Posts

Showing posts with the label திரை விமர்சனம் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி

ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி

Image
சில ஆயிரங்கள் செலவில் நடத்தப்படும் நாடகங்களுக்கு ரிகர்சல் பார்க்கும் போது, ஏன் லட்சம் கோடி செலவு செய்யும் சினிமாவிற்கு ரிகர்சல் எடுக்கக் கூடாது என்று கமல்ஹாசன் சொன்னதை வைத்து நடிகர்களுக்கு ரிகர்சல் பார்த்து எடுக்கப்பட்ட படம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். முகமே காட்டாத ஒரு காதல் பாடல் வேறு இருக்கிறது என்றார்கள். சமயங்களில் சில படங்களுக்கு அருமையான டைட்டில் கிடைத்துவிடும்.  அது ஒரு எதிர்பார்ப்பை கொடுத்துவிடும். அப்படி கொடுத்த பெப்பை தக்க வைத்துக் கொள்ளுமா? என்று பார்த்தால் சில படங்கள் தக்க வைத்துக் கொண்டுவிடும். அப்படி இந்த தேன்மொழி தக்க வைத்துக் கொள்வாளா? என்ற கேள்வியோடு படம் பார்க்க ஆரம்பித்தேன்.