மிளகா
மதுரைக்கார பசங்க நட்புக்காக உசுரையே கொடுப்பாய்ங்கனு பஞ்ச் லைன் போட்டிருக்காங்க.. அதுக்காகவே ஒரு கதையை ரெடி பண்ணியிருக்காங்க. ரொம்ப நாளைக்கு பிறகு இயக்குனர் ரவிமரியா இயக்கியிருக்கிற படம். மிளகா
நட்ராஜ் மிளகா மண்டி ஓனரோட பையன். வீட்டுல பொறுப்பில்லாம, ஆனா ஊருக்கும், நட்புக்கும் பொறுப்பா இருக்கிறவரு. அவருடய நட்பு கும்பல்,சிங்கம்புலி, ஜெகன், இன்னும் ரெண்டு பேர். அதில் ஒருவர் வாய் பேச முடியாதவர். நண்பனின் கடனை வசூல் செய்ய உதவும் நட்ராஜை பார்த்து ஊரில் உள்ள ரவுடி பிரதர்ஸின் கஸ்டடியில் இருக்கும் ஒரு பெண், நட்ராஜை வைத்து தன்னை காத்துக் கொள்ள நினைக்கிறாள். அதற்காக அவர் தன்னை காதலிப்பதாய் பிரச்சனையை கிளம்பிவிட, அதில் மாட்டுகிறார் நட்ராஜ்.. மீதி என்ன எனபது வெள்ளிதிரையில்.
நட்ராஜ் ஒரு மினி ரஜினி என மனதில் நினைத்துக் கொண்டு, அதே போல பேசுகிறார், சண்டை போடுகிறார், மார்கெட்டில் வடக்கத்தி பெண்ணுடன் நடனம் ஆடுகிறார். எல்லா சகவாசங்கள் இருந்தாலும், நண்பர்களுக்கு என்றால் உயிரை கொடுக்கிறார். திடீரென கருப்பண்ண சாமி பக்தனாகி உக்கிரம் கொண்டு அருவாளெடுக்கிறார். ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வரும் ஆசையோடு எல்லாவற்றையும் செய்திருகிறார். சில சமயங்களில் சரிபட்டு வந்தாலும், காதல் காட்சிகளில் முடியல.
படம் நெடுக மீண்டும் தன் ஸ்பாண்டேனிட்டியான டயலாக்குகளால் அதிரவும், புன்முறுவல் பூக்கவும் செய்திருக்கிறார் சிங்கம்புலி. இவர்களுக்கெல்லாம் பைனாஸ்செய்யும் நண்பராக இயக்குனர் ஜெகன். அந்த வாய் பேச முடியாதவர் “பே..பே” என்று சொல்வதை விளக்கும் இடங்களில் சிங்கம்புலி அட்டகாசம். அந்த வாய் பேச முடியாதவர் சிவாஜியின் பழைய படத்தை போட்டு சாமி முன்னால் சிவாஜி அ..அம்மா..அப்பா, கடவுள் என்பதை, பார்த்து இவரும் பேச விரும்பும் காட்சி சிரிப்பை வரவழைத்தாலும் லேசாக நெருடுகிறது.
வழக்கம் போல வில்லன்கள், அடியாட்கள், ஏய்…எய்ய்… என்ற கத்தல்கள், வந்திட்டாய்ங்க.. போய்ட்டாய்ங்க, மாப்ள, அருவாள் என்று டெம்ப்ளேட் மதுரை பட வரிசையில் காட்சிகள் அணிவகுத்திருக்கிறது. மூன்று வில்லன்களில் நான் கடவுள் பிச்சைக்கார முதலாளி மட்டும் நினைவில் நிற்பார். கதாநாயகி இருவர், முதல் பாதியில் டூயட் பாடுவதற்கும், ஒன் சைட் லவ் செய்வதற்கு ஒருத்தியும், இன்னொருவர் மெயின் ஹிரோயினும். இரண்டாவது கதாநாயகிக்கு வழக்கம் போல் தொப்புளூக்கு கீழே பாவடை கட்டி ஹீரோ மீது உரசி உரசி பேசிவிட்டு, ஹீரோ காதல் செய்வது வேறு ஒருத்தியை என்று தெரிந்ததும் விட்டுக் கொடுத்து அழுவதும் என்பதுமாய் இருக்கிறார். கதாநாயகி கோரிப்பாளையும் கதாநாயகி. யாரும் தமிழ் பெண்களை பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை இதில் விலக்கிக் கொள்ளலாம். பெரிதாய் ஏதும் சொல்ல முடியாவிட்டாலும், குறையொன்றும் இல்லை. இவரை ஏன் பிரதர்ஸ் கோஷ்டி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதற்கான ப்ளாஷ்பேக் கொஞ்சம் பில்டப் அதிகமாகவே செய்தாலும். தெரியும் போது இண்ட்ரஸ்டிங் ட்விஸ்ட்தான்.
நட்ராஜை தேடி வில்லன் கோஷ்டிகள் வீட்டிற்கு போக அங்கே வந்த ரவுடிகளை பார்த்ததும் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே வந்த அவரது பாட்டியும், அப்பாவும், அவர்களுடனே சேர்ந்து மதுரைவரை பஸ்ஸ்டாண்டிலும், ஊரிலுமாய் நட்ராஜுனுடய பாட்டியை தேடுவதாய் அலைவதும், நடுநடுவே பாட்டி நட்ராஜிடம் பேசும் வசங்களும் இண்ட்ரஸ்டிங்.
என்ன தான் பரபரப்பாய் கதை சொல்ல முயற்சித்திருந்தாலும், என்பதுகளில் வெளியான படங்கள் போலவே இருப்பது பெரிய மைனஸ். தூசு கிளம்பத்தான் செய்கிறது.
மிளகா - காரமில்லை
கேபிள் சங்கர்
Comments
மிக்க நன்றி...
Virmasanam Sooper.I hope NATTU Rocks.
Bangalore vandhadha patthi engalukku ellam sollavea illa.
Next time inform pannunga.. will meet.
நன்றி
@கே.ஆர்.பி.செந்தில்
ம்ஹும்
@ரத்னா
ரைட்டு
@கார்த்திகேயன் மாணிக்கம்
நிச்சயம்
ரமேஷ் ரொம்ப நல்லவன்
நன்றி
@அஹமது இர்ஷாத்
நன்றி
@ரவிகுமார் திருப்பூர்
பார்க்கலாம்
@பார்வையாளன்
ரொம்ப காரமா இருந்தா.. காரம்னு சொல்றாங்க.. அடபோங்கப்பா
@ஷைலஜா
நன்றி
@கேரளாக்காரன்
அப்படி சொல்வது விமர்சனமல்ல..
@ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி