Thottal Thodarum

Jun 11, 2010

Vedam –2010

wp-14vedam800
எத்தனை நாளாகிவிட்டது இந்த மாதிரி ஒரு ஸ்டன்னிங் படம் பார்த்து… அல்லு அர்ஜுன், அனுஷ்கா, மனோஜ் பாஜ்பாய், மனோஜ், என்று பெரிய நட்சத்திர பட்டாளமே படையெடுத்திருக்க, கம்யம் இயக்குனர் இயக்கியுள்ள அடுத்த படம் என்ற எதிர்பார்ப்பே படத்திற்கு ப்ளஸ் பாயிண்டாக படம் பார்க்க தூண்டியது.

மனோஜ் ஒரு ராக் ஸ்டாராக ஆசைப்படும் மிலிட்டரி குடும்பத்து பெங்களூர்கார இளமை துள்ளும் இளைஞன். அவனுடய தாத்தா, அப்பா எல்லோருமே நாட்டுக்காக ராணுவத்தில் பணியாற்றி தியாகம் செய்தவர்கள். மனோஜுக்கு ஹைதராபாத்தில் அவனது ராக் குழுவுக்கு ஒரு லைவ் ப்ரோக்ராமுக்கு சான்ஸ் வர, கடைசி நேரத்தில் விமானத்தை தவற விட்டதால், வேறு வழியில்லாமல் பெங்களூர் டூ ஹைதராபாத் காரில் பயணமாகிறான். வழியில் ஒரு சில பிரச்சனைகளை தாண்டி ஹைதராபாத் அடைகையில் ஒரு விபத்திற்குள்ளாகி, அடிபட்ட ஒரு கர்பிணி பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க வருகிறான்.

wp-15vedam800
ராமுலு.. ரூலல் ஆந்திர பிரதேசத்தில் ஒரு நில சுவாந்தாரிடம் 50,000 கடன் பெற்று அதை அடைக்க முடியாமல் தவிக்கிறான். அவனது பேரனை கொத்தடிமையாக்கி பணம் கொடுத்தால் பையனை விடுவிக்கிறேன் என்கிறான். வேறு வழியில்லாமல் கிட்னி வாங்கி விற்கும் கும்பலிடம் தன் மருமகளுடய கிட்னியை விற்று, பையனை மீட்டு, நன்றாக படிக்கும் அச்சிறுவனை படிக்க வைக்க நினைக்கிறார். அதற்காக மருமகளின் கிட்னியை விற்க ஹைதராபாத் வருகிறார், ராமுலு.

சரோஜா.. அமலாபுரத்தில் ஒரு விபச்சாரி, தனக்காக அந்த ப்ராத்தல் ஓனர் வாங்கும் பணத்தில் வெறும் இருபது சதவிகிதமே தருகிறாள் என்ற ஆதங்கம் உள்ளவள். அதனால் எப்படியாவது அங்கிருந்து தப்பித்து ஹைதராபாத் வந்து சொந்தமாக தொழில் செய்ய ஆசைப்பட்டு,  அங்கிருந்து தப்பித்து ஹைதராபாத் வருகிறாள். அவளுடய அரவாணி தோழியோடு.
wp-18vedam800 கேபிள் ராஜு. ஒரு தாதாவின் கேபிள் டிவியில் வேலை செய்யும் அவன், தன் தகுதிக்கு மீறி மிகப்பெரிய பணக்கார பெண்ணை தானும் பணக்காரன் என்று நம்ப வைத்து எப்படியாவது அவளை திருமணம் செய்ய ஆசைப்படும் பேராசைக்காரன். ஒரு கட்டத்தில் புது வருஷ பார்ட்டிக்கு இரண்டு டிக்கெட்டுகள் வாங்கி வா.. அங்கே வரும் என் அம்மாவிடம் உன்னை அறிமுகப்படுத்துகிறேன் என்று வரச் சொல்கிறாள் காதலி. ஆனால் விழாவுக்கான டிக்கெட் விலை நாற்பது ஆயிரம் ரூபாய். அது கிடைக்காமல் திருடியாவது அவளுடன் அந்த பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று பணத்தை திருட நினைத்து, கிட்னி விற்று பணத்தை கொண்டு வரும் பெரியவரிடமிருந்து பணத்தை திருட அவனும் ஹாஸ்பிடல் வருகிறான்.

ரெஹமுல்லா குரேஷி.. முஸ்லிமாக இருப்பதால், ஹைதராபாத்தில் நடந்து ஒரு ஹிந்து ஊர்வலத்தில் தன் நிறைமாத கர்பிணியின் கர்ப்பம் கலைந்து, இனிமேல் இந்தியாவில் இருக்கக்கூடாது என்று முடிவு செய்து துபாய் போக விசா எல்லாம் ரெடியாகி, ஹைதராபாத்திலிருந்து கிளம்ப வருகிறான். நடுவில் மீண்டும் போலீஸ் அவன் முஸ்லிம் என்பதால் சந்தேகத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து போக, அங்கிருந்து தப்பி ஓடுகையில் போலீஸாரால் துப்பாக்கியால் காலில் சுடப்பட்டு, அதே ஹைதராபாத் ஆஸ்பத்திரிக்கு வருகிறான்.

இவர்கள் ஐந்து பேரும் வ்ந்து சேரும் இடமான மருத்துவமனையை, தீவிரவாதிகள் வளைத்து, கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ள, முடிவு வெள்ளித் திரையில்.

முதலில் இம்மாதிரியான நான் கமர்ஷியல் கதையம்சம் உள்ள படத்தில் தெலுங்கில் முக்கிய நடிகர்களான அத்துனை பேரும் இதில் நடிக்க முடிவெடுத்ததே மிகப் பெரிய சந்தோஷம்.

முதலில் அல்லு அர்ஜுன், அனுஷ்கா, போன்றவரக்ளை பாராட்ட வேண்டும் இம்மாதிரியான கதைகளில் வெகு ஜன பிரபலமான நடிகர்கள் நடிப்பது வரவேற்கதக்கது. கேபிள் ராஜுவாக வரும் அல்லு அர்ஜுனாகட்டும், குரேஷியாக வரும் மனோஜ் பாஜ்பாயாகட்டும், அமலாபுரம் விபச்சாரியாக வரும் அனுஷ்காவாகட்டும், ம்ஹும் அம்மணி பின்னியிருக்காங்க…  குரேஷி போன்ற நியாயமான முஸ்லிமாகட்டும். ராக் ஸ்டாராக ஆசைப்படும் மனோஜாகட்டும் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

அனுஷ்க்கா….. அம்மணி தூள் பரத்துகிறார். நிஜ மேட்டர் பார்ட்டி கெட்டுது. அவ்வளவு தத்துரூபம்… பாடி லேங்குவேஜாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் அம்மணி பெரிய பவர்புல்.  சரோஜா... சரோஜாதான்..ம்ஹும்… அல்லு அர்ஜுன் தான் பணக்காரன் என்று காட்டிக் கொள்ள, அவ்வப்போது சட்சட்டென ப்ரெசென்ஸ் ஆப் மைண்டுடன் பொய் சொல்வதும், பணத்தை திருடப் போகும் போது குறுக்கே அழைக்கும் க்யூட் குழந்தையை கவனிக்காமல் இருப்பவர், பணத்தை திரும்ப திருடிய இடத்திலேயே வைத்தது விட்டு திரும்பி வரும் போது அந்த மழலையிடம் நிம்மதியாக விளையாடும் இடம். அட்டகாசம். தான் ஒர் சிறந்த நடிகர் என்பதையும் நிருபித்திருக்கிறார்.

மஞ்சு மனோஜ்.. ஒரு தற்கால ராக் ஸ்டார் ஆக வேண்டும் என்கிற கனவோடு அலையும், இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். படத்தில் ஆங்காங்கே வரும் குட்டி,குட்டி கேரக்டர்களுக்கு கூட ஒரு டீடெய்லிங் செய்திருப்பது அருமை.

எம்.எம்.கீரவாணியின் இசை படத்தோடு ஒட்டி உறவாடுவதால்.. பெரிய தொய்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். குணசேகரனின் ஒளிப்பதிவு அருமை. தேவைக்கேற்ற மூடை கொடுக்கிறார். அதே போல எடிட்டிங்கும்.

இப்படத்தின் முழு வெற்றிக்கு காரணம் இயக்குனர் கிரிஷ் தான். மிக ஷார்பான டயலாக்குகள், ”உலகத்திலேயே அனுபவம் குறைவுன்னா அதிக பணம் சம்பாதிகிற்து நம்ம தொழில் தான்” எனறு அனுஷ்கா சொல்வது  போல ஆங்காங்கே நச் நச்சென வசனங்கள். மிக இயல்பான திறமையான திரைக்கதை, கரெக்டான கேஸ்டிங் என அற்புதமான இயக்கம் என்று அசத்தியிருக்கிறார் மீண்டும் கிருஷ்.


ஏற்கனவே கம்யம் என்கிற ஒரு அருமையான காதல் திரைப்படத்தை  இயக்கி, 2008க்கான நந்தி அவார்ட் வாங்கிய இயக்குனர். தெலுங்கில் இம்மாதிரியான மல்டி ஸ்டார் படங்களுக்கு முன் மாதிரியாக இப்படம் அமையப் போகிறது. அதிலும் பெரிய கமர்ஷியல் இல்லாத படங்கள் வர இப்படத்தின் வெற்றி துணை செய்யப் போகிறது. விரைவில் தமிழிலும் இம்மாதிரியான ஆரோகியமான விஷயம் நடைபெறப் போகிறது என்பதன் அறிகுறிதான் இப்படம். படத்தில் குறையே இல்லாமலில்லை.. இருக்கிறது. ஆனால் அதெயெல்லாம் க்ளைமாக்ஸில் மிக அழகான திரைக்கதையின் மூலம் நெஞ்சை நெகிழ வைத்துவிடுவதால்....

Vedam – Again A Fantastic Film From Krish.. Don’t Miss It..
கேபிள் சங்கர்

டிஸ்கி: முந்தானை முடிச்சு என்கிற சீரியலில் நான் நடித்திருக்கிறேன். இன்று மாலை ஆறு மணிக்கு, சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. தைரியமுள்ளவர்கள் பார்த்து சொல்லுங்கள். :)
Post a Comment

34 comments:

குழலி / Kuzhali said...

கேபிள் அண்ணே, அனுஷ்காவின் அந்த படம் ஏற்கனவே தட்ஸ்டமில் கேலரியிலேயே பார்த்துட்டேன்... இப்புடி யாருமே படம் எடுத்ததில்லை அண்ணே.. பேக் பேக்... அடப்பாவிகளா...

எல் கே said...

ஓர் இரவு விமர்சனத்திற்கு காத்திருக்கிறேன்

க ரா said...

வாழ்த்துக்கள் அண்ணா சீரியல்ல நடிக்கறதுக்கு. நல்ல விமர்சனம்.

butterfly Surya said...

முந்தானை முடிச்சுக்கு வாழ்த்துகள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள் அண்ணா சீரியல்ல நடிக்கறதுக்கு. சென்னைல படம் எங்க ஓடுது?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இன்னைக்கு முந்தானை முடிச்சு. சண்டே "நீயா நானா" வா வாழ்த்துக்கள்.

Unknown said...

அண்ணே நேத்து கதை சொல்லும்போது கிளைமாக்ஸ் சொல்லாம போய்டீங்க, இங்கயும் சொல்லல..
அப்புறம் இன்னைக்கு ஒரே இரவு போகலாமா அல்லது கராத்தே கிட் போகலாமா?

Ganesan said...

கேபிளாரே,

இன்னா சும்மா விமர்சனம் என்ற போர்வையில இந்த படத்த எழுதியிருக்கீங்க என்று பார்த்தால் உங்க மனம் கவர்ந்த கள்ளி அனுஷ்காவா பார்க்க போனேன் சொல்லுங்க, அந்த அக்கா பெங்காலில நடிச்சா கூட போய் பார்பீங்க...


முந்தானை முடிச்சு பாத்துட்டு போன்ல வர்றேன்..

CS. Mohan Kumar said...

ஆறு மணிக்கெல்லாம் ஆபிச்லேந்து போக முடியாது. நாட்டாமை சீரியல் டைமை மாத்த சொல்லு

பிரபல பதிவர் said...

ஞாயிறு பாத்துட்டு சொல்றேன்

Athisha said...

முந்தானை முடிச்சா! பேரே ஒரு மாதிரி இருக்கே! .. ஏதாவது ரேப் சீனா பாஸ்

கார்க்கிபவா said...

//அல்லு அர்ஜுனாகட்டும், குரேஷியாக வரும் மனோஜ் பாஜ்பாயாகட்டும், அமலாபுரம் விபச்சாரியாக வரும் அனுஷ்காவாகட்டும், ம்ஹும் அம்மணி பின்னியிருக்காங்க… குரேஷி போன்ற நியாயமான முஸ்லிமாகட்டும். ராக் ஸ்டாராக ஆசைப்படும் மனோஜாகட்டும் ம்… பாடி லேங்குவேஜாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும்//

தெலுங்கு படமாகட்டும், தமிழ் படமாகட்டும், அட்டு படமாகட்டும், பிட்டு படமாகட்டும் விமர்சனம் என்றால் கேபிள்தான்

கார்க்கிபவா said...

//அதிஷா said...
முந்தானை முடிச்சா! பேரே ஒரு மாதிரி இருக்கே! .. ஏதாவது ரேப் சீனா பாஸ்/

அதிஷா, சூசைட் சீன்..பார்த்துட்டு சொல்லு மச்சி

ciniposter said...

உங்கள் விமர்சனத்தை படிக்கும் போது படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. நன்றி

www.ciniposters.com

Rajesh V Ravanappan said...

V.E.D.A.M - வேதமா? வேடமா?

குகன் said...

அனுஷ்காவுக்காக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று இருந்தேன். உங்கள் விமர்சனம் பார்த்ததும்.... கண்டிப்பாக பார்ப்பேன்.

நல்ல வேளை... என் அலுவலகம் இன்று 7 மணிக்கு தான் முடிகிறது :)

VISA said...

தமிழில் மட்டும் இந்த மாதிரி கதைகளில் புதுமுகங்களோ புரோடியூசரின் மகனோ மட்டுமே நடிக்கிறார்கள். பெரிய நடிகர்கள் எல்லாம் ஏழைகளுக்கு தையல் மெழின் கொடுப்பதும் குப்பத்துக்கு வீடு கட்டி கொடுப்பதுமாக அந்நியாயத்துக்கு தொண்டாற்றுகிறார்களே ஏன்.

நேசமித்ரன் said...

ம்ம் பார்க்க முடியாத தூரத்தில் இருக்கிறேன் தலைவரே

விமர்சனம் ஷார்ப் !

Sabarinathan Arthanari said...

பகிர்தலுக்கு நன்றிங்க

ஷர்புதீன் said...

இன்னைக்கு முந்தானை முடிச்சு. சண்டே "நீயா நானா" வா??

Prabhu said...

anushka மேக் அப் ஏன் ஸ்லெட்டியா இருக்குன்னு யோசிச்சிட்டிருந்தேன்... ஓகோ!

DR said...

முந்தானை முடிச்சு இங்க பார்க்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு புண்ணியவான் எங்களுக்காக இணையத்தில் ஏத்தி வச்சிருப்பான். அப்போ பார்த்திட்டு சொல்றேன் தல.

DR said...

நீங்க இடும் தெலுகு பட விமர்சனத்தை என்னுடைய தெலுகு நண்பர்கள் என் மூலமாக படிச்சிட்டு படத்துக்கு போகலாம்னு முடிவு பண்ணி இருக்காங்க. நானுன் போறேன் பாத்திட்டு வந்து சொல்றேன்... விமர்சனத்துக்கு நன்றி.

Swengnr said...

அன்பர்களே, இன்றுதான் புதிதாக ஒரு பதிவு போட்டு இருக்கிறேன். தயவு செய்து பார்க்கவும்..http://kaniporikanavugal.blogspot.com/

நன்றி!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

'முந்தானை முடிச்சு ' பார்த்துட்டேன். கடைசில இப்படி ஆகிப் போச்சே சார், (முதலிலேயே சொல்லிட்டாங்கன்னு சொல்லக் கூடாது) சின்னத் திரையிலும் வெள்ளித் திரையிலும் அதிக வாய்ப்புகள் வர வாழ்த்துக்கள்.

Cable சங்கர் said...

@kuzali
அட போங்கண்னே.. ம்ஹும்

@எல்கே
ம்

@இராமசாமி கண்ணன்
நன்றி

@பட்டர் ப்ளை சூர்யா
நன்றி

@ரமேஷ் ரொமப் நல்லவன்
நன்றி
கேஸினோ.பிவிஆர், மாயஜால்

Cable சங்கர் said...

@நாய்குட்டி மனசு
சண்டே இந்த வாரமும் இல்லை

@காவெரி கணேஷ்
அனுஷ்கா மட்டும் காரணம் இல்லை தலைவரே.. இப்படத்தின் இயக்குனருக்காகவே நான் படம்பார்க்க போனேன்.

Cable சங்கர் said...

@மோகன்குமார்
அது முடியாது..

@சிவகாசி மாப்பிள்ளை
ம்

@

Cable சங்கர் said...

@அதிஷா..
இருந்தா நலலத்தான் இருந்திருக்கும்

@கார்க்கி
நன்றி

@கார்க்கி
உனக்கு தெரியும் பாவம் அதிஷாவுக்கு தெரியாதே..

Cable சங்கர் said...

@சினி போஸ்டர்..
நன்றி

@ராஜேஷ்
வேதம் தான.

@குகன்
தப்பிச்சிட்டீங்க..

@விசா

அதான் தமிழ் நாட்டின் கொடுமை..

shortfilmindia.com said...

@நேசமித்ரன்
நன்றி

@சபரிநாதன்
நன்றி

@ஷர்புதீன்
இலலி..

shortfilmindia.com said...

@thanusurasi
அப்ப நீங்க எஸ்கேப்பா?

@தனுசு ராசி
பார்த்துட்டு சொல்லுங்க..

@சாப்ட்வேர் இஞினியர்
பார்க்கிறேன்

2நாய்குட்டி மனசு
பயப்படாம இருந்தீங்களே அதுவே பெரிசு..:)

குசும்பன் said...

முந்தானை முடிச்சு என்கிற சீரியலில் நான் நடித்திருக்கிறேன். இன்று மாலை ஆறு மணிக்கு, சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. //

தீவிரவாதிங்க இப்ப எல்லாம் டீவி வழியாவும் வர ஆரம்பிச்சிட்டாங்களா?

Athisha said...

நேத்து நைட்டு சென்னையில் உண்டான பூகம்பத்திற்கும் முந்தானை முடிச்சு சீரியலுக்கும ஒரு சம்பந்தமும் இல்லை!