இந்த ரெஸ்டாரண்டைப் பற்றி என் நண்பர் ஒருவர் சொன்னார். முக்கியமாய் இங்கிருக்கும் வாட்டர் டேபிளைப் பற்றி சொன்னவுடன் உடனே அங்கே போய் சாப்பிட வேண்டுமென ஒரு எண்ணம் தோன்றியது.

அடையாறு கிளப் ரோட்டின் உள்ளே சென்றால் மிக அமைதியான ஒரு அட்மாஸ்பியரில், பழைய பங்களா ஒன்றை எடுத்து வடிவமைத்திருக்கிறார்கள். உள்ளே அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஆம்பியன்ஸே நல்ல மனநிலையை கொடுக்கக்கூடியதாய் இருந்தது. ஏஸி ஹாலைத் தாண்டி ஒரு சின்ன நீர்வீழ்ச்சிப் போல ஒரு செட்டப் செய்திருக்கிறார்கள். தண்ணீர் விழும் இடத்தில் பெரிய தொட்டி போலிருக்க, அதில் ரெண்டு டேபிளை போட்டிருக்கிறார்கள். நாம் போய் உட்கார்ந்தால் நம் கால்களை நினைத்தபடி அருவியின் அடிவாரத்தில் அமர்ந்து சாப்பிடும் உணர்வு தரும் எக்ஸைட்மெண்ட் அட்டகாசமாய் இருக்கும். சரி நாம் சாப்பாட்டுக்கு வருவோம்.

இந்தியன், காண்டினெண்டல், என்று கலந்தடித்த மல்ட்டி குசைன் உணவு வகைகள். இவர்களின் ரைஸ் வகைகள் அனைத்துமே கிரில் பேஸ்ட்களை வைத்து தயார் செய்கிறார்கள். என் மகனின் பிறந்தநாளுக்காக சென்றதால் முதலில் ஸ்வீட்டாக, கேரட் அல்வா, ஸ்டாட்டருக்கு பேபி கார்ன் ஃப்ரை, பட்டர் நான், பன்னீர் பட்டர் மசாலா, அப்புறம் உருளை மசாலா கிரேவி, வெஜ் ரைஸ் ( கடைசி ரெண்டு அயிட்டம் பெயரும் சரியாய் சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை) என்று ஆர்டர் செய்தோம். கேரட் அல்வா தித்திப்பே இல்லாமல் வெறும் கோவாவாக இருந்தது. ஓவனில் வைத்து சுடச் செய்து தருவதால் ஒருவிதமான வாடை இருக்கிறது. மற்றபடி அவர்கள் கொடுத்த ரைஸ், மற்றும் பட்டர் நான் எல்லாம் அட்டகாசம். வாயில் வைத்தாலே கரைகிற அளவிற்கு படு சுவையாய் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்தது உருளை மசாலா.
சின்ன உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து, அதை பொறித்து, பின்பு வெங்காயம், தக்காளி பேஸ்டை போட்டு அதனுடன் அவர்களுடய ரெஸிப்பியையும் சேர்த்து தருகிறார்கள். நானுடன் சேர்த்து ஒரு கிழங்கை மசாலாவோடு எடுத்துக் கொண்டு வாயில் போட்டால்… அட..அட…அட.. வேறென்ன டிவைன் தான்.சாப்பிட்டு முடித்தவுடன் வரும் பில்லைப் பார்த்து மட்டும் நீங்கள் பயப்படாமல் இருந்தால் நிச்சயம், இவர்களின் சுவைக்காக்வும், ஆம்பியன்ஸுக்காகவும் கொடுத்த காசு ஜீரணிக்கும். மூன்று அடல்ட் ரெண்டு சைல்டுக்கான பில் சுமார் 2500
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
Next time for the dessert try panjamirtham souffle and tender coconut souffle. They really taste divine.
This place has also opened a roof top dining called azuri bay. Italian and middle east cuisine. Hv to try that next time.
PS : Sorry for peterin. Tamil fonts not available.
விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி !
வாழ்த்துக்கள் அண்ணா.
http://sathivenkat.blogspot.in/2012/02/blog-post.html
கமிங் செப்டம்பர்:-)))))