் பேசும் வசனங்கள், நடவடிக்கைகள் எல்லாமே மிக இயல்பு. அதே போல அந்த கேரக்டருக்கு வரும் பதட்டம், பயம் எல்லாமே அவ்வளவு இயல்பாய் ஒட்டிக் கொள்கிறது நமக்கு. மூணாறு போகும் வழியில் லிப்ட் கேட்கும் வில்லிவாக்கம் ரவியின் பேச்சினிடையே உலவும் காமெடியும், பின் அதே கேரக்டரை வைத்து உறையும் இடமும் சூப்பர். “ இந்த மாதிரி இடத்தில நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். ஏன்னா சில சமயம் நம்ம நிழலே நம்மை பயமுறுத்தும்” என்று நகுல் பேசும் வசனங்கள் மிக ஷார்ப். க்ளைமாக்ஸை நோக்கி போகும் நேரத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்பவர்களுக்கு… இருக்கிறது.. அதெல்லாம் ஒரு பெரிய விஷயமாய் படவில்லை. நிச்சயம் இருக்கிறது. அதையெல்லாம் மீறி படம் என்க்ராசிங்காக இருப்பதை மறுக்க முடியாது. இளைஞர்களாய் இணைந்து ஒரு வித்யாசமான பட அனுபவத்தை கொடுத்ததிற்காக  வாழ்த்துக்கள்.

ஓர் இரவு – வரவேற்க வேண்டிய முயற்சி. நிச்சயம் பார்கலாம்.

டிஸ்கி:
படம் பார்த்துவிட்டு கலைப்புலி தாணு “ ஒரு நாலு நாளைக்கு தனியா வீட்டில இருக்க முடியல” என்றாராம். சவுண்ட் இன்ஜினியர் கண்ணன் இரவில் வேலை செய்ய மாடிக்கு போக துணையில்லாமல் போக வேயில்லையாம். நேற்று படம் பார்த்த பத்திரிக்கையாளர்கள் ஒருவர் முகம் வெளிறி.. வெளியில் போய் உட்கார்ந்ததை பார்த்தேன்.
கேபிள் சங்கர்

Jun 11, 2010

Vedam –2010

wp-14vedam800
எத்தனை நாளாகிவிட்டது இந்த மாதிரி ஒரு ஸ்டன்னிங் படம் பார்த்து… அல்லு அர்ஜுன், அனுஷ்கா, மனோஜ் பாஜ்பாய், மனோஜ், என்று பெரிய நட்சத்திர பட்டாளமே படையெடுத்திருக்க, கம்யம் இயக்குனர் இயக்கியுள்ள அடுத்த படம் என்ற எதிர்பார்ப்பே படத்திற்கு ப்ளஸ் பாயிண்டாக படம் பார்க்க தூண்டியது.

மனோஜ் ஒரு ராக் ஸ்டாராக ஆசைப்படும் மிலிட்டரி குடும்பத்து பெங்களூர்கார இளமை துள்ளும் இளைஞன். அவனுடய தாத்தா, அப்பா எல்லோருமே நாட்டுக்காக ராணுவத்தில் பணியாற்றி தியாகம் செய்தவர்கள். மனோஜுக்கு ஹைதராபாத்தில் அவனது ராக் குழுவுக்கு ஒரு லைவ் ப்ரோக்ராமுக்கு சான்ஸ் வர, கடைசி நேரத்தில் விமானத்தை தவற விட்டதால், வேறு வழியில்லாமல் பெங்களூர் டூ ஹைதராபாத் காரில் பயணமாகிறான். வழியில் ஒரு சில பிரச்சனைகளை தாண்டி ஹைதராபாத் அடைகையில் ஒரு விபத்திற்குள்ளாகி, அடிபட்ட ஒரு கர்பிணி பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க வருகிறான்.

wp-15vedam800
ராமுலு.. ரூலல் ஆந்திர பிரதேசத்தில் ஒரு நில சுவாந்தாரிடம் 50,000 கடன் பெற்று அதை அடைக்க முடியாமல் தவிக்கிறான். அவனது பேரனை கொத்தடிமையாக்கி பணம் கொடுத்தால் பையனை விடுவிக்கிறேன் என்கிறான். வேறு வழியில்லாமல் கிட்னி வாங்கி விற்கும் கும்பலிடம் தன் மருமகளுடய கிட்னியை விற்று, பையனை மீட்டு, நன்றாக படிக்கும் அச்சிறுவனை படிக்க வைக்க நினைக்கிறார். அதற்காக மருமகளின் கிட்னியை விற்க ஹைதராபாத் வருகிறார், ராமுலு.

சரோஜா.. அமலாபுரத்தில் ஒரு விபச்சாரி, தனக்காக அந்த ப்ராத்தல் ஓனர் வாங்கும் பணத்தில் வெறும் இருபது சதவிகிதமே தருகிறாள் என்ற ஆதங்கம் உள்ளவள். அதனால் எப்படியாவது அங்கிருந்து தப்பித்து ஹைதராபாத் வந்து சொந்தமாக தொழில் செய்ய ஆசைப்பட்டு,  அங்கிருந்து தப்பித்து ஹைதராபாத் வருகிறாள். அவளுடய அரவாணி தோழியோடு.
wp-18vedam800 கேபிள் ராஜு. ஒரு தாதாவின் கேபிள் டிவியில் வேலை செய்யும் அவன், தன் தகுதிக்கு மீறி மிகப்பெரிய பணக்கார பெண்ணை தானும் பணக்காரன் என்று நம்ப வைத்து எப்படியாவது அவளை திருமணம் செய்ய ஆசைப்படும் பேராசைக்காரன். ஒரு கட்டத்தில் புது வருஷ பார்ட்டிக்கு இரண்டு டிக்கெட்டுகள் வாங்கி வா.. அங்கே வரும் என் அம்மாவிடம் உன்னை அறிமுகப்படுத்துகிறேன் என்று வரச் சொல்கிறாள் காதலி. ஆனால் விழாவுக்கான டிக்கெட் விலை நாற்பது ஆயிரம் ரூபாய். அது கிடைக்காமல் திருடியாவது அவளுடன் அந்த பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று பணத்தை திருட நினைத்து, கிட்னி விற்று பணத்தை கொண்டு வரும் பெரியவரிடமிருந்து பணத்தை திருட அவனும் ஹாஸ்பிடல் வருகிறான்.

ரெஹமுல்லா குரேஷி.. முஸ்லிமாக இருப்பதால், ஹைதராபாத்தில் நடந்து ஒரு ஹிந்து ஊர்வலத்தில் தன் நிறைமாத கர்பிணியின் கர்ப்பம் கலைந்து, இனிமேல் இந்தியாவில் இருக்கக்கூடாது என்று முடிவு செய்து துபாய் போக விசா எல்லாம் ரெடியாகி, ஹைதராபாத்திலிருந்து கிளம்ப வருகிறான். நடுவில் மீண்டும் போலீஸ் அவன் முஸ்லிம் என்பதால் சந்தேகத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து போக, அங்கிருந்து தப்பி ஓடுகையில் போலீஸாரால் துப்பாக்கியால் காலில் சுடப்பட்டு, அதே ஹைதராபாத் ஆஸ்பத்திரிக்கு வருகிறான்.

இவர்கள் ஐந்து பேரும் வ்ந்து சேரும் இடமான மருத்துவமனையை, தீவிரவாதிகள் வளைத்து, கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ள, முடிவு வெள்ளித் திரையில்.

முதலில் இம்மாதிரியான நான் கமர்ஷியல் கதையம்சம் உள்ள படத்தில் தெலுங்கில் முக்கிய நடிகர்களான அத்துனை பேரும் இதில் நடிக்க முடிவெடுத்ததே மிகப் பெரிய சந்தோஷம்.

முதலில் அல்லு அர்ஜுன், அனுஷ்கா, போன்றவரக்ளை பாராட்ட வேண்டும் இம்மாதிரியான கதைகளில் வெகு ஜன பிரபலமான நடிகர்கள் நடிப்பது வரவேற்கதக்கது. கேபிள் ராஜுவாக வரும் அல்லு அர்ஜுனாகட்டும், குரேஷியாக வரும் மனோஜ் பாஜ்பாயாகட்டும், அமலாபுரம் விபச்சாரியாக வரும் அனுஷ்காவாகட்டும், ம்ஹும் அம்மணி பின்னியிருக்காங்க…  குரேஷி போன்ற நியாயமான முஸ்லிமாகட்டும். ராக் ஸ்டாராக ஆசைப்படும் மனோஜாகட்டும் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

அனுஷ்க்கா….. அம்மணி தூள் பரத்துகிறார். நிஜ மேட்டர் பார்ட்டி கெட்டுது. அவ்வளவு தத்துரூபம்… பாடி லேங்குவேஜாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் அம்மணி பெரிய பவர்புல்.  சரோஜா... சரோஜாதான்..ம்ஹும்… அல்லு அர்ஜுன் தான் பணக்காரன் என்று காட்டிக் கொள்ள, அவ்வப்போது சட்சட்டென ப்ரெசென்ஸ் ஆப் மைண்டுடன் பொய் சொல்வதும், பணத்தை திருடப் போகும் போது குறுக்கே அழைக்கும் க்யூட் குழந்தையை கவனிக்காமல் இருப்பவர், பணத்தை திரும்ப திருடிய இடத்திலேயே வைத்தது விட்டு திரும்பி வரும் போது அந்த மழலையிடம் நிம்மதியாக விளையாடும் இடம். அட்டகாசம். தான் ஒர் சிறந்த நடிகர் என்பதையும் நிருபித்திருக்கிறார்.

மஞ்சு மனோஜ்.. ஒரு தற்கால ராக் ஸ்டார் ஆக வேண்டும் என்கிற கனவோடு அலையும், இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். படத்தில் ஆங்காங்கே வரும் குட்டி,குட்டி கேரக்டர்களுக்கு கூட ஒரு டீடெய்லிங் செய்திருப்பது அருமை.

எம்.எம்.கீரவாணியின் இசை படத்தோடு ஒட்டி உறவாடுவதால்.. பெரிய தொய்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். குணசேகரனின் ஒளிப்பதிவு அருமை. தேவைக்கேற்ற மூடை கொடுக்கிறார். அதே போல எடிட்டிங்கும்.

இப்படத்தின் முழு வெற்றிக்கு காரணம் இயக்குனர் கிரிஷ் தான். மிக ஷார்பான டயலாக்குகள், ”உலகத்திலேயே அனுபவம் குறைவுன்னா அதிக பணம் சம்பாதிகிற்து நம்ம தொழில் தான்” எனறு அனுஷ்கா சொல்வது  போல ஆங்காங்கே நச் நச்சென வசனங்கள். மிக இயல்பான திறமையான திரைக்கதை, கரெக்டான கேஸ்டிங் என அற்புதமான இயக்கம் என்று அசத்தியிருக்கிறார் மீண்டும் கிருஷ்.


ஏற்கனவே கம்யம் என்கிற ஒரு அருமையான காதல் திரைப்படத்தை  இயக்கி, 2008க்கான நந்தி அவார்ட் வாங்கிய இயக்குனர். தெலுங்கில் இம்மாதிரியான மல்டி ஸ்டார் படங்களுக்கு முன் மாதிரியாக இப்படம் அமையப் போகிறது. அதிலும் பெரிய கமர்ஷியல் இல்லாத படங்கள் வர இப்படத்தின் வெற்றி துணை செய்யப் போகிறது. விரைவில் தமிழிலும் இம்மாதிரியான ஆரோகியமான விஷயம் நடைபெறப் போகிறது என்பதன் அறிகுறிதான் இப்படம். படத்தில் குறையே இல்லாமலில்லை.. இருக்கிறது. ஆனால் அதெயெல்லாம் க்ளைமாக்ஸில் மிக அழகான திரைக்கதையின் மூலம் நெஞ்சை நெகிழ வைத்துவிடுவதால்....

Vedam – Again A Fantastic Film From Krish.. Don’t Miss It..
கேபிள் சங்கர்

டிஸ்கி: முந்தானை முடிச்சு என்கிற சீரியலில் நான் நடித்திருக்கிறேன். இன்று மாலை ஆறு மணிக்கு, சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. தைரியமுள்ளவர்கள் பார்த்து சொல்லுங்கள். :)

Jun 10, 2010

Raajneeti-(2010)

raaj1 தமிழ் சினிமாவிற்கு ஏற்ற கதை. அதுவும் இன்றைய அரசியல் நிலைகளுக்கு ஏற்ற படம். எப்படி பார்த்தாலும் இப்படத்தை பார்க்கும் தமிழர்களுக்கு கலைஞரின் ஞாபகம் வராமல் இருக்காது.
raajneeti.1jpg முதலமைச்சர் ஹார்ட் அட்டாக்கில் விழுந்து, கை கால் இழுத்துக் கொள்ள, அடுத்து தனக்குத்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த மகன் விரேந்திரனை நம்பாமல் தன் தம்பியிடமும், அவரின் மகனிடமும் பொறுப்பை கொடுக்க, அதனால் விரேந்திரனின் ஆதரவாளனான தலித் தலைவனை தன் பக்கம் வைத்துக் கொண்டு அவரை கொல்கிறான் விரேந்திரன்.
raaj இதை சிறிதும் எதிர்பார்க்காத அவரின் மூத்த மகனும், அமெரிக்க ரிட்டர்னான சமீரும், காய் நகர்த்த ஆரம்பிக்க, ஆட்டம் சூடு பிடிக்கிறது. இவர்களின் எல்லா ஆட்டத்திற்கும், சகுனியாய் மாமன் நானா படேகர், சமீருக்கும், வெள்ளைகார பெண்ணுக்குமான காதலினால், சிறு வயதிலேயிருந்து தன்னை காதலிக்கும் தொழிலதிபர் பெண் காத்ரீனா கைப்பை அவாய்ட் செய்யும் சமீர், தன் அரசியல் வாழ்க்கைக்காக தன் காதலை கூட இழக்க தயாராகி, அவரையே திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்க, அதற்கு தொழிலதிபர் தான் பண்ட் செய்யும் கட்சியின் முதலமைச்சருக்கு வேண்டுமானல் என் பெண்ணை தருவேனே தவிர, அடுத்த கட்டத்தில் இருக்கும் அவரது தம்பிக்கு தர மாட்டேன் என்று சொல்ல, அரசியல் பலத்துக்காகவும், பண பலத்திற்காகவும், தம்பியை காதலித்த பெண் என்று தெரிந்தும், சமீரின் அண்ணனும், காத்ரினாவும் கல்யாணம் செய்து கொள்வது, மிகவும் சாதாரண சாப்ட் ஸ்போக்கன் ஆளாய் இருந்த சமீர் தன் தந்தையை கொன்றவனை பழிவாங்கும் வெறியும், தன் அண்ணனை முதலமைச்சர் ஆக்கி காட்டுவது என்று வெறியும் சேர்ந்து அவனுள் இருக்கும் மிருகத்தை வெளிக் கொணர்வது என்று பரபரப்பாக போகிறது.
Raajneeti_330x234 திறமையான நடிகர்கள், சிறந்த டெக்னீஷியன்கள், மிகச் சிறந்த தயாரிப்பு என்று எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கூட்டம். அஜய் தேவ்கன், மனோஜ் பாஜ்பாய், நானா படேகர், நஸ்ரூதீன் ஷா, கத்ரீனா கைப்,அர்ஜுன் ராம்பால், ரன்பீர்கபூர் மற்றும் சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்டுகள் என்று நிறைந்திருக்கும் நடிகர் கூட்டம். தங்களுடய பங்கை மிக ஆருமையாய் செய்திருக்கிறார்கள்.
raajneeti முக்கியமாய் அர்ஜுன் ராம்பாலுக்கு இப்படம் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம். ரன்பீரின் சப்மிஸிவான நடிப்பு எடுபடுகிறது. தலித் தலைவன் அஜய் தேவ்கன் வழக்கம் போல நச்.. அவருக்கான கர்ண கதை ப்ளாஷ் பேக் எல்லாம் பெரிசாய் எடுப்டவில்லை.

இந்தியில் மிகக் குறைவாய் மதிப்படப்பட்டிருக்கும் நடிகருள் மனோஜ் பாஜ்பாயும் ஒருவர். என்ன அருமையான நடிப்பு.. அவரின் கோபமும், கண் பார்வையும், பாடி லேங்குவேஜிலேயே வெற்றியையும், தோல்வியைவும் வெளிப்படுத்தும் விதம் அட்டகாசம் மனோஜ்.

காத்ரீனாவின் கேரக்டரும் கொஞசம் வீக்தான் என்றாலும், பணம், பவர் என்று வரும் போது அவர்களின் முடிவெடுக்கும் திறன், கணவனை பறி கொடுத்த வேகத்தில் அரசியல் கட்டாயத்துக்காக அரசியலில் குதித்து போராடும் பெண் என்று இவரின் பாத்திரம் அழுத்தம் தான். ஆங்காங்கே சில ப்ரோபைல்களில் பழைய இந்திரா காந்தியை நினைவு படுத்த முயன்றிருக்கிறார்கள்.
Raajneeti_17237 என்ன தான் அரசியல் சூதாட்டங்களை சொல்ல நினைத்தாலும், இவர்களின் குடும்ப உறவு லிங்குகளை புரிந்து கொள்வதற்குள் தாவூ தீர்ந்துவிடுகிறது. யார் யார் சித்தப்பன், மாமன் என்று புரிவதற்குள் இடைவேளை வருகிறது. திடீரென தனி கட்சி என்கிறார்கள், பின்பு மாமனுடனேயேகூட்டு என்றெல்லாம் சொல்கிறார்கள். இம்மாதிரியான இடங்களில் எலலாம் அவ்வப்போது ஜெர்க் அடிக்கத்தான் செய்கிறது. அதிலும் ரெண்டாம் பாதி செம லெந்த் எடிட் செய்யப்படவேண்டிய காட்சிகள் நிறைய.. அதே போல் தெலுங்கு படமான லீடர் படத்தில் வரும் காட்சிகள் இதில் நிறைய.. அமெரிக்க பையன், சகுனி மாமன்கள், விதவை தாய், வலுக்கட்டாயமாக வ்ரும் காதல், அரசியல் எல்லாம்..

அரசியல் தர்மத்திற்காக நடக்கும் கொலைகளும், உறவுக் கொலைகளும், துரோகங்களூம், குயுக்திகளூம், வாரிசு அரசியலும், வாரிசுகளின் ஆளூமையும், அதற்கான குழு துரோகங்களும் என்று படம் முழுக்க என்னால் தலைவரின் குடும்பத்தை வைத்துதான் புரிந்து கொள்ள முடிந்தது. இண்ட்ரஸ்டிங்..:)
Raajneeti –Powerful.. But Lack of Punch
கேபிள் சங்கர்