Posts

Showing posts with the label கேபிள் சங்கர்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.

 ஒவ்வொரு முறை அவரின் ஊரூக்கு செல்லும் போது அவரை சந்திக்க வேண்டுமென்று தோன்றிக் கொண்டேயிருக்கும். அவரின் குரலும் என் குரலும் இருவருக்கும் பரிச்சயம். நேரில் பார்த்திருக்கிறோமா? இல்லையா? என்றே நியாபகத்தில் இல்லை. என் நியாபகத்தில் இதுவரை நான் அவரை பெயர் சொல்லி அழைத்ததாய் நினைவில்லை. அவருக்கு என் பெயர் தெரியும். கேபிள் சங்கர் என்றோ அல்லது சங்கர் என்றோ சொன்னால் போதும்.  நானும்வ் அவரும் ஒரே தொழிலில் இருப்பது எங்கள் பேச்சுக்கு காரணம். அதைத்தாண்டி நாங்கள் இதுவரை பேசியதாய் கூட நினைவில்லை.  இந்த முறை அவரது ஊருக்கு போன பின் உடனடியாய் அவரை அழைத்து பேச வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். காரணம் எத்தனை நாள் தான் தயக்கம் கொண்டு அவரை சந்திக்காமல் இருப்பது?. தயக்கத்திற்கு காரணம் மெய்யழகன் பிரச்சனை தான். என் மொபைலில் அவரது பெயரில்லாமல் சேவ் செய்திருந்ததும் ஒரு காரணம். ஒவ்வொரு முறை அவர் வாத்சல்யமாய் போனில் பேசும் போதும் சாரி உங்க பேர் மறந்துட்டேன் அப்படி என்று கேட்க அவமானமாய் இருந்தது. உடனே மெய்யழகனுக்கு சொன்னது போல பெயர் கண்டுபிடிக்கிறது எல்லாம் பெரிய விஷயமா? எத்தனையோ டெக்னாலஜி இருக்கு? என...

சாப்பாட்டுக்கடை- அபு பாய் பிரியாணி- அண்ணாநகர்

கொஞ்சம் காஸ்டிலியான ஹைஃபை கடைகளுக்கு எப்படி காதர் நவாஸ்கான் ரோடு பிரபலமோ அப்படித்தான் சின்னபட்ஜெட் கடைகளுக்கு அண்ணாநகர் சாந்தி காலனி ஏரியா. ஆனால் இப்போது அண்ணாநகர் ஒரு புட் ஸ்டாப்பாகவே மாறிவிட்டது. ஏகப்பட்ட உணவுக்கடைகள் தெருவெங்கும் கடை விரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சின்னக் கடையாய், கிஸோக்குகளாய் ஆரம்பித்து இப்போது தனி கடையே போடுமளவுக்கு வளர்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஓடிப் போனவர்களும் இருக்கிறார்கள். அப்படியான ஒரு பிரியாணிக்கடையாய்தான் இந்த அபு பாய் பிரியாணியை பார்த்தேன். குறிப்பாய் எந்த இன்ப்ளூயன்ஸர்களும் தினமும் அப்படியான பிரியாணி, இப்படியான பிரியாணி, வேற லெலல் என்று எல்லாம் அதிகம் கூவாத காரணத்தால் முதல் முறை சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டோம். என்னைப் பொறுத்தவரை பிரியாணியில் மட்டனைத் தவிர எது போட்டாலும் அது புவர் மேன்ஸ் பிரியாணிதான் என்பதால் நன்கு வெந்த பீஸுகளோடு நல்ல அளவோடு இருந்தது. அவர்களின் மசாலா தையல் இலையை விட பெட்டராகவே இருந்தது. சரி.. மட்டன் பிரியாணி என்னைக்கு போடுவீங்க? என்று கேட்டதற்கு வியாழன் என்றார்கள். சரி ஒரு வியாழன் அன்று கிளம்பிப் போனோம். நல்ல கூட்டம். மட...

டெலிவரி ஆஃபுகள் வரமா? சாபமா?

  டெலிவரி ஆஃபுகள் வரமா ? சாபமா ? சமீபத்தில் கும்பகோணத்திற்கு போயிருந்த போது சுவிக்கி டி சர்ட் போட்ட இளைஞர்களை ஆங்காங்கே பார்க்க முடிந்தது . அட இங்கேயும் வந்துட்டிங்களா மஹாப்பிரபு ?  என்று ஆச்சர்யப்பட ஏதுமில்லை . காரணம் லாஜிஸ்டிக் பிஸினெஸ் போல லாபம் வரும் தொழில் இல்லையென்றே சொல்ல வேண்டும் . ஆனால் அதற்கு சரியான எக்ஸிக்யூஷனும் , செயல் திறன் கொண்ட பின்னணியும் அமைய பெற்றிருக்க வேண்டும் . ஆன்லைன் உணவு டெலிவரி வியாபாரம் 2022 ஆம் ஆண்டின் கணக்குபடி 581.86 பில்லியன் ரூபாய்கள் என்றும் வருகிற 2028 க்குள் 3059.25 பில்லியன் வரை போகும் என்கிறார்கள் . இதில் உணவு டெலிவரி ஆப்களின் தொழில் வகைகளில் இரண்டு வகை உண்டு . ஒன்று எல்லா உணவகங்களையும் ஒன்றினைத்து அதன் மூலம் ஆர்டர்களை அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பி அவர்களைக் கொண்டே டெலிவரி செய்வது . இன்னொன்று ஆர்டர்களை தங்களது நிறுவன ஆட்கள் மூலம் பெற்று டெலிவரி செய்வது . இதில் இரண்டாவது வகைத்தான் இன்றைய பெரும் பிஸினெஸ் . உணவு டெலிவரி ஒரு காலத்தில் பிட்சா கடைக்க...