ஆம் பைத்தியக்காரனுக்கு பைத்தியம்தான் பிடிக்க போகுது.. பின்ன பிடிக்காம.. ஒரு வேகத்துல உரையாடல் சிறுகதை போட்டி வச்சாலும் வச்சாரூ.. சும்மா கதையா குமிஞ்சிருச்சில்ல. மொத்தம் 219 கதைங்க வந்திருக்கு. சும்மா ஆளாளுக்கு பின்னி பெடலெடுத்துட்டாங்க.
ஒரு பக்கம் பெரிய, பெரிய ஜாம்பவானெல்லாம் எழுதாம் இருந்தத பார்த்து ஓ.. இவங்கதான் நடுவரான்னு நினைச்சிட்டுருந்தா.. கடைசி நேரத்துல ஆளாளுக்கு கதைய போட்டு வயித்தகலக்கிட்டாங்க.. நம்ம உண்மைதமிழன் பாட்டுக்கு பெரிசு, பெரிசா ஹைக்கூ எழுதிட்டு இருந்தாரு. திடீர்னு அவ்ரு ஒரு கதைய போட்டுட்டாரு. ஒழுக்கமா டாக்டரூ வேலை பாத்துட்டு, இருந்தவரு அவரு ஒரு கதை எழுதிப்போட்டாரு..
இப்படி புதுசுபுதுசா களம் இறங்கிறாங்கன்னா.. இன்னொரு பக்கம், பெரும்பதிவர்கள், லக்கி, பாலபாரதி, அதிஷா, பரிசல், நர்சிம், வடகரைவேலன், முரளிகண்ணன், அபிஅப்பா, ன்னு நிறைய பேர் பின்னி எடுத்திருகாங்க.. இதுக்கு நடுவுல நானெல்லாம் கதை எழுதியிருக்கேன்னு சொல்றதே பெரிய விஷயம்.
இவ்வளவு பேர் எழுதின கதைகளுக்கு நடுவில 20 கதைய எடுக்கிறதுன்னா சும்மாவா.. அதான் சொன்னேன் பைத்தியக்காரனுக்கு பைத்தியம் பிடிக்கபோவுதுன்னு. (எப்படியாவது அந்த 1500 எனக்கே கிடைக்க வழி பண்ணு சொக்கா..:))
நான் எழுதின உடையாடல் சிறுகதை போட்டிகான துரை.. நான்.. ரமெஷ்சார்.. படிக்க இங்கே அழுத்தவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
நல்லா எழுதியிருக்கீங்க :-)
தோழமையுடன்
முன்பே பைத்தியமாகிவிட்ட பைத்தியக்காரன்
நீங்களுமா?.....
நீங்களுமா?.......
(||Echo Effect||)
சும்மா ஒரு பில்டப் விடுவதற்காகவே எழுதியது அது.....
தளிப்ப பார்த்து நானும் ஏதோ சூடா இருக்கும் என்று வந்து பார்த்தால் , ஏமாத்திட்டீங்களே அண்ணாச்சி?
எத்தனை நடுவர்கள்னு தெரியலையே!
நாங்களாம் மதுரைகாரங்கல்ல!
அப்ப எங்களுக்கு?!!!
நல்லா எழுதியிருக்கீங்க :-)
தோழமையுடன்
முன்பே பைத்தியமாகிவிட்ட பைத்தியக்காரன்
//
பின்னே எங்க கதையெல்லாம் படிச்சா.. நிச்சயமா பிடிக்கும் பைத்தியம்
நீங்களுமா?.....
நீங்களுமா?.......
(||Echo Effect||)
அவ்வளவு அதிர்ச்சியாவா இருக்கு என் கதை.
தளிப்ப பார்த்து நானும் ஏதோ சூடா இருக்கும் என்று வந்து பார்த்தால் , ஏமாத்திட்டீங்களே அண்ணாச்சி//
:)
முத பத்து பேர் என் பேர போடச்சொல்லணும் அக்னி
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், 'புண்ணாக்குமூட்டை' என்றழைக்கப்படும் (பெற்றோர்களால் மட்டும்) S. பாலமுருகனாகிய நான் இன்று முதல் கருத்துறைக்க வருகிறேன். பதிவில் தவறேதாயினுமிருப்பின் மன்னிப்பீர். ஏனென்றால் எனக்கு தமிழில் சிறு சருக்கல் பள்ளிப்பருவம் முதற்கொண்டே.
இங்ஙணம்,
புண்ணாக்குமூட்டை.
சில சற்றே பழையாதாயினும் மீண்டும் நினைத்துப்பார்க்க உதவியது. மிக்க நன்றி.
இப்படிக்கு,
புண்ணாக்குமூட்டை.