Thottal Thodarum

Jul 7, 2009

நோ - பார்க்கிங்

வண்டிய பார்க் பண்ணிட்டு பேங்குக்கு போயிட்டு வெளிய வந்து பார்த்தா உங்க வண்டிய காணோமா..? பதட்டபடாதீங்க.. உடனடியா அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு போய் பாருங்க அங்க உங்க வண்டியிருக்கும், அவ்வளவு சீக்கிரமா உங்க வண்டிய அவங்க கண்டு பிடிச்சிடுறாங்களான்னு நீங்க கேட்டா. நீங்க ரொம்பவே நல்லவருங்க..?.. ஆமா.. வண்டிய எடுத்துட்டு போனவனுக்குதானே.. அதை பத்தி தெரியும்.

ஆம் பூட்டின வண்டியை, ஆள் வைத்து தூக்கி போவது, நம் காவல் துறைதான். என்ன கொடுமை சார் இது. நகரின் முக்கியமான பகுதிகளில், அதுவும், பிரபலமான தெருக்களில் வணிக வளாகம், அல்லது அரசு அலுவலகமோ, இன்சூரன்ஸ் கம்பெனிகளோ.. யாருடய இடத்திலும் நம்முடய வண்டியை பார்க் செய்ய வசதியிருப்பதில்லை. அதிலும் முக்கியமாய் யாராவது மவுண்ட் ரோடு சிட்டி பேங்க் பார்க்கிங் நிலைமையை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். காவல் துறை பார்க்கிங் ஏரியா என்று அறிவித்திருக்கிற இடங்களை விட நோ பார்க்கிங் அறிவித்திருக்கும் இடம் தான் அதிகம்.

அவசரத்தில் அதுவும் ஆபீஸ் போகும் நேரத்தில் பேங்க் வேலையாய் வருபவர்கள், பாங்கின் வாசலில் வண்டியை விட்டுவிட்டு போய் வந்து பார்த்தால்.. வண்டியை காணாமல், அதிர்ந்து போய் நிற்பவர்கள் அதிகம். அங்கிருக்கும் ஆட்கள் சொல்லித்தான் தெரியவரும், வண்டியை காவல்துறை ஆள் வைத்து டோ வண்டியில் ஏற்றிக் கொண்டு போனது. சுமார் 150 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கிறார்கள். அலுவலகம்போகும் அவசரத்தில் இருப்பவர்களின் வண்டியை தூக்கி கொண்டு போய் அலைய வைப்பது அவர்க்ளுக்கு மன உளைச்சலையே தரும்.

வரும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாய் பார்க்கிங் வசதி செய்யாத பாங்கி நிர்வாகத்துக்கோ. அல்லது அந்த கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்த நிர்வாகிகளுக்கோ, காவல்துறை ஃபைன் போடுவதில்லை.. மாட்டுவது நம் மக்களே.. ஏன் அவர்களுக்கு எந்தவிதமான நோட்டீஸோ, அபராதமோ விதித்து, பொதுமக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தர நம் காவல் துறை உதவ மாட்டேன் என்கிறது.

சட்டமீறல்களுக்காக தண்டிப்பதை நான் மதிக்கிறேன். ஆனால் ஒருவனுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு , அதை மீறினால் அவனை தண்டியுங்கள். ரோடில் பார்க்கில் செய்யக்கூடாது என்று நீங்கள் சட்டம் போட்டால், அந்த இடத்தில் அவனுக்கு வண்டியை பார்க் செய்ய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு அதை மீறினால் தண்டிக்கலாம். வசதிகளை செய்து கொடுக்காத, கட்டிட உரிமையாளர்களையும், நிறுவனங்களையும் தண்டிக்காமல் பொது மக்களை தண்டிப்பது என்ன நியாயம்.? இந்த கொடுமையெல்லாம் நம்மூர்ல தான் நடக்கும்..
Post a Comment

70 comments:

சண்முக சுந்தரம் said...

நியாயமான கோரிக்கை..உங்க பேச்சுல இருக்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு

ஆனந்தன் said...

என் நண்பனுக்கு கூட நீங்கள் சொன்னது போல ஒரு அனுபவம் ஏற்பட்டது . போய்அவுங்களுக்கு தண்டம் அழுதுட்டு வண்டிய எடுத்தோம்.

அவுங்கள மாத முடியாது சார்.

தராசு said...

எதாவது செய்யணும் பாஸ்

Cable Sankar said...

/நியாயமான கோரிக்கை..உங்க பேச்சுல இருக்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு//

ரொம்ப நன்றிங்க சண்முகசுந்தரம்..

Cable Sankar said...

என் நண்பனுக்கு கூட நீங்கள் சொன்னது போல ஒரு அனுபவம் ஏற்பட்டது . போய்அவுங்களுக்கு தண்டம் அழுதுட்டு வண்டிய எடுத்தோம்.
//

அப்படியே விட்டுறதா..? ஏதாவது செய்யணும்.. முயற்சி செஞ்சா.. கண்டிப்பாய் முடியும்
ஆனந்தன். ஒரு டிராபிக் இராமசாமி போட்ட கேஸூ பில்டிங் கட்டறதுக்கு எவ்வள்வு ரூல்ஸ் வந்திருக்கு.. அதனால் முதல்ல நம்பணும்.. முடியும்னு..

Cable Sankar said...

/எதாவது செய்யணும் பாஸ்//

இதாண்ணே தராச்ன்னேன்னு சொல்றது.. நான் நாலு வரில சொன்னத ஒரே வரியில சொல்லிட்டீங்க.. அதனால் எனக்கு உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு..:)

Sukumar Swaminathan said...

இதை எல்லாம் நிறுத்தனும்.....................நாம ஒரு கட்சி ஆரம்பிக்கணும் அப்பதான் முடியும்.... நீங்கதான் தலைவர்.. நான் கொ.ப.செ.

சரவணகுமரன் said...

பைக் இன்டிகேட்டர வேற உடைச்சி தருவாங்க...

நர்சிம் said...

கேபிள்.. ஹாஸ்பிடல் வாசலில் இந்தக் கொடுமை நடக்கிறது அல்லது எனக்கு நடந்தது என்பதை இப்பொழுது நினைத்தாலும் பதறுகிறது. ஏதாவது செய்யணும் பாஸ்

நையாண்டி நைனா said...

/*Sukumar Swaminathan said...
இதை எல்லாம் நிறுத்தனும்.....................நாம ஒரு கட்சி ஆரம்பிக்கணும் அப்பதான் முடியும்.... நீங்கதான் தலைவர்.. நான் கொ.ப.செ.*/

நான்தான் பொருளாளர்.

நாஞ்சில் நாதம் said...

நியாயமான கருத்து. ஏதாவது செய்யணும் பாஸ்

Cable Sankar said...

/இதை எல்லாம் நிறுத்தனும்.....................நாம ஒரு கட்சி ஆரம்பிக்கணும் அப்பதான் முடியும்.... நீங்கதான் தலைவர்.. நான் கொ.ப.செ.//

ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. அடுத்த கட்சிய..

டக்ளஸ்....... said...

என்ன செய்யாலாம் பாஸ்...!

( நீங்க பதிவு போடுங்க, நான் பின்னூட்டம் போடுறேன்..!)
:)

Cable Sankar said...

/பைக் இன்டிகேட்டர வேற உடைச்சி தருவாங்க...
//

ஆமாம் இது வேற.. அதுக்கெல்லாம் நமக்கு கேட்க ரைட்ஸே கிடையாது..

டக்ளஸ்....... said...

\\நையாண்டி நைனா said...
நான்தான் பொருளாளர்.\\

யோவ் நைனா, நீ அடங்கவே மாட்டயா..?

Cable Sankar said...

/கேபிள்.. ஹாஸ்பிடல் வாசலில் இந்தக் கொடுமை நடக்கிறது அல்லது எனக்கு நடந்தது என்பதை இப்பொழுது நினைத்தாலும் பதறுகிறது. ஏதாவது செய்யணும் பாஸ்
//

தமிழக காவல்துறைக்கு எஸ்.எம்.எஸ் ஸோ.. அல்லது மெயிலோ அனுப்பினால் என்ன.. நாம் எல்லோரும் சேர்ந்து..நர்சிம்

Cable Sankar said...

/நான்தான் பொருளாளர்//

நைனா..கட்சி ஆரம்பிச்சா.. அதுக்குதானே போட்டி இருக்கும்.. அத விட்டுருவேனா.. அதுவும் நானே

Cable Sankar said...

/நியாயமான கருத்து. ஏதாவது செய்யணும் பாஸ்
//


நான் மேலே சொன்னது போல எல்லோரு ம் சேர்ந்து ஒரு மெயில் அனுப்புவோம் நம் கமிஷனருக்கு.. ஏதாவது செய்யணுமில்ல..

Cable Sankar said...

/

( நீங்க பதிவு போடுங்க, நான் பின்னூட்டம் போடுறேன்..!)
:)//

டக்ளஸூ ஒரே காமெடி..

Anbu said...

நியாயமான கோரிக்கை அண்ணா..

உங்களோட நேர்மை என்க்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா..

Anbu said...

சசிகுமாரின் அடுத்த படம் எப்போது அண்ணா..??

மேலும் ஞாபகங்கள் பட விமர்சனம் போடாததற்கு வண்மையாக கண்டிக்கிறேன்..

தண்டோரா said...

ஒரு நண்பர் பைக்கை சுவற்றில் சாய்த்து விட்டு அப்படியே விட்டு விட்டு போய் விடுவார்..அதை ஒரு பய தொடமாட்டான்..யார்னு சரியா சொன்னிங்கன்னா ஒரு செட் பணியாரம் பரிசு....

Maduraimalli said...

பாசு உங்க வண்டிய சமிபத்திலே மிஸ் பண்ண மாதிரி இருக்கே.. என்ன நடந்தது cable?

வினோத்கெளதம் said...

சமிபத்துல எங்கயோ வசமா மாட்டி தண்டம் அழுது இருக்கீங்க போல..:)

jackiesekar said...

சட்டமீறல்களுக்காக தண்டிப்பதை நான் மதிக்கிறேன். ஆனால் ஒருவனுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு , அதை மீறினால் அவனை தண்டியுங்கள்.-//

வழி மொழிகின்றேன்....

Cable Sankar said...

//மேலும் ஞாபகங்கள் பட விமர்சனம் போடாததற்கு வண்மையாக கண்டிக்கிறேன்..//

pottu oru vaaram aavuthu... thinam vanthu padicchaa thanee.. anbu

Cable Sankar said...

//ஒரு நண்பர் பைக்கை சுவற்றில் சாய்த்து விட்டு அப்படியே விட்டு விட்டு போய் விடுவார்..அதை ஒரு பய தொடமாட்டான்..யார்னு சரியா சொன்னிங்கன்னா ஒரு செட் பணியாரம் பரிசு...//

R la aarambichu.. yaa la mudiyuma..

paniyaaram readyaa vainga..

Cable Sankar said...

//பாசு உங்க வண்டிய சமிபத்திலே மிஸ் பண்ண மாதிரி இருக்கே.. என்ன நடந்தது cable?//

illa baasu.. enakku ethuvum aakala.. romba naalaa intha problem pathhi ezhuthanumnu iruntheen. athaan.

Cable Sankar said...

//சமிபத்துல எங்கயோ வசமா மாட்டி தண்டம் அழுது இருக்கீங்க போல..:)//

illa vinod.. appadi ethum illai..

நையாண்டி நைனா said...

/*
Cable Sankar said...
//ஒரு நண்பர் பைக்கை சுவற்றில் சாய்த்து விட்டு அப்படியே விட்டு விட்டு போய் விடுவார்..அதை ஒரு பய தொடமாட்டான்..யார்னு சரியா சொன்னிங்கன்னா ஒரு செட் பணியாரம் பரிசு...//

R la aarambichu.. yaa la mudiyuma..

paniyaaram readyaa vainga..
*/

நான்கூட எங்க "தல"யோ என்று நெனச்சேன்...

$anjaiGandh! said...

//காவல் துறை பார்க்கிங் ஏரியா என்று அறிவித்திருக்கிற இடங்களை விட நோ பார்க்கிங் அறிவித்திருக்கும் இடம் தான் அதிகம். //

எல்லா ஊர்லையும் இந்தக் கொடுமை தான் சங்கர்ஜி.

ஜெட்லி said...

அண்ணே இதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது...
பார்க்கிங் வசதி செய்ஞ்சு கொடுத்த அவங்க எப்படி
சம்பாதிப்பாங்க........

பரிசல்காரன் said...

கடைசி பாராவுக்காக எழுந்து நின்று சல்யூட் அடிக்கிறேன் உங்களுக்கு!

அபுஅஃப்ஸர் said...

அண்ணே என்னத்த கத்தி என்னத்த செய்யாப்போறாங்க‌

ஒரு படத்துலே விவேக் இருக்குற ஆட்டோவை தூக்கினு போவாங்க அப்போ நான் எப்போ இன்டர்வியூ போறதுனு சொல்வாரு அந்த ஜோக்தான் ஞாபகம் வருது

D.R.Ashok said...

//இந்த கொடுமையெல்லாம் நம்மூர்ல தான் நடக்கும்// :-(

Anbu said...

//மேலும் ஞாபகங்கள் பட விமர்சனம் போடாததற்கு வண்மையாக கண்டிக்கிறேன்..//

pottu oru vaaram aavuthu... thinam vanthu padicchaa thanee.. anbu\\\

மன்னிக்கவும் அண்ணா..ஞாபகங்கள் பட விமர்சனத்திற்கு நான் கூட பின்னூட்டம் போட்டேன்..நான் சொல்ல வந்தது..சிரித்தால் ரசிப்பேன் பட விமர்சனம்.

Anbu said...

//மேலும் ஞாபகங்கள் பட விமர்சனம் போடாததற்கு வண்மையாக கண்டிக்கிறேன்..//

pottu oru vaaram aavuthu... thinam vanthu padicchaa thanee.. anbu\\\

மன்னிக்கவும் அண்ணா..ஞாபகங்கள் பட விமர்சனத்திற்கு நான் கூட பின்னூட்டம் போட்டேன்..நான் சொல்ல வந்தது..சிரித்தால் ரசிப்பேன் பட விமர்சனம்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆஹா..

எவ்ளோ தண்டம் அழுதீங்க மிஸ்டர் கேபிள்..?

உங்க லெவலுக்கு 5000 ரூபாய் பைன்னு சொன்னாலும் அசால்ட்டா தூக்கி வீசிட்டுப் போலாமே..!

150 ரூபாய்க்காக இப்படியொரு பதிவா..?

கேவலம்.. கேவலம்..!

affable joe said...

ஆஹா..

"எவ்ளோ தண்டம் அழுதீங்க மிஸ்டர் கேபிள்..?

உங்க லெவலுக்கு 5000 ரூபாய் பைன்னு சொன்னாலும் அசால்ட்டா தூக்கி வீசிட்டுப் போலாமே..!

150 ரூபாய்க்காக இப்படியொரு பதிவா..?

கேவலம்.. கேவலம்"

பாஸு 150 ரூபாய்னாலும் 1 ரூபாய்னாலும் சும்மா எவனும் குடுக்கிறது இல்ல கஷ்டப்பட்டு உழைச்சு தான் எல்லாரும் சம்பாதிக்றாங்க .பார்கிங் வைக்காம அப்புறம் எதுக்கு டே பில்டிங் கட்ரீக அதுல புடிங்கி திங்க போலீஸ் வேற இந்தியா வல்லரசு ஆயிடும் டே இப்படியே போன .

Anonymous said...

romba nalla iruku anne unga padhivu..
apdiye oru chinna request... andha hot spot snap konjam remove panniteenganna ungaluku punniyama pogumne.. kannu koosudhu...

sivakumar said...

Nan T-Nagar than irugan sankar Vedu munadi veda vanndi ya Thuganaga . Just miss Bikega kapathidan .

ரெட்மகி said...

நல்ல கேக்குறிங்க பாஸ் கேள்விய ...
இப்படி பல விஷயங்கள நாம சும்மா இருக்கோம் ...
என்னைக்கு நமக்கு பொறுப்பு வருமோ

நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...

உடுங்க தல . கேபிள் பவர காட்டியிருக்க மாட்டிங்க ... அடுத்த வாட்டி கேபில அப்படியே பக்கத்து பில்டிங்கோட சேர்த்து வண்டியை கட்டி புடுவோம்...எப்படி தூக்குறான்கன்னு பாத்துடுவோம் ...

ramalingam said...

அதிலும் வண்டிகளைத் தூக்கிப்போடும் அந்த எருமைமாடுகளுக்கு அதில் என்னதான் அப்படி ஒரு சந்தோஷமோ? அந்த ஏளனச் சிரிப்பும், திமிரும், தெனாவெட்டும்... இவர்களுக்கு பேங்க் வேலைதான் லாயக்கு!(லோன் வசூல் பண்ணும் வேலை)

சிராப்பள்ளி பாலா said...

இப்படித்தான் நானும் கிரடிட் கார்ட் பணம் கட்டுறத்துக்காக ராதாகிருஷ்ணணன் சாலையில் உள்ள ஆபிசுக்கு சென்றிருந்தேன். வண்டியை சைடு ரோடுல் ஓரமாகத்தான் நிறுத்தியிருந்தேன். பணம் கட்டிவிட்டு பத்து நிமிடத்தில் வந்து பார்த்தால் வண்டியை காணவில்லை. அப்புறம் அங்கிருக்கும் ஆட்கள் சொல்லித்தான் வண்டியை போலீஸ் சுட்டுட்டு சாரி எடுத்துட்டு போயிட்டாங்கன்னு.
வண்டியை எடுத்துட்டு போய் 1 கிலோ மீட்டர் தள்ளி நிறுத்து இருந்தனர்.
அப்புறம் என்ன தண்டமா 150 ரூபாய அழுதுட்டு வந்தேன்.

T.V.Radhakrishnan said...

நியாயமான கருத்து

Bala said...

கேபிள் அன்ன உங்க போஸ்ட் எல்லாம் நல்ல இருக்கு அனால்
விளம்பரம் என்பது எழுது பிழை. தயவு செய்து திருத்தவும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நாயமான கேள்வி.!

Cable Sankar said...

/நான்கூட எங்க "தல"யோ என்று நெனச்சேன்..//

என்ன நைனா நீயே இப்படி நினைச்சிட்டியே.. உன் தல அப்படியெல்லாம் மாட்டுமா..?

Cable Sankar said...

/நான்கூட எங்க "தல"யோ என்று நெனச்சேன்..//

என்ன நைனா நீயே இப்படி நினைச்சிட்டியே.. உன் தல அப்படியெல்லாம் மாட்டுமா..?

Cable Sankar said...

/எல்லா ஊர்லையும் இந்தக் கொடுமை தான் சங்கர்ஜி.//

ஆமாம் சஞ்செய்.. அதனால் தான் எதையாவது செய்யணும்னு தோணுது..

Cable Sankar said...

/அண்ணே இதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது...
பார்க்கிங் வசதி செய்ஞ்சு கொடுத்த அவங்க எப்படி
சம்பாதிப்பாங்க......//

அதுக்குத்தான் பெரிசா சம்பாதிக்கிறதுக்கு பில்டிங் ஓனர்ங்க, கம்பெனிகாரவுங்க இருக்காக இல்ல.. பொறவு என்ன..?ஜெட்லி

Cable Sankar said...

/கடைசி பாராவுக்காக எழுந்து நின்று சல்யூட் அடிக்கிறேன் உங்களுக்கு!/

எல்லாம் சரி.. சல்யூட் அடிச்சிட்டு கை நீட்ட கூடாது..:)

Cable Sankar said...

/அண்ணே என்னத்த கத்தி என்னத்த செய்யாப்போறாங்க‌

ஒரு படத்துலே விவேக் இருக்குற ஆட்டோவை தூக்கினு போவாங்க அப்போ நான் எப்போ இன்டர்வியூ போறதுனு சொல்வாரு அந்த ஜோக்தான் ஞாபகம் வருது
//

இப்படியேஎல்லாரும் யோசிச்சா எப்படி..? அபு அப்ஸர்

Cable Sankar said...

/ஆஹா..

எவ்ளோ தண்டம் அழுதீங்க மிஸ்டர் கேபிள்..?//

எனக்கு இதுவரை டூவீலரில் நடந்ததில்லை.. உங்கள மாதிரி முருக பக்தர்களுக்குதான் இம்மாதிரியான சோதனை வரும்...

//உங்க லெவலுக்கு 5000 ரூபாய் பைன்னு சொன்னாலும் அசால்ட்டா தூக்கி வீசிட்டுப் போலாமே..!

150 ரூபாய்க்காக இப்படியொரு பதிவா..?//

இதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். பின்னாடியே என் நண்பன் சொல்லியிருக்காரு பாரு.. வேற எதுனாச்சும் பதில் வேணுமா..

//கேவலம்.. கேவலம்..//

மதுரையில பிரியாணி கிடைக்காம செருப்பருந்து போய் அதையும் 32 பக்கத்துக்கு பதிவெழு வாங்கின கேவலத்தை விட இது ஒண்ணும் கேவலமில்லன்னு தோணுது அண்ணே..

Cable Sankar said...

நன்றி அசோக்,\

நன்றி அன்பு.. இதுவே முடியல அன்பு.. வர, வர ரிஸ்க் எடுக்க பயமா இருக்கு..

Cable Sankar said...

/பாஸு 150 ரூபாய்னாலும் 1 ரூபாய்னாலும் சும்மா எவனும் குடுக்கிறது இல்ல கஷ்டப்பட்டு உழைச்சு தான் எல்லாரும் சம்பாதிக்றாங்க .பார்கிங் வைக்காம அப்புறம் எதுக்கு டே பில்டிங் கட்ரீக அதுல புடிங்கி திங்க போலீஸ் வேற இந்தியா வல்லரசு ஆயிடும் டே இப்படியே போன ///

மிக்க நன்றி ஜோ... உங்கள் பின்னூட்டத்திற்கும், உ.தவுக்கு சவுக்கடி பதிலுக்கும்.

Cable Sankar said...

/romba nalla iruku anne unga padhivu..
apdiye oru chinna request... andha hot spot snap konjam remove panniteenganna ungaluku punniyama pogumne.. kannu koosudhu...//

மிக்க நன்றி ஜனனி..

Cable Sankar said...

/Nan T-Nagar than irugan sankar Vedu munadi veda vanndi ya Thuganaga . Just miss Bikega kapathidan .//

நம்ம கண்ணு முன்னாடியே தூக்குறானுங்க.. விட்டு முன்னாடி தூக்கிறதுக்கு என்ன சிவகுமார்.

Cable Sankar said...

/நல்ல கேக்குறிங்க பாஸ் கேள்விய ...
இப்படி பல விஷயங்கள நாம சும்மா இருக்கோம் ...
என்னைக்கு நமக்கு பொறுப்பு வருமோ//

மொதல்ல நாம கேட்க ஆரம்பிப்போம்.. ரெட்மகி..

Cable Sankar said...

/உடுங்க தல . கேபிள் பவர காட்டியிருக்க மாட்டிங்க ... அடுத்த வாட்டி கேபில அப்படியே பக்கத்து பில்டிங்கோட சேர்த்து வண்டியை கட்டி புடுவோம்...எப்படி தூக்குறான்கன்னு பாத்துடுவோம்//

மிக்க நன்றி நெல்லைக்கவி.. உங்கள் முதல் வருகைக்கும், ஐடியாவுக்கும்..:)

Cable Sankar said...

/அதிலும் வண்டிகளைத் தூக்கிப்போடும் அந்த எருமைமாடுகளுக்கு அதில் என்னதான் அப்படி ஒரு சந்தோஷமோ? அந்த ஏளனச் சிரிப்பும், திமிரும், தெனாவெட்டும்... இவர்களுக்கு பேங்க் வேலைதான் லாயக்கு!(லோன் வசூல் பண்ணும் வேலை//

ஆமாம் ராமலிங்கம்.. அவங்க போர்க்லாக்கோட வண்டிய தூக்கிறத பார்த்தா.. வண்டி ஓனருக்கு ரத்த கண்ணீர் வரும்.

Cable Sankar said...

/இப்படித்தான் நானும் கிரடிட் கார்ட் பணம் கட்டுறத்துக்காக ராதாகிருஷ்ணணன் சாலையில் உள்ள ஆபிசுக்கு சென்றிருந்தேன். வண்டியை சைடு ரோடுல் ஓரமாகத்தான் நிறுத்தியிருந்தேன். பணம் கட்டிவிட்டு பத்து நிமிடத்தில் வந்து பார்த்தால் வண்டியை காணவில்லை. அப்புறம் அங்கிருக்கும் ஆட்கள் சொல்லித்தான் வண்டியை போலீஸ் சுட்டுட்டு சாரி எடுத்துட்டு போயிட்டாங்கன்னு.
வண்டியை எடுத்துட்டு போய் 1 கிலோ மீட்டர் தள்ளி நிறுத்து இருந்தனர்.
அப்புறம் என்ன தண்டமா 150 ரூபாய அழுதுட்டு வந்தேன்.
//

நன்றி சிராப்பள்ளி அபாலா.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.

Cable Sankar said...

/கேபிள் அன்ன உங்க போஸ்ட் எல்லாம் நல்ல இருக்கு அனால்
விளம்பரம் என்பது எழுது பிழை. தயவு செய்து திருத்தவும்.
//

மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு.. அது பிழையில்லை.. வேண்டுமென்றே எழுதப்பட்டது தான்பாலா..

Cable Sankar said...

/நாயமான கேள்வி.//

உங்களுக்கும், மக்களுக்கும் தெரியுது, அரசாங்கத்துக்கு தெரியலையே.. ஆதி..

வண்ணத்துபூச்சியார் said...

தல..

சென்னையில திங்கட்கிழமை காலையில் ஒன்பது மணிக்கு Just one hour..சைதாப்பேட்டையிலிருந்து மவுண்ட் ரோடு வரை நடு ரோட்ல Two wheeler parking போராட்டம் நடத்தலாம்..

சும்மா 1000 வண்டிய நிறுத்தணும்..

எப்பூடி..??

Cable Sankar said...

/தல..

சென்னையில திங்கட்கிழமை காலையில் ஒன்பது மணிக்கு Just one hour..சைதாப்பேட்டையிலிருந்து மவுண்ட் ரோடு வரை நடு ரோட்ல Two wheeler parking போராட்டம் நடத்தலாம்..

சும்மா 1000 வண்டிய நிறுத்தணும்..

எப்பூடி..??//

நல்லாத்தான் இருக்கு.. ஆயிரம் பேருக்கு போராட்டம் நடத்த 200 ரூபாயும், பிரியாணியும் யார் கொடுக்கிறதுன்னுதான் யோசிக்கணும்..

" உழவன் " " Uzhavan " said...

பதிவர்கள் சார்பாக ஊர்வலம் போயி மனு குடுக்கலாமா பாஸ்?

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

மங்களூர் சிவா said...

மெட்ராஸ்லயா இப்பிடி :((((((