தியேட்டர்ல ஓடவே இல்லை வ்ரோ!! அப்புறம் எப்படி லாபம் என பல படங்களுக்கு ரசிகர்கள் கேட்பதுண்டு. ஒரு தயாரிப்பாளராய், விநியோகஸ்தராய், இயக்குனராய் பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறவன் என்கிற முறையில் சொல்கிறேன். சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு ஹாரர் ப்ரான்ஸைஸ் படம். 13 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது. அதை மொத்தமாய் எல்லா உரிமைகளையும் ஒரு நிறுவனம் 16 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அதை சுமார் 10 கோடிக்கு சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை விற்றது. தெலுங்கு மற்றும் ஹிந்திக்கு 3 கோடிக்கும், வெளிநாட்டு உரிமையில் சுமார் 1 கோடிக்கும் விற்றது. சோ படம் வெளியாவதற்கு முன்னமே வாங்கிய விலையில் 14 கோடி வசூல் ஆகிவிட்ட நிலையில். தியேட்டரில் வெளியாகி சுமார் 40+கோடிகள் கிராஸ் செய்தது அந்தத் திரைப்படம். அந்த நடிகரின் கேரியரில் முதல் பெரிய வசூல் என்றே சொல்ல வேண்டும். தியேட்டர் ஷேர் மட்டுமே பத்து கோடிக்கு மேல். என்னடா குழப்புறே? 40கோடி வசூல்னு சொல்லுறே அப்புறம் பத்து கோடிக்கு மேல் தான் கலெக்ஷனு சொல்லுறே? என்று கேட்பவர்களுக்கு கிராஸ் என்றால் என்ன?, நெட் என்றால் என்ன?. கட்டங்கடைசியாய் தயாரிப்பாளருக்கு கிடைக்க...
Comments
உலகம் முழுக்க ஆவும் உங்க ஊட்டுல மட்டும் ஆவுமா!
me to suyetchai mla
நம்ம மக்களுக்கு என்றுமே பொறுமையுடன் ஒரு விஷயத்தை அணுகும் முறை இல்லை..
முடிந்தால் சந்திப்புக்கு வருகிறேன் ...(தனிபட்ட முறையில் உங்களை பார்த்து, சில உலக திரைப்பட சிடிக்களை வாங்க சைதைக்கு கட்டாயம் வருவேன் )
சொல்லவே இல்ல ...
ஆமாங்க.. எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது. நீங்கதானானு? அந்தப்படம் நான் ராமாபுரத்தில் இருந்தபோது, பஸ் ஸ்டாப்பில் வைத்து, ஒரு சலூன் சீன் எடுத்தார்கள். க்ளைமாக்சில் வருவது அதுதான் என்று ஞாபகம்.
நல்லது.. நன்றாக வந்திருந்தது! வேற படங்கள்ல நடிச்சிருக்கீங்களா?
அன்புடன்
கார்த்திகேயன்
காரணம் ஆயிரம்
http://kaaranam1000.blogspot.com