Thottal Thodarum

Jun 14, 2010

கொத்து பரோட்டா- 13/06/10

இந்த வார சந்தோஷம்.

Cinema Viyabaram சாவகாசமாய் ஒரு மாலை நேர கிழக்கு மொட்டை மாடி சந்திப்பில், சினிமாவை பற்றிய வியாபாரங்களை பற்றி பேசிக் கொண்டிருந்த போது பத்ரி “ஏன் நீங்க இதை புத்தகமா எழுதக்கூடாது?” என்றார். முதலில் நானா? புத்தகமா? என்று லேசாக மலைத்தாலும், சரி என்றேன்.  அடுத்த சில நாட்களிலேயே பத்ரி  என்னன்ன  மேட்டர்களை கவர் செய்ய முடியும் என்று ஒரு மெயில் அனுப்ப, பதிவுலகில் தொடராய் எழுத ஆரம்பித்து ஏகோபித்த வரவேற்பை பெற்ற  ”சினிமா வியாபாரம்” தொடர், இப்போது  புத்தகமாய் வெளிவந்துவிட்டது. பதிவில் எழுதாத மேலும் பல புதிய, அறிய தகவல்களுடன்.. என்னுடய முதல் புத்தகமான “லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவுக்கு” கொடுத்த அதே ஆதரவையும், அன்பையும் இதற்கும் எதிர் நோக்கி..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ட்டோ பர்மிட் இப்போது எந்தவிதமான தடையும் இல்லாமல் கிடைக்க அரசு வழி செய்திருக்கிறது. ஒரு காலத்தில் பர்மிட்டை வாங்கி வைத்துக் கொண்டு சேட்டுகள், அதிக விலைக்கு பீரிமியத்தில் விற்ற காலத்தில் பர்மிட்டோடு கூடிய ஆட்டோக்கள் அதிக விலையாயின. ஆனால் இப்போதோ எல்லோருக்கும் கிடைக்ககூடிய வகையில் அமைந்ததும், ஆட்டோ ஓட்டுனர்கள் பேசிக் கொள்வது என்னவென்றால் “இனிமே ஆட்டோ பெருத்துரும்” என்பதுதான். எனக்கென்னவோ இவர்கள் மீட்டர் போடாமல் செய்யும் அராஜகத்தை ஒழிக்க அரசின் உள்குத்து சட்டமோ என்றுதான் தோன்றுகிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நே
ற்று பூகம்பம் எபெக்ட்.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. எல்லா நாட்டிலேயும் பூகம்பம் உண்டாகுது.. ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் இறந்து போறாங்க.. ஆனா இந்த அரசியல்வாதிகள்.. பிரபலமான நடிகர்கள், மீடியா ஆட்கள் இறந்து போனதா தகவலே இருக்கிறதில்லையே.. அவங்களெல்லாம் அவ்வளவு நல்லவங்களா..?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நே
ற்றிரவு பரிசல் போன் செய்திருந்தார், பக்கத்திலிருந்த நண்பர் நான் பேசுகிறேன் என்று போனை வாங்கி குரலை மாற்றி பேசினார். போனை என்னிடம் கொடுக்க சொல்லிய பரிசல், பேசியது யார் என்று சரியாக சொன்னார்.. “எப்படிண்ணே..? கண்டுபிடிச்சீங்க..? என்றது. இதோ நீங்க பேசினமாதிரி பேசினதை வச்சித்தான்.  என்னதான் குரலை மாத்தினாலும் கொண்டையை மறைக்க முடியலைல்லே..? என்றாரே பார்கலாம்.. அவர் யார் என்று ஒரு க்ளூ இருக்கிறது..?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார கடுப்பு
சனி இரவு சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் ஆன்லைனில் இருந்த நண்பர்களீடம் அவர்களும் உணர்ந்தார்களா? என்று உறுதிபடுத்திக் கொண்டு, தமிழ் மணத்திற்கும், ட்விட்டருக்கும் வந்தால் பதிவே போட்டிருந்தார்கள். ஆனால் நம் தமிழ் நாட்டு பிரபல செய்தி சேனல்களீல் இரண்டரை மணி வரையில் நிலநடுக்கம் பற்றி செய்தியோ, அல்லது முக்கிய செய்திக்கான ஸ்குரோலிங்கோ ஏதுவும் ஓடவில்லை. இவனுங்கல்லாம் நியூஸ் சேனல் நடத்துறானுங்க.. அதையும் நாம பாத்திட்டிருக்கோம்..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார தத்துவம்
மற்றவர்களின் இதயத்தில் இடம் பிடிக்க, உங்கள் ஈகோ கொஞ்சம் இறக்குங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார அறிவுரை
கண்ணா.. நல்லா சொல்றேன் கேட்டுக்க..  “கும்ம்னு” இருக்கிற பொண்ணை விட, “கம்ம்னு” இருக்கிற பொண்ணை கட்டிக்க அப்பத்தான் உன் வாழ்க்கை “ஜம்முனு” இருக்கும்.. எப்பூடீ..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார குறும்படம்.
வழக்கமாய் தமிழில் குறும்படங்கள் எடுப்பவர்கள் த்ரில்லரோ, ஹாரர் படங்களையோ எடுப்பதற்கு பெரிதாய் முயல்வதில்லை. இக்குழுவினர் ஒரு ஹாரர் குறும்படத்தை கொடுத்துள்ளனர். மிக நல்ல முயற்சி..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார விளம்பரம்
நல்ல நகைச்சுவையான விளம்பரம்.. நத்திங் சீரியஸ்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏஜோக்
ப்பா தன் பெண்ணின் பாய் ப்ரெண்டை பற்றி சொல்கையில்’அவனை பார்த்தால் நல்லவனாக தெரியவில்லை.. மோசமான பையனாக தெரிகிறது.. அவனுடன் பழகாதே..” என்றார்.
மகள்: அப்பா அவன் ரொம்ப நல்லவனப்பா..
அப்பா: எப்படி சொல்றே?
மகள் : நான் அவனோட பழகி ரெண்டு மாசம் தான் ஆவுது. மாசா மாசம் எனக்கு வர்ற உடம்பு பிரச்சனையை அவன் வராம நிறுத்திட்டான். அப்ப அவன் நல்லவன் தானே.. என்றாள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேபிள் சங்கர்
Post a Comment

67 comments:

King Viswa said...

மீ தி பர்ஸ்ட்.

கடந்த முறை போனில் சொன்னதில் இருந்த ஆவலுடன் உங்களது புத்தகத்தினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

gulf-tamilan said...

சினிமா வியாபாரம் புத்தகத்திற்கு வாழ்த்துகள்!!!

a said...

கேபிள்ஜி,

தங்களின் புத்தகம் அதிக வாசகர்களை சென்றடைய வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

/////நேற்று பூகம்பம் எபெக்ட்.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. எல்லா நாட்டிலேயும் பூகம்பம் உண்டாகுது.. ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் இறந்து போறாங்க.. ஆனா இந்த அரசியல்வாதிகள்.. பிரபலமான நடிகர்கள், மீடியா ஆட்கள் இறந்து போனதா தகவலே இருக்கிறதில்லையே.. அவங்களெல்லாம் அவ்வளவு நல்லவங்களா..? ///////


ரொம்ப ரொம்ப நல்லவுங்க !!!!!!

நேசமித்ரன் said...

என் மனமார்ந்த வாழ்த்துகள் தலைவரே

மென்மேலும் உயரவும் !

பாலா said...

வாழ்த்துகள் சங்கர்.!!!!!! :)

கலக்குங்க!!

குப்பத்து ராசா said...

உங்கள் சினிமா வியாபாரம் தொடர்ந்து படித்திருக்கிறேன் வாழ்த்துக்கள் சங்கர்ஜி

AkashSankar said...

//கண்ணா.. நல்லா சொல்றேன் கேட்டுக்க.. “கும்ம்னு” இருக்கிற பொண்ணை விட, “கம்ம்னு” இருக்கிற பொண்ணை கட்டிக்க அப்பத்தான் உன் வாழ்க்கை “ஜம்முனு” இருக்கும்.. எப்பூடீ//

உட்கார்ந்து யோசிப்பீன்களோ...

பழமைபேசி said...

வாழ்த்துகள் ஜி!

//எப்படிண்ணே..?//

அகில உலகமும் தெரிஞ்ச சமாச்சாரம் இது! அமெரிக்காவாழ் மக்களே...உங்கள் தம்பி உங்களைக் காண வருகிறார்! வருகிறார்!! வந்து கொண்டே இருக்கிறார்!!!

YUVARAJ S said...

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

Your comments are highly appreciated. Thanks

க ரா said...

வாழ்த்துகள்னா. தொடர்ந்து கலக்குங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

ஜெட்லி... said...

வாழ்த்துகள் அண்ணே...

Ravichandran Somu said...

தலைவரே,

சினிமா வியாபாரம் புத்தகத்திற்கு வாழ்த்துகள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

பரிசல்காரன் said...

வாழ்த்துகளோ வாழ்த்துகள் கேபிள்ஜி!

அப்படியே இதையும் பார்த்துடுங்க. http://twitter.com/parisalkaaran/status/9135347974

ஷர்புதீன் said...

புத்தகத்திற்கு வாழ்த்துகள்!!!

:)

Jackiesekar said...

வாழ்த்துகள் கேபிள்சங்கர். :)

Unknown said...

அந்த நபர் தண்டோரா..

அப்புறம் புத்தகத்திற்கு வாழ்த்துக்கள்.. அனேகமாக அகில உலகிலும் சினிமா வியாபாரம் பற்றி எழுதிய ஒரே நபர் நீங்களாகத்தான் இருக்கும்., எல்லா மொழிகளிலும் வரக் கூடிய சாத்தியம் இருப்பதால் காப்புரிமை பதிவு செய்யுங்கள்.

குறுப்படம் அருமை..

பூகம்பத்தில் அவர்கள் சாகமைக்கு காரணம் அவர்கள் பில்டிங் ஸ்ட்ராங், நம்ம பேஸ்மென்ட் வீக்

செய்தி சேனல்கள் ஆங்கிலத்தில் வருபவற்றை உல்டா செய்பவர்கள்..

ஆடோவைவிட கால் டாக்சி உத்தமம்.. மீட்டர் போடுவதால் ஆடோக்காரர் கேட்பதைவிட குறைவாகத்தான் இருக்கிறது ..

இந்தவார அறிவரை விந்தை மனிதனுக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மீடியா ஆட்கள் இறந்து போனதா தகவலே இருக்கிறதில்லையே.. அவங்களெல்லாம் அவ்வளவு நல்லவங்களா..? //
அதான
புத்தகத்திற்கு வாழ்த்துக்கள்

Unknown said...

அந்த நபர் தண்டோரா இல்லையாம்..நீங்க யாரவது கண்டு பிடிங்க..

Sukumar said...

வாவ்... புத்தகம் வந்துடுச்சா.. வாழ்த்துக்கள் தல... முகப்பு அட்டை லே அவுட் செம கலக்கலாய் இருக்கிறது... கடைகள்ல கிடைக்குதா...? படிச்சிட்டு சொல்றேன்....

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள் தலைவரே!

ஸ்ரீ....

Madumitha said...

வாழ்த்துக்கள் சங்கர்.

creativemani said...

//ஆனால் நம் தமிழ் நாட்டு பிரபல செய்தி சேனல்களீல் இரண்டரை மணி வரையில் நிலநடுக்கம் பற்றி செய்தியோ, அல்லது முக்கிய செய்திக்கான ஸ்குரோலிங்கோ ஏதுவும் ஓடவில்லை//

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல தல..
10-15 நிமிடங்களுக்குள் சன் நியூசில் ஃபிளாஷ் போட்டுட்டாங்க.. (சென்னையில் எந்தெந்த ஏரியா என்பது முதற்கொண்டு)

geethappriyan said...

தல,
வாழ்த்துக்கள்,புத்தகம் வாங்கிடுறேன்.

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் கேபிள்ஜி..

Guru said...

சினிமா வியாபாரம் புத்தகத்திற்கு வாழ்த்துகள்!!!

Guru said...

சினிமா வியாபாரம் புத்தகத்திற்கு வாழ்த்துகள்!!!

CS. Mohan Kumar said...

சினிமா வியாபாரம் புத்தகத்திற்கு வாழ்த்துகள்!

Paleo God said...

//அவர் யார் என்று ஒரு க்ளூ இருக்கிறது..?//

யார் ’அண்ணே’ அது விஜயகாந்தா? :))

புத்தகத்திற்கு வாழ்த்துகள்!

அடுத்த புத்தகம் எண்டர் கவிதைகளா? :)

பித்தன் said...

வாழ்த்துக்கள்,புத்தகம் வாங்கிடுறேன்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வாழ்த்துகள் அண்ணே...

குசும்பன் said...

சினிமா வியாபாரம் சூடுபிடிக்க வாழ்த்துக்கள்

Krishna said...

கண்ணா.. நல்லா சொல்றேன் கேட்டுக்க.. “கும்ம்னு” இருக்கிற பொண்ணை விட, “கம்ம்னு” இருக்கிற பொண்ணை கட்டிக்க அப்பத்தான் உன் வாழ்க்கை “ஜம்முனு” இருக்கும்.. எப்பூடீ..

நன்றி சங்கர் அண்ணன்
முற்றிலும் உண்மையான வசனம்

கா.கி said...

@cable
ஆட்டோ பிரச்சனைய விடுங்க பாஸ். ஹெல்மெட் பிரச்சனைக்கு ஒரு முடிவே இல்லாம போச்சு. கடந்த ஒரு நாலஞ்சு மாசமா, ஹெல்மெட் இல்லாமா தான் வண்டி ஓட்டிகிட்டு இருக்கேன். எந்த போலிசும் புடிக்கலை. ஒரு வேளை பிடிச்சாலும், நீங்க அன்னிக்கு சொன்னாப்போல, கேள்வி கேட்டு தப்பிக்கலாம்னு ஒரு முடிவுலதான் இருந்தேன். ஆனா, போன வாரம் திருவான்மியூர் சிக்னல்ல, மாட்டிகிட்டேன். நிஜாமாவே அவசரமான வேலை இருந்ததால, என்னால எதுவும் பேச முடியல. அவசர அவசரமா, அம்பது ஓவாய குடுத்துட்டு, கிளம்பினேன். இதுல முக்கியமான விஷயம், அன்னிக்கும் வழக்கம் போல, நூத்துக் கணக்கான பேருங்க, ஹெல்மெட் இல்லாம தான் வண்டி ஒட்டிகிட்டிருந்தாங்க. ஆனா புடிச்சது என்ன மட்டும்தான். அதனால, தயவு செஞ்சு, ஒரு சமூக சேவையா நெனச்சு, உங்களுக்கு தெரிஞ்ச வக்கீல் யாரையாவது கேளுங்க. இந்த ஹெல்மெட் சட்டத்தை பத்தி, ஒரு பத்தி எழுதுங்க. புண்ணியமா போகும்...

கோவி.கண்ணன் said...

மீண்டும் ஒரு நூல், உங்கள் துறை சிறப்பாகவே எழுதி இருப்பீர்கள்.

நல்வாழ்த்துகள் கேபிள்

vasu balaji said...

வாழ்த்துகள்:)

Unknown said...

அண்ணே இல்லை வெண்ணை.. கரீக்டா...

Paleo God said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
அண்ணே இல்லை வெண்ணை.. கரீக்டா..//

@செந்தில் ப்ளே ஸ்கூல்லயே நீங்க ஃபெயில் ஆகிடுவீங்கன்னு நினைக்கிறேன் :))

butterfly Surya said...

வாழ்த்துகள்... :)

ராம்ஜி_யாஹூ said...

in Gujrat earthquake 2 councilors expired, In Keelanmanakkudi time Fm Rajaratnam's cousin brother 's hands got damaged.

தராசு said...

பொஸ்தகம் வந்துருச்சா, வாழ்த்துக்கள் தலைவரே.

அப்புறம், என்டர் கவிதைகளை எப்ப பொஸ்தகம் பண்றீங்க அண்ணே.

Unknown said...

//என்னதான் குரலை மாத்தினாலும் கொண்டையை மறைக்க முடியலைல்லே..//

அவரு வயத்துல இருக்கிற புள்ளையக்கூட அண்ணேன்னு தான் சொல்வாராமே ;-)

புத்தகத்திற்கு வாழ்த்துகள் ஜி. அடுத்த விடுமுறையில் வாங்கிப் படிக்கிறேன்

pichaikaaran said...

/அவர் யார் என்று ஒரு க்ளூ இருக்கிறது..?//

நர(கல்) பதிவரா?

சாப்பாட்டு கடை எங்கே... நான் விரும்பி படிப்பது அதைதான்,.. அது புத்தகமாக வந்தால் , மிக மிக நன்றாக இருக்கும்...

காதர் said...

கேபிள் அவர்களே..பூகம்ப எபக்டில் ..சுட..சுட..பதிவிட்டது..நானே..நீங்கள் வருகை தந்ததும் நான் அறிவேன்..நீங்கள் கூறியது உண்மை..தொலைக்காட்சி ஊடகங்கள் எவ்வளவு பெரிய சோம்பேறிகள் என்பதை அன்று இரவே நானும் தெரிந்து கொண்டேன்.சாதாரண பதிவராகிய என்னால் அடுத்த சில நிமிடங்களில் பதிவிட முடியும் போது இவர்களுக்கு என்ன கேடு?..இங்கு இவர்கள் பரவாயில்லை..தேசிய ஊடகங்கள் காலையில் தான் ப்ரேகிங் நியூஸ் போட்டார்கள்..விளங்கிரும்

மனைவி மந்திரம் said...

Gramangala(village) thathu yedukiromnu solrangala, atha pathi oru detail la solla mudima?

உண்மைத்தமிழன் said...

புத்தகத்துக்கு வாழ்த்துக்கள்ண்ணே..!

ManA said...

இந்த வார தத்துவம்
மற்றவர்களின் இதயத்தில் இடம் பிடிக்க, உங்கள் ஈகோ கொஞ்சம் இறக்குங்கள்..இது யாரையோ குறி வச்சி சொன்னமாதி இருக்கு ,,
.

புத்தகத்துக்கு வாழ்த்துக்கள்,
.
குறும் படம் சொல்லவே தேவையில்லை .. :-)

VISA said...

புத்தகம் வந்துடிச்சா வாழ்த்துக்கள் தலைவரே.

Karthik's Thought Applied said...

வாழ்த்துகள் கேபிள்sir. :)

Karthik's Thought Applied said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

குறும்படம் செம திரில்!


புத்தகத்துக்கு வாழ்த்துக்கள்!

அக்னி பார்வை said...

Congtaz for your Book..

Ravikumar Tirupur said...

சார் புத்தகவெளியீட்டிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Busy said...

Congrats for Books,

EarthQuake News......

Sad....., These Media People Full Coverage there Party News, Its anything useful for us.... They Put News also like a Drama, U Watch any othr language, like this ?...

These Only Happen in Tamil Nadu........

Better Watch Pothigai......

Test said...

வாழ்த்துக்கள் சங்கர்

பாலா said...

சங்கர்..

இது எங்கே கிடைக்கும், பதிப்பகம் பெயர், விலை, பக்கங்கள் இந்த மாதிரி மேட்டர் எதுவே சொல்லலையே.

பாலா said...

ஓகே.. நான் கண்டுபிடிச்சிட்டேன்.

http://nhm.in/shop/978-81-8493-417-5.html

புத்தகத்தின் அட்டைப்படம் மட்டும்.. லிங்கில் மிஸ்ஸிங்.

பெசொவி said...

சந்தோசம் வாரா வாரம் மட்டுமல்லாமல் தினமும் வர வாழ்த்துகள், தல!

Subankan said...

வாழ்த்துகள்... :)

kumar said...

குறும்படம் நல்லா இருக்கு.ஆனா கதைக்கான கரு தாய்லாந்து 4bio ல சுட்டமாதிரி தெரியுது.எனிவே ஹாட்ஸ் ஆப்.

மரா said...

பொய்தவத்திற்கு வாழ்த்துக்கள்.

லகுட பாண்டி said...

சினிமா வியாபாரத்திற்கு வாழ்த்துக்கள்.

அது போலவே சினிமா விநியோகம் பற்றிய புத்தகத்தையும் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பூகம்பத்தை பற்றி இப்பொழுது வரை தினமலரில் சின்னதாய் கூட ஒரு செய்தியை காணோம், நெட்டில்.

நா.இரமேஷ் குமார் said...

வாழ்த்துகள் அண்ணா!

நா.இரமேஷ் குமார் said...

வாழ்த்துகள் அண்ணா!

DR said...

//"நேற்று பூகம்பம் எபெக்ட்.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. எல்லா நாட்டிலேயும் பூகம்பம் உண்டாகுது.. ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் இறந்து போறாங்க.. ஆனா இந்த அரசியல்வாதிகள்.. பிரபலமான நடிகர்கள், மீடியா ஆட்கள் இறந்து போனதா தகவலே இருக்கிறதில்லையே.. அவங்களெல்லாம் அவ்வளவு நல்லவங்களா..?"//

சமீபத்தில் கூட ஒரு நாட்டின் அதிபர் பூகம்பத்தினால் வீட்டையும் அதிபர் மாளிகையையும் இழந்து நடுத் தெருவில் நின்றதாக ஞாபகம்...

DR said...

முக வுக்கு வயித்தால போயி இருந்தா அது வந்திருக்கும். இதெல்லாம் வராது...