குழந்தையை கடத்தும் ஒரு பெண்னைபற்றி கதாநாயகி தகவல் கொடுத்து அவள் பிடி படுகிறாள். பத்திரிக்கை கார மனைவியும், நியூரோ சர்ஜன கணவன், மிக அன்னியோன்யமான தம்பதிகள், ஒரு நாள் பாரில் ஒருவன் அறிமுகமாகிறான். தனக்கு ஈ.எஸ்.பி பவர் உள்ளதாகவும், தான் சொல்வதெல்லாம் நடக்கிறது என்று சொல்கிறான். பின்பு அவன் சொல்லும் விஷயங்கள் எல்லாம் நடக்க, அவன் மீது நம்பிக்கை கொள்கிறான். ஒருநாள் அவன் கதாநாயகனை அழைத்து அவன் இன்னும் 10 நாட்களில் இறக்க போவதாகவும், அதற்கு காரணம் அவனது மனைவி என்று சொல்கிறான். அவன் சொன்னபடி நடந்ததா இல்லையா என்பதே கதை.
சொல்லும் போது பரபாப்பாக இருப்பது போல தோன்றும் கதை. படத்தை பார்க்கும் போது ஆமை ஸ்லோ.. அதிலும் முழுவது புது முக நடிகர்கள், ஆளுக்கு 2000$ கொடுத்து நடிதிருப்பார்கள் போலிருக்கிறது. படு அமெஞ்சூர் தனம். ஹைடெபனிஷன் டிஜிட்டல் கேமராவில் படம்பிடித்திருகிறார்க்ள். படம் முழுவதும், கலிபோர்னியாவிலும், சான் ப்ரான்சிஸ்கோவிலும் எடுத்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் நகருவேனா என்கிறது திரைக்கதை. பாதி நேரம் இங்கிலீஷிலேயே பேசிக் கொள்கிறார்கள். எடிட்டர் லெனின் படு பயங்கர முயற்சி செய்தும் படத்தின் பேஸை காப்பாற்ற முடியவில்லை. பிண்ணனி இசை இங்கிலீஷ் சீரியல். ஒளிப்பதிவு ஸோ.. ஸோ..
நடிப்பில் எல்லோரும் அரை செகண்ட் கழித்துதான் ரியாக்ஷன் கொடுக்கிறார்கள் அதில் தரனாக வரும் நடிகர் பரவாயில்லை. மிக இயல்பாய் நடித்திருக்கிறார். ஒரு வேளை மற்றவர்களின் நடிப்பை பார்த்ததினால் அப்படி தெரிகிறாதோ என்னவோ..
இயக்குனர்கள் நட்டி குமாரும் & கிரிஷ் பாலாவும் பணம் போட்டிருப்பதால் இயக்குனர்கள் ஆகியிருக்கிறார்கள். நட்டி குமார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
படத்தின் விளம்பரங்களில் “தமிழ் சினிமாவின் தலையெழுத்தை மாற்றப்போகும் படம்” என்று விளம்பரபடுத்தியிருக்கிறார்கள்… தமிழ் சினிமாவின் த்லையெழுத்து இவர்கள் வந்து மாற்றும் அளவுக்கு மோசமாய் இல்லை என்பதை தயை கூர்ந்து யாராவது சொல்லுங்கப்பா. முடியலை.
மெய்பொருள் – காண்பதறிவு.
டிஸ்கி:
படம் முடிந்து எழுத்து பிக்சர் முடியிற வரைக்கும் நானும் இன்னொருவரும் பார்த்து கொண்டிருந்தோம். வெளியே வந்த போது அவர் நொந்து போய் என்ன சொல்ல வர்றாங்க சார்.. ஒண்ணும் புரியலையே என்று சொல்ல, நான் படத்தின் கதையை கடகடவென சொல்ல, இது நல்லாருக்கே இதுவா படத்தோட கதை என்றார். அவரும் ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் சமீபத்தில் வெளியான விக்னேஷ் நடித்த குடியரசு திரைப்படம் அவருடையதுதான். கார்டெல்லாம் கொடுத்து பிறகு பேச சொன்னார். நான் குடியரசு படத்தை பார்க்கவில்லை.
Comments
அண்ணே..புரடீயூசர் கிடைச்சுட்டாப்லயாண்ணே...!
ஆட்டோலே "பொருள்", அடிவாங்காம தப்பிப்பது ஆண்டவன் அருள்.
ரொம்ப நன்றி தல .......
காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி தலைவரே .......
////
அதுசரி பின்னால நடக்கிறதை முன்னாடியே சொல்லும் கதைன்னு சொல்றீங்க... தமிழ் சினிமாவுக்கு இது ஒன்னும் புதிதில்லையே... இந்த களத்தில் ஏதோ ஒரு பழைய படம் பார்த்த நியாபகம் இருக்கு
/////
//
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.. முரளிகுமார்
அண்ணே..புரடீயூசர் கிடைச்சுட்டாப்லயாண்ணே...!
//
டக்ளஸூ காண்பதறிவு.. தான் புரிஞ்சிக்கங்க..
//
நன்றி முரளிகண்ணன்
ஆட்டோலே "பொருள்", அடிவாங்காம தப்பிப்பது ஆண்டவன் அருள்.//
படம் நல்லால்லைன்னு சொன்னா கூடவா ஆட்டோ அனுப்புவாங்க நைனா..
ரொம்ப நன்றி தல .......//
நான் உங்களை படத்துக்கு அழைத்து போகிறேன். நீங்கள் குவாட்டர் தருவீர்களா..? இன்னைக்கு..?
காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி தலைவரே .......//
கலீல் கிட்ட கேட்டிருக்கேன். கிடைச்சா மீட் பண்ணுவோம். அசோக்
//
ஒவ்வொரு வாட்டியும் நான் உங்களை இப்படித்தான் காப்பாத்துறேன். அதுக்கே நீங்க என்னை தனியா கவனிக்கணும் அக்னி..
///////
புதிசில்லைதான் நெல்லைதமிழ்.. ஆனாலும் ரொம்பவே மோசம்..
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி கவிதை காதலன்.
என்னைக்காவது நான் சினிமாவுக்கு செலவு செஞ்ச காசை திரும்ப கொடுத்துடும்ங்கிற நம்பிக்கையிலதான் .பாக்கறேன். ஆனா இன்னும் மரியாதை பாக்கல.. சார்..
காணபதறிவா?
இல்ல காண்பதரிதா?
காணாமல் இருப்பதுதான அறிவு?
இல்ல கண்டு காணாம போயிர சொல்லுரீங்களா?
காண்பது அறிவுனா, காண்பதுதான் நல்ல அறீவுன்னு ஆயிருமே.
காண்பது அரிதுன்னு சொன்னாக் கூட காணாமல் இருப்பது அறிவுன்னு தெரிஞ்சிருமே!
காணக் காண குழப்பமடா!
பின் குறிப்பு: உங்களூக்கு ஒரு விஷ பரிட்சை வச்சிருக்கேன். என் பதிவுக்கு வந்து நான் எழுதின சிறுகதை படிக்கனும்
///*மெய்பொருள் – காண்பதறிவு.*/
ஆட்டோலே "பொருள்", அடிவாங்காம தப்பிப்பது ஆண்டவன் அருள்.//
படம் நல்லால்லைன்னு சொன்னா கூடவா ஆட்டோ அனுப்புவாங்க நைனா..*/
அப்படி நான் சொல்ல வரலே... அண்ணே,
மெய்பொருள் – காண்பதறிவு
என்று நீங்க போட்டிருந்தீங்களா. அதை
மெய்ப்பொருள் - ஆட்டோலே பொருள்.
நாம அடிவாங்காம தப்பிப்பது ஆண்டவன் அருள் என்று சொல்ல வந்தேன்.
hahaha
nice
அப்படினா அண்ணனுக்கு அடுத்த பட ஹீரோ வாய்ப்பு இருக்கு :-)
Thank you..
Thank you very much..!
Very Very Thank you..!
Good night..
Please visit my blog
http://ennaduidu.blogspot.com/
டிஸ்கி... க்கு வாழ்த்துகள்.
நல்ல சேதிக்காக காத்திருக்கிறேன்.
டிஸ்கி... க்கு வாழ்த்துகள்.
நல்ல சேதிக்காக காத்திருக்கிறேன்//
:)
Please visit my blog
http://ennaduidu.blogspot.com/
//
நிச்சயமாய் பார்க்கிறேன் ராஜராஜன்.
Thank you..
Thank you very much..!
Very Very Thank you..!
Good night..
//
உண்மைதமிழன் இங்கிலீஷில் பின்னூட்டமிட்டதை வன்மையாய் கண்டிக்கிறேன்.
hahaha
nice
//
வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி சுபாஷ்..
//
அட்லீஸ்ட் அதுவாது கிடைக்குதான்னு பாப்போம். அனானி.. எதுக்கும் ஒரு பலன் இருக்கணுமில்ல..
//
ரெண்டு மூணு தியேட்டர்ல ஓடுது அத்திரி..
(தனி மனிதனுக்கு quarter இல்லையேல் டாஸ்மாக் கிநை அழித்திடுவோம் )
(தனி மனிதனுக்கு quarter இல்லையேல் டாஸ்மாக் கிநை அழித்திடுவோம் )
//
உடனடியா மெயில் பண்ணுங்க கலில் உங்க நம்பரை.. மீட் பண்ணிருவோம்... என்ன நான் சொல்றது..?
மேல இருக்க மொபைல் நம்பர் கமெண்ட் remove பண்ணிடுங்க தல