Thottal Thodarum

Feb 6, 2012

கொத்து பரோட்டா - 6/02/12

எஸ்.ராவுக்கு இயல் விருது வழங்கப்பட்டதை குறித்து பல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. முக்கியமாய் அந்த விருது குறித்து எழுப்பப்படும் கேள்வி. அதன் பிறகு எஸ்.ராவின் விழாவுக்கு ரஜினி வந்து வாழ்த்தியது பற்றி. விருது பற்றி அந்த விருதை இதற்கு முன் பெற்றவர்களை வைத்து மதிப்பிடுகிறார்கள். சில சமயம் பிரபலமானவர்களுக்கு கொடுத்து விருதை பிரபலப்படுத்துகிறார்கள். அது சிறந்த விருதா? இல்லையா? என்பதை காலம் சொல்லும். ஆனால் ரஜினி வந்ததை தவறாக சொல்ல முடியாது. ஒரு சினிமாக்காராக, தன்னுடய படத்தின் பணியாற்றிய வசனகர்த்தாவின் விழாவுக்கு வந்து பாராட்டுவதில் ஏதும் தவறிருப்பதாய் தெரியவில்லை. இலக்கியத்திற்கு இவருக்கும் என்ன சம்பந்தம்? என்று கேள்வி கேட்பவர்களுக்கு இருந்தால் தான் ஒருவரை பாராட்ட வேண்டுமா? என்று கேட்க தோன்றுகிறது. இந்நிகழ்ச்சி எங்கே காமெடியானது என்றால் ரஜினி சொன்ன கதையில் அல்ல. ரஜினியை பாராட்டி நன்றி தெரிவிப்பதற்காக எஸ்.ரா பேசிய பேச்சில் தான் என்று சொல்கிறார்கள். அந்த பேச்சின் வீடியோவையும், ஒரிஜினல் கதையையும் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் தன்னுடய பதிவில் எழுதியிருக்கிறார். எனக்கும் அந்தக்கதையை படித்துவிட்டு இப்படி ரஜினியை பாராட்டுவதற்காக கதையை உல்டாவாக்கிவிட்டாரே என்று வருத்தமாய் இருந்தது. அந்தக் கதையையும், எஸ்.ராவின் பேச்சையும் படித்து, பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். அதை பார்க்க
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


சாரு தன் ”எக்ஸைல்” புத்தக விமர்சனக் கூட்டத்தில் என்னையும் பேச அழைத்திருந்தார். பத்ரி தனக்கு இலக்கியமெல்லாம் தெரியாது. வியாபாரம் மட்டுமே தெரியுமென்றும், சாருவின் புத்தகத்தை போடப் போவதாய் தெரிந்தவுடன், போட வேண்டாம் என்று சொல்லி, தடுக்க முயற்சி செய்ததாய் சொன்னார். லக்கி, அதிஷா, அராத்து, மனோஜ், மற்றும் பலர் பேசினார்களாம். கடைசியாய் ஞாநி வந்து பேசினார். வந்தவர் எக்ஸைல் நாவல் தனக்கு பிடிக்கவில்லை என்றும், அது வெறும் சுவாரஸ்ய எழுத்து, விடலைகளுக்கான எழுத்தென்றும், தினமும் மற்றவர்களுக்கு முதுகு சொறியும் ப்ளாகை எழுதிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள் என்றும். அதற்கு பதிலாய் உங்களுடய பழைய சுபமங்களா கதைகளை வெளியிடுங்கள். அது போன்ற புதிய படைப்புகளை படைத்திடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். அவரிடம் அறமில்லை என்று குற்றம் சாட்டினார். சாரு ஒவ்வொரு பேச்சாளர் பேசிய பிறகு அவர்களுக்கு பதில் அளித்தார். ஏனோ இம்முறை ஞாநியின் குற்றச்சாட்டுக்கு பெரிதாய் பதில் சொல்லாமல், எஸ்.ராவையும், மனுஷ்யபுத்ரனையும் விட்டு வெளுத்து வாங்கினார்.அநேகமாய் அடுத்த புத்தக வெளியீட்டில் மனுஷ்யபுத்ரனின் புத்தகத்தை மேடையில் கிழித்தால் ஆச்சர்யமில்லை. ரஜினியை முதலில் பேச வைத்துவிட்டு, கடைசியில் எஸ்.ராவை பேச வைக்க தைரியமிருக்கா? என்று சவால்விட்டார். ரஜினி போன்ற சினிமாக்காரனின் பாராட்டைப் கேட்டு கண்கலங்குவதை விட தூக்கு போட்டு சாவது மேல் என்றார். இதைக் கேட்டு சாருவின் மேல் ரஜினியிடம் வைத்திருக்கும் அளவிற்கான வெறி கொண்ட பாசமுள்ள ரசிகர் ஒருவர் இதை எப்படி எடுத்துக் கொள்வார் என்று நினைக்கும் போது பாவமாய் உள்ளது. இதே ஞாநி ரெண்டு வருடங்களுக்கு முன் சாநி என்று பேசி வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவுக்கு வந்தது. எழுதும் ஒவ்வொரு விஷயமும் எதற்காக, யாருக்காக எழுதுகிறோம் என்று புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்றும் ஞாநி சொன்னார். நல்லவேளை நேரமின்மையால் என்னை பேச அழைக்கவில்லை.
####################################
புத்தகம் விமர்சனம்
வா.மு.கோமுவின் நாவல்களான “மங்கலத்து தேவதைகளையும், எட்றா வண்டியையும் வாங்கியிருந்தேன். என்னமோ மங்கலத்து தேவதைகள் டைட்டிலும், ஆரம்ப எபிசோடும் சுவாரஸ்யப்படுத்தவே ரெண்டொரு நாளில் படித்துவிட்டேன். சுவாரஸ்யமான நாவல். ருக்மிணி, பிரேமா, மல்லிகா, புவனேஸ்வரி, சுசித்ரா, சரோஜா, சுதா, சாந்தி, டெய்ஸி டீச்சர், சந்திரிகா என்கிற தேவதைகளை மணிபாரதி என்கிற நாவல் நாயகன் ”நொட்டும்” கதை. இக்கதையில் சொல்லப்படும் விஷயங்களைப் பார்த்து இப்படியெல்லாம் நடக்குமா? என்று கேட்பவர்களுக்கு நிச்சயம் நடக்கும், நடக்கிறது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும் என்கிற சூழல் தினத்தந்தியில் வருகிற பாலியல் குற்றச் செய்திகளை படிக்கும் போது தோன்றுகிறது. ஞாநியின் பேச்சை கேட்டதிலிருந்து ஒரு எழுத்தாளன் தமிழுக்கும், படிக்கும் வாசகனுக்கும், எப்படிப்பட்ட வாசகனுக்கு எழுதுகிறான்? என்ன கொடுத்திருக்கிறான்? என்பது போன்ற பல கேள்வி மண்டைக்குள் கேட்டுக் கொண்டேயிருப்பதால், தமிழ் இலக்கிய உலகிற்கு வா.மு.கோமு இந்த நாவலின் மூலம் என்ன கொடுத்திருக்கிறார் என்ற கேள்வி உண்டானது. அதற்கு பதில் எனக்கு தெரியாது. NoN- இலக்கியவாதியான எனக்கு படு சுவாரஸ்யமான, கிளுகிளுப்பான, போதையான, கொஞ்சம் பர்வர்டடான நாவலைப் படித்த அனுபவத்தைக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது.
#######################################
ஆன்லைன் ஷாப்பிங்கில் பிரபலமான அமேசான்.காம் இந்தியாவில் junglee.com என்று ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. இங்கே இப்போதுதான் மெல்ல தலைத் தூக்கிக் கொண்டிருக்கும் flipkart மாதிரியான தளங்களுக்கு நிச்சயம் ஒரு டெண்டை ஏற்படுத்தக் கூடுமென்று எதிர்பார்க்கிறார்கள். இணையதளம் மூலம் ஷாப்பிங் செய்யும் மக்களும், இத்துறையை சார்ந்தவர்களும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மேலே உள்ள படத்திலிருப்பவரின் பெயர் கிரேய் லெவிஸ்.  55 வயதான அவருக்கு இதயநோய் காரணமாய் உயிரிழக்கும் தருணத்திற்கு வந்துவிட்டார்.  உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை காப்பாற்றுவதற்கு புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள டெக்ஸாஸில் உள்ள Texas Heart Institute ஐ சேர்ந்த இரு வைத்தியர்கள் முடிவு செய்தனர். குறித்த நபரின் இதயத்தை முற்றாக அகற்றிவிட்டு, இதயம் போன்று செயற்பட கூடிய 'contunuos flos' எனும் செயற்கை உபகரணத்தை பொருத்தினர். இதயத்தை போன்று இந்த உபகரணம் துடிப்பதில்லை.
ஆனால் இதயம் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்கிறது. இந்த முயற்சி வெற்றியளித்ததுடன், சிகிச்சை முடித்த அடுத்த நாளே குறித்த நபர் மருத்துவர்களின் பேசக்கூடியளவு போதிய உடல் நலம் பெற்றார். கடந்த வருடம் மார்ச் மாதம் இந்த ஆப்பரேஷனை செய்திருக்கிறார்கள்.

முதல் முயற்சியாக காளை மாடு மீது இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்போது மனிதனிடமும் மேற்கொள்ளப்பட்டு வெற்றியளித்துள்ளது.  இதன் மூலம் மருத்துவ உலகில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. உலகில் இதயமில்லாது நடமாடும் முதன் மனிதன் எனும் பெயரை கிரேய் லெவிஸ் எனும் அந்நபர் பெற்றுள்ளார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டரிலிருந்து
மாணவர்கள் மீது தடியடி. எந்த பத்திரிக்கையும், சேனலும் எதுவும் சொல்லலை. இதே திமுக பண்ணியிருந்திச்சின்னா.. என்னா பேச்சு பேசியிருப்பாங்க ம்ஹும்

விஜயகாந்த் நடந்து கொண்ட முறை தவறுதான்.- அன்புமணி ராமதாஸ். வெளிய துரத்திவிட்டும், வாசலில் நிற்போர் சங்கம்

உறவு என்பது இரண்டு ஜோடிக் கைகள் கோர்த்திருப்பதைப் போல, என்ன தான் கைகளில் வித்யாசமிருந்தாலும் அந்த நெருக்கம் மட்டுமே உண்மை.

வண்டியே இல்லாமல் ரோட்டில் போனால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் என்று பைன் போடுவார்கள் போலிருக்கு.:)பாஸிடிவ் திங்கிங் என்பது எல்லாம் சிறந்ததே நடக்குமென்பதில்லை. நடப்பது சிறப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையே..# தத்துவம்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
டிவியில் ரமேஷ், சுரேஷ் 5 ஸ்டார் விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள். சாக்லெட்டை சாப்பிட்டவுடன் மெய்மறந்து போவதை. அதை கான்செப்டாக வைத்து, ரமேஷ், சுரேஷ் இருவரும் முதன்முதலாய் தங்களுடய காதலிகளை பார்க்கப் போகிறார்கள். என்ன ப்ரச்சனை என்றால் அவர்கள் இருவரும் வேறு வேறு இடத்திலிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை சாக்லெட்டை சாப்பிட்ட பிறகு எல்லாம் மறந்துவிடுகிறார்கள். இதை வைத்து ஒரு இண்டராக்டிவ் டிஜிட்டல் படத்தை எடுத்து நாமே அவர்கள் காதலிகளை பார்க்க உதவும் வகையில் படங்களை வெளியிட்டிருக்கிறார்கள். பார்க்க வேண்டாமென்றால் அதற்கு ஒரு தனி வீடியோ திரி. செம.. இண்ட்ரஸ்டிங்.. முதல் வீடியோவை பார்த்தவுடன் தொடர்ந்து நீங்கள் பார்த்துக் கொண்டேயிருப்பீர்கள்.
#########################################
ப்ளாஷ்பேக்



அந்த பாட்டு காப்பி, இந்தப் பாட்டு காப்பி என்று ஆளாளுக்கு அடித்துக் கொண்டிருக்கும் காலத்தில், அந்த காலத்திலேயே அப்படியே உட்டாலக்கடி அடித்து ஹிட்டான பாடல் நிறைய இருக்கிறது. உதாரணமாய் வேதா என்கிற இசையமைப்பாளர் பல பழைய ஹிந்தி பாடல்களை தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் போட்டுள்ளார். அது போல இந்தி ஷர்மிலி படப்பாடலை அப்படியே கனிமுத்துபாப்பா படத்தில் டி.வி.ராஜா என்கிற இசையமைப்பாளர் உட்டாலக்கடி அடித்துள்ளார். இந்தியில் கிஷோரின் கந்தர்வகுரலில் என்றால் தமிழில் பி.சுசீலாவின் மயக்கும் குரல். எது எப்படியோ நல்ல பாட்டு
#######################################
அடல்ட் கார்னர்
How are women and tornadoes alike?
They both moan like hell when they come, and take the house when they leave.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

10 comments:

pichaikaaran said...

நீங்கள் பேசாதது வருத்தம்தான்...

சாரு பேசுகையில் ரஜினியின் நேர்மையை பாராட்டினார்.. ஒரு நடிகர் , பெருமைக்காக புத்தகங்கள் வாங்கி வைத்து கொண்டு, ஊரை ஏமாற்றுவார் என்று சாரு குறிப்பிட்டார்..

SIV said...

வாமுகோமு வின் எட்றா வண்டிய இப்போது தான் படித்து முடித்தேன். கில்மாவும் இல்லை சுவாரிஸ்யமாகவும் இல்லை. கொங்கு நாட்டின் பேச்சு சுவாரிஸ்யத்திற்காக ஓரிரு அத்தியாங்கள் மட்டும் ஒகே.

Cable சங்கர் said...

siv. எட்றா வண்டிய இன்னும் படிக்கலை. படிச்சிட்டு சொல்றேன்.

Cable சங்கர் said...

ரஜினியின் நேர்மையை பாராட்டினார்.

வேற வழி.. :)

rajamelaiyur said...

//விஜயகாந்த் நடந்து கொண்ட முறை தவறுதான்.- அன்புமணி ராமதாஸ். வெளிய துரத்திவிட்டும், வாசலில் நிற்போர் சங்கம்
//

ஹா .. ஹா நெத்தியடி

rajamelaiyur said...

உங்கள் பார்வைக்கு இன்று :
விஜய்யின் துப்பாக்கி படத்தின் கதை வெளியானதா ? முருகதாஸ்அதிர்ச்சி

ramarajan said...

sir "cinema veyabaram" book , naan vaanganum.yenga kedaikum nu sollunga..romba aavala irukken..

Jayaprakash said...

Heart information is very useful and nice keep doing!! :)

Gobs said...

http://charuonline.com/blog/?p=2669 - appo ithu yennavam?? Charu seinjaaa seri mathavanga seinja thappa...yepdi sir ipdi??

ஹாலிவுட்ரசிகன் said...

இதயமில்லாமல் செயற்கை மெக்கானிஸம் மூலம் ஒரு மனிதனை வாழவைத்ததை பற்றிய வீடியோ அருமை.

இந்தமுறை அடல்ட் கார்னர் விளங்கவில்லை. :-(