சாப்பாட்டுக்கடை - திருச்சி சேதுராமன் மெஸ்
பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்சுக்கு முன்னால் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். தோழி ஒருவர் ஊரிலிருந்து வந்திருக்க, விருந்தோம்பலுக்கான அங்கே போனோம். அதுவும் இரவு சாப்பாட்டிற்கு . அம்முறை மட்டன் தோசையும், சிக்கன் தோசையும், காடையும் ஆர்டர் செய்திருந்தோம். தோசையின் நடுவில் சிக்கன் மற்றும் மட்டன் தொக்குகளை ஸ்ப்ரெட் செய்து முறுகலாய் கொடுத்திருந்தார்கள். காடை கொஞ்சம் சவசவவென்றே இருந்தது மட்டுமில்லாமல் தித்திப்பாகவும் இருந்தது எனக்கு உவப்பாக இல்லை. அது பற்றி சொன்னேன். நீங்க மதிய சாப்பாடு சாப்ட்டிருக்கீங்களா? என்று கேட்டார் கடையின் சிப்பந்தி. இல்லை என்றேன். ஒரு நா வந்து சாப்டு போங்க என்றழைப்பு விடுத்தார். இயக்குனர் மகேந்திரனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நானும் என் உதவியாளர் சுரேஷும் அகோர பசியில் மதிய சாப்பாட்டுக்கு போனோம். கிட்டத்தட்ட மூன்று மணியளவில். இலை போடப்பட்டு தயாரானவுடன், “சார்.. நெத்திலி கருவாட்டு தொக்கு போடலாமா?” என்று கேட்டு ஆரம்பித்ததுதான் வரிசைக்கிரமமாய் அயிட்டங்களின் அணிவகுப்பு. ஒரு கூட்டு, ஒரு பொரியல், சாதம், சிக்கன் தொக்கு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, ந...