இலவசம்
என்ன எழுதறதுன்னே தெரியல.. அதுவும் இலவசம் பத்தி எழுதறதுன்னு முடிவு செஞ்சப்புறம் இலவசமா எந்த ஐடியாவும் வரமாட்டேங்குது.. நம்மாளுங்க இலவசம்ன்னா பினாயிலை கூட குடிப்பானுங்கன்னு கவுண்டமணி ஓரு படத்துல சொன்னமாதிரி.. அதுக்கு அத்தாச்சியா நம்ம தமிழ்நாட்டுல ஆட்சி அமைச்சிருக்கிறதும் ஓரு இலவச அரசுதான். பாருங்க எங்க பார்த்தாலும் இலவசம் டிவி, இலவச நிலம், இலவச பொங்கல், இலவச தீபாவளின்னு ஒரே இலவச மயம்தான். நம்ம ஜெயலலிதா போன ஆட்சியில, என்ன பண்ணாங்க.. கோயில்ல தினமும் மத்யானம் இலவச சாப்பாடு போட்டாங்க. அங்க இங்க கொஞ்சம் நஞ்சம் வேலை பார்த்து சம்பாதிச்சிகிட்டிருந்த அடிப்படை வேலை செய்பவர்கள், வேலை செய்யறத விட்டுட்டு, ஒரு வேளை சாப்பாடு நிச்சயம்க்கிற நிலையில வேலையை விட அவங்களுக்கு வேறு என்ன காரணம் வேண்டும். ஒரு காலத்துல குங்குமம் புக் வாங்கினா புக் விலையவிட அவங்க கொடுக்கிற இலவச பொருட்களின் விலை அதிகமா இருக்கும். அதனால அந்த புத்தகம் நம்பர் ஓன்னா வந்திருச்சுன்னு அவங்களே ஏதேதோ சர்வேலிருந்து சொல்றாங்க.. அவங்க சொன்ன பின்னாடி இன்னொரு பத்திரிக்கை நாங்களும் நம்பர் ஒன்னுன்னு சொல்றாங்க. அவங்களும் ஒரு சர்வே ரிசல்ட் வச்சிருக்...