Thottal Thodarum

Feb 25, 2021

சாப்பாட்டுக்கடை - கறி தோசை


சாலிகிராமத்தில் ப்ரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரே பிரபல டீக்கடையான காவேரி கார்னர் பக்கத்தில் சட்டென தெரியாத வண்ணம் ஒரு கறி தோசை கடை உதயமாகியிருப்பதை கண்டு கொண்டேன்.  சரி ஒரு நடை போய் பார்ப்போம் என்று மெனுவைப் பார்த்ததில் கறி தோசையில் சிக்கன், மட்டன் கறி தோசை வகைகள் மட்டுமில்லாமல், பன் பரோட்டா எல்லாம் போட்டிருந்தார்கள். சரி முதல் முயற்சியாய் மட்டன் கறி தோசை சாப்பிடுவோம் என்று ஆர்டர் செய்தேன். அதற்கு முன்னால் ஒரே ஒரு பன் பரோட்டா டேஸ்ட் செய்வோம் என்று ட்ரை செய்ததில் பரோட்டாவை பன்னாக செய்து ஹாட் பேக்கில் போட்டு வைத்திருந்ததினால் பன் அமுங்கிப் போயிருந்தாலும், கூட தொட்டுக் கொள்ள, மட்டன், நாட்டுக்கோழி க்ரேவி, மீன் குழம்பு, குடல் குழம்பு என அதகளப்படுத்தினார்கள். 

டிபிக்கல் கிராமத்து ஸ்டைலில் இருந்தது குழம்பு வகைகள். குறிப்பாய் மட்டன் மற்றும் நாட்டுக் கோழி குழம்பைச் சொல்ல வேண்டும். கொஞ்சம் பொறுமையாய் காத்திருந்த பின் மட்டன் கறி தோசை பிட்ஸா போல வெட்டப்பட்ட பீஸ்களாய் வந்தது. வழக்கமாய் கொஞ்சம் தடிமனாய் இருக்கும் கறி தோசை கொஞ்சம் மெலிந்திருந்தார்ப் போல இருந்தது. அடித்தளம் நல்ல கிரிஸ்பியாகவும், மேலே நல்ல கறியும், முட்டையும், மாவும் கலந்து அதகளப்படுத்தியிருந்தார்கள். வெறும் 150 ரூபாய்க்கு மிக நல்ல கறி தோசை.


மதியத்தில் நான் வெஜ் மீல்ஸை 120 ரூபாய்க்கு தருகிறார்கள். நல்ல சுடு சோறு, சிக்கன், மட்டன், நாட்டுக்கோழி, குடல், மீன் குழம்பு என கிராமத்து காரத்துடன், சுடு சோற்றில் போட்டு அடித்தால் அடி தூள் தான். சைட்டிஷ்ஷாய் சிக்கன் சுக்காவை ஆர்டர் செய்திருந்தோம். கிராமத்தில் தோசைக்கல்லில் நன்றாக எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயத்தை சருகாய் மாறும் வரை வதக்கி, அதில் சிக்கன் பீஸ்களையும், மசாலாவையும் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி தருகிறார்கள். நிஜமாவே டிவைன். 

புதிய உணவகம் என்பதால் ஒரிரு சிறு குறைகள் இருக்கத்தான் செய்கிறது. பட் நல்ல தரமான, நியாயமான விலையுள்ள நான் வெஜ் உணவகம் இல்லாமல் இருந்த சாலிகிராமத்தில் ஒர் நல் உணவகம். ட்ரை பண்ணிப் பாருங்க.

டோர் டெலிவரியும் செய்கிறார்கள்

கறி தோசை
அருணாசலம் ரோடு
காவேரி கார்னர் பக்கத்துக் கடை
8248201608

கேபிள் சங்கர்

நான் ஷர்மி வைரம் - விமர்சனம் -2

 பு(து)த்தகம்

நான் ஷர்மி வைரம் (A)

நாவலுக்கு A சர்டிஃபிகேட் கொடுத்தமைக்காகவே எழுத்தாளர் கேபிள் சங்கருக்கு
வாழ்த்துக்கள்
.
சாதாரண வைர கொள்ளை கடத்தல் தான் நாவலின் கரு.ஆனால் அதை மிகவும் ரசிக்கும் படியாய் காமத்தோடு கதையையும் எழுதியிருப்பது தான் மிக சிறப்பு.1998 - 2000 வாக்கில் எப்பொழுதோ கேள்விபட்டிருக்கிறேன் கோவாவில் ஆண் ஐட்டங்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.வெளிநாட்டினரோடு செக்ஸ் வைத்துக் கொண்டு பணமும் மகிழ்ச்சியையும் பெறுவர் என்று.

அவர்களின் பெயர் ஜிகிலோ என்று இன்றைக்குத் தான் அறிந்து கொண்டிருக்கிறேன்.சென்னையில் இதற்கென ஒரு கூட்டமே இயங்கி வருவதை கண்டு மனம் அதிசயமும் ஆச்சர்யமும் அடைகிறது.கேபிள் சங்கர் தன் வசீகர எழுத்தில் இவர்களின் செயல்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக எழுதி இருப்பதை பார்க்கும் போது கதை தானே என்று ஒதுக்கி வைக்க முடியவில்லை.
மிகவும் டிடெய்ல்டு ஆன நாவல்.கதையும் விறுவிறுப்பாகவே செல்கிறது.

நான் என்கிற ராஜன், ஷர்மி என்கிற பெண், வைரம் என்கிற ஆள் அல்லது வைரக் கடத்தலாகவும் எடுத்துக் கொள்ளலாம்.மூவரையும் தனித்தனியாய் விவரித்துக் கொண்டு ஒற்றைப் புள்ளியில் இணைத்து பின் கதையை ஆச்சர்யத்தோடு முடிப்பது ஒரு திரைப்படத்தை பார்த்த மாதிரி இருக்கிறது.

பணக்கார பெண்களின் லைஃப்ஸ்டைல், அவர்களின் மறுபக்கம் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.சரோஜாதேவி புக் கொஞ்சம் அப்பட்டமாய் இருக்கும்.

ஆனால் இதில் பூசி மெழுகப் பட்டிருக்கிறது.படிக்க ஒன்றும் விரசமாய் தெரிவதில்லை அதான் இந்த நாவலின் சிறப்பம்சம்.காதல் காமம் துரோகம் என எல்லாம் கலந்து கட்டி, படிக்க படிக்க மிக சுவாரஸ்யத்தை தந்திருக்கிறார் எழுத்தாளர்.புத்தகத்தை படிக்க ஆரம்பித்து முழுவதும் முடிக்கும் வரை பல ஆச்சர்யங்களை தந்து கொண்டே இருக்கிறது.செம இண்டரஸ்டிங்.