Thottal Thodarum

Jul 30, 2009

குற்றாலம் -2

Image0275

முன்னும் பின்னும் அருவியாகியிருந்தவரை கொண்டு போய் ஒரு ஆஸ்பிட்டலில் சேர்க அழைத்து சென்றோம் அது ஒரு மினி கிளினிக் கம் ஹாஸ்பிடல். நாங்கள் போன பொது அழகான ஒர் இளம் பெண் ஒருத்தி அந்த ஹாஸ்பிடல் வளாகத்திலேயே நடை பயின்று கொண்டிருக்க, நம்ம ஆள் அதற்குள்ளாக, அங்கேயிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு நீர் வார்க்க, வாசலில் மது அருந்தி வருபவர்களுக்கு அனுமதியில்லை என்று போர்டில் எழுதியிருந்தது.

நடை பயின்ற் பெண் இப்போது அருகே வந்து என்ன வேண்டும் என்று கேட்க, நாஙக்ள் விஷயத்தை சொல்ல, நேரே உள்ளே போய் டாக்டரிடம் போய் சொல்லி விட்டு, மீண்டும் நடை பயில ஆரம்பித்தாள். இதற்கிடையில் அங்கிருந்த நர்ஸ் நண்பரை உள்ளே அழைக்க, நடுவில் வ்ந்து என்ன நடக்கிறது என்று பார்ட்த்துவிட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, மீண்டும் நடை பழக, உள்ளே வர, நடை பழக உள்ளே வர, என்று நிமிடத்திற்கு ஒரு முறை உள்ளே வருவதும், நடைபழகுவதுமாய் இருந்தது கவனத்தை கவர்ந்தது. நண்பர் உடனே சரியாக வேண்டுமானால், ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், அல்லது டிரிப்ஸ் ஏற்ற வேண்டும் என்று டாக்டர் சொல்ல,  அவரை அட்மிட் செய்துவிட்டு , உடன் வந்த இன்னொரு நண்பரை அவருடன் விட்டு விட்டு, நண்பர் ஒருவர் கொடுத்திருந்த 1.5லிட்டர் அழைத்ததால், அவசர அவச்ரமாய் வெளியே வந்த போது, நடை பயின்ற பெண் இப்போது நைட்டியில் நடந்து கொண்டிருந்தாள்.

Image0278

முதல் இரண்டு ரவுண்டுகளை முடித்து சாப்பிடுவதற்காக, வைரமாளிகைக்கு வந்து மல்லிகைபூ பரோட்டாவும், தேங்காய் எண்ணையில் பொறித்த நாட்டு கோழியையும் ஒரு கட்டு கட்டிவிட்டு, விட்டோம் குற்றாலத்துக்கு வண்டியை..  சுமார் 12 மணிக்கு போய் ரூம் போட்டுவிட்டு உடனடியாய் குளிப்பதற்கு கிளம்பினோம். ஆமாம் நடு இரவு 12 மணிக்கு தான் அப்போது தான் கும்பல் இருக்காது என்று உடன் வந்த ரவி சொன்னார். நேராக பழைய குற்றாலத்துக்கு போய் அங்கே கொஞ்சம் தொண்டையை நினைத்து கொண்டு,  சோவென கொட்டும் அருவியில் போய் நின்றவுடன்,  உடலெல்லாம் சில்லிப்பு பரவி, ஊளே போயிருந்த அதுவும், வெளியே மேலிருந்த கொட்டிய இதுவும், சேர்ந்து உடலை ஒரு விதிர்ப்பு விதிர்க்க, குளிர் உடலை உலுக்க, அதை அடக்க, குடு குடுவென அருவிக்குள் ஓடி நின்றவுடன், சில நொடிகளில் குளிர் விட்டு போக, தலை மேல் தடதடவென் கொட்டும் அருவி மனதை உற்சாகபடுத்த குற்றாலம்.

விடிய விடிய 1.5லிட்டர் காலியாகும் வரை பழைய அருவியிலும், மெயின் பால்சிலும் குளிக்க, எண்ணெய் தேய்த்து வ்ந்த ஆட்கள் எல்லாம் அருவில் குளித்துதான் உடலில் உள்ள எண்ணெய் போகிறது என்று நினைத்தால் அது கற்பனை.. இவர்கள் குளிக்கிறேன் பேர்விழி என்று உள்ளே புகுந்து நம் உடலில் தடவி விட்டு போவது தான் நிஜம். வந்தவர்கள் பார்க்கும் போது நானெல்லாம் நாகேஷ் என்று தோன்றியது.

Image0277

அடுத்த நாள் பாலாறு என்கிற் இடத்திற்கு போனோம். கேரளாவின் பார்டரில் இருக்கிறது.  அங்கே செக் போஸ்ட் ஆட்கள், தமிழ்ர்களை நடத்திய விதம் மிக கொடுமை, அங்கே கொஞ்ச்ம் போராட்டம். பின்பு, பாலாறு.. ஆது ஆறு கிடையாது பாலருவி.. சுமார் 70-80 அடி உயரத்திலிருந்து வெறி கொண்டு விழும், காட்டருவி..  பதினெட்டு வயது பெண்ணின் மோகமும், காமமும் ஒரு சேர்ந்த வெறி கொண்ட  முட்டல் போல, மூச்சு முட்டும், வேகம், வேகத்தில் நம்மை தூக்கி வெளியே போடும் உந்தல். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும். 

அதே போல் அன்று இரவு குற்றாலத்தில் ஒரு இட்லி கடை நடத்தும் நெகு நெகு பெண், ஐம்பது பேர் வ்ந்தாலும் தனியாளாய் நின்று இட்லி தோசை என்று ஆர்டர் எடுத்து, கடை நடத்திய விதத்தை பார்பதே அழகு.வ்

அடுத்த நாள் திருநெல்வேலிக்கு வந்து வழ்க்கம் போல் திருநெல்வேலி அல்வா வாங்கி கொண்டு, ரயிலேறினேன். ஸ்டேஷனில் கரு கும்னு ஒரு பெண், அவளுக்கு சம்மந்தமேயில்லாமல், ஜீன்ஸு, டீச்ர்ட்டும் தலையில் நல்ல மல்லிகைபூவும், எண்ணைய் தேய்த்து, பின்னல் வேறு போட்டிருந்தாள். இதுக்கு அவள் சுங்குடி சேலை கட்டி வந்திருக்கலாம்.

இவ்வளவு தூரம் போய் பார்டர் கடைக்கு போகாமல் வந்தது கொஞ்சம் வருத்தமாய்தான் இருந்தது

தயவு செய்து யாரும் குருவாயூர் ரயிலில் ஏறிவிடாதீர்கள்., யாராவது முதுகு சொறிய கை தூக்கினால் கூட நிறுத்திவிடுகிறார்கள். குற்றாலத்தின் சந்தோஷத்தை, இந்த ரயில் பயணம் கெடுத்துவிட்டது என்றே சொல்லலாம்.



குற்றாலம் முதல் பதிவை படிக்க இங்கே அழுத்தவும்

நிதர்சன கதைகள் -9- Lemon Treeயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jul 28, 2009

நிதர்சன கதைகள்-10- ஆண்மனம்

Teizo_Group_by_silver_heart_tidus
என்னுடய ஆபீஸுக்கு அருகில் ஆண், பெண், இருபாலர் படிக்கும் கல்லூரி ஒன்று இருக்கிறது.. கல்லூரிக்கு  இரண்டு கட்டிடங்களுக்கு முன் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. அந்த கல்லூரி வருவதற்கு முன் அங்கிருந்த ஆஞ்சநேயர் கோயிலில் கும்பலே இருக்காது. ஆனால் இப்போது அப்படியில்லை,  ஜகத்ஜோதியாய் கும்பல். கோயிலுக்கு காலேஜ் போகும் முன் பெண்கள் தினமும் வர, அதனால் அவர்களை தொடரும் பையன்களும் வர, இதற்கு நடுவில் காதலர்களுக்கு உதவும் ஆஞ்சநேயர் என்று புரளி கிளம்பிவிட, ஆஞ்சநேயருக்கு கொண்ட்டாட்டம் தான்.

தினமும், காலையிலும், மாலையிலும் கொத்து, கொத்தாக ஐஸ்கேண்டி பெண்கள் வருவதை, அவர்கள் என் ஆபீஸை கிராஸ் செய்வதை ஆபீஸ் ஜன்னலிலிருந்து பார்க்க, அக்னி நட்சத்திரத்திலும், இமாலய குளிர்ச்சியாயிருக்கும். அப்படி என்னதான் பேசுவார்கள், அவ்வளவு சிரிக்க, சிரிக்க, பின் தொடரும் பைன்களுக்கு லேசாய் சிக்னல் காட்டும் பெண், அதை பெருமையாய் தன் தோழிகளிடம் கிசுகிசுக்கும் பெண், போகிற போக்கில துரிதமாய் கட்டைவிரலில் புயல் வேக SMS அனுப்பும் பெண், எதை பற்றியும் கவலை படாமல் புத்தகத்தை தன் மார்போடு அணைத்து கொண்டு, நடக்கும் பெண், கும்பலாய் போகும் தைரியத்தில் பையன்களை கலாய்க்கும் பெண்கள்,  பைக்கில் போகும் பையன்களை வழிமறித்து நிறுத்தி, அவன் பின்னால் அசால்டாய் ஏறி உட்கார்ந்து செல்லும் ஜீன்ஸ், குர்தா பெண்,    சல்வார் துப்பட்டாவாய் இருந்தாலும், டி.ஷர்ட்டாய் இருந்தாலும் ,அடிக்கொரு முறை தன் மார்பை பார்த்து இழுத்துவிட்டு கொள்ளும் பெண்கள் என்று எங்கும் பெண்கள். பெண்கள்.. பெண்கள்.. முதலாளியாய் இருப்பதால் கொஞ்சம் நாசூக்காகத் தான்  பார்ப்பேன்.

ஆனால் என் ஆபீஸில் அக்கவுண்ட் செக்‌ஷன் க்ளார்க்காக இருக்கும் வெஙக்டேஷுக்கு அந்த கவலையெல்லாம் இல்லை. இந்த காலேஜ் வந்ததிலிருந்து, ஒரு நாள் கூட 10 மணி ஆபீஸுக்கு சரியான டைமில் வராதவன். இப்போதெல்லாம் சரியாய் எட்டரை மணிக்கு ஆபீஸ் வாசலில் வந்து நின்று விடுகிறான்  காலேஜுக்கு எதிர்தார் போல் இருக்கும்  பெட்டிக் கடையில் ஒரு சிகரெட்டையும், டீயையும் வைத்துக் கொண்டு தம் அடிப்பதை போல நின்று, நிதானமாய் பார்த்துவிட்டுதான் வருவான். திரும்பி வரும் போது தேன் குடித்த நரி போலிருப்பான். அவனுக்கு வயது வந்த ஒரு பெண் இருக்கிறாள்.

அன்றும் அப்படித்தான் அவன் வழக்கம் போல் வாசலில் தம் அடித்தபடி நிற்பதை பார்த்த நான் மனசுக்குள் சிரித்தபடி காரை பார்க்கிங் செய்தேன். அப்போது என் ஆபீஸில் வேலை பார்க்கும் இரண்டு பெண் ஊழியர்கள், வெங்கடேஷை கடை வாசலில்  நிற்பதை பார்த்துவிட்டு, ஒரு மாதிரியாய் சிரித்து கொண்டு, என்னை கிராஸ் செய்தப்டி,

“வெங்கடேஷ் சாரை பாரு என்ன சந்தோஷமா சைட் அடிச்சிட்டு இருக்காரு.. அவரு பாக்குற பொண்ணுங்க வயசில அவருக்கே ஒரு பொண்ணு இருக்குதே.. அந்த பொண்ணுங்கள பாத்தா தன் பொண்ணு நினைப்பு வராது..?” என்று பக்கத்திலிருந்தவளை பார்த்து கேட்க,

“அதெல்லாம் வராது ஜோஸ்னா, நமக்குத்தான் ஒரு பிள்ளைய பார்த்தா, நம்ம புள்ள மாதிரியிருக்கேன்னு தோணும், ஆனா ஆம்பளைக்கு தன் பொண்ணை தவிர எல்லா பொண்ணுங்களும் ‘பிகர்’தான்.” என்றாள்



நிதர்சன கதைகள் -9- Lemon Treeயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jul 26, 2009

மலையன் - திரைவிமர்சனம்

Shammu_Malayan_043

கரண் ஹீரோவாய் வெற்றி பெற்ற படஙக்ள் எல்லாம் வழக்கமான மசாலா படஙக்ளிலிருந்து விலகி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தததால் என்பதால் இந்த படமும் அதே போல் இருக்கும் என்று நினைத்து போயிருந்தால் கொஞ்சம் மட்டு என்று தான் சொல்லவேண்டும்

கந்தகபூமியான சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் முதலாளி சரத்பாபுவுக்கு எல்லாமாக் இருக்கும் கரண், அவருக்கு ஒன்றென்றால் துடித்து போய் விடுவார். அவர்களின் தொழில் எதிரிகளாக எம்.எஸ்.கே சன்ஸின் முதலாளிகளான சக்திகுமாரும், அவருட அப்பா ராஜன்.பி.தேவும். இவர்களுக்குள் நடக்கும் தொழில் போட்டி, பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிற்சாலை தொழிலாளிகளின் வாழ்க்கை, சரத்பாபுவின் பாக்டரியில் நடக்கும் விபத்தில் தன் காதலி உட்பட தன்னுடன் வேலை செய்த தோழர்களையும் இழந்து தவிக்கும் கரணுக்கு, நடந்தது விபத்தல்ல என்ற உண்மையை கண்டுபிடிக்கிறான். அதனால் ஏற்படும் திருப்பம் தான் க்ளைமாக்ஸ்..
Shammu_Malayan_048

படம் முழுக்க கரண் தன்னுடய ஆளுமையை விரவியிருக்கிறார். தன் முதலாளிக்கு ஒன்று என்றால் துடிக்கிற துடிப்பும், துள்ளுகிற ஆவேசமும், அலையும் கரண், கதாநாயகி ஷம்மு ஒரு அதட்டல் விட்டதும் பவர் இறங்கிய டூராசெல் பேட்டரி ஆட் போல் இறங்கி போவதும்,  க்ளைமாக்ஸ் காட்சிகளில் நொந்து போய் கோபத்துடன் வில்லன்களின் கழுத்தை நெருக்கியபடி அவர் பேசும் வசனக்காட்சிகளிலும் என்று கரண் மின்னுகிறார். என்ன விழலுக்கு இழைத்த நீர் என்று தான் சொல்ல வேண்டும்.malayan1

கதாநாயகி ஷம்மு, , வழக்கமாய் லூசாய் வரும் ஹீரோயினாக இல்லாமல்,  பரபரவென இளமை துள்ளும் நாயகியாக வலம் வருகிறார். பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் இவரின் உதடுகள் ..ம்.. இவர் வரும் காட்சிகள் லேசான சாரல் காற்றுதான். ஒரு ஆண் போல திரியும் இவரின் பாடிலாங்குவேஜை வைத்து இவர்  நடித்ததை விட இவருக்கு டப்பிங் கொடுத்த்வரை பாராட்ட வேண்டும், என்ன தான் பாடி லேங்குவேஜில் சரி பண்ணியிருந்தாலும் முகத்தில் அந்த தெனாவெட்டு, குறையும் நேரத்தில் எல்லாம் பிண்ணனி குரல் நாயகி பின்னுகிறார்.
shammu_stills_006

கஞ்சா கருப்பு தனியாளாய் இந்த படத்திலும் செல்ஃப் எடுக்கவில்லை. மயில் சாமி மனுச்ன் இந்த படத்திலும் பின்னுகிறார். இவருக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தில் செகண்ட் ஆஃபில்  உதயதாரா வருகிறார். ஒரு பாட்டு பாடுகிறார். இவர் எதற்கு என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.

தினாவின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம்.எஸ்.பி. வெங்கடேஷின் பிண்ணனி இசை விக்ரமன் பட எஸ்.ஏ.ராஜ்குமாரை நினைவூட்டுகிறது.

இயக்குனர் கோபி.. காதல் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். இருவருக்கும் காதல் வருவதை ஒரு பாடலின் இடையே அவர்களுடய மைண்ட் வாய்ஸையே பாட்டாய் அமைத்து, காதலை சொல்லிவிடுவது நைஸ்.  எதையோ பெரிசாய் சொல்வதாய்  வந்து பொசுக்கு, பொசுக்குனு விழுந்துவிடுகிற திரைக்கதை மிகப்பெரிய பலவீனம், ஹீரோவை தூக்கி வைக்க வேண்டும் என்பதற்காக, தேவையில்லாத தம்பி கேரக்டர், அம்மா செண்டிமெண்ட், ஊர் செண்டிமெண்ட், பிறகு சமீபகால தமிழ் சினிமா வியாதியான திருவிழா, போதை, குத்துபாட்டு, என்று வழக்கமான காட்சிகள்.  பல காட்சிகள் படத்தை சும்மா நகர்த்தவே பயன்படுகிறது. படம் விட்டு வரும் போது காதல் காட்சிகள் மட்டுமே நினைவில் நிற்கிறது.

மலையன் – மணல் மலை.


டிஸ்கி:

பதிவர் வண்ணத்துபூச்சியார், அவரின் துணைவியார் அவர்களும், கிழக்கு பதிப்பகம், ஹலோ எப்.எம்மும் இணைந்து வ்ழங்கும் கிழக்கு பாட்காஸ்ட் என்கிற நிகழ்ச்சியில் பங்கு சந்தை பற்றி “அள்ள அள்ள பணம் ஆசிரியர் சோம.வள்ளியப்பன், பத்ரி ஆகியோருடன் கலந்துரையாடியிருக்கிறார்.  இந்நிகழ்ச்சி இன்று ஞாயிறு மதியம் 12.00 மணி முதல் 1.00 மனி வரை ஹலோ எஃப்.எம்மில் கேட்டு மகிழுங்கள்.

வண்ணத்துபூச்சியாருக்கு வாழ்த்துக்கள்.



மோதி விளையாடு திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்..

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jul 25, 2009

மோதி விளையாடு - திரைவிமர்சனம்

Mothivilayadu

இந்தியாவின் மிகப்பெரிய பிஸினெஸ் டைக்கூனின் மகன் அவரது மகனில்லை, அவனுடன் இருக்கும் இன்னொரு இளைஞன் தான் அவரது மகன். எங்கே தன் எதிரிகளால் தன் மகனுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்பதற்காக, பினாமியாய் ஒரு மகனை குழந்தை முதல் வளர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் வில்லன்கள் அவரது மகனை கொல்ல முற்படும் போது ஒரிஜினல் மகன் இறக்கிறான். ஒரே நாளில் பினாமி மகனின் வாழ்க்கை நடுத்தெருவில். அவனை கொல்ல ஒரு பக்கம் எதிரிகள் அனுப்ப்பிய ஆள், இன்னொரு பக்கம் அவன் கொல்லப்படும் நாளை எதிர்பார்க்கும் பிஸினெஸ்மேன். அவன் எவ்வாறு  அந்த மாமலை பிஸினெஸ்மேனுடன் மோதி மீண்டான்? என்பதை சுறுசுறுப்பாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் சரண்.
modhi-vilaiyattu-3

வினய் அந்த கோடீஸ்வர மகனின் கேரக்டருக்கு ஆப்டாய் இருக்கிறார். என்ன  நடிப்பு எழவுதான்  வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது.  சொந்த குரலாய் இருந்தால் முயற்சிக்கு பாராட்டலாம். இனிமேல் தொடந்து பேச வேண்டாம். இந்த ஒரு படமே போதும்.
 
காஜல் அகர்வாலிடம் துளளல் இருக்கிறது. இளைமையாய் இருக்கிறார். ஆடுகிறார், பாடுகிறார். கொஞ்சம் ஜோதிகா போல எக்ஸ்ட்ரா எக்ஸ்பிரஷன் கொடுக்கிறார். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லைmodhi_vilayadu_stills_019.

சந்தானம் அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டுகிறார். தூள் கிளப்புவர் மயில்சாமிதான். என்ன ரியாக்‌ஷன்கள் மனுசன் பின்னியெடுக்கிறார். பந்தா பணக்காரராய் நடிக்கும் வி.எம்.சி. ஹனிபா தன் முத்திரையை பதிக்கிறார்.

லெஸ்லி- ஹரிஹரன் கூட்டணியில் இரண்டு பாடல்கள் இதம் அதிலும் அந்த பாதி முத்தம் சூப்பர். மோதி விளையாடு பாடலில் இவர்களுடன் தேவாவும் நடித்து பாடியுள்ளார்.

கருணின் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாய் அந்த பீச் காட்சிகளிலும், பணக்கார வினயாய் இருக்கும் போது ஒளிபதிவில் இருக்கும் ரிச்னசும், அநே நடு ரோடுக்கு வந்தபின் இருக்கும் லைட்டிங்கும் அருமை. அதே போல் முதல் பாதி எடிட்டரின் இளமை துள்ளலான எடிட்டிங

சுமார் மூன்று வருடஙக்ளுக்கு பிறகு வந்திருக்கும் சரணின் படம். வழக்கமாய் திரைக்கதையில் எக்ஸ்பிரஸ் வேகம் வைக்கும் இவர் இந்த முறை அதை கோட்டைவிட்டிருக்கிறார்.

எங்கிருந்தய்யா பிடித்திருக்கிறார்கள், இவ்வள்வு அழகான லொக்கேஷனை, ஒவ்வொரு ப்ரேமிலும்  பணக்கார களை தெரிகிறது. அதே நேரத்தில் வினய் நடுத்தெருவுக்கு வ்ந்தபின் வரும் லொக்கேஷனும் அதன் பேக்ரவுண்டும் அருமை.
modhi_vilayadu_stills_010

முதல் பாதி காரை டேமேஜ் செய்ததற்காக காஜலை, வினயின் வேலைக்காரியாக்குவது, ஒவ்வொரு வேலைக்கும் அமெள்ண்ட் கழிப்பது என்று ஒரே ஜாலிலோ ஜிம்கானாதான்.  ஆனால் முக்கியமான் இரண்டாவது பாகத்தில் சரண் படமா இது என்று ஆச்சர்யபட வைக்கிறார் மோசமான திரைகதையினால்..  அவ்வளவு லாஜிக் இல்லாத காட்சிகள்,  இந்தியாவின் அம்பானி போன்ற ஒருவனை ஒரே நாளில் ஒருவன் நடுத்தெருவுக்கு கொண்டு வர முடியுமா.? வந்திருக்கிறார்கள். ஒரே கற்பனை வரட்சி. படத்தை முடிக்க வேண்டும் என்கிற அவசரம் படத்தில் தெரிகிறது. தன் உயிரை,தன் பொஷிசனை காப்பாற்றி கொள்ள, ஒரு மகா பிஸினெஸ் மேனுடன் மோத வேண்டுமென்றால் எவ்வளவு கடுமையான போராட்டமாய் இருக்கவேண்டும். இருவருக்கு ஏதோ லாலிபாப் கொடுக்கல் வாங்கல் போன்று டீல் செய்திருப்பது கொடுமை.

மோதி விளையாடு – saran Lost his touch



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jul 23, 2009

Aa Dinagalu –(2007)

  aa dinagalu 3
இளையராஜாவின் இசையில், வேணுவின் ஒளிப்பதிவில், கிரிஷ் கர்னாட்டின் திரைக்கதையில்,பெங்களூரில் நடந்த இரண்டு தாதாக்களுக்கிடையே ஆன சண்டையை மிக இயல்பாக, ஊடே ஒரு காதல் கதையையும் கொடுத்து , ஒரு இடத்தில் கூட ரத்தம் சிந்தாமல் மிரட்டியிருக்கிறார்கள்.  இந்த ஆதினகளு டீன் என்றால் மிகையாகாது.

அக்னி ஸ்ரீதரின் நண்பன் சேத்தன் ஒரு பெண்ணை காதலிக்க, அதை தடுக்க அவனின் அப்பா பெங்களூரின் பெரிய டானான கொத்தவால் ராமசந்திராவின் உதவியியை நாடியிருக்க,  கொத்தவால் சேத்தனையும், அவனின் காதலியையும் மிரட்ட,  வேறு வழியில்லாமல் அவனுக்கு எதிரியான இன்னொரு டான் ஆன ஜெயராஜிடம் அடைக்கலமாகிறார்கள்.

ஒரு பக்கம் கொத்தவாலின் சாம்ராஜ்யத்தை ஒழிக்க துடிக்கும் ஜெயராஜ்,  கொத்தவாலுக்கு உதவியாய் இருப்பது மாதிரியான நடவடிக்கைகளுடன்,  அவனை பழிவாங்க கொல்ல துடிக்கும் அதுல் குல்கர்னியும், அவனைது நண்பர்களும்.aa dinagalu 10

கொத்தவால் உயிருடன் இருந்தால் தன் காதல் ஜெயிக்காது என்பதால், ஜெயராஜ், அதுலுடன் சேர்ந்து கொஞ்சம், கொஞ்சம் சேத்தனும் கிரிமினலாகுவது என்று மிக இயல்பான திரைக்கதையும், அளவான வசனங்களுடன் .  ஒரு காட்சியில் கூட மிகப்பெரிய வன்முறையோ, ரத்தகளரியோ இல்லாமல், கேமரா கோணங்களிலும், பிண்ணனி இசையிலும், பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்
aa dinagalu 2
அதுல அக்னிஹோத்திரி, ஆஷிஷ்வித்யார்தி, புதுமுகம் சேத்தன், அர்சனா, ஷரத் ஆகியோரின் நடிப்பு மிகையில்லாத கேரக்டர் உணர்ந்த சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
 aa dinagalu 6

இளையராஜாவின் பிண்ணனி இசை அருமை என்று சொல்வது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல். ஷிகிகாலி என்கிற பாடலை அவரே பாடியிருக்கிறார் அருமையான மெலடி. அதே போல் கேமராமேன் வேணுவின் ஒளிப்பதிவு,  சடசடவென மாறும் எடிட்டிங் இல்லாமல் அருமையான கேமரா கோணங்கள் மற்றும் லைட்டிங்கிலும் நான் இருக்கிறேன் என்கிறார்.

aa dinagalu 7

கிரிஷ் கர்னாட்டின் திரைக்கதை எங்கும் தொய்யாமல் பரபரப்பான காட்சிகளோடு பறக்கிறது. இயக்குனர் சைதன்யாவை இவ்வளவு அருமையான படத்தை கொடுத்ததற்காக பாராட்டியே ஆகவேண்டும்.

டிஸ்கி
கன்னடத்தில் இவ்வளவு குவாலிட்டியான படம் பார்த்து வருஷங்களாகிவிட்டது.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jul 21, 2009

ரசிகர்கள் ”விரும்பும்” தமிழ் சினிமாவின் பத்து.

1. படம் வெளியாகுறதுக்கு முந்தி விகடன்ல, வித்யாசமான ஒரு தமிழ் சினிமாவ கொடுக்க முயற்சி செஞ்சிருக்கோம்னு அந்த டைரக்டர் சொல்வாரே அது பிடிக்கும்

2. படம் ரிலீஸாகி பத்து நாள்ல உலக தொலைகாட்சியில் முதல் முறையா சூப்பர் ஹிட் படம்னு வந்ததும், வேற பேட்டியில புரொடியூசர் சரியா சப்போர்ட் பண்ணலன்னு டைரக்டரும், டைரக்டர் சரியா சப்போர்ட் பண்ணலைன்னு புரொடியூசரும் பேட்டி கொடுப்பாங்களே அது பிடிக்கும்

3. மல்லாக்க படுத்து யோசிச்சாவது விஷாலுக்கோ, விஜய்க்கோ, ஒரு கேனத்தனமான ஓப்பனிங் சீனை பிடிச்சு அதை வச்சி பில்டப் செஞ்சி கால்ஷீட் வாங்கிட்டு,  படத்துல பாக்கயில காரி துப்புற மாதிரி வர்ற ஓப்பனிங் சீன் இருக்கு பாருங்க அது பிடிக்கும்

4. படத்தில விதவையோ, அல்லது கல்யாணமான பொண்ணை ஹீரோ லவ் பண்ணுறாருன்னா அவளோட புருஷன் ஃப்ர்ஸ்ட் நைட்டுக்கு, முந்தி ஆக்ஸிடெண்டுலேயோ, பாம்பு கடிச்சோ, இல்லாட்டி தும்மியாச்சும், இப்படி ஏதாச்சும் ஒரு காரணம் சொல்லி சாகடிச்சு, கதாநாயகி கற்பை, ஹீரோவுக்காக காப்பாத்திறீங்க பாருங்க அது ரொம்ப பிடிக்கும்

5. என்னதான் சொதப்பல் படம் எடுத்தாலும், இந்த சன் டிவி அவங்க படம் தான் ஊர் உலகத்தில நல்ல ஓடுற மாதிரி அஞ்சு நிமிசத்துக்கு ஒருக்கா மிரட்டறதும், விகடனும் தன் பங்குக்கு, நல்ல படத்துக்கெல்லாம் 40 மார்கு க்கொடுத்துட்டு, அவஙக் மொக்கை படத்துக்கு 45 கொடுப்பது பிடிக்கும்

6. எல்லா படத்திலேயும் ஹீரோயின், மொக்கை ஹீரோவை லவ் பண்ணவேண்டிய கட்டாயத்தில இருக்கிறதால, முழு லூசாவே காட்டுறது பிடிக்கும்.

7. பெரிய பட்ஜெட் படம்னா கடைசி பத்து நிமிஷம், ஏகே47, டாங்கி, புல்டோசர்னு இந்திய ராணுவமே பாக்காத தளவாடஙக்ளை  வச்சு ரத்தகளரியா ஒரு பைட் சீன் காட்டூவீங்க பாருங்க அது பிடிக்கும்

8. என்ன தான் விஜய், அஜித் போன்றவர்களின் படங்கள் சொதப்பினாலும், அடுத்த படம் வரும் போது, அவங்க டீவியில், ரோடியோல, பேப்பர்லன்னு சமூக சேவை, அரசியல்னு ரஜினிய பாலோ பண்ணி பேட்டி கொடுக்கிறது பிடிக்கும்

9. இப்படி அசராம நீஙக்ளும் படமெடுத்திட்டிருக்க,’கே’ல ஆரம்பிச்சு “ர்”ல முடியற பெயருள்ள ஒருத்தர் அசராம தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, ப்ரெஞ்சு, இடாலி, கொரியா, இங்கிலிசு,ன்னு உலக மொழியில வர்ற படத்தையெல்லாம் பார்த்து விமர்சனம் எழுதற் அவரை பிடிக்கும். (பாவம் சீக்கிரம் அவருக்கு பைத்தியம் பிடிக்காம இருந்தா சரி)

10. இப்படி பிடிக்குற விஷயஙக்ள் நிறைய இருந்தாலும், இன்னும் நல்ல சினிமா வரும்ங்கிற நம்பிக்கையில படம் பாத்துட்டு இருக்கிற் நம்மளை போல ரசிகர்களை ரொம்பவே பிடிக்கும்.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

அச்சமுண்டு..அச்சமுண்டு – திரைவிமர்ச்னம்

 Achchamundu-Achchamundu04

அருண் வைத்யநாதன் என்கிற அமெரிக்க வாழ் தமிழர் இயக்கத்தில் முழுவதும் அமெரிக்காவிலேயே படமாக்கப்பட்டு வ்ந்திருக்கும் படம்.

ப்ரசன்னாவும், சிநேகாவும் தங்கள் ஒரே பெண் குழந்தையுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். புதிதாய் குடியேறிய வீட்டில் பெயிண்ட் அடிக்க வரும் வெள்ளைக்காரனால்  அவர்களின் பெண் குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையை தான் படம் சொல்கிறது.

Achchamundu-Achchamundu09

ப்ரசன்னாவும், சிநேகாவும் அந்நியோன்யன் என்றால் அவ்வள்வு அந்நியோன்யம் அவர்களூக்குள் ஏற்படும், காதலாகட்டும், ஸ்மூச்சிங்காகட்டும்,  கோபமாகட்டும், ஊடலாகட்டும்.. வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

வில்லனாக வரும் ஜான் சீ யின் நடிப்பு கச்சிதம்.

Achchamundu-Achchamundu06

படத்திற்கு முக்கிய பலமே ஒளிப்பதிவாளரும், இசையமைபபாள்ர் கார்த்திக் ராவும் தான். பிண்ணனி இசையில் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார்.  செளம்யாவின் குரலில் வரும் நித்ரா பாடல் நெகிழ்வு.

Achchamundu-Achchamundu05

இயக்குனர் மிக குறைந்த ஆர்டிஸ்டுகளை வைத்து கோடு போட்டது போன்ற் ஒரு திரைக்கதையுடன் படத்தை எடுத்துள்ளார். ஆனால் படு ஸ்லோ..  என்னதான் காட்சிகளில் நடிகர்கள் நன்றாக நடித்தாலும், எவ்வளவு நேரம் தான் பார்பது. அந்த பெயிண்டர் வரும் காட்சிகளில் கொஞ்சம் வேகம் எடுத்தாலும். அதுவும் பொத் பொத் என்று விழுந்து விடுகிறது. கடைசி பத்து நிமிடங்களின் பரபரப்புக்காக முதல் ஒன்னரை மணி நேரம் மெதுவாக செல்வது முடியவில்லை. என்ன தான் அமெரிக்காவில் வாழ்ந்தாலும், சாமி கும்பிடுவதையும், கிரிக்கெட் விளையாடுவதையும்,  தன் வழக்கங்களை மாற்ற முடியாமல் அங்கேயும், இல்லாமல் இங்கேயும் இல்லாமல் இரண்டுங்கெட்டான் நிலையில் வாழ்வதை நன்றாக காட்டியிருக்கிறார்.  வில்லனின் உள்ள வேட்கையை அவனின் உடற்பயிற்சி மூலமே காட்டி அவனின் உணார்வை வெளிபடுத்தியிருப்பதை பாராட்ட வேண்டும்.உலகம் முழுவது நடக்கும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறை பற்றிய படத்தில் கொஞ்சம் கூட ஆபாசம் இல்லாமல் தந்திருப்பது பாராட்டுகுற்யது.

அச்சமுண்டு. அச்சமுண்டு -  ஸ்லோ

Jul 19, 2009

வெடிகுண்டு முருகேசன் - திரைவிமர்சனம்

Vedigundu-Murugesan-3

வெடிகுண்டு முருகேசன் என்றதும் ஏதோ ஒரு பெரிய ஆக்‌ஷன் படமாய் இருக்கவேண்டும், அல்லாது படு காமெடியான படமாய் இருக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் நம் மனதில் வருகிறது அல்லவா.. அதிலும் படத்தின் விளம்பரஙக்ள், செய்திகள் எல்லாவற்றிலும், பசுபதியின் காமெடி, வடிவேலுவின் காமெடியைவிட நன்றாக வந்திருப்பதால் டப்பிங் பேச மறுத்ததாக வந்த செய்திகள் வேறு நம்மை உசுப்பேத்தியிருக்க,

முழுக்க, காமெடி படமாவும் இல்லாம, சீரியஸ் படமாவும் இல்லாம ஒரே கொழப்படிச்சிருக்காங்க..பாவம் பசுபதி கருப்பா, பிக்பாக்கெட் கணக்கா இருக்கிறதினாலேயே.. அவரை பார்த்தா இந்த மாதிரி இத்து போனவன், நொந்து போனவன், என்கிற மாதிரி கேரக்டர்களையே தேடி போய் கொடுக்கிறார்கள். அவரும் பாவம் ரொம்ப கொழம்பி போய் தான் நடிச்சிருக்கிறாரு..  ஜோதிர்மயி வேற பாவம்.. அவங்களும் காமெடி பண்ணுறேன்னு நம்மை போட்டு பின்னி எடுக்குறாங்க.
vedikundu_murukesan2

வடிவேலு சார்.. சீக்கிரம் நீங்களும் கொஞ்சமாவது புதுசா யோசிக்க வேற ட்ராக் ஆளை பிடிங்க. ஜனங்க இப்ப லேசா சிரிக்கிறதே உங்கள ஸ்கிரின்ல பார்த்தவுடனே சிரிச்சு பழகினதுனாலதான். அம்புட்டுதான் சொல்லிபுட்டேன்.

இயக்குனர் ஒரு முழுநீள காமெடி படம் எடுக்கத்தான் முயற்சி செய்திருக்கிறார் என்பது அவரது வசனங்களில் தெரிகிறது. படத்தில் வருகிறா வில்லன் கேரக்டர் எல்லாம் சீரியஸ் காமெடியன்களாக சித்தரித்திருப்பது படு வீக்காக இருப்பது எல்லாமே மொக்கையினா மொக்கை அப்படி ஒரு மொக்கை. ஆனா படத்துலதான் செல்ப் எடுக்கல. தேங்க்யூ(வேலைக்காகவில்லை) ஆயிருச்சு

பாலபரணியின் ஒளீப்பதிவு பற்றி ஸ்பெஷலாய் ஒன்றும் சொல்வதற்கில்லை.. இசையும் ஓகேதான்

வெடிகுண்டு முருகேசன் – புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

டிஸ்கி
பெங்களூரிலிருந்து பதிவர் ஒருவர் போன் செய்து வெடிகுண்டு முருகேசன் படத்துக்கு அவரின் நண்பர்கள் டிக்கெட் வாங்கி வைத்து கொண்டு அழைப்பதாகவும். போகலாமா.. வேண்டாமா.. என்று கேட்டார். வேறு வேலை ஏதுவும் இல்லையென்றால் போகவும் என்றேன். ஒரு ஒன்னறை மணி நேரம் கழித்து போன் செய்தார்.. பாதி படத்திலேயே  எல்லோரும் வந்துவிட்டதாக..



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jul 18, 2009

வைகை - திரைவிமர்சனம்

vaigai-stills02

புதிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் சிறிய முதலீட்டு படங்களை, தேடி சென்று படம் பார்ப்பேன். 90% சொதப்பியிருப்பார்க்ள். இயக்குனரோ, அல்லது நடித்த நடிகர், நடிகைகளோ.. மேலும் சொதப்பி ஏண்டா பார்த்தோம்னு ஆக்கிருவாங்க..  இதே எதிர்பார்போடு போன இந்த படம் ஒரு அழகான ஆச்சர்யம்.

வழக்கமான் கிராமத்து பெரிய மனுஷன் பையன், எதிர்வீட்டு தபால்காரர் பொண்ணு, அப்பா சாப்டான ஆனா ஆளையே போட்டு தள்ளுற வில்லன். தன் காதல் விஷயம் தெரிஞ்சு தன் காதலியை போட்டு தள்ளிருவாரோன்னு பயந்து அவளை கூட்டிட்டி ஓடி போய், இரண்டு பேரும் விஷம் குடிச்சிட்டு, ஒருத்தர் சாவை இன்னொருத்தர் பார்க்க கூடாதுன்னு, எதிர், எதிர் ரயிலில் போய் விடுகிறார்கள். ஹீரோவின் ஆட்கள் அவரை ஆபத்தான கட்டத்தில் காப்பாற்றிவிட.. ஹிரோயினுக்கு என்ன ஆச்சு? அதற்கப்புறமான கதையை இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்கிறார்கள்.
13

பாலா +2 பைல் ஆகி ஊரை சுற்றி திரியும் வளரும் இளைஞன். விசாகா ,பாலா இருவருக்குமான காதல் காட்சிகள் புதுசாய் இல்லாவிட்டாலும், போரடிக்கவில்லை. என்ன ரஜினிகாந்த படத்தில் அவரை இளமையாய் காட்ட அவரை விட “இளமையான” ஆட்களை அவர் நண்பர்களாய் வருவதை போல், கொஞ்சம் பெரிய ஆள், சின்ன பையன் போன்ற ஒருவன் என்று அவர்கள் கூடயே திரிவது, கிராமத்து திருவிழா, அதில் வரும் பாட்டு என்று வழக்கமான சேம் ப்ளட்.

பாலா காதல் காட்சிகளில் இயல்பாய் இருக்கிறார். அழும் காட்சியில் அவரை பார்த்து நமக்கு அழுகை வருகிறது. அவரின் நடிப்பை பார்த்து. Long way to Go..

விசாகா.. கொஞ்சம் முத்தின முகமாய் இருந்தாலும், க்ளைமாக்ஸ் காட்சிகளில் ஸ்கோர் செய்துவிடுகிறார். தலைவாசல் விஜய் வழக்கம் போல் ஒரு படத்தில் நடிக்க சொன்னால் இரண்டு படத்துக்கு நடித்திருக்கிறார். அப்பாவாக வரும் மளையாள நடிகர் ஒகே.
vaigai-hot-song-shoot9

சபேஷ் முரளியின் இசையில் இரண்டு பாடல்கள் ஒகே ரகம். ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடலை ரீமிக்ஸ் செய்யாமல் அப்படியே யூஸ் செய்திருக்கிறார்கள். பாடல் காட்சியையும் கிட்டத்தட்ட அப்படியே சூட் செய்திருக்கிறார்கள். பேசாமல் அந்த பாடலின் காட்சியையே போட்டிருக்க்லாம்.

இயக்குனர் சுந்திரபாண்டிக்கு முதல் படம். நிச்சயமாய் ஒரு இயல்பான காதல் கதையை  சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறார். பல் இடங்களில் மதுரைக்கார குசும்பு வசனங்கள் எட்டி பார்க்கிறா இடங்க்ளில் ஏனே தெரியவில்லை மக்களிடம் எடுபடவில்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு சின்ன ‘lump” நம் தொண்டையில் நிற்பது நிஜம். அதற்காக தமிழ்லில் ஒரு உலக்சினிமா என்று விளம்பரபடுத்துவதெல்லாம் கொஞ்சம் ஓவர்ங்க…

வைகை-  ஓடும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jul 17, 2009

அழுகை


அழுகை.. மனிதனின் உணர்வு பூர்வமான ஒரு வெளிப்பாடு. சந்தோஷமோ.. துக்கமோ.. உச்சக்கட்டம் அழுகை.. சந்தோஷத்தில் கூட ஆனந்த கண்ணீர் வரும்.. அதுவும் கண்ணீர்தான்.

செத்த வீட்டில் அழுகிறவர்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடய உறவின் நெருக்கத்தை, இழப்பின் சோகத்தை, எதிர்கால கவலைகளை அவர்கள் அழும் நிலையை முன்னிருத்தி தங்களுக்கும், இறந்த நபரிடம் உள்ள ஆழமான உறவை அவர்களின் அழுகை வெளிப்படுத்தும். இதற்கு பல போட்டிகள் வேறு நடக்கும்.

இறந்தவரின் மனைவியோ, கணவரோ.. உடலின் மீது விழுந்து அழுவது, ஒரு வகை. அப்படி அழுதவரை மிஞ்ச அந்த நபரின் தங்கையோ, தம்பியோ.. போட்டிக்கு இறந்தவரின் மீது விழுந்து அழுவதும் உண்டு, சமயத்தில் இறந்தவர் ஆணாயிருந்து அவர் எங்கேயாவது செட்டப் செய்திருந்தால், அந்த பெண்மணி சந்தடி சாக்கில் இது போல் செய்து தனக்கும், இறந்தவருக்கு உள்ள உரிமையை நிலைநிறுத்த முயற்சிப்பவர்களும் உண்டு.

பார்த்தவுடன் மடேர்..ம்டேரென்று மார்பிலடித்து எங்கே அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயத்தை ஏற்படுத்தும்படி அழுபவர்கள் உண்டு. இவர்களின் அழுகை முக்கியமாய் உள்ளே நுழைந்து ஒரு பத்து நிமிடங்களுக்கும், உடலை எடுக்க போகும் முன்பும் தான் வெளிப்படுத்துகிறார்கள். இது ஒரு விதமான டிராயிங் அட்டென்ஷன் விஷயம்.

சிலருக்கு வெளியே இருக்கும் வரை ஒன்றுமில்லாமல், உள்ளே நுழைந்தவுடன் அங்கிருக்கும் நிலைமையை பார்த்து துணுக்கென்று கண்களில் கண்ணீர் விடும் கேரக்டர்கள். இவர்கள் ஒரு நிமிடத்துக்கு மேல் அங்கிருக்க மாட்டார்கள் எஸ்கேப்பாகிவிடுவார்கள்.

நெருங்கிய் உறவுகள்,மகள், மகன், மனைவி, போன்றவர்கள் ரொம்பவும் ஆற்றாமையில் ‘ எழுந்திருங்க.. எழுந்திருங்க.. நான் உங்க் .. வந்திருக்கேன்.. எழுந்து பாருங்க..’ என்று அஞ்சலி பாப்பா ரேஞ்சுக்கு, அழுபவர்களூம் இருக்கிறார்கள். இவர்களை பார்த்து, இன்னும் சில நெருங்கியவர்கள், வெட்கத்தை விட்டு அம்மாதிரி கத்தி அழ தெரியாமல், பக்கத்தில் நின்றபடி சத்தமில்லாமல் முணுமுணுப்பவர்களும் உண்டு.

சில வயதான பாட்டிகள் எல்லோரும் பார்க்க வேண்டுமென்பதற்காகவே ஊரே ரெண்டு படும்படி அழுவார்கள். அதிலும் முக்கியமாய் நெருக்கமானவர்கள் வெளியே இருந்தால் உள்ளே அழைத்து வந்து ‘வாடா.. நான் அழப்போறேன் என்று சொல்லிவிட்டு அழுவார்கள்.
சிலர் ஒரு பாட்டம் அழுதுவிட்டு, வெளியே போய் நெடுநாள் கழித்து பார்த்த உறவினர்களிடம் பேசிவிட்டு, ஒரு வாய் காபியை உள்ளுக்குள் இறக்கி,சரியான் இண்டர்வெலில் திரும்பவும் உள்ளே போய், அழுபவர்களும் உண்டு.

இம்மாதிரியான சமயங்களில் ஒரு சிலர் மட்டும் ரொம்பவும் தீவிரமாய் காப்பி கொடுப்பதிலும், அவனைபார்.. இவனை பார்.. வண்டி வந்திடுச்சா என்று குரல் மட்டும் எழுப்பி கொண்டு தன்னை முன்னிலை படுத்தி கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏவலில் காரியம் நடப்பதாய் எண்ணம். இல்லாவிட்டால் உள்ளே இருப்பவர் எப்படி இறந்தார் என்று உரத்த குரலில் நேரிலிருந்து பார்த்த தினத்தந்தி நிருபர் போல் விவரித்து கொண்டிருப்பார்.

ஒரு சிலர் பாடி வரும் வரை காத்திருக்க முடியாமல் எதிர்பக்கம், உள்ள டிபன் கடைகளில் டீ, காபி,தம் என்று ஒதுங்கியபடி நின்றிருப்பார்கள். வந்தவர்களில் பல பேர் சுடுகாடுவரை வருவதில்லை.

துக்கத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்.. இந்த மாதிரி சமயங்களில் அழுவதே இல்லை.

இறந்தவரின் உடலுக்கு கொள்ளி வைக்கபடும்போது அடிவயிற்றிலிருந்து துக்கம் பீறிட, இந்நாள் வரை அவருடனான சந்தோஷம், சண்டை, துக்கம், பொறாமை, எல்லாம் நிமிட நேரத்தில் மனதில் ஓட, உள்ளிருந்து ஒரு பெரிய அலறல் வெடிக்க.. அழுகை..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jul 15, 2009

Evaraina Eppudaina.. Telugu Film Review

 Evaraina-Eppudaina-300509036
ஏவிஎம் ரொம்ப நாளுக்குபிறகு தெலுங்கில் டைரக்டாய் தயாரித்திருக்கும் படம். இதற்கு முன்னால் தெலுங்கு டப்பிங்கில் அயன் வெளியானது. சரியாக போகவில்லை.

வெங்கட் ஒரு துறுதுறுப்பான இளைஞன், அண்ணன் அண்ணியுடன் இருக்கும் அவன், பார்த்த முதல் பார்வையிலேயே மதுமிதாவை காதலிக்க ஆரம்பிக்கிறான். இவன் செய்த ஒரு விஷயதால் இருவரது பாட்டியும் விபத்துக்குள்ளாகி ஒரே ஆஸ்பத்திரியில், ஒரே அறையில் இருக்க அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மதுவுடன் நெருங்குகிறான். வெங்கடின் தவறால் மதுவின் அக்காவின் திருமணம் நின்று போகிறது. அதை மீண்டும் நடத்தி வைத்து எவ்வாறு மதுவின் காதலை பெறுகிறான் என்பதை கமர்சியலாய் சொல்லியிருக்கிறார்கள்.
Evaraina-Epudaina-291208011

வெங்கட்டாக “ஹாப்பிடேஸ்” வருண்.. ஒரு ஹீரோவுக்கான அத்தனை விஷயங்களையும் இந்த படத்தில் செய்திருக்கிறார். பாடுகிறார், ஆடுகிறார், சண்டையிடுகிறார். லவ் செய்கிறார்…. காமெடி செய்கிறார். ஒகே அடுத்த தலைமுறை ஹீரோ தயாராகி வருகிறார் என்றே சொல்ல வேண்டும்
Evaraina-Eppudaina-300509012

மதுமிதவாக விமலா ராமன்.. வருணோடு பார்பதற்கு அக்கா மாதிரியிருக்கிறார். ப்ரொபைலில் அழகாய் இருக்கிறார்.  காமெடிக்கு வேணுமாதவ், ஆலி.. ஓகே.

வேணுகோபாலின் ஒளிப்பதிவு கச்சிதம். மணிசர்மாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். மார்தாண்ட் கே.வெங்கடேஷின் எடிட்டிங் இரண்டாவதுபாதியில் இன்னமும் உபயோகபடுத்தியிருக்கலாம். தன் தம்பி படம் என்று விட்டுட்டாரோ..
Evaraina-Eppudaina-300509009

மார்த்தாண்ட் சஙக்ரின் டைரக்‌ஷன் ஓகே ரகம்.  பழைய சிரஞ்சீவி, வெங்கடேஷ் படஙக்லையெல்லாம் ஒரு மாதிரி கூட்டு பண்ணியிருக்கிறார். செகண்ட் ஹாப்.. ரொம்பவே படுத்துது.

Everaina Eppudaina….- பார்க்கலாம்.


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jul 14, 2009

இந்திரவிழா – திரைவிமர்ச்னம்

 indhravizha
கமல், ரஜினி, அஜித், விஜய் ஆகியோரை நம்பி படமெடுக்கலாம் ஒப்பனிங் நிச்சயம் அதே போல ஒரு ஹீரோயினையும் நம்பி படமெடுக்க முடியுமா  என்று கேட்டால் அதுக்கு பதில் நமிதா என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் கமலா தியேட்டரில் இருந்த 300 பேர் நமிதா ஒருவருக்காகத்தான் வந்திருந்தார்கள். ஒரே விசில் தான்.
namitha_indra_vizha9

டெமிமூர், மைக்கேல் டக்ளஸ் நடித்து மிகப்பெரிய ஹிட்டான “Disclosure” என்கிற படத்தை ஹிந்தியில் 2004ல் “Aitraaz” என்று எடுத்தார்கள். அதைதான் இப்போது தமிழ் படுத்தியிருக்கிறார்கள். படத்தின் முக்கிய மான லைனே.. ஒரு பெண், தன்னை கற்பழிக்க முயன்றதாக வழக்கு தொடரும் ஹீரோ. என்பதுதான்.
indra-vizha-1

டெமிமூருக்கு ஈக்குவலாய் நமிதாவை தவிர வேறு யாரையும் நினைக்கு வ்ரமாட்டேன் என்கிறது.  சரியான செலக்‌ஷன்.  படம் முழுக்க நினைந்தபடியே வந்து நம்மை சூடாக்குகிறார். படத்தில் அவரது ஒவ்வொரு பாகமும் நடித்து கொட்டுகிறது. ம்ஹும்…

இவரை தவிர இன்னொரு சரியான செலக்‌ஷன் ஸ்ரீகாந்த. . அவர் என்ன செய்வார் அவருக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். நாசர் கோடீஸ்வர நமிதா புருஷனாய் வருகிறார். சில இடங்களில் ஓவராய் இருந்தாலும் அந்த கேரக்டருக்கு சரியான ஆள். ரகசியாவுக்கு ஆடுவதுடன் ஒரு கேரக்டரையும் கொடுத்திருக்கிறார்கள்.
 namitha_Indra_Vizha1

விவேக் காமெடி என்கிற பெயரில் படு சொதப்பு சொதப்புகிறார்.  தலைவரே தயவு செய்து வேறு நல்ல ட்ராக் ரைட்டரை வைத்து கொள்ளுங்கள் .. இல்லாவிட்டால் ரசிகர்கள் வேறு ஒருவரை ட்ராக் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

ஒளிப்பதிவில் குறையில்லை. மலேசிய காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சி. யதீஷின் இசையில் ஒரே ஒரு டுயட் மட்டும் பரவாயில்லை ரகம். பிண்ணனி இசை  ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ரீமிக்ஸ் பாடலில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஒரு ஹிட் பாடல் கிடைத்திருக்கும்
namitha_indra_vizha6

கே.ராஜேஷ்வர் இயக்கியிருக்கிறார். படத்தை தமிழ் படுத்த முயன்றிருக்கிறார்.  எடுத்தவிதம், எல்லாம் ஓகேதான் ஆனால் படம் பூராவும் ஸ்ரீகாந்த் மேல வர வேண்டிய சிம்பதி கொஞ்சம் கூட வரவிடாமல், கோர்ட் காட்சிகளில் காமெடி செய்து டெம்போவை குறைத்துவிட்டார். அதிலும் லவ் ட்ராக் படு சொதப்பல். கல்யாண மாலை நிகழ்ச்சியில் ரிஜிஸ்டர் செய்த ஒரு வரனுக்கு டிவி ப்ரோக்ராம்காரர்கள் எப்படி ஏமாற்ற முடியும்? . இதை எப்படி கல்யாண மாலை மோகன் அனுமதித்தார் என்றே தெரியவில்லை.

இந்திரவிழா – தங்க தலைவி நமிதா விழா.

டிஸ்கி : படத்தின் டிக்கெட்டுடன் ஒரு பாக்கெட் நாப்கின் இலவசமாய் வழங்கப்படும். இப்படிக்கு தங்கத்தலைவி நமீதா ரசிகர்கள்.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jul 11, 2009

வாமனன் - திரைவிமர்சனம்

vamanan-photos
சுப்ரமணியபுரம் ஜெய் சோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் படம் வாமனன். படம் வெளிவருவதற்கு முன்னாலேயே தான் நடிக்கும் படங்களில் இந்த படம் ஒன்றுதான் நல்ல படம் என்று அறிக்கை விட்டு மாட்டிக் கொண்ட படம். ஒரு திரில்லர் வகை படம்.

பிகினி உடையில் லட்சுமிராயை ரிமோட் கண்ட்ரோல் ஹெலி கேமரா மூலம் படமெடுத்து கொண்டிருக்கும் ஒரு இயக்குனர். திடீரென்று ஹெலிகாப்டர் ரிப்பேர் ஆகி பக்கத்தில் உள்ள ஒரு கார்டனில் மரத்தில் மாட்டி கொண்டுவிட, அங்கே வருங்கால முதல்மைச்சராய் வர இருக்கும் டெல்லி டகணேஷை, சம்பத்ராஜ் ஒரே ஒரு ஆளுடன் கொலை செய்கிறார் அது அந்த டேப்பில் ரிக்கார்ட் ஆக, அந்த டேப்பை தேடி போலீஸும், அமைச்சரும் அலைய, அந்த டேப் லட்சுமிராயிடம் இருப்பதாய் போலீஸும், அமைச்சரின் ரவுடிகளும் அலைய, ஒரு கட்டத்தில் அவளை கொலை செய்கிறார்கள். சினிமாவில் நடித்து பெரிய ஆளாகவேண்டும் என்று சென்னைக்கு வரும் ஜெய் இந்த களேபரத்தில் மாட்டிக் கொள்ள, டேப் இவனிடம் மாட்டிக் கொள்ள,  லஷ்மிராயின் கொலையில் பழி இவன் மீது வந்து ஓட, போலீஸ் துரத்த, ஒரு முறை திரும்பி பார்த்து எதிர்த்து, எவ்வாறு சூழ்ச்சியிலிருந்து வெல்கிறான் என்பதை, பரபரப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
vamanan

ஜெய் அப்படியே விஜய் போல நடிப்பதற்கு முயற்சி செய்கிறார். நடப்பது, சிரிப்பது, நடிப்பது.(????), என்று சாரி ஜெய் நீங்கள் பெற்ற வெற்றிகள் எல்லாம் நீங்கள் நடித்த கேரக்டர்களோடு ஒன்றி நடித்ததால் தான் பெயர் பெற்றீர்கள். 

புதுமுகம் பிரியா குட்டி அஞ்சு போல இருக்கிறார். பாடல்களில் ஆடுவது, அவ்வப்போது ஜெய்யுடன் நடப்பதை தவிர பெரிசாய் வேறெதும் இல்லை. அவரின் அம்மா ஊர்வசி.. இன்னும் எவ்வளவு நாளுக்கு தான் வெகுளி, அம்மாவாய் வந்து நம் உயிரை எடுப்பார். எரிச்சலாய் இருக்கிறது.

முதல் பாதியில் சந்தானமும், ஜெய்யும், படத்தை கலகலப்பாய் கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார்கள். லஷ்மிராய், சம்பத்ராஜ், தலைவாசல் விஜய், ரஹ்மான், ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாய் செய்திருக்கிறார்கள்.

அரவிந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஆரம்ப காட்சியில் ஆரவாரமாய் ஆரப்ம்பித்து, க்ளைமாக்ஸில் ஓய்ந்து போய்விட்டது.  ஒரு வேளை அவரது அஸிஸ்டெண்ட் யாராவது எடுத்தார்களா..? vaamanan-se9-2008_3

யுவனின் இசை படத்தில் மிகப்பெரிய லெட்டவுன்..  ஆனால் பிண்ணனி இசையில் நான் இருக்கிறேன் என்று ஆஜராகிரார்.

மிக அழகாய் சீட்டு நுனிக்கு கொண்டு போக வைக்கக் கூடிய கதைதான். மீடியோகர் திரைக்கதையால் தொய்ந்து போய்விட்டது. ரஹ்மான் கேரக்டர் ஒரு பிஷ்ஷியான கேரக்டர்.  முதல் பாதியில் காமெடியால் சமாளித்திருக்கும் இயக்குனர் இரண்டாவது பாதியில் திடீரென்று என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்ச நேரம் அலைபாய்ந்து விட்டு, க்ளைமாக்ஸுக்கு வருகிறார். படத்தின் உச்சபட்ச டிவிஸ்டுகளும், டர்ன்களும் கடைசி 20 நிமிடங்களில் வருகிறது. அந்த பீகார் கும்பல் மேட்டரை எதற்காக கடைசி வரை கொண்டு வருக்கிரார் என்று யோசித்து கொண்டிருந்த போது, க்ளைமாக்ஸில் புத்திசாலிதனமாய் நுழைத்திருக்கிறார் இயக்குனர். அதே போல் ஜெய் தன் காதலை சொல்லும் மணல் ஓவியக் காட்சி கவிதை. கொஞ்சம் திரைக்கதையில் மெனகெட்டிருந்தால் ஒரு நல்ல திரில்லர் கிடைத்திருக்கும்.

வாமனன் –  டார்கெட் மிஸ்..



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jul 10, 2009

விகடனாரே.. இது ஞாயமா..?

vikatan copy
விகடன் டாக்கீஸின் தயாரிப்பில்   போன வாரம் வெளியான ”வால்மீகி” திரைப்படத்தை பார்த்தேன்.  படம் பார்த்து விட்டு நான் அதிர்ந்ததை விட கடைசியில் அவர்க்ள் போட்ட டைட்டில் கார்ட் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்படி என்ன அதிர்ச்சி என்றால்.. படம் முடிந்தவுடன் ஸ்கோலிங் எண்ட் கார்டில் “A Film By Vikatan Talkies” என்று போட்டார்கள்.

என்னால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை.  a Film by   என்று போட்டு கொள்வதற்கு அப்படத்தின் இயக்குனருக்கே உரிமை உண்டு.  தயாரிப்பாளர்களுக்கு  Vikatan Talkies Production, Vikatan Talkies Presentatiion.  என்பது போல் வேண்டுமானால் போட்டு கொள்ளலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் எக்காரணத்தை கொண்டும்  a Film By  என்கிற இந்த கார்டை இயக்குனர் மட்டுமே போட முடியும்.  அந்த படம் நல்ல படமோ.. பெயிலியர் படமோ.. அதற்கு அப்பாற்பட்டது இந்த டைட்டில் கார்டு விஷயம்.

ஒரு இயக்குனர் தன் வாழ்நாளின் முக்கியமான காலத்தை, தன்னுடய உழைப்பை கொண்டு உருவாக்கிய கதையை.. தயாரிப்பாளரான இவர்கள் கேட்டு பிடித்த பட்சத்தில் அதை தயாரிக்க முடிவு செய்கிறார்கள்.  ஒர் இயக்குனர் தன் கதையை தயாரிப்பாளருக்கு திருப்தியாய் சொல்லிவிட்டுதான் அதை திரைபடமாக்க முடிகிறது. ஸோ.. அவருடய கிரியேட்டிவ் ஸ்கில்லுக்கு உரித்தான கார்டை இயக்குனர் தான் போட வேண்டும்.

எனக்கு தெரிந்து உலகில்  பிரபல ஸ்டியோக்களான டுவெண்டியத் செஞ்சுரி, எம்.ஜி.எம், பாரமவுண்ட், இந்தியாவில் பிரபலமான, ஏவி.எம்., வாஹினி, ஆஸ்கர் ரவிசந்திரன், யாஷ் சோப்ரா, பி.ஆர்.சோப்ரா,  போன்றோர்கள் கூட இம்மாதிரியான கார்டை போட்டதில்லை, போடவும் மாட்டார்கள். இப்படியிருக்க, பத்திரிக்கை மீடியாவில் ஜாம்பவானான விகடனாருக்கு எப்படி தெரியாமல் போனது..? அல்லது தெரிந்தேதான் போட்டார்களா..? அப்படி தெரிந்தே போட்டிருந்தால்  அந்த திரைபட  இயக்குனருக்கு தயாரிப்பாளர் செய்யும் மிகப் பெரிய துரோகம்.   vikatan2 copy டிஸ்கி:

இந்த பதிவுக்கான படங்களை வடிமைத்து கொடுத்த நண்பர் சுகுமார் சுவாமிநாதனுக்கு என் நன்றிகள்.  Designed By Sukumar Swaminathan.

Technorati Tags: ,,

Jul 8, 2009

Oy – Telugu Film Review

oyreview
நாமெல்லாம் அஞ்சலி பாப்பாவாக பார்த்த ஷாம்லி இப்போது குமரி ஆகி நடிக்த முதல் படம். சித்தார்த், ஷாம்லி, யுவன் என்று ஏக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். எதிர்பார்ப்பை கெடுக்கவில்லை என்றுதான் சொல்ல் வேண்டும்.

அடுத்த செகண்ட் வாழ்க்கையின் என்ன வேண்டுமானும் நடக்கலாம் அதனால் அந்த நிமிட சந்தோஷத்தை மட்டுமே கொண்டாடும், பணக்கார உதய்க்கும். எதையும் தன் வாழ்நாள் முழுவதும் கூடவே வரவேண்டும் என்று நினைக்கும் மிஸ். பெர்பெக்ட் ஹீரோயின். அவளுக்கு எல்லாமே அவள் மட்டும்தான். தான் தன் உலகம், தன் நம்பிக்கை, என்று உழலும் சந்தியாவுக்கும் இடையே நடக்கும் கதைதான். ஒய்…
www.nkdreams.com

2009 புத்தாண்டின் போது ஆரம்பிக்கிறது படம். சந்தியாவை எத்தேசையாய் பப்பில் பார்க்க, அவளிடம் பேச போக, அவள் அவனை பற்றி டீடெய்ல் எல்லாம் கேட்டுவிட்டு, உனக்கும் எனக்கும் ஒத்துவராது.. ஏன்னா.. என்னோட நம்பர் 5, உனக்கு 7 அதுனால குட்பைன்னு சொல்லிட்டு போக, அவளை துறத்தி, துறத்து என்று துறத்துகிறான் உதய். அவள் வீட்டிலேயே தான் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்ப்பதாய் சொல்லி பேயிங் கெஸ்ட்டாய் வந்து சேர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் காதலை சொல்கிறான். அதே நாளில் அவளுக்கு கேன்சர் என்று தெரியவருகிறது.  அதை அவளுக்கு தெரியாமல், அவளின் க்டைசி நாட்களை எவ்வாறு கழிக்கிறான்
www.nkdreams.com

சித்தார்தின் இளமை துள்ளும் நடிப்பு படத்திக்கு மிகப் பெரிய பலம். மிக இயல்பாய் நடிக்கிறார்.  கதாநாயகியாய் ஷாம்லி.. நம பக்கத்து வீட்டு பெண் போல இருக்கிறார்.  அவருடய நடிப்பும் மிக இயல்பு..  ஆனால் கொஞ்சம் குண்டாயிருக்கிறார். காமெடிக்கு சுனிலும், கிருஷ்ணுடுவும். இருக்கிறார்கள்.. கிருஷ்ணுடு ஸ்கோர் செய்கிறார். நம்ம ஊரு நெப்போலியன் வருகிறார்.

படத்தின் மிகப் பெரிய பலம் விஜய் சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவு. முக்கியமாய் அந்த கடலோர வீடும், கடற்கரையும், நைட் எபக்டில் வரும் காட்சிகளும், ஸோ.. ரொமாண்டிக்..

யுவனின் பிண்ணனி இசை படத்திற்கு அடுத்த பலம் என்றே சொல்ல வேண்டும்..  பாடல்கள் சில துள்ளுகிறது, சில நம்மை மெலடியில் கிறக்குகிறது.
www.nkdreams.com

மிகவும் பாரட்டபட வேண்டியவர் இயக்குனர் அனந்த ரங்கா.. அதிலும் அவர் முதல் பாதியில்   ஹீரோ, ஹீரோயின் அறிமுக காட்சியாகட்டும், அந்த பப்பில் ஹீரோவின் பிறந்த நாளுக்காக, அவனை தூக்கி போட, அப்போது முதல் ப்ளோரில் ஹீரோயினை பார்க்கும், காட்சியாகட்டும், உதய் தன் காதலை வெளீப்படுத்தும் பர்த்டே காட்சியாகட்டும், மனுசன் பின்னியெடுத்திருக்கிறார். செகண்ட் ஆஃபில் வரும் காசி காட்சிகள் கொஞ்சம் டிராகிங் என்றாலும்.. கதாநாயகி இறந்துவிடுவாள் என்று சொல்லிவிட்டு, நம்மை கடைசி வரை உட்கார வைத்துவிடுகிறார். இயக்குனர். அதே போல் கதாநாயகி சந்தியா, க்ளைமாக்ஸில் தன் வாயால் ஐ லவ் யூ என்று சொல்ல, உதயின் பர்த்டே அன்று தன்னை வெளிப்படுத்தி, அவனை போலவே 12 கிப்டுகளை கொடுத்து, கடைசியாய் வாழ்நாள் பூராவும் அவனோடு தன் வாழ்க்கக யை கொடுக்க ஆசையாயிருக்கு, என்று சொல்லும் இடத்தில் மனம் கரையத்தான் செய்கிறது. பல இடங்களில் வசனங்கள் அருமை. சில இடங்களில் ஸோ… ஸோ..

மணிரத்னத்தின் கீதாஞ்சலி ஞாபகமும், A Millionare’s First love என்கிற கொரியன் படமும் ஆங்காங்கே நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. 

Oy-  A Nice Feeling

Technorati Tags: ,

Jul 7, 2009

நோ - பார்க்கிங்

வண்டிய பார்க் பண்ணிட்டு பேங்குக்கு போயிட்டு வெளிய வந்து பார்த்தா உங்க வண்டிய காணோமா..? பதட்டபடாதீங்க.. உடனடியா அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு போய் பாருங்க அங்க உங்க வண்டியிருக்கும், அவ்வளவு சீக்கிரமா உங்க வண்டிய அவங்க கண்டு பிடிச்சிடுறாங்களான்னு நீங்க கேட்டா. நீங்க ரொம்பவே நல்லவருங்க..?.. ஆமா.. வண்டிய எடுத்துட்டு போனவனுக்குதானே.. அதை பத்தி தெரியும்.

ஆம் பூட்டின வண்டியை, ஆள் வைத்து தூக்கி போவது, நம் காவல் துறைதான். என்ன கொடுமை சார் இது. நகரின் முக்கியமான பகுதிகளில், அதுவும், பிரபலமான தெருக்களில் வணிக வளாகம், அல்லது அரசு அலுவலகமோ, இன்சூரன்ஸ் கம்பெனிகளோ.. யாருடய இடத்திலும் நம்முடய வண்டியை பார்க் செய்ய வசதியிருப்பதில்லை. அதிலும் முக்கியமாய் யாராவது மவுண்ட் ரோடு சிட்டி பேங்க் பார்க்கிங் நிலைமையை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். காவல் துறை பார்க்கிங் ஏரியா என்று அறிவித்திருக்கிற இடங்களை விட நோ பார்க்கிங் அறிவித்திருக்கும் இடம் தான் அதிகம்.

அவசரத்தில் அதுவும் ஆபீஸ் போகும் நேரத்தில் பேங்க் வேலையாய் வருபவர்கள், பாங்கின் வாசலில் வண்டியை விட்டுவிட்டு போய் வந்து பார்த்தால்.. வண்டியை காணாமல், அதிர்ந்து போய் நிற்பவர்கள் அதிகம். அங்கிருக்கும் ஆட்கள் சொல்லித்தான் தெரியவரும், வண்டியை காவல்துறை ஆள் வைத்து டோ வண்டியில் ஏற்றிக் கொண்டு போனது. சுமார் 150 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கிறார்கள். அலுவலகம்போகும் அவசரத்தில் இருப்பவர்களின் வண்டியை தூக்கி கொண்டு போய் அலைய வைப்பது அவர்க்ளுக்கு மன உளைச்சலையே தரும்.

வரும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாய் பார்க்கிங் வசதி செய்யாத பாங்கி நிர்வாகத்துக்கோ. அல்லது அந்த கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்த நிர்வாகிகளுக்கோ, காவல்துறை ஃபைன் போடுவதில்லை.. மாட்டுவது நம் மக்களே.. ஏன் அவர்களுக்கு எந்தவிதமான நோட்டீஸோ, அபராதமோ விதித்து, பொதுமக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தர நம் காவல் துறை உதவ மாட்டேன் என்கிறது.

சட்டமீறல்களுக்காக தண்டிப்பதை நான் மதிக்கிறேன். ஆனால் ஒருவனுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு , அதை மீறினால் அவனை தண்டியுங்கள். ரோடில் பார்க்கில் செய்யக்கூடாது என்று நீங்கள் சட்டம் போட்டால், அந்த இடத்தில் அவனுக்கு வண்டியை பார்க் செய்ய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு அதை மீறினால் தண்டிக்கலாம். வசதிகளை செய்து கொடுக்காத, கட்டிட உரிமையாளர்களையும், நிறுவனங்களையும் தண்டிக்காமல் பொது மக்களை தண்டிப்பது என்ன நியாயம்.? இந்த கொடுமையெல்லாம் நம்மூர்ல தான் நடக்கும்..

Jul 4, 2009

ஞாபகங்கள் - திரைவிமர்சனம்

pa-vijay

படம் ஆரம்பத்தில் தன் நண்பர் கதிரவனின் வாழ்க்கையில் நடந்த உண்மைகதை என்கிறார் பா.விஜய். ஆனால் படம் ரிதுபர்னோ கோஷின், ஐஸ்வர்யா, அஜய் தேவ்கன் நடித்து வெளிவந்த ரெயின் கோட் மறுபதிப்பு போல் இருக்கிறது. ஆங்காங்கே சின்ன சின்ன மாறுதல்களுடன். அந்த படமே ஓஹென்றியின் ஒரு சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம்.

தேசிய விருது பெற்ற கவிஞர் ஹரித்துவாரில் தன்  பழைய காதலியை ஒரு மழை நாளில் பார்க்க போகிறார். வீட்டிற்கு வந்தவரை வாய் நிறைய வரவேற்று பேசியபடி தான் தன் வாழ்கையை பற்றியே அவனின் காதலி பேசிக் கொண்டிருக்க, இவனின் இன்றைய கவிஞர், தேசியவிருது பற்றி கொஞ்சம் கூட அறியாதவளாய் இருக்க,  ஒரு நேரத்தில் அவள் காய்கறி வாங்க போயிருக்கும் போது, வரும் ஒருவர் அவளின் கணவன் பெரிய டைமண்ட் வியாபாரியாய் இருந்ததாகவும், வியாபரத்தில் லாஸ் ஆனதால் தூக்கு மாட்டி இறந்து போய்விட்டதால், மிகப்பெரிய கடனில் அவள் இருப்பதாகவும், இந்த வீடும் அவளும்தான் பாக்கி அவளை எடுத்து கொண்டு, சின்ன வீடாய் வைத்து கொள்கிறேன் என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாள் என்று சொல்லிவிட்டு சொல்ல, தன் காதலியின் அவலவாழ்வு தெரிந்து தன் தேசியவிருதையும், பதக்கத்தையும்,  ஒரு ப்ளாங் செக்கையும் வைத்து விட்டு போகிறான். அவளிடம் அவளை ஏற்றுக் கொள்ள மனமிருந்தும் சொல்லாமல்.  இந்த கதையினிடையே, சேட்டு பெண்ணான அவளூக்கும், சுத்த தமிழரான கதிரவனுக்கும் எவ்வாறு காதல் உருவானது, அது தோற்றது என்பதை சொல்கிறார்கள். முடிவு.. அரத பழசு.
143gnaba_preview

ரெயின் கோட் படமே கொஞ்சம் ஸ்லோவாகத்தான் போகும். இதில் மகா ஸ்லோ. அதிலும் விஜய்க்கு,  முகம் முழுவதும் மேக்கப் போட்டு ஒரு மாதிரி மையமாய் பார்த்தபடி ஹைஸ்பீடிலேயே (ஸ்லோமோஷனுக்கு டெக்னிகல் வேர்ட்) ரியாக்‌ஷன் செய்கிறார். சேட்டு பெண்ணுக்கு தமிழ் கவிதைகள் மேல் எப்படி காதல் வந்தது?.. சேட்டு பெண்ணுக்கு, அவள் வீட்டின் மாடியில் தங்கியிருக்கும் தமிழ் இளைஞனுக்கும் அவ்வளவு எளிதாகவா காதல்மலரும். படத்தின் மிகப்பெரிய மைனஸ்..  பா.விஜயின் திரைக்கதையும், நடிப்பும் தான்.  பல இடங்களில் முடியல.. ஃபாஸ்ட் பார்வேர்ட் செய்தால் கூட நகர மாட்டேன் என்கிறது. நின்னு கொல்லுது.
01072009-TTCF0image3

கவிஞர் தான் பெரிய கவிஞர் என்று  உறுதிபடுத்துவதற்காக, பல காட்சிகளில் வசனத்துக்கு  பதிலாய் கவிதை சொல்வது போல் வைத்திருக்கிறார். அதில் கல்லூரி காட்சியில் வரும் ஹீரோயின் பெயர் அ என்று சொன்னதை வைத்து, ஒரு கவிதை சொல்லும் இடம் அருமை.  நிறைய இடஙக்ளில் வருவதால் அதுவும் போரடிக்கிறது. அதே போல் அந்த கம்யூனிஸ்ட் போராட்டம், போலீஸ், என்று ஹீரோயின் திருமணத்தின் போது இல்லாதிருக்க வைத்த காட்சிகளாகவே தெரிகிறது.  திருமணத்தின் முன் கதாநாயகி நான் போவதற்கு முன் தன்னையே எடுத்து கொள்ள சொல்லும் காட்சியில்.. அப்பா வாங்கி கொடுத்தாருன்னு பிடிக்காத பொம்மையோட விளையாட போற் குழந்தையிடம் எப்படி என்று கேட்கும் வசனம் நன்றாக இருந்தாலும்,  சிச்சுவேஷம்  செம காமெடி.

ஸ்ரீதேவிகாவின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. காதலியாய் வரும் போதை விட, இனொருவன் மனைவியாய் தான் நன்றாக இருப்பதாய் நாடகமாடும் கேரக்டரில் மின்னுகிறார். க்ளைமாக்ஸில் தாஜ்மகாலில் விஜ்யின் காலடியில் அவர் பேசும் வசனங்கள் கண்ணாம்பா காலம்

என்ன தான் பட்ஜெட்டில் எடுத்திருந்தாலும், ஹீரோவின் காலருக்குஷாட் ப்ரேக்கில்  கர்சீப் வைக்காமல் பாடல்களில் காலர் பூராவும் முகத்தில் இருக்கும் பேன்கேக்   தெரிய ஆடுவது கொடூரம். 

பாடல்கள் ஏராளம். கவிஞர் படமல்லவா.  ஆனா முடியல.. க்ளைமாக்ஸ் எஸ்.பி.பி.. பாடல் மட்டும் இதம்.

ஒளிப்பதிவு, இயக்கம், ஜீவன்.. இவர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இயக்கும் மயில் படத்துக்காக காத்திருக்கும் வேளையில் என்ன கஷ்டமோ தெரியவில்லை.. நிறைய இடங்களில் கோட்டைவிட்டிருக்கிறார். ஆனால் அருமையான ஒளிப்பதிவு. அதில் குறையொன்றுமில்லை.  நடிக்கவும் செய்திருக்கிறார். ஹீரோவின் டெல்லி நண்பராய். ஆனால் இவர்கள் தமிழ் பற்றி பேசும் போது.. ஆங்காங்கே தமில், என்று ழகரத்தின் மேன்மையை சொல்லும் காட்ட்சியை வைத்தும் டப்பிங்கிலாவது சரி செய்திருக்கலாம்.

ஞாபகங்கள் – பழசு.. அரத பழசு

Jul 3, 2009

Newyork – Hindi Film Review.

14896464_newyork_26jun09_330x234

சமீபத்தில் இம்மாதிரியான ஒரு காத்திரமான கதையம்சம் உள்ள படத்தை ஹிந்தியில் பார்ககவில்லை.  சிறந்த ஸ்கிரிப்ட், நல்ல இயல்பான நடிப்பு, உயர்ந்த புரொடக்‌ஷன் தரம் எல்லாம் சேர்ந்து ஒரு அருமையான படத்தை தந்திருக்கிறது யாஷ் ராஜ்.

அமெரிக்க 9/11 நிகழ்வுக்கு பிறகு அமெரிக்க உளவு பிரிவான F.B.I, சந்தேகம் என்கிற  பெயரில் பல ஆயிரம் பேர்களை கைது செய்து டிடென்ஷ்ன் செண்டரில் வைத்து சித்திரவதை செய்ததையும், அதனால் மன உளைச்சலில் உழன்று திரியும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்க்ளின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

ஓமர் ஸ்காலர்ஷிபில் நியூயார்க் யூனிவர்சிட்டியில் வந்த் சேருகிறான். அங்கே மாயாவையும், சாம் என்கிற சமீரை அமெரிக்க இந்தியனான அவனை சந்திக்கிறான். பார்த்தவுடன் மாயாவை ஒரு தலையாய் காதலிக்க ஆரம்பிக்கிறான். அவளிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறான். மாயா காதலிப்பது சாமை என்று தெரிய வருகிற் அன்று அமெரிக்க 9/11 நிகழ்வுகள் நடக்கிற்து. ஓமர் பிலடெல்பியா சென்றுவிடுகிறான். சில வருடங்கள் பிறகு நியூயார்க் வரும் ஓமரை F.B.I கைது செய்கிறது. அவன் நண்பன் சாமிற்கு இருக்கு தீவிரவாத தொடர்புகளை அண்டர்கவர் ஏஜெண்டாக இருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கட்டாய படுத்துகிறது. வேறு வழியில்லாமல் நண்பணின் வீட்டுக்கு உளவாளீயாய் நுழைகிறான். மாயாவும், சமீரும் திருமணம் செயது கொண்டு ஒரு பிள்ளையுடன்  சந்தோசமாயிருக்க, ஓமர் இருதலை கொள்ளி எறும்பாய் குழம்புகிறான். நிஜமாகவே சமீர் தீவிரவாத செயல்கள் செய்கிறானா.? இல்லையா.? அதற்கான காரணம் என்ன. என்பத் போன்ற பல கேள்விக்கு திரையில் பதில் இருக்கிறது.
14896468_newyork1_26jun09_330x234

படத்திற்கு மிகப் பெரிய  பலம் நடிகர்கள், ஓமராக நீல் முகேஷும், மாயாவாக காத்ரீனா கைப்பும், சாம் ஆக  ஜான் ஆப்ரஹாம். மிக இயல்பான நீட்டான நடிப்பு.. FBI ஆபீசர் ரோஷனாக இர்பான்கான். மனுசனுக்கு லட்டு மாதிரியான கேரக்டர். பாடி லேங்குவேஜில் அசத்துகிறார். காத்ரீனா அழகோ அழகு.

நியூயார்க்கை மிக அழகாய் ஒரு கேரக்டர் போல உபயோகித்திருக்கிறார்கள் அற்புதமான இதமான ஒளிப்பதிவு. மிக சிறந்த சவுண்ட் மிக்ஸிங். ஆழமான வசனங்கள். என்று பல டிப்பார்ட்மெண்டுகள் திரம்பட வேலை செய்திருக்கிறது.

இயக்குனருக்கு இது இரண்டாவதுபட்ம்  முதல் படமான காபூல் எக்ஸ்பிரஸ் பெரிய தோல்வியை சந்தித்தது. இதில் நிமிர்ந்து நிற்கிறார் இயக்குனர். ஆரம்ப காட்சிகளில் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், கொஞ்சம் , கொஞ்சமாய் சூடு பிடித்து விடுகிறது திரைக்கதை.

நியூயார்க் –   அர்த்தமுள்ள பட விரும்பிகளுக்கு.