கரண் ஹீரோவாய் வெற்றி பெற்ற படஙக்ள் எல்லாம் வழக்கமான மசாலா படஙக்ளிலிருந்து விலகி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தததால் என்பதால் இந்த படமும் அதே போல் இருக்கும் என்று நினைத்து போயிருந்தால் கொஞ்சம் மட்டு என்று தான் சொல்லவேண்டும்
கந்தகபூமியான சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் முதலாளி சரத்பாபுவுக்கு எல்லாமாக் இருக்கும் கரண், அவருக்கு ஒன்றென்றால் துடித்து போய் விடுவார். அவர்களின் தொழில் எதிரிகளாக எம்.எஸ்.கே சன்ஸின் முதலாளிகளான சக்திகுமாரும், அவருட அப்பா ராஜன்.பி.தேவும். இவர்களுக்குள் நடக்கும் தொழில் போட்டி, பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிற்சாலை தொழிலாளிகளின் வாழ்க்கை, சரத்பாபுவின் பாக்டரியில் நடக்கும் விபத்தில் தன் காதலி உட்பட தன்னுடன் வேலை செய்த தோழர்களையும் இழந்து தவிக்கும் கரணுக்கு, நடந்தது விபத்தல்ல என்ற உண்மையை கண்டுபிடிக்கிறான். அதனால் ஏற்படும் திருப்பம் தான் க்ளைமாக்ஸ்..
படம் முழுக்க கரண் தன்னுடய ஆளுமையை விரவியிருக்கிறார். தன் முதலாளிக்கு ஒன்று என்றால் துடிக்கிற துடிப்பும், துள்ளுகிற ஆவேசமும், அலையும் கரண், கதாநாயகி ஷம்மு ஒரு அதட்டல் விட்டதும் பவர் இறங்கிய டூராசெல் பேட்டரி ஆட் போல் இறங்கி போவதும், க்ளைமாக்ஸ் காட்சிகளில் நொந்து போய் கோபத்துடன் வில்லன்களின் கழுத்தை நெருக்கியபடி அவர் பேசும் வசனக்காட்சிகளிலும் என்று கரண் மின்னுகிறார். என்ன விழலுக்கு இழைத்த நீர் என்று தான் சொல்ல வேண்டும்.
கதாநாயகி ஷம்மு, , வழக்கமாய் லூசாய் வரும் ஹீரோயினாக இல்லாமல், பரபரவென இளமை துள்ளும் நாயகியாக வலம் வருகிறார். பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் இவரின் உதடுகள் ..ம்.. இவர் வரும் காட்சிகள் லேசான சாரல் காற்றுதான். ஒரு ஆண் போல திரியும் இவரின் பாடிலாங்குவேஜை வைத்து இவர் நடித்ததை விட இவருக்கு டப்பிங் கொடுத்த்வரை பாராட்ட வேண்டும், என்ன தான் பாடி லேங்குவேஜில் சரி பண்ணியிருந்தாலும் முகத்தில் அந்த தெனாவெட்டு, குறையும் நேரத்தில் எல்லாம் பிண்ணனி குரல் நாயகி பின்னுகிறார்.
கஞ்சா கருப்பு தனியாளாய் இந்த படத்திலும் செல்ஃப் எடுக்கவில்லை. மயில் சாமி மனுச்ன் இந்த படத்திலும் பின்னுகிறார். இவருக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
படத்தில் செகண்ட் ஆஃபில் உதயதாரா வருகிறார். ஒரு பாட்டு பாடுகிறார். இவர் எதற்கு என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.
தினாவின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம்.எஸ்.பி. வெங்கடேஷின் பிண்ணனி இசை விக்ரமன் பட எஸ்.ஏ.ராஜ்குமாரை நினைவூட்டுகிறது.
இயக்குனர் கோபி.. காதல் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். இருவருக்கும் காதல் வருவதை ஒரு பாடலின் இடையே அவர்களுடய மைண்ட் வாய்ஸையே பாட்டாய் அமைத்து, காதலை சொல்லிவிடுவது நைஸ். எதையோ பெரிசாய் சொல்வதாய் வந்து பொசுக்கு, பொசுக்குனு விழுந்துவிடுகிற திரைக்கதை மிகப்பெரிய பலவீனம், ஹீரோவை தூக்கி வைக்க வேண்டும் என்பதற்காக, தேவையில்லாத தம்பி கேரக்டர், அம்மா செண்டிமெண்ட், ஊர் செண்டிமெண்ட், பிறகு சமீபகால தமிழ் சினிமா வியாதியான திருவிழா, போதை, குத்துபாட்டு, என்று வழக்கமான காட்சிகள். பல காட்சிகள் படத்தை சும்மா நகர்த்தவே பயன்படுகிறது. படம் விட்டு வரும் போது காதல் காட்சிகள் மட்டுமே நினைவில் நிற்கிறது.
மலையன் – மணல் மலை.
டிஸ்கி:
பதிவர் வண்ணத்துபூச்சியார், அவரின் துணைவியார் அவர்களும், கிழக்கு பதிப்பகம், ஹலோ எப்.எம்மும் இணைந்து வ்ழங்கும் கிழக்கு பாட்காஸ்ட் என்கிற நிகழ்ச்சியில் பங்கு சந்தை பற்றி “அள்ள அள்ள பணம் ஆசிரியர் சோம.வள்ளியப்பன், பத்ரி ஆகியோருடன் கலந்துரையாடியிருக்கிறார். இந்நிகழ்ச்சி இன்று ஞாயிறு மதியம் 12.00 மணி முதல் 1.00 மனி வரை ஹலோ எஃப்.எம்மில் கேட்டு மகிழுங்கள்.
வண்ணத்துபூச்சியாருக்கு வாழ்த்துக்கள்.
மோதி விளையாடு திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
ஹஸன் ராஜா.
Cable Sankar said...
test
/
test success
DVD வரட்டும்.
நர்சிம் படமும் நச்...
வாழ்த்துக்கள் நர்சிம்
வர்றான் பாரு டி.ஆரு.
கிளோசப்ல அவரு முகத்த பாத்தா புதரு
தியேட்டர்ல அவரு படத்த பாத்தா டெர்ரரு.
அடேய் கரண் பையா அடுத்த டி.ஆர். படம் வரட்டும்
அப்போ வச்சுக்கறேன்.
அகில உலக டி.ஆர். ரசிகர் மன்றம்
வாஷிங்டன் டி.சி.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில காலித் மொஹம்மத் என்றொரு விமர்சகர் இருந்தார். விமர்சங்களில் படத்தை கிழிகிழியென்று கிழிப்பார். ஆனால் பின்னாளில் அவர் இயக்கிய படங்கள் எல்லாமும் தோல்விப்படங்களே.
சிறப்பாக திரை விமர்சனம் எவரும் சிறந்த இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே அவரை சும்மா ஏத்தி விட்டுட்டே இருக்காதிங்க. திரு. ஷங்கர் அவர் திறமைக்கு ஏற்றவாறு பிரகாசிப்பார். இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
கிடைக்கிறது...?
டிஸ்கிக்கு நன்றி ஜி..
சிறப்பாக திரை விமர்சனம் எவரும் சிறந்த இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே அவரை சும்மா ஏத்தி விட்டுட்டே இருக்காதிங்க. திரு. ஷங்கர் அவர் திறமைக்கு ஏற்றவாறு பிரகாசிப்பார். இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்//
நண்பர் இந்தியன் அவர்களே, அண்ணன் கேபிள் அவர்களின் முதல் படைப்பு சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திப்பதாக மட்டுமே குறிபிட்டு இருந்தேன். நான் யாரையும் ஏத்தி விட வில்லை. கேபிள் எனும் இது வரை நேரடி சந்திப்பு அற்ற நண்பரின் வெற்றிக்காக என்னால் முடிந்தது இறைவனை பிரார்திபது மட்டுமே. அதனை தயவு செய்து கேவல படுத்த வேண்டாம்
நினைச்சேன்.... இதுவும் மொக்கையா?......
நான் என்ன படம் பாக்கறது ஜி?
//
என்னடா ... கபால் இப்படி கேட்டுட்டடா.. அது தாண்டா என் வேலைடா.. உன் காசுலயாடா நான் படம் பாக்குறேன். என் காசுலதானேடா.. நன்றிடா உன் பின்னூட்டத்துக்கு.. வர்டாடா..
ஹஸன் ராஜா//
நன்றி ஹஸன் ராஜா.. எங்கே ரொம்ப நாளா ஆளையே காணம்.?
முடிஞ்சா படஙக்ளை தியேட்டர்ல பாருங்க மங்களூர் சிவா.. அப்பதான் சினிமா வாழும்..
நன்றி பாலா.. என்னாலான முயற்சியை செய்கிறேன். பாலா.. வெற்றியும் தோல்வியும் மக்கள் கையில்தான் இருக்கிறது.
நர்சிம் படமும் நச்...
வாழ்த்துக்கள் நர்சிம்
//
நன்றி அசோக்..
//
அப்படியில்ல சில படங்களை நான் இன்னும் கூட பார்க்காமல் இருக்கிறேன். இருந்தாலும் பாராட்டுக்கு நன்றி சம்பத்.
jaikumarvin@gmail.com//
கிருஷ்ணா நான் ஏற்கனவே மெயில் அனுப்பிட்டேன். இன்னும் பாக்கலையா..? நான் சிங்கமெல்லாம் இல்லீங்கோ....
வர்றான் பாரு டி.ஆரு.
கிளோசப்ல அவரு முகத்த பாத்தா புதரு
தியேட்டர்ல அவரு படத்த பாத்தா டெர்ரரு.
அடேய் கரண் பையா அடுத்த டி.ஆர். படம் வரட்டும்
அப்போ வச்சுக்கறேன்.
அகில உலக டி.ஆர். ரசிகர் மன்றம்
வாஷிங்டன் டி.சி.
//
அது சரி விசா.. எங்கிருந்து கரண் படத்துக்கு ராஜேந்தர் வந்தாரு..
இந்தியன் நீங்கள் சொல்வதும் ஒருவிதத்தில் உண்மை தான் . ஒரு விமர்சகன் நல்ல இயக்குனராக இருக்க வேண்டிய அவசியமில்லைதான் . ஆனால் நான் விமர்சனம் எழுதுவதற்காக படம் பார்பதில்லை. என் வேலை படம் இயக்குவதுதான். அதில் வெற்றி தோல்வி என்பது மக்களின் கையில்தான் இருக்கிறது.
//சிறப்பாக திரை விமர்சனம் எவரும் சிறந்த இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே அவரை சும்மா ஏத்தி விட்டுட்டே இருக்காதிங்க. திரு. ஷங்கர் அவர் திறமைக்கு ஏற்றவாறு பிரகாசிப்பார். இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
//
யாரும் என்னை ஏத்திவிட வேண்டியது இல்லை இந்தியன்.. என் முயற்சியிலேயே என்னால் ஏறிவிட முடியும் என்பது என் நம்பிக்கை.
முன் பின் தெரியாத பாலா போன்ற பல நண்பர்கள் என்னை உற்சாகபடுத்தவே இவ்வாறு ஒரு நட்பில் சொல்கிறார்களே தவிர ஏத்திவிட அல்ல. என்பது என் எண்ணம். அதுமட்டுமில்லாமல் என் படத்தை விமர்சனம் செய்ய பல பேர் காத்திருக்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியும். ஆதலால் மீண்டும் உங்களுக்கு சொல்ல விரும்புவது.. எல்லோரும் முகமறியாத நண்பர்களே.. இதில் தனிப்பட்ட விதத்தில் அவர்களை புண்படுத்துபடியாய் எதுவும் எழுத வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். நீங்கள் என்னுடய பதிவை, என்னுடய குறும்படத்தை, என்னுடய கதையை விமர்சிக்க உரிமை உண்டு.. நண்பர்களை அல்ல..என்பதை மீண்டும், மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி இந்தியன்.
//
நன்றி ஜெகந்நாதன்.. உண்மையிலேயே என்னுடய ஆதங்கத்தைதான் மயில்சாமியை பற்றி சொல்லியிருக்கிறேன்.
ஏலே.. நானொன்னும் ஓசியில படம் பாக்குறது கிடையாதுலே.. என் துட்டை போட்டு பாக்குறேன். கருத்து..
//
பாலா.. உங்களின் மறுபின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.. அவருக்கு நான் பதில் சொல்லிவிட்டேன். இதற்கப்புறமும் அவர் என் பதிவை பற்றி தவிர வேறு யாரையாவது புண்படுத்தமாட்டார் என்று எண்ணுகிறேன்.
என்னுடய் பதிவுகள் எப்படி வெகுஜன மகக்ளின் ரசனைக்கேற்ப சினிமா, கதை, கட்டுரை, நாட்டு நடப்பு என்று பல விஷயஙக்ளை தொட்டு கலந்து கட்டி இருக்கிறதோ.. அது போல எனக்கு பட வாய்ப்பு கிடைக்கும் போது வெகுஜன மக்களை கவரும் வகையில் ஒரு திருப்தியான படத்தை கொடுக்க முயற்சிக்கிறேன்.
மீண்டும் என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.
கிடைக்கிறது...?
//
மனமிருந்தால் மார்கமுண்டு தமிழ் வெங்கட்..
நன்றி டாக்டர் முருகானந்தம்.
டிஸ்கிக்கு நன்றி ஜி.//
நன்றி வண்ணத்துபூச்சியாரே..
இன்னமும் முடிவாகவிலலி ரமேஷ்.. இருந்தாலும் உங்களைபோன்ற நண்பர்க்ளின் வாழ்த்து பலிக்கட்டும்.
நன்றிகள் பல ரமேஷ்/
மிக்க நன்றி நண்பர் கேபிள் அவர்களே. உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் என் மனமார்ந்த வாழ்துகள்.
அப்படி இப்படி கொளுத்தி போட்டா தானே பத்திக்கும். பிளாகும் சூடு பிடிக்கும். நல்லா அடிச்சு விளையாடலாம். ஹா ஹா ஹா....
ithu thaan TOPPU. ungal thoazhan visa.
நன்றி விசா..
//
எங்கள் அண்ணன் டி.ஆர் ரை டச் பண்ணா டிச் பண்ணிருவோம். சாக்குரத.. :)
Cable Sankar said...
/DVD வரட்டும்//
முடிஞ்சா படஙக்ளை தியேட்டர்ல பாருங்க மங்களூர் சிவா.. அப்பதான் சினிமா வாழும்..
/
மாட்டாம்னா சார் சொல்லுறோம்?
மங்களூரில் ஒரே ஒரு தியேட்டரில்தான் கன்னடம் தவிர மற்ற மொழி படங்கள் திரையிடுகிறார்கள். ஹிந்தி படம் பல தியேட்டர்களில் போடுகிறார்கள்.
பல படங்களை தியேட்டரில் ரிப்பீட் எல்லாம் பார்த்திருக்கிறேன். இப்பல்லாம் சினிமா தியேட்டர்க்கு போய் பார்க்கணும்னா ரொம்ப ரொம்ப யோசிக்க வேண்டியதா இருக்கு அந்த மாதிரி இல்ல எடுக்குறாங்க :((
கடைசியாக தியேட்டரில் பார்த்த படம் நாடோடிகள். வாமணன், பசங்க பார்க்கனும்னு விரும்பினோம் இங்க ரிலீஸ் ஆகலை :((
I seem to have touched raw nerve of both of you, inadvertantly.
Regret the content and language of my comments.
---
என்னது இப்பவே உங்க படத்துக்கு எதிர்பார்ப்பா?
எதிர்பார்ப்புன்னாலே நமக்கு கொஞ்சம் கிலிண்ணே...