மதுரை- தேனி – திரை விமர்சனம்
மதுரையிலிருந்து தேனிக்கு செல்லும் பஸ்ஸில் நடக்கும் ஒரு நாள் கதை. அட போட வைக்கும் லைன் தான். வாத்யார் வேலை கிடைத்து தேனிக்கு முன் உள்ள ஒரு கிராமத்தில் வேலையில் சேருவதற்காக மதுரையிலிருந்து தேனிக்கு செல்கிறான் ஹீரோ. பஸ்ஸ்டாண்டில் ஹீரோயினை பஸ் ரிவர்ஸ் எடுக்கும் போது நடக்கவிருந்த விபத்திலிருந்து காப்பாற்றுகிறான். உடனே அவளிடம் மனதை பறிகொடுக்கிறான். பஸ் மதுரையிலிருந்து ஆண்டிப்பட்டி வழியாக, தேனி போவதற்குள் அவன், அவளிடம் காதலை சொன்னானா இல்லையா.. என்பது தான் படம். கதையின் லைன் சொல்லும் போது இண்ட்ரஸ்டாக இருந்தாலும், நிகழும் சம்பவஙக்ள் சுவாரஸ்யமாய் இல்லை. ஆனா.. ஊனா என்றால் காமெடி செய்கிறேன் என்று நெல்லை சிவா, முத்துக்காளை, படத்தில் வரும் ரஜினி ரசிக கண்டக்டர், என்று எல்லோரும் காமெடியாய் தான் செய்ய முயற்சிக்கிறார்கள் ஆனால் சிரிப்புதான் வர மாட்டேன் என்கிறது. ஹீரோவை, ஹீரோயின் காதலிக்க, அவனை புத்திசாலியாகவும், நல்லவனாகவும் காட்ட வைக்கப்பட்ட காட்சிகள், காமெடியின் உச்சம். ஒரு பெரிய ஊர் கூட்டம் பஸ்ஸை மரித்து குடிநீருக்காக போராட, யார் சொல்லியும் கேட்காதவர்கள், ஹீரோ வந்து ஒரு பத்து நிமிஷம் ப...