Thottal Thodarum

Feb 28, 2012

Poola Rangadu

poolarangadu2 தெலுங்கு திரையுலகின் சமீபத்திய கருப்புக் குதிரை என்று சுனிலை சொல்லலாம். பிரபல நகைச்சுவை நடிகராய் வலம் வந்து கொண்டிருந்தவர் தீடீரென கதாநாயகனாய் “அந்தால ராமுடு” வில் நடிக்க ஆரம்பிக்க, தொடர்ந்து, ராஜமெளலியின் “மரியாதை ராமண்ணா” சூப்பர் ஹிட் லிஸ்டில் வந்து சேர, அடுத்து நடித்த ராம்கோபால் வர்மா படம் பப்படமாகிவிட, அப்படத்தில் தெலுங்கு திரையுலக மக்களை கிண்டலடித்ததன் காரணமாய் மற்ற இயக்குனர்களும், பெரிய ஹீரோக்களும் ஒதுக்கி வைக்க, தன்னை நிருபிக்க, மீண்டும் ஹீரோ அவதாரம். இம்முறை, ஆக்‌ஷன், காமெடி, சிக்ஸ்பேக் என்று.

Ishq




பெயர் தான் இந்தியில் இருக்கிறதே தவிர படம் தெலுங்குதான். 13பி ஹிட்டடித்த விக்ரம் கே.குமாரின் இயக்கத்தில், நிதின், நித்யாமேனன், நம்மூர் ரோஹிணி, மற்றும் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு என்று டெக்னிக்கலாகவும், நடிகர்கள் தேர்தெடுத்த விதத்திலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்தான்.

Feb 27, 2012

கொத்து பரோட்டா – 27/02/12

நாளை முதல் சென்னையில் இரண்டு மணி நேர மின்வெட்டும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு நான்கு மணி நேரமும், தொழிற்சாலைகளுக்கு ஒரு நாள் மின்வெட்டு விடுமுறையும் ஆரம்பிக்கவிருக்கிறார்கள். இது ஜூலை மாதம் வரையாம். அதன் பிறகு காற்றாலை மூலமாய் மின்சாரம் பெற்றுவிடுவார்களாம். ஏற்கனவே எட்டு மணி நேரம் பத்து மணி நேரம் மின்வெட்டென்று அறிவிக்கப்படாமல் நடந்து கொண்டிருக்கும் போதே மின் பற்றாக்குறையாய் இருக்கும் நேரத்தில் எப்படி இப்போது மட்டும் சரியாய் எல்லோருக்கும் குறிப்பிட்ட நேரத்தில் மின்வெட்டை அமல் படுத்த முடியும் என்ற கணக்கு புரியவில்லை. எது என்னவோ.. இனி அபீஷியல் மின்வெட்டு. என்ஜாய் வாக்காள பெருமக்களே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Feb 26, 2012

காதல் பாதை, விருதுநகர் சந்திப்பு, உடும்பன்

சினிமா விமர்சனங்கள் என்று வரும் போது நான் ஒவ்வொரு படத்தையும் சீரியசாய் விமர்சித்தே பழக்கம். ஆனால் சமீப காலமாய் வரும் சின்ன பட்ஜெட் படங்கள் எல்லாம் படு சொதப்பலாய் அமைந்து விடுகிறது. படங்கள் ஓடவில்லை. சினிமா செத்துவிட்டது என்ற கூக்குரல் ஒலிக்கும் போதெல்லாம் கொஞ்சம் கவலையாய்த்தானிருக்கிறது என்றாலும், இம்மாதிரி படங்களை பார்க்கும் மக்கள் அடுத்து வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலே அஸ்தியில் ஜுரம் வந்து, தியேட்டருக்கு போகாமல் இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை என்றே சொல்ல வேண்டும்.

Feb 25, 2012

தலைவன் இருக்கிறான் - சுஜாதா

28sujatha
வருகிற 27 ஆம் தேதி வந்தால் தலைவன் சுஜாதா நம்மிடையே மறைந்து நான்காண்டுகள் ஆகிவிட்டது என்றாலும், இன்றைக்கும் அவர் எழுத்துலகின் சூப்பர் ஸ்டாராகத்தான் இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அதை ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியில் நடக்கும் விற்பனையே சாட்சி.  தலைவனின் ஸ்பெஷாலிட்டியே என்றைக்கும் ஒத்து வரக்கூடிய, அல்லது எதிர்காலத்தை ஸ்பஷ்டமாய் சொல்லக்கூடிய புத்திசாலித்தனமும், நக்கலும், நையாண்டியும்,  ஸ்பெகுலேஷனுமாய் கலந்தடித்து  கொடுக்கும் படு சுவாரஸ்ய எழுத்துதான். 2008லேயே அவர் இறந்து விட்டாலும், 2010ல் எப்படியெல்லாம் இருக்கும் என்ற அவரது தூரப்பார்வையில் பல விஷயங்கள் நடந்திருப்பது அச்சர்யமாய் இருக்கிறது. 

Feb 24, 2012

சாப்பாட்டுக்கடை – நெல்லை சைவ உணவகம்

Photo0382
சைவ உணவகங்களில் பல இடங்கள் இருந்தாலும், பெரும்பாலான கடைகளில் வழக்கமான தோசை, இட்லி போன்றவைத்தான் இருக்கும். அதில் என்ன ஸ்பெஷலாய் இருந்துவிடப் போகிறது என்ற எண்ணத்தை உடைத்த உணவகம் நெல்லை சைவ உணவகம்.

Feb 21, 2012

தமிழ் சினிமா இந்த மாதம் – ஜனவரி 2012

பொங்கலுக்கு பெரிய படங்கள் வந்ததால் நிறைய சின்னப் படங்கள் பொங்கலுக்கு முன் வெளியாகி தியேட்டரைவிட்டு ஓட,  சென்ற வருடக் கடைசியில் வெளியான மெளனகுரு மட்டும் மெளனமான ஒரு வெற்றியை பெரிய படங்கள் வெளியான பிறகும் பெற்றது. நல்ல படங்களுக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

Feb 20, 2012

கொத்து பரோட்டா 20/02/12

இந்த வாரம் மட்டும் தமிழில் ஆறு படங்களும், இந்தியில் இரண்டு படங்களும், ஆங்கிலத்தில் ரெண்டும், தெலுங்கில் ரெண்டுமாய் படங்கள் சென்னையில் வெளியாகியிருக்கிறது. இன்னொரு பக்கம் போனவாரம் வெளியான தோனிக்கு பத்திரிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பிருக்கிறது. ஆனால் கூட்டத்தைத்தான் காணோம் என்று பிரகாஷ்ராஜ் டிவீட்டரில் கவலைப் படுகிறார். ரெண்டே வாரத்தில் போட்ட முதல் தியேட்டரில் எப்படி எடுக்க முடியும் என்று தனஞ்செயன் ஒரு பக்கம் கவலைப் படுகிறார். படமெடுக்கும் தயாரிப்பாளர்களை விட எடுக்காதவர்கள் தான் அதிகம் ப்ரச்சனை செய்கிறார்கள் என்று அமீர் அறிக்கை விடுகிறார். ஸ்ட்ரைக் இழுத்துக் கொண்டு போவதால் பல பெரிய படங்களின் ஷூட்டிங் நின்று போய் வட்டி ஏறிக் கொண்டிருக்கிறது என்று ஒரு பக்கம் கவலையாயிருக்கிறார்கள் பெரிய பட தயாரிப்பாளர்கள்.  இந்த ப்ரச்சனையால் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் படமெடுக்க யோசனையாய் இருக்கிறார்கள். பல பெப்ஸி ஆட்கள் கேட்டரிங் தொழிலுக்கு டெம்ப்ரவரியாய் ஷிப்டாகி வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும்  நடுவில் பெரிய பட்ஜெட் பட விளம்பரங்கள் வேறு அறிவித்த வண்ணமாய் இருக்கிறார்களே எப்படி என்று ஒரு புறம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ப்ரச்சனையாய்  ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருந்தாலும், பெரிய நடிகர்கள் படங்கள் விழாக் காலங்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டுமென்ற விதியால், காதலில் சொதப்புவது எப்படி?, அம்புலி போன்ற படங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்க்கும் போது சினிமா பெரிய படங்கள் இல்லையென்றால் கொஞ்சம் வாழும் என்றுதான் தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Feb 19, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள்

muppozhudhum-un-karpanaigal-movie-preview விண்ணைத்தாண்டி வருவாயா? கோ போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் இயக்குனராக அவதாரமெடுத்திருக்கிற படம். காதலர் தின வாரத்தில் வந்திருக்கும் இன்னொரு இளைமையான படமாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை தொடர் விளம்பரங்களால் ஏற்படுத்தியிருந்தாலும் சொதப்பியிருப்பாரோ என்ற ஒரு எண்ணம் உள்ளுணர்வாய் தோன்றிக் கொண்டேயிருந்தது. அதை உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்.

Feb 17, 2012

அம்புலி 3டி

ambuli-3d ஓர் இரவு என்றொரு படம். தமிழ் சினிமாவின் முதல் பாயிண்டாப் வியூ படம். டிஜிட்டல் சினிமாவை சரியாய் புரிந்து கொண்டு, அருமையாய் சொல்லப்பட்ட த்ரில்லர் கம் ஹாரர் படம். சென்னையில் நடந்த உலக திரைப்பட விழாவில் சிறந்த படமாய் தெரிந்தெடுக்கப்பட்ட திரைப்படம். இவ்வளவு பெருமைகள் இருந்தும் மக்களிடையே தெரியாத படமாய், இன்றளவில் பைரஸியாய் கூட மார்கெட்டிலோ, இண்டெர்நெட்டிலோ, இல்லாத படமாய்  போனதற்கு காரணம். பெரிய படங்களுடன் மோதுவதற்கு திராணியில்லாமல், தியேட்டர்கள் கிடைக்காமல், சரியான மார்கெட்டிங் இல்லாமல், அதற்கான பட்ஜெட் இல்லாமல் அடிபட்ட புலியாய் பதுங்கியவர்கள், இம்முறை சினிமா வியாபாரத்தை புரிந்து கொண்டு, சிங்கமாய் களமிறங்கியிருக்கிறார்கள்.

Feb 16, 2012

சாப்பாட்டுக்கடை – Crimson Chakra

இந்த ரெஸ்டாரண்டைப் பற்றி என் நண்பர் ஒருவர் சொன்னார். முக்கியமாய் இங்கிருக்கும் வாட்டர் டேபிளைப் பற்றி சொன்னவுடன் உடனே அங்கே போய் சாப்பிட வேண்டுமென ஒரு எண்ணம் தோன்றியது.
Photo0215

Feb 14, 2012

ஒரு நடிகையின் வாக்குமூலம்

thumb137-b743b9753320523d799e2a4273f97d11 இந்தியில் டர்ட்டி பிக்சர் கொடுத்த பரபரப்பை இந்த தமிழ் படம் கொடுக்குமென பெரிய நம்பிக்கையில் போஸ்டர்களை கவர்சியாக அடித்துவிட்டிருக்கிறார்கள். போஸ்டரில் இருக்கும் கவர்ச்சியை நம்பி வந்தவர்களுக்கு பிழியப் பிழிய கதை சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.

Feb 13, 2012

கொத்து பரோட்டா 13/02/12

இந்த வார சந்தோஷங்கள்
கல்கி நூல் அறிமுகம்.
நவீன மனநிலைக்கு நகர்த்தும் பிரதி!
தெர்மக்கோல் தேவதைகள்’ அத்தனையும் வாசிக்க இலகுவான சிறு கதைகள் கொண்டது. மனித மனங்களைப் பிரதிபலிக்கும் இந்தக் கதைகள் வாழ்வின் யதார்த்தங்களைப் பேசுகிறது. மனித மனங்களுள் ஏற்படும் அபிலாஷைகள், அதற்காக ஆழமான உறவுகளையும் உடைத்தெறிந்து மாடர்ன் லைஃப் நோக்கிச் செல்வது; ஒரு வரையறைக்குள் வாழ்க்கையைப் பார்ப்பது; வேறு சிலர் எல்லாவற்றோடும் சமரசம் செய்து கொண்டு வாழ்வது இப்படியான மனித நிலைப்பாடுகளைப் பாத்திரங்கள் வாயிலாக இந்நூல் பேசுகிறது. விறுவிறு என்று வாசித்து முடிக்கலாம். நவீன மனநிலைக்கு நம்மை நகர்த்துகிறது இந்தக் கதைகள்! சிறுகதைப் பிரியர்களுக்கு இந்நூல் ஓர் அன்பளிப்பு! - தெர்மக்கோல் தேவதைகள், சங்கர் நாராயண்,
வெளியீடு: உ பதிப்பகம், தொலைபேசி : 98403 32666, விலை ரூ 50.00
புத்தகத்தைப் பற்றிய சிறப்பான அறிமுகம் அளித்த கல்கிக்கு என் நன்றிகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Feb 11, 2012

தோனி

dhoni-1 எது நமக்கு பிடிக்கிறதோ அதை தொடர்ந்து செய்தால், அதற்கான ஆதரவும் கிடைத்தால் வெற்றி பெறுவது உறுதி. அது போல  நல்ல படங்களை மட்டுமே தர வேண்டுமென்ற ஒரே நோக்கோடு படங்களை தயாரித்து வந்திருக்கும் ப்ரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ் படம். முதல் முறையாய் தமிழில் அவர் இயக்கி வெளிவந்திருக்கும் படமென்ற எதிர்பார்ப்பை எற்படுத்தியிருந்த படம். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமென்று சொல்வேன்.

Feb 10, 2012

தெர்மக்கோல் தேவதைகளும், ஒரு வாஸ்து மீனின் முத்தங்களும்

மெளனமான பெரும் வரவேற்பை புத்தக கண்காட்சியின் இளைய, புதிய தலைமுறை வாசகர்களை வசீகரிக்கும் சங்கர் நாராயணின் next 2 சிறுகதைத் தொகுப்பு தெர்மக்கோல் தேவதைகள். 2012- உ வெளியீடு.

Feb 9, 2012

நான் – ஷர்மி – வைரம் -14

382688_247455941980569_141319135927584_704552_1853219331_n
14 ஷர்மி
அன்றைய இரவுக்கு பிறகு அம்மா என்னை நேராக பார்ப்பதையே தவிர்த்தாள். ஆனால் அந்த இரவுக்கு பிறகு வீடே கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. அப்பாவை எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிடுவார்கள் என்று தோன்றியது. ஏற்கனவே இரண்டு முறை பெயில் ரிஜெக்ட் ஆகிவிட்டதால் இம்முறை எப்பாடு பட்டாவது வெளியே கொண்டு வரத்தான் அன்று வந்த இரண்டு பேரிடம் அம்மா சோரம் போனாள் என்பதை “ப்ரசனைகள்லேர்ந்து வெளிய வரணும்னா அட்ஜஸ்ட் பண்ணிட்டுத்தான் ஆகணும்” என்று சாப்பாட்டின் போது சொன்னாள். அவளின் குரல் வேறு மாதிரியாய் இருந்தது. நிமிர்ந்து அவளைப் பார்த்த போது கண் கலங்கியிருந்த்து. சட்டென சிரித்து “டாடி சீக்கிரம் வந்திருவாரு” என்றாள் நம்பிக்கையுடன். ஜெயிலில் இருக்கிறவர்களுக்கு எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால் அவர்களைச் சார்ந்தவர்களின் குடும்பம் மிகப் பெரிய மன உளைச்சலுக்கும், பொருளாதார சிக்கலுக்குமிடையே அல்லாடுவது யாருக்கும் புரியாது. போலீஸ், வக்கீல், கோர்ட், கோர்ட் குமாஸ்தா என்று எல்லோருக்கும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் ஒரு பணம் காய்ச்சி மரமாகதான தெரிவார்கள். காசு காசு காசு என பிடுங்கிக் கொண்டேயிருப்பார்கள். அதை என் வீட்டில் நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை அம்மா கோர்ட்டுக்கு போகும் போதும் ஏதாவது ஒரு நகையை அடமானம் வைத்து பணம் கொண்டு போவதை பார்த்திருக்கிறேன். ஆனால் இம்முறை கோர்ட்டுக்கு போகும் போது எதுவும் கொண்டு போகவில்லை.அம்மா அட்ஜெஸ்ட் செய்த்தற்காகான காரணம் புரிந்தது. எனக்கு டாடியை பார்க்க வேண்டும் போலிருந்தது. அம்மாவுடன் நானும் கோர்ட்டுக்கு போனேன்.

Feb 8, 2012

செங்காத்து பூமியிலே..

Sengathu Bhoomiyile Stills 5954 மண்ணுக்குள் வைரம், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, தமிழ்செல்வன் முலமாய் கதை வசனகர்தாவாக அறியப்பட்ட  ரத்னகுமாரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். நடுவில் எஸ்.ஜே.சூர்யா, மீரா ஜாஸ்மீன் போன்ற பல ஹீரோயின்களை வைத்து தாணுவிற்கு ஒரு படம் இயக்கியதாய் ஞாபகம். இளையராஜா இந்தப்படத்தை பார்த்துவிட்டு பெரிதாய் பாராட்டியதாகவும், அவரே வெளியிட முயற்சி செய்ததாகவும் சொல்லப்பட்ட படம். அதுவே ஒரு டெரரை கொடுத்தது. ஏனென்றால் ராஜா சிலாகித்து பாராட்டினால் அப்படங்கள் பெரிதாய் வெளங்கியதில்லை என்பது ட்ராக் ரெக்கார்ட்.

Feb 6, 2012

கொத்து பரோட்டா - 6/02/12

எஸ்.ராவுக்கு இயல் விருது வழங்கப்பட்டதை குறித்து பல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. முக்கியமாய் அந்த விருது குறித்து எழுப்பப்படும் கேள்வி. அதன் பிறகு எஸ்.ராவின் விழாவுக்கு ரஜினி வந்து வாழ்த்தியது பற்றி. விருது பற்றி அந்த விருதை இதற்கு முன் பெற்றவர்களை வைத்து மதிப்பிடுகிறார்கள். சில சமயம் பிரபலமானவர்களுக்கு கொடுத்து விருதை பிரபலப்படுத்துகிறார்கள். அது சிறந்த விருதா? இல்லையா? என்பதை காலம் சொல்லும். ஆனால் ரஜினி வந்ததை தவறாக சொல்ல முடியாது. ஒரு சினிமாக்காராக, தன்னுடய படத்தின் பணியாற்றிய வசனகர்த்தாவின் விழாவுக்கு வந்து பாராட்டுவதில் ஏதும் தவறிருப்பதாய் தெரியவில்லை. இலக்கியத்திற்கு இவருக்கும் என்ன சம்பந்தம்? என்று கேள்வி கேட்பவர்களுக்கு இருந்தால் தான் ஒருவரை பாராட்ட வேண்டுமா? என்று கேட்க தோன்றுகிறது. இந்நிகழ்ச்சி எங்கே காமெடியானது என்றால் ரஜினி சொன்ன கதையில் அல்ல. ரஜினியை பாராட்டி நன்றி தெரிவிப்பதற்காக எஸ்.ரா பேசிய பேச்சில் தான் என்று சொல்கிறார்கள். அந்த பேச்சின் வீடியோவையும், ஒரிஜினல் கதையையும் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் தன்னுடய பதிவில் எழுதியிருக்கிறார். எனக்கும் அந்தக்கதையை படித்துவிட்டு இப்படி ரஜினியை பாராட்டுவதற்காக கதையை உல்டாவாக்கிவிட்டாரே என்று வருத்தமாய் இருந்தது. அந்தக் கதையையும், எஸ்.ராவின் பேச்சையும் படித்து, பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். அதை பார்க்க
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Feb 4, 2012

மெரினா

Marina Movie Stills முதல் படத்திலேயே வெற்றி பெற்ற இயக்குனர்களில் வெற்றியை மட்டுமில்லாமல் அந்த வெற்றியின் மூலமாய் மரியாதையையும் தேடி பெற்றுக் கொண்டவர் இயக்குனர் பாண்டியராஜ். அவரது இரண்டாவது படமான வம்சம் பெரிதாக போகாததாலும், படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காததாலும், அடுத்த படத்திற்கு தானே தயாரிப்பாளராகி களமிறங்கியிருக்கிறார் மெரினாவில். எடுத்துக் கொண்ட களம் அருமையானது. ஒரு நாள் பீச்சுக்கு போய் நின்றாலே பல கதைகள் கிடைக்கக்கூடிய இடமது. மொத்த படமே அங்குதான் எனும் போது எதிர்ப்பார்ப்புக்கு அளவேயில்லை. டீசர் பாட்டும், ட்ரைலரும் கொடுத்த பெப் வேறு எக்ஸ்படேஷன் மீட்டரை ஏற்றிவிட்டிருந்தது.

Feb 3, 2012

Feb 2, 2012

பாரி

paari-01 தமிழ் சினிமாவை உலக சினிமாவிற்கு இணையாய் கொண்டு போகும் முயற்சி என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். உலக சினிமாவாக்க வேண்டாம் அட்லீஸ்ட் உள்ளூர் சினிமாவாகவாது உருவாக்கினார்களா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.