Thottal Thodarum

Feb 16, 2012

சாப்பாட்டுக்கடை – Crimson Chakra

இந்த ரெஸ்டாரண்டைப் பற்றி என் நண்பர் ஒருவர் சொன்னார். முக்கியமாய் இங்கிருக்கும் வாட்டர் டேபிளைப் பற்றி சொன்னவுடன் உடனே அங்கே போய் சாப்பிட வேண்டுமென ஒரு எண்ணம் தோன்றியது.
Photo0215

அடையாறு கிளப் ரோட்டின் உள்ளே சென்றால் மிக அமைதியான ஒரு அட்மாஸ்பியரில், பழைய பங்களா ஒன்றை எடுத்து வடிவமைத்திருக்கிறார்கள். உள்ளே அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஆம்பியன்ஸே நல்ல மனநிலையை கொடுக்கக்கூடியதாய் இருந்தது. ஏஸி ஹாலைத் தாண்டி ஒரு சின்ன நீர்வீழ்ச்சிப் போல ஒரு செட்டப் செய்திருக்கிறார்கள். தண்ணீர் விழும் இடத்தில்  பெரிய தொட்டி போலிருக்க, அதில் ரெண்டு டேபிளை போட்டிருக்கிறார்கள். நாம் போய் உட்கார்ந்தால் நம் கால்களை நினைத்தபடி அருவியின் அடிவாரத்தில் அமர்ந்து சாப்பிடும் உணர்வு தரும் எக்ஸைட்மெண்ட் அட்டகாசமாய் இருக்கும். சரி நாம் சாப்பாட்டுக்கு வருவோம்.
DSC04452
இந்தியன், காண்டினெண்டல், என்று கலந்தடித்த மல்ட்டி குசைன் உணவு வகைகள். இவர்களின் ரைஸ் வகைகள் அனைத்துமே கிரில் பேஸ்ட்களை வைத்து தயார் செய்கிறார்கள். என் மகனின் பிறந்தநாளுக்காக சென்றதால் முதலில் ஸ்வீட்டாக, கேரட் அல்வா, ஸ்டாட்டருக்கு பேபி கார்ன் ஃப்ரை, பட்டர் நான், பன்னீர் பட்டர் மசாலா, அப்புறம் உருளை மசாலா கிரேவி, வெஜ் ரைஸ் ( கடைசி ரெண்டு அயிட்டம் பெயரும் சரியாய் சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை) என்று ஆர்டர் செய்தோம். கேரட் அல்வா தித்திப்பே இல்லாமல் வெறும் கோவாவாக இருந்தது. ஓவனில் வைத்து சுடச் செய்து தருவதால் ஒருவிதமான வாடை இருக்கிறது. மற்றபடி அவர்கள் கொடுத்த ரைஸ், மற்றும் பட்டர் நான் எல்லாம் அட்டகாசம். வாயில் வைத்தாலே கரைகிற அளவிற்கு படு சுவையாய் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்தது உருளை மசாலா.
Photo0220 சின்ன உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து, அதை பொறித்து, பின்பு வெங்காயம், தக்காளி பேஸ்டை போட்டு அதனுடன் அவர்களுடய ரெஸிப்பியையும் சேர்த்து தருகிறார்கள். நானுடன் சேர்த்து ஒரு கிழங்கை மசாலாவோடு எடுத்துக் கொண்டு வாயில் போட்டால்… அட..அட…அட.. வேறென்ன டிவைன் தான்.சாப்பிட்டு முடித்தவுடன் வரும் பில்லைப் பார்த்து மட்டும் நீங்கள் பயப்படாமல் இருந்தால் நிச்சயம், இவர்களின் சுவைக்காக்வும், ஆம்பியன்ஸுக்காகவும் கொடுத்த காசு ஜீரணிக்கும். மூன்று அடல்ட் ரெண்டு சைல்டுக்கான பில் சுமார் 2500
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

14 comments:

Francis Rajesh said...

super anna

pradeep said...

கேபிள் ஜி... அந்த பில் அமொண்டு ..விடுங்க.. பிறந்தநாள் தானே!!

spice said...

this is owned by suresh menon! you can see him often there. Infact, if i remember it right,you can see the same house in the song " kannukku mai azhaghu.."

Vidhya Chandrasekaran said...

The rice item is called smoked veg rice aka biriyani. Not only rice, every item in the crimson chakra menu is grill based. The conti items are served under the menu cornucopia.

Next time for the dessert try panjamirtham souffle and tender coconut souffle. They really taste divine.

This place has also opened a roof top dining called azuri bay. Italian and middle east cuisine. Hv to try that next time.

PS : Sorry for peterin. Tamil fonts not available.

Cable சங்கர் said...

vidhya அந்த அல்வா போட்டோ உங்களுடயது.:))

rajamelaiyur said...

புது புது உணவகங்களை அறிமுகம் செய்கின்றிர்கள் நன்றி

rajamelaiyur said...

இன்று ..


விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி !

rajamelaiyur said...

உங்கள் தளத்தில் நான் எனது பிளாக் லிங்க் போடுவதால் உங்கள் வாசகர்கள் சிலர் எனக்கும் வருகின்றனர் . இது உங்களுக்கு பிடிக்க வில்லை எனில் இனி போடா வில்லை .. நன்றி

'பரிவை' சே.குமார் said...

அழகான அறிமுகம் சாப்பாட்டுக்கடைக்கு...

வாழ்த்துக்கள் அண்ணா.

Sathish said...

உங்கள மாதிரி சாப்பாட்டு பிரியருக்கான பதிவு இது ..
http://sathivenkat.blogspot.in/2012/02/blog-post.html

முஹம்மது யூசுப் said...

இந்த உணவகம் சன் டிவியில் வரும் செஃப் ஜேக்கப் அவர்களால் நடத்தப்படுவதல்லவா? இந்த நபர் தென்னிந்திய உணவு வகைகளில் சிறப்பான நிபுணத்துவம் பெற்றவர். மெனு கார்டில் அவரைப் பற்றிய குறிப்பு இருக்கிறது.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இந்த உணவகத்தில் நண்பர்களோடு இணைந்து buffet சாப்பிட்டோம். ஒன்றுமே விளங்கவில்லை. கொடுத்த காசு வீண். வாடிக்கையாளர் கவனிப்பும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

லதானந்த் said...

ஓய்! ஒம்மோட சாப்பாட்டுக் கடைய விரும்பிப் படிக்க ஆரமிச்சிருக்கன். ச.தே. கதைகளைப் படிச்ச பிறகு மனசு கற்பனை பண்ணிக்குமே அப்படி - மனசு நெம்பக் கற்பனை பண்ணிக்குது!

துளசி கோபால் said...

எல்லாம் நோட் பண்ணியாச்சு. இன்னும் சென்னை சாப்பாட்டுக்கடைகள் எழுதுங்க.

கமிங் செப்டம்பர்:-)))))