Posts

Showing posts with the label காஞ்சனா2

கொத்து பரோட்டா - 20/04/15

போன வாரம் எழுதின சாப்பாட்டுக்கடைக்கு நல்ல வரவேற்பாம்.  கடைக்காரர் போன் செய்து சொன்னார். நாற்பது பேர்களுக்கு மேல் வந்து சென்றிருப்பதாகவும், ரொம்ப சந்தோஷமென்றார். டயட்டிலிருக்கும் என்னை டெஸ்ட் செய்து பார்க்கவைக்கும் காலமிது. வாரம் ஒரு நாள் சீட்டிங் டேயில் நடத்தி விடுகிறேன் என் ஆட்டத்தை. அன்றைக்கு என்னைக் கூட்டிப் போன ரகோ நேற்று ஈ.சி.ஆரில் ஒரு உணவத்தில் சாப்பிட்டுவிட்டு என்னைப் பற்றி சொல்லியிருக்கிறான். கடைக்காரர் ஒரு நிமிஷம் இருங்க என்று சொல்லிவிட்டு, யாருக்கோ போன் செய்து “நீங்க யார் பெயரையோ சொன்னீங்களே அவரு பேர் என்ன என்று கேட்டிருக்கிறார்.