Thottal Thodarum

May 26, 2009

கோவை பதிவர் சந்திப்பு

திடீர்னு ஒரு டூர் ப்ரோக்ராம் போடலாமுன்னு தோணிச்சு. எங்க போகலாம்னு யோசிக்க ஆரம்பிச்ச போது, மூணாறு, டாப்ஸ்லிப்ன்னு ஒரே குழப்படியா இருந்துச்சு. சரி எதுக்கும் கோவைக்கு டிக்கெட் புக் பண்ணுவோம். அங்கேர்ந்து எங்க வேணும்னாலும் போய்கலாம்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன். சம்மர் ஸ்பெஷ்லா ஒரு ரயிலை விட்டிருந்தார்கள். காலை ஒன்பது மணிக்கு கிளம்பி நாலு மணிக்கு கோவையிலிருக்கும்னு சொன்னாங்க. அந்த பாடாவதி ட்ரையின் அரை கிலோமீட்டர் தூரத்தில ஒரு காக்கா கிராஸ் பண்ணாகூட வெயிட்டிங்கில போட்டு சுமார் ஏழு மணிக்கு கொண்டு போய் சேர்த்தான். சாயங்காலம் சீக்கிரம் போனவுடன் வெளியே சில பேரை சந்திக்கலாம்னு வச்சிருந்த ப்ரோக்ராம் கட்.
 

Image0151

கோவைக்கு போய் ரூமை போட்டதும் பரிசலுக்கு ஒரு போனை போட்டேன். கோவை பதிவர்கள் யாரையாச்சும் சந்திக்கணுமேன்னே..? கவலையே படாதீங்க ஒவ்வொருத்தரா உங்களுக்கு கால் பண்ண வைக்கிறேன்னு சொல்லிட்டு தான் ஞாயித்து கிழமை திருப்பூரிலிருந்து வந்து சந்திப்பதாய் சொன்னார். Image0152

நான் கொஞ்சம் ரிப்ரஷாகி வெளியே போய் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவதற்குள் ஒரு கால் வந்தது. “ஹலோ.. கேபிள்சங்கரா.. நான் வடகரை வேலன் பேசறேன். என்றார்  அண்ணாச்சி. மேற்படி என் ப்ரோக்ராமையெல்லாம் விசாரித்துவிட்டு, இன்று சந்திக்கலாமென்று என்று சொன்னவுடன் பத்து நிமிஷத்தில் ஹோட்டலில் இருப்பேன் என்றார். இருந்தார். பதிவுகளில் அவரது புகைப்டத்தை பார்த்து மரியாதை விஜயகாந்த் மாதிரி இருப்ப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். அதற்கு மாறாக ஜீன்ஸ், டிசர்ட் அணிந்தபடி, ஸ்டைலாய், என்னை போலவே யூத்தாய், காரின் மேல் சாய்ந்திருந்தார்.  பத்து நிமிஷத்தில் சஞ்செய்காந்தி வருவதாய் சொன்னார்.  செல்வேந்திரன் போன் அடித்து கொண்டேயிருந்தது. மீண்டும் அவர் செல்லை தொலைத்துவிட்டு வெறும் வேந்திரனாகிவிட்டாரோ என்று கேட்டபோது, இல்லை அவர் லோக்கல் யூடிவி சேனல் நடத்தும் T10 கிரிக்கெட் போட்டியில் விளையாட போய்விட்டார் என்றார்.  ஆனால் அவர் அந்த மேட்சில் டுவல்த் மேனாக்கபட்டதை அவர் சொல்ல கேட்டால் நன்றாக இருக்கும்.  சஞ்செய்யும் அடுத்த சில நிமிடங்களில் வந்தார். அவரும் ஒரு யூத்புல்லானவர் தான். (சந்தோஷமா சஞ்செய்). ராஜீவ் காந்தி போல இருந்தார்.

சிறிது நேர அளவலாவலுக்கு பிறகு சாப்பிட போகலாம் என்று கிளம்பினோம். ஹரி பவன் என்ற ஒரு ஹோட்டலுக்கு போனோம். பவன் என்றதும் ஏதோ ஆரியபவன் என்று நினைத்தேன்.  ஆனால் அங்கு சாப்பிட்ட சிக்கன் ரோஸ்ட் தோசை சும்மா பின்னி பெடலெடுத்துவிட்டது. அவ்வளவு சுவை. ஹோட்டலின் உள்ளே போகும் போதே செல்வேந்திரன் வ்ந்து ஜாய்ன் செய்து கொண்டார். பேச்சு பதிவுகள், அரசியல், சினிமா, செல்வேந்திரனின் டுவல்த் மேன் அனுபவம், என்று மிக சந்தோசமாய் கழிந்தது. அண்ணாச்சி தான் யூத்தாய் இருப்பதை பற்றி நான் சொன்னதை  அவருடய மகளிடம் செல்லில் சொல்ல சொல்லி உறுதிபடுத்தினார்.

Image0153

பதிவர் சீனா கோவைக்கு வருவதாய் சொன்னார் அண்ணாச்சி.. ஆனால் கிளம்பியதே லேட் ஆதலால் கோவைக்கு வந்து சேர  இன்னும் லேட் ஆகும் என்றார் அண்ணாச்சி. மணி பதினொன்னுக்கு மேல் ஆகிவிட்டதாலும், அண்ணாச்சி வேறு யாரையோ பிக அப் செய்ய வேண்டியிருந்ததாலும் கிளம்ப, செல்வேந்திரனும் கிளம்பினார். அண்ணாச்சியும், சஞ்செய்யும் என்னை ஹோட்டலில் டிராப் செய்துவிட்டு கிளம்பினார்கள்.

பதிவுலகில் எனக்கு பிடித்ததே பதிவுகளால் ஏற்படும் புதிய நட்புகள். காலேஜ் படிக்கும் காலத்தில் ஏற்படும் நட்பை போல..  எந்த விதமான பாசாங்குமில்லாத நட்புகள். ஒரு அருமையான அசை போடவைக்கும் சந்திப்பு. நன்றி நண்பர்களே..

டிஸ்கி

ஞாயிற்றுகிழமை வருவதார் சொன்ன பரிசல் வருவாரூ்ரூரூரூ… ஆனா வரமாட்டாரூரூரூ ரூ என்கிற ரேஞ்சில் வரவேயில்லை.. ஆனாலும் மனுஷனுக்கு ரொம்பத்தான் நக்கலுங்க.. நான் கோவைக்கு வந்திருக்கிறதை  பத்தி எல்லாத்துக்கு அனுப்பிச்ச எஸ்.எம்.எஸ் இருக்கே… அடுத்த முறை நேரில் பாக்கும் போது இருக்கு….


Post a Comment

49 comments:

பரிசல்காரன் said...

சந்திக்க முடியவில்லை என்பதைவிட ஞாயிறு காலை ஒரே நேரத்தில் இருவரும் காந்திபுரம் அன்னபூர்ணாவில் இருந்திருக்கிறோம் என்று மாலை அறிந்தபோது வருத்தமாய் இருந்தது.

Cable சங்கர் said...

//சந்திக்க முடியவில்லை என்பதைவிட ஞாயிறு காலை ஒரே நேரத்தில் இருவரும் காந்திபுரம் அன்னபூர்ணாவில் இருந்திருக்கிறோம் என்று மாலை அறிந்தபோது வருத்தமாய் இருந்தது.

//

ஆமாம் பரிசல்.. அதுசரி.. நீஙக் உள்ள சாப்டீங்களா.. இல்ல வெளியவா..?

தராசு said...

அப்ப எங்கூருக்கு போயிட்டு வந்திருக்கறீங்கன்னு சொல்லுங்க‌

Truth said...

ஃபோட்டோக்கு கீழயோ, மேலயோ, இல்ல சைடுலியோ அவங்கவங்க பேரப் போட்டா எங்கள மாதிரி புதுசா முளைச்சவங்களுக்கு யாருன்னு தெரிய வரும்.

anujanya said...

யோவ், உங்க ரெண்டு பேர் கிட்டயும் செல் போன் இருக்குல்ல? அப்பத்தான் பேசிக்கல. இப்பவாவது போன் போட்டு, உள்ளே வெளியே என்னென்ன சாப்பிட்டீங்கன்னு பேசித் தீர்த்துக்கோங்க. பசி வேளையில் சும்மா கடுப்பேறுது :)

இந்த மாதிரி நீட்டி முழக்கி பின்னூட்டம் போடுற நேரத்தில்....

சரி சரி யா யா மி தி எஸ்கேப்பு.

அனுஜன்யா

Ashok D said...

//பதிவுலகில் எனக்கு பிடித்ததே பதிவுகளால் ஏற்படும் புதிய நட்புகள். காலேஜ் படிக்கும் காலத்தில் ஏற்படும் நட்பை போல..எந்த விதமான பாசாங்குமில்லாத நட்புகள்//

நச் தலைவரே.. என்னையும் சேர்த்துதானே சொன்னீங்க??

தராசு said...

// Truth said...
ஃபோட்டோக்கு கீழயோ, மேலயோ, இல்ல சைடுலியோ அவங்கவங்க பேரப் போட்டா எங்கள மாதிரி புதுசா முளைச்சவங்களுக்கு யாருன்னு தெரிய வரும்.//

அந்த Hot Spot ல இருக்கற ஃபோட்டோவைத்தான சொல்றீங்க, அதுல பேரு எழுதறதுக்கு எங்க இடம் இருக்குது,

Thamira said...

அதற்கு மாறாக ஜீன்ஸ், டிசர்ட் அணிந்தபடி, ஸ்டைலாய், என்னை போலவே யூத்தாய்..//

ஊரு உருப்புட்டுரும்..!

Thamira said...

ஆனால் அங்கு சாப்பிட்ட சிக்கன் ரோஸ்ட் தோசை சும்மா பின்னி பெடலெடுத்துவிட்டது..//

யோவ் என்னாய்யா இது நா வந்திருந்தபோது இட்லியும், பொங்கலும் வாங்கிக்கொடுத்து ஏமாத்திட்டீங்களே.. படுபாவிகளா.?
அவ்வ்வ்வ்வ்..

Thamira said...

நான் கோவைக்கு வந்திருக்கிறதை பத்தி எல்லாத்துக்கு அனுப்பிச்ச எஸ்.எம்.எஸ் இருக்கே…//

அத்தப் போடுங்கய்யா.. முதல்ல..

நர்சிம் said...

என்னை போலவே யூத்தாய்,//

இதுக்கு நீங்க அவர அடிச்சிருக்கலாம்..ஹஹஹா

அருமையான கட்டுரை நடை தல..

கார்க்கிபவா said...

/
யோவ் என்னாய்யா இது நா வந்திருந்தபோது இட்லியும், பொங்கலும் வாங்கிக்கொடுத்து ஏமாத்திட்டீங்களே.. படுபாவிகளா.//

ஞாபகமிருக்கா ஆதி? காலைல சாப்பிட்டு இடத்த விட்டு நகரமுடியாம எல்லோரும் தவழ்ந்து சென்றது..

கேபிளண்ணே..பரிச்லை அவ்ளோ ஈசியா பார்க்க முடியுமா?

ttpian said...

just inform me if there is any seminar/programme:
how to write in tamilmanam?
please contact me:
9842778022
k.pathi
karaikal
pathiplans@sify.com

லோகு said...

எங்க ஊர் எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லங்களே அண்ணா

மணிஜி said...

?????

நையாண்டி நைனா said...

Present sir.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷங்கர்,

நீங்கள் கோவைக்கு வந்த செய்தி தெரியப்படுத்தி இருந்தால் நானும் சந்தித்திருப்பேன்.

பரிசல் அரசியல் செய்திவிட்டார் ;)

இந்த முறை யூத்தகள் பார்க்க வந்தீர்கள். அடுத்த முறை என்னை போன்ற பெருசுகளை சந்திக்க வரும்பொழுது தெரியப்படுத்தவும்.

குறிப்பு : நீங்களும் பரிசலும் சாப்பிட்ட அன்னபூர்ணாவிற்கு பின்புறம்தான் நான் இருக்கும் இடம் :)

butterfly Surya said...

குடும்பத்தோட போன இடத்திலும்....

முடியல..

இதுல "யூத்" வேற... ???

இன்னும் உ.த படிக்கவில்லை போலும்..

Cable சங்கர் said...

//அப்ப எங்கூருக்கு போயிட்டு வந்திருக்கறீங்கன்னு சொல்லுங்க‌//

அது உங்கூராண்ணே.. சொல்லியிருந்தா டிக்கெட்டே வாங்கியிருக்க மாட்டேனே..:)

Cable சங்கர் said...

//ஃபோட்டோக்கு கீழயோ, மேலயோ, இல்ல சைடுலியோ அவங்கவங்க பேரப் போட்டா எங்கள மாதிரி புதுசா முளைச்சவங்களுக்கு யாருன்னு தெரிய வரும்.//

நல்ல ஐடியா டுரூத்.
1 சஞ்செய் காந்தி
2 செல்வேந்திரன்
3 வடகரைவேலன்.

Cable சங்கர் said...

//யோவ், உங்க ரெண்டு பேர் கிட்டயும் செல் போன் இருக்குல்ல? அப்பத்தான் பேசிக்கல. இப்பவாவது போன் போட்டு, உள்ளே வெளியே என்னென்ன சாப்பிட்டீங்கன்னு பேசித் தீர்த்துக்கோங்க. பசி வேளையில் சும்மா கடுப்பேறுது :)

இந்த மாதிரி நீட்டி முழக்கி பின்னூட்டம் போடுற நேரத்தில்....

சரி சரி யா யா மி தி எஸ்கேப்பு.

அனுஜன்யா

//

:)

Cable சங்கர் said...

//நச் தலைவரே.. என்னையும் சேர்த்துதானே சொன்னீங்க??
//

இதிலென்ன சந்தேகம் அசோக்.

Cable சங்கர் said...

//அந்த Hot Spot ல இருக்கற ஃபோட்டோவைத்தான சொல்றீங்க, அதுல பேரு எழுதறதுக்கு எங்க இடம் இருக்குது,
//

அதானே.. எங்கனகுளள எழுதறது..

Cable சங்கர் said...

//ஊரு உருப்புட்டுரும்..!///

அவரு ஜீன்ஸ் போட்டதாலயா..? ஆதி..

Cable சங்கர் said...

//யோவ் என்னாய்யா இது நா வந்திருந்தபோது இட்லியும், பொங்கலும் வாங்கிக்கொடுத்து ஏமாத்திட்டீங்களே.. படுபாவிகளா.?
அவ்வ்வ்வ்வ்..//

காலையில போனா அதைத்தானே கொடுப்பாங்க..

Cable சங்கர் said...

//இதுக்கு நீங்க அவர அடிச்சிருக்கலாம்..ஹஹஹா//

வேலன்ணே.. இதெல்லாம் பொறாமையில சொல்றது.. மனசுல வச்சிக்காதீங்க..

//அருமையான கட்டுரை நடை தல..//
நன்றி தல..

Cable சங்கர் said...

//கேபிளண்ணே..பரிச்லை அவ்ளோ ஈசியா பார்க்க முடியுமா?
//

அப்ப கஷ்டமா பாக்குறதுன்னா எப்படி பாக்குறது..?

Cable சங்கர் said...

//எங்க ஊர் எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லங்களே அண்ணா//

ஏற்கனவே உங்க ஊருக்கு நான் வந்திருக்கேன். ரெண்டு மூணு வாட்டி.. எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர்.. லோகு. அடுத்த முறை கண்டிப்பா மீட் பண்ணுவோம்

Cable சங்கர் said...

//பரிசல் அரசியல் செய்திவிட்டார் ;)

இந்த முறை யூத்தகள் பார்க்க வந்தீர்கள். அடுத்த முறை என்னை போன்ற பெருசுகளை சந்திக்க வரும்பொழுது தெரியப்படுத்தவும்.

குறிப்பு : நீங்களும் பரிசலும் சாப்பிட்ட அன்னபூர்ணாவிற்கு பின்புறம்தான் நான் இருக்கும் இடம் :)
//

ஆமாம் சாமி.. அப்படிதான் போலருக்கு.. நிச்சயமாய் அடுத்த முறை உங்களை வந்து சந்திக்கிறேன்.. முடிந்தால் உங்கள் தொலைபேசி எண்ணை என் மின்னஞ்சலில் அனுப்பவும்.

Cable சங்கர் said...

//இதுல "யூத்" வேற... ???

இன்னும் உ.த படிக்கவில்லை போலும்..
//
அது என்ன தல உ.த..?

Cable சங்கர் said...

வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி, ஜூர்கேன்... கேள்விக்குறி போட்ட தண்டோரா அவர்களுக்கு.

குடந்தை அன்புமணி said...

//என்னை போலவே யூத்தாய்,//

ஆமாண்ணே... நானும் இரண்டு மூணுவாட்டி உங்களை பார்த்திருக்கேன். உங்க இளமையின் ரகசியத்தை காலேஜ் படிக்கிற பையன்கிட்ட கேட்கணும்னு இருந்தேன்....

க.பாலாசி said...

சார் அப்படியே ஈரோடு பக்கம் வந்தா கண்டிப்பா சொல்லுங்க சார்
My mobile number: 9003705598

selventhiran said...

சந்திக்க முடியவில்லை என்பதைவிட ஞாயிறு காலை ஒரே நேரத்தில் இருவரும் காந்திபுரம் அன்னபூர்ணாவில் இருந்திருக்கிறோம் //ஓ வாட் எ கோ- இன்ஸிடெண்ட்?

Cable சங்கர் said...

//ஆமாண்ணே... நானும் இரண்டு மூணுவாட்டி உங்களை பார்த்திருக்கேன். உங்க இளமையின் ரகசியத்தை காலேஜ் படிக்கிற பையன்கிட்ட கேட்கணும்னு இருந்தேன்....
//

இதை பத்தி ஏன் காலேஜ் பையன் கிட்ட கேட்கணும் என்கிட்ட கேட்டாலே போதுமே. குடந்தை அன்புமணி.. அட நம்மூர்காரரூ..

Cable சங்கர் said...

//சார் அப்படியே ஈரோடு பக்கம் வந்தா கண்டிப்பா சொல்லுங்க சார்
My mobile number: 9003705598

//

நிச்சயமா பாலாஜி.. அதுக்குமுன்னாலே போன்ல பேசலாம்..

Cable சங்கர் said...

//சந்திக்க முடியவில்லை என்பதைவிட ஞாயிறு காலை ஒரே நேரத்தில் இருவரும் காந்திபுரம் அன்னபூர்ணாவில் இருந்திருக்கிறோம் //ஓ வாட் எ கோ- இன்ஸிடெண்ட்?

//

:) அது சரி.. அந்த டுவல்த்மேன் கதைய கொஞ்சம் பதிவா போடுங்க.. செல்வேந்திரன்.

butterfly Surya said...

அருமை அண்ணன் சின்ன பதிவு புகழ் உண்மைதமிழன்....

வசந்த் ஆதிமூலம் said...

யூத் யூத் ன்னு சொல்லிகிரீயே அப்டீனா என்னபா ? இந்த வார்த்தையை எல்லோரும் யூஸ் பண்றத முதல்ல ஸ்டாப் பன்னனும்பா .... ரொம்ப ஓவரா கீது ...

Sanjai Gandhi said...

டைரக்டர் ஷங்கர், பதிவு போட்டாச்சா?.. சொல்லவே இல்ல.. :)

அதென்ன சஞ்சய் சந்தோஷமா? உள்குத்தா? இருக்கட்டும்..:))

செல்வேந்திரனின் 12த் மேன் கதையை விட போட்டோகிராபி க்ளாசில் அந்த பொடியனுங்க அடிச்ச லூட்டி தான் டாப்பு.. இப்போவே சொல்லிட்டேன்.. அதை நான் தான் பதிவா போடுவேன். :))

Sanjai Gandhi said...

என்ன தல, ஒரு குடிகாரனை போட்டோ எடுக்கிற மாதிரி எடுத்திருக்கிங்க?.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

செல்வேந்திரன்,
//ஓ வாட் எ கோ- இன்ஸிடெண்ட்?//

தொர என்னாமா இங்கிலீசு பேசுது? :)

Sanjai Gandhi said...

பரிசல் அனுப்பிய மெசேஜ் :

Famous director shankar is in coimbatore vasantham hotel opp railway station. If possible please talk to him or meet him. His No 98......... His another name : CABLE SANKAR!

Cable சங்கர் said...

//யூத் யூத் ன்னு சொல்லிகிரீயே அப்டீனா என்னபா ? இந்த வார்த்தையை எல்லோரும் யூஸ் பண்றத முதல்ல ஸ்டாப் பன்னனும்பா .... ரொம்ப ஓவரா கீது .//

ஏம்பா இப்டி.. காண்டாகுறீங்க..

Cable சங்கர் said...

//செல்வேந்திரனின் 12த் மேன் கதையை விட போட்டோகிராபி க்ளாசில் அந்த பொடியனுங்க அடிச்ச லூட்டி தான் டாப்பு.. இப்போவே சொல்லிட்டேன்.. அதை நான் தான் பதிவா போடுவேன். :))//

சரி..போட்டுக்கங்க.. ஐஸ்ட்ல மிஸ்..

Cable சங்கர் said...

//என்ன தல, ஒரு குடிகாரனை போட்டோ எடுக்கிற மாதிரி எடுத்திருக்கிங்க?.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((//

சாரி சஞ்செய்.. நைட்ல லைட் இல்ல. அவ்வளவுதான் வந்திச்சு.. என் போன்ல..

வால்பையன் said...

மூணாறு போட்டோ எப்போ?

கோபிநாத் said...

தல

எல்லாம் ரைட்டு அந்த எஸ்.எம்.எஸ் எங்க?? ஆவலுடன் இருக்கோம்ல ;)

உண்மைத்தமிழன் said...

கல்யாணம் பண்ணி நாலு, நாலு பிள்ளை பெத்தவங்கள்லாம் இப்படி நான் யூத்து.. நான் யூத்துன்னு உளறிக்கிட்டிருந்தா.. என்னை மாதிரி பேச்சுலர்லாம் என்னன்னு சொல்லிக்கிறதாம்..

யார் யார் யூத்துன்னு தெரிஞ்சுக்குறதுக்காக ஒரு டூரு.. கைல டப்பு நிறைய இருக்கு போலிருக்கு..

Sanjai Gandhi said...

//என்னை மாதிரி பேச்சுலர்லாம் என்னன்னு சொல்லிக்கிறதாம்..//

வாஜ்பாயி கூடத் தான் கல்யாணம் பண்ணிக்கலை.. அதுக்காக அவரை யூத்துன்னா சொல்ல முடியும்? :)