மலையன் - திரைவிமர்சனம்
கரண் ஹீரோவாய் வெற்றி பெற்ற படஙக்ள் எல்லாம் வழக்கமான மசாலா படஙக்ளிலிருந்து விலகி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தததால் என்பதால் இந்த படமும் அதே போல் இருக்கும் என்று நினைத்து போயிருந்தால் கொஞ்சம் மட்டு என்று தான் சொல்லவேண்டும் கந்தகபூமியான சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் முதலாளி சரத்பாபுவுக்கு எல்லாமாக் இருக்கும் கரண், அவருக்கு ஒன்றென்றால் துடித்து போய் விடுவார். அவர்களின் தொழில் எதிரிகளாக எம்.எஸ்.கே சன்ஸின் முதலாளிகளான சக்திகுமாரும், அவருட அப்பா ராஜன்.பி.தேவும். இவர்களுக்குள் நடக்கும் தொழில் போட்டி, பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிற்சாலை தொழிலாளிகளின் வாழ்க்கை, சரத்பாபுவின் பாக்டரியில் நடக்கும் விபத்தில் தன் காதலி உட்பட தன்னுடன் வேலை செய்த தோழர்களையும் இழந்து தவிக்கும் கரணுக்கு, நடந்தது விபத்தல்ல என்ற உண்மையை கண்டுபிடிக்கிறான். அதனால் ஏற்படும் திருப்பம் தான் க்ளைமாக்ஸ்.. படம் முழுக்க கரண் தன்னுடய ஆளுமையை விரவியிருக்கிறார். தன் முதலாளிக்கு ஒன்று என்றால் துடிக்கிற துடிப்பும், துள்ளுகிற ஆவேசமும், அலையும் கரண், கதாநாயகி ஷம்மு ஒரு அதட்டல் விட்டதும் பவர் இறங்கிய டூர...