Thottal Thodarum

Feb 2, 2012

பாரி

paari-01 தமிழ் சினிமாவை உலக சினிமாவிற்கு இணையாய் கொண்டு போகும் முயற்சி என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். உலக சினிமாவாக்க வேண்டாம் அட்லீஸ்ட் உள்ளூர் சினிமாவாகவாது உருவாக்கினார்களா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.


பாரி ஒரு பெரிய பணக்கார, அரசியல் பலமுள்ள தொழிலதிபரின் (அவ்வப்போது காண்ட்ரேக்ட், டெண்டர் என்கிறார்) மகன். தன்னுடன் ஸ்கூலில் படிக்கும் எஃப்சி எனும் கிறிஸ்துவப் பெண்ணை காதலிக்கிறான். பாரி ஒரு தறுதலை. ஸ்கூல் படிக்கும் போதே குடி, சிகரெட் என்று சுற்றுபவன். இதன் நடுவில் அவனின் அம்மா வேறு இறந்து போக, அவன் மீது அனுதாபம் கொள்கிறாள் எஃப்சி. காதலிக்க ஆரம்பித்த பிறகும் அப்படியே இருக்கிறான் பாரி. எஃப்சியை பள்ளியில் சேர்ப்பதற்கே பாரியின் அப்பாதான் உதவுகிறார். ஆனால் அவரின் டெண்டரை எஃப்சியின் அப்பா ரிஜெக்ட் செய்துவிடுகிறார். இவர்களின் காதல் பற்றி எதோ ஒரு டயலாக்கில் உடனிருக்கும் அடியாட்கள் சொல்லி விடுகிறார்கள். எஃப்சியை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்ய காத்திருக்கும் நாள் அன்று அவள் காணாமல் போகிறாள். பின்பு என்ன நடந்தது என்பது தான் கதை. நான் கதை சொன்னவிதத்தில் ஜம்ப் இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
paari-02 நிஜ வாழ்வில் கெட்டவார்த்தைகளை  சரளமாய் உபயோகப்படுத்துகிறோம். ஒலகப்படங்களில் எல்லாம் கெட்ட வார்த்தை உபயோகப்படுத்துகிறார்கள். ஓகே நம்ம படம் ஒலகப் படத்துக்கு ஈக்குவல். சீனுக்கு சீன்.பேசுடா எல்லா கெட்டவார்த்தைகளையும் என்று சகட்டு மேனிக்கு தமிழில் உள்ள அத்துனை கெட்ட வார்த்தைகளையும் பேசியிருக்கிறார்கள். ம்யூட் செய்யப்பட்ட வார்த்தைகள் தான் என்றாலும் நாராசமாயிருக்கிறது. அடுத்து லைவாக எடுக்க வேண்டும் என்ற ஒலகப் பட விதி. கேமராவை ஒரிடத்தில் வைத்து விட்டு, யார் யார் எங்கு வருவார்கள் என்று ஒரு ரெண்டு நிமிஷம் நாம் தேட வேண்டும். திடீரென ரோட்டின் மூலையில் ஆர்ட்டிஸ்ட் வந்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஓ.. கீரோ (ஸ்பெல்லிங் மிஸ்டேக்கல்ல) வந்திட்டாருன்னு நாம புரிஞ்சிக்கணும். கிட்டத்தட்ட ஒரு பின்நவீனத்துவ பாணியில் உக்காந்து யோசிச்சி புரிஞ்சிக்கணும். அடுத்து கதை ஒரு பாரில் நடக்கிறது என்றால் லைவ் ரெக்கார்டிங்கின் போது அட்மாஸ்பியரையும் சேர்த்து தான் ரெக்கார்ட் செய்வார்கள். மெயின் நடிகர்களுக்கு தான் மைக் இருக்கும் அப்படி எடுக்கும் போது இயல்பான கும்பலின் சத்தமும், முதன்மை நடிகர்களின் வசனங்கள் தெளிவாகவும் இருக்கும். இதில் அப்படியில்லை. பிண்ணனியில் உள்ளவர்கள் எல்லோரும் தனித்தனியே படத்தில் வரும் நடிகர்களுக்கு ஈடாக டயலாக் பேசுகிறார்கள்.

பாரியாக நடித்த ராகுல் நன்றாகவே செய்திருக்கிறார். அதே போல் எஃப்சியாக நடித்த வர்ஷா. விண்ணைத்தாண்டி வருவாயாவில் சிம்புவின் தங்கையாக நடித்தவர். இம்ரசிவ். ”நான் உன்னை விட்டு பிரிவதுமில்லை” என்கிற பாடலும், அதை பாடிய பாடகியின் குரல். அந்த பாடலும், அந்த சிட்சுவேஷனை சொல்லும் காதல் எபிசோடும் க்யூட். முழு பாடல் காட்சியையும் ஓடும் வேனுக்குள் கதாநாயகன், நாயகியின் ரியாக்‌ஷனை மட்டுமே வைத்து எடுத்திருந்தது.  இசையமைப்பாளர் அருள்தேவ் இந்த பாடலில் மட்டும் மிளிர்கிறார். ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்.
paari-03 டெக்னிக்கலாய் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட படம்.லைவாக படமெடுக்க செய்த முயற்சியும், தெளிவான விஷுவலை திரையில் கொண்டு வந்ததற்கு பாராட்டலாம் என்று நினைத்தால். அமெச்சூர்தனமான ஷாட்டுகள், ஃபோகஸ் ஷிப்ட், போன்ற விஷயங்களில் எரிச்சலடைய வைத்து விடுகிறார்கள். 

எழுதி இயக்கியவர் ரஜினி.எதை சொல்ல வருகிறோம் என்பதை பார்வையாளர்களுகு உணர்த்தாத ஹேவயர் திரைக்கதை. திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை பேசும் வசனங்கள். உ.தா. என்னை புரிஞ்சிக்கவே மாட்டியா?. அமெச்சூரான மேக்கிங்.  கதாநாயகன் நாயகியின் நினைவாய் தன் ”லுல்லா”வை அறுத்துக் கொண்டு அரவாணியாகிறான். ”லுல்லா”வை அறுத்தவனெல்லாம் அரவாணியா? அரவாணியாவது என்பது உணர்வாலும், உடலாலும் ஏற்படும் மாற்றமல்லவா? என்ன ஒரு மோசமான புரிதல் இது.   அதிரடியான க்ளைமாக்ஸ் கொடுத்தால் உலகமே உறைந்துவிடும், ஒலகப் படமாகிவிடும் என்று நினைத்து எடுக்கப்பட்ட க்ளைமாக்ஸ். அடுத்த படத்தையாவது ஒலகப் பட ரேஞ்சுக்கு இல்லாமல் நம்மூர் ரேஞ்சுக்கு இயக்குனர்எடுப்பார் என்று நம்புகிறேன்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

நாய் சேகர் said...

//அரவாணியாவது என்பது உணர்வாலும், உடலாலும் ஏற்படும் மாற்றமல்லவா? என்ன ஒரு மோசமான புரிதல் இது.

இவருக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைத்து விட்டது.ஆனால் சில ஜீனியஸ்களுக்கு கிடைக்கமாட்டேங்கிது ... என்ன வாழ்க்கைடா இது?

Lakshmikanthan said...

நாக்கை வெட்டிய படம் வந்த போதே அடுத்து குஞ்சை வெட்டும் படம் வரும் என்று எதிர்பார்த்தேன்.கொஞ்சம் லேட்டானாலும் எதிர்பார்த்த மாதிரியே வந்திடிச்சி.தமிழ் இயக்குனர்களின் கற்பனை வறட்சி குஞ்சை அறுத்துக்கொள்ளும் அளவிற்கு சென்றிருப்பது மிகவும் பரிதாபத்துக்குரியது.

Anonymous said...

//நாக்கை வெட்டிய படம் வந்த போதே அடுத்து குஞ்சை வெட்டும் படம் வரும் என்று எதிர்பார்த்தேன்.//

சார்...நான் நிஜமாவே எதிர்பார்த்தோம் சார்...அந்தப்படம் வந்தபோதே கிண்டல் அடித்து சிரித்தோம்.

மெய்யாலுமே அப்படியே எடுத்திட்டாங்கயளா?பின்னே ஏன் படம் தியேட்டரை விட்டு ஓடாது? ஃபெப்சிக்கும் தயாரிப்பாளருக்கும் உள்ள மெய்ன் பிரச்னை படம் நல்லா இல்லாதது.அதை எப்படி சரி பண்ணன்னு தெரியல...அதனால்தான் ஒருத்தரை ஒருத்தரை அடிச்சுக்கிட்டு இருக்கிறாங்க! ஆஸ்கார் வாயிலை தட்டட்டும் இந்தப் படம்!

Anonymous said...

என் வலையில்
எப்படி இருந்த அரவிந்தசாமி...

தியானம் - தியான் - ச்சான் - ஸென் - போதிதர்மா

ramachandran.blogspot.com said...

இந்த படத்தையும் தியேட்டரில் உட்கார்ந்து பார்த்த உங்கள் பொறுமையை
நினைத்தால் பெருமையாகவும்,பொறாமையாகவும் இருக்கிறது.(படம் முடிந்ததும்
நண்பன் சத்யனின் வசனத்தை சொல்லியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்#பாரி பூரி.....)