இயக்குனர் விஷ்ணுவர்தனின் பில்லாவுக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த படம். சர்வம். மனிதனின் வாழ்க்கையில் ஒரு நொடியில் நடக்கும் சம்பவங்கள் அவர்களின் வாழ்கை பாதையையே மாற்றிவிடும். அப்படி மாறும் நேரத்தில் அவர்கள் வாழ்க்கையை எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பதே கதை.
ஒரு விபத்தில் தன் மனைவியையும், குழந்தையும் பறிகொடுத்த ஈஸ்வர், அந்த விபத்துக்கு காரணமானவரின் பத்து வயது இதய நோய் பிரச்சனையுள்ள பையன். தன் மகனை இழந்ததால் உன்னையும் உன் மகனையும் பிரிப்பேன் என்று அந்த பத்து வயது சிறுவனை கொல்ல அலையும் ஈஸ்வர். ஒரு சக்ஸஸ்புல் ஆர்கிடெக் கார்த்திக், அவன் துறத்தி, துறத்தி காதலிக்கும் டாக்டர் சந்தியா.. இவர்களுக்கு இடையே நடக்கும் ஒரு சம்பவம் எப்படி ஒரு இணைப்பு உருவாகி அந்த பத்து வயது சிறுவனை ஈஸ்வரிடமிருந்து காப்பாற்ற கார்த்திக் போராடுகிறான் என்பதை வெள்ளிதிரையில் பாருங்கள்.
முதல் பாதி முழுவதும் இரண்டு கதைகளாய் பயணிக்கும் திரைக்கதை, இடைவேளைக்கு பிறகு ஒரு கோட்டில் பயணிக்கிறது. முதல் பாதி முழுவதும் கார்த்திக்குக்கும், சந்தியாவுக்கும் இடையே நடக்கும் காதல் காட்சிகள் ஆங்காங்கே இளமையாய் இருந்தாலும், இண்ட்ரஸ்டாக இல்லை, அந்த சர்ச் காட்சி இதயத்தை திருடாதே வை ஞாபகமூட்டுகிறது.
நான் கடவுளில் உக்கிரமாய் பார்த்த ஆர்யா இதில் இளமை துள்ளும் இளைஞனாய், அசப்பில் சில காட்சிகளில் ஆண்டனியோ பண்ட்ரஸ் போல் இருக்கிறார். பெரிதாய் நடிப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார். திரிஷா வரும் காட்சிகளில் எல்லாம் ஒரு விதமான மென் சோகத்துடன் அழகாய் இருக்கிறார். மற்றபடி சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமில்லை.
தெலுங்கு நடிகர் ஜே.டி.சக்ரவர்த்தி அமைதியாய், ஆர்பாட்டமில்லா வில்லத்தனத்தை ஒரு அடிபட்ட பார்வையிலேயே வெளிபடுத்துகிறார். அவர் கொல்ல துடிக்கும் சிறுவன் அவ்வளவு ஸ்மார்ட் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவனின் அப்பாவாக பிரிதிவிராஜின் அண்ணன்.. அப்படியே வயசான பிரிதிவிராஜ் மாதிரி இருக்கிறார்.
சர்வத்தின் ஹீரோ.. ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா தான். இளமை துள்ளும் காதல் காட்சிகளாகட்டும், இரண்டாம் பாதியில் வரும் சேஸிங்காகட்டும் மனுஷன் பின்னியிருக்கிறார். அதிலும் திரிஷாவின் ஹாஸ்பிடல் காட்சிகளில் ஒரு வெயிட் பிளீச் கொடுத்து, ஒரு விதமான ஏஞ்சலிக் பீல் ஆகட்டும், மூணாறு காட்டில் நடக்கும் சேஸிங், ஆக்ஷனாகட்டும் சூப்பர்ப் நீரவ்.
பிண்ணனி இசை தவிர யுவன் இப்படத்தில் ஒரு லெட்டவுன் தான். பல இடங்களில் இளையராஜாவின் இசை என்று சொல்லியே பயன்படுத்தும் காட்சிகள், பிண்ணனி இசைக்கு ராஜாவை விட்டால் இன்னொருவர் வரவில்லை என்பதை நிருபணமாக்குகிறது.
ஆர்யா திரிஷாவை பார்கும் போதெல்லாம் பிண்ணனியில் இளையராஜா இசை பாடுவதும், ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களில் ரஜினிகாந்தையும் சேர்த்து கலாய்ப்பது, ஆர்யாவின் ந்ண்பர் சிம்பு படத்து வர சொல்ல, காதலுக்காக தான் தற்கொலை செய்யப்போவதாய் சொல்ல, அதை கவனிக்காத நண்பன் டேய் அப்படின்னா அஜித் படத்துக்கு டிக்கெட் வாங்குகிறேன் என்பதும் சரி காமெடி.
காதல் படமாய் ஆரம்பித்து, பாரலலாக ஒரு திரில்லரை சொருகி இரண்டு கதைகளை சொல்ல ஆரம்பித்து, பின் ஒர் நேர் கோட்டில் பயணிக்கும் படியான திரைக்கதையில், இரண்டு கதைகளிலும் மனதை ஆக்கிரமிக்கும் ஆணித்தரமான காட்சிகள் வேண்டும். அது இல்லாத்தால் பரபரவென பறக்க வேண்டிய படம் தொங்கி போய் யார், யாரை கொன்றால் என்ன, காப்பாற்றினால் என்ன என்று நிற்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் விஷ்ணு.
சர்வம் – கிருஷ்ணார்பணம்
டிஸ்கி
ஐங்கரன் கம்பெனிக்கு யாரோ சூனியம் வைத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது. இல்லைன்னா இப்படி ஊர்ல இருக்கிற பெரிய டைரக்டர், பெரிய ஆர்டிஸ்ட் என்று எல்லாரையும் வச்சு படங்கள எடுத்தும், இன்னைய வரைக்கும் அவர்களால் ஒரு ஹிட் கூட கொடுக்க முடியவில்லை. இவர்கள் இழந்தது சில நூறு கோடிகள். இன்னும் பாக்கி இருக்கிறது மிஷ்கினும், தங்கர்பச்சனும்தான். யாராவது காப்பாத்துங்கப்பா
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
நீரவ்ஷா தான் கலக்கியிருக்கிறார்...
நான் நேற்றே என் பார்வையை எழுதியிருக்கேன் சங்கர் அண்ணே...
வந்து பார்க்கவும்...
:-))
த்ரிஷா கவர்ச்சியா இருக்காங்கள ????
http://theumeshblog.blogspot.com/2009/05/sarvamum-sariyillai.html
check this out for a Very Very Funny review of Sarvam!
கொஞ்ச நாளாக வேலை அண்ணா.அதான் பின்னூட்டம் போடவில்லை.
நல்ல விமர்சனம், அந்த இளையராஜா பின்னணி இசை எந்தப்படம் சார், எவ்வளோ யோசித்தும் நியாபகம் வரவில்லை.
It's from "Pallavi Anu Pallavi" sir!
//
:-)))) அதுக்கு படம் மேல் போல தெரிகின்றது
சர்வம் கர்மம்
நீரவ் ஷா, யுவன் ஏமாற்றவில்லை இசைஞானியின் அந்தப்பாடல் எந்தப்பாடல் என்ன படம் என்பதை அறியத்தாருங்கள்.
மணிரத்னத்தின் pallavi anupallavi க்ன்னட படத்தில் வரும் ரீரிக்கார்டிங்.. அதுமட்டுமில்லாமல் “மெல்ல மெல்ல என்னை தொட்டு மன்மதன் “ என்று வருகிற தமிழ் பாடலும் உண்டு.. அநேகமாய் அது கரும்புவில் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை.
துரத்தி துரத்தி
டிஸ்கியை நினைச்ச தான் கவலையாக இருக்கு...பாவம் மிஷ்கின்.
விஷ்னுவர்தன் சரக்கு அவ்வளவுதானா?
சர்வம் – கிருஷ்ணார்பணம் -பாவம்
ஆ.வியில் உங்கள் கதைப் படித்தேன்
நன்றாக இருந்தது.
நீரவ்ஷா தான் கலக்கியிருக்கிறார்...
நான் நேற்றே என் பார்வையை எழுதியிருக்கேன் சங்கர் அண்ணே...
வந்து பார்க்கவும்...//
நன்றி வேத்தியன்.. கண்டிப்பாய் பார்க்கிறேன்.
த்ரிஷா கவர்ச்சியா இருக்காங்கள ????
//
உங்களுக்கான படமில்ல மாயாவி..
:):)
மிக்க நன்றி உமேஷ்.. நிச்சயமாய் உஙக்ள் பதிவை பார்க்கிறேன்.
கொஞ்ச நாளாக வேலை அண்ணா.அதான் பின்னூட்டம் போடவில்லை//
வேலைய பாருங்க அன்பு..
வர வர ஸ்பிலிட் பெர்சனாலிட்டி ஆகிட்டு வர்றீங்க தண்டோரா.. :)
டிஸ்கியை நினைச்ச தான் கவலையாக இருக்கு...பாவம் மிஷ்கின்//
அவங்க ரெண்டு பேர் படமாவது அவங்களுக்கு ஓடட்டும்.. கோபிநாத்..
விஷ்னுவர்தன் சரக்கு அவ்வளவுதானா?
சர்வம் – கிருஷ்ணார்பணம் -பாவம்//
என்ன விஷ்ணுவர்தன் சரக்கு வச்சிருந்தாரா..? சொல்லியிருந்தா நைட்டு யூஸ் பண்ணீயிருக்கலாமே தலைவா..
ஆ.வியில் உங்கள் கதைப் படித்தேன்
நன்றாக இருந்தது//
கதைக்கான கருத்துக்கும், விமர்சனத்துக்கான வாழ்த்துக்கும், மிக்க நன்றி முத்துராமலிங்கம்
‘மெல்ல மெல்ல’ பாடல் இடம் பெற்ற படம் ‘வாழ்க்கை’ என நினைவு.(சிவாஜி நடித்தது. இப்பாடலுக்கு சில்க் நடித்திருப்பார்(..?))
யுவனுக்கு சரக்கில்லை என்பதை காட்டுகிறதா.
இந்தப் ‘பஞ்ச்’தான் சூப்பர்,ஷங்கர்.:):)!
யாரு வீட்டு காச யாரு நிர்வகிக்ரார்? அது தான் அங்க பிரச்சனையே. அண்ணே
இருந்தால் சொல்லுங்கள் .............
இருந்தால் சொல்லுங்கள் .............//
100 சதவிகிதம்.. நிச்சயமாய் இவர்கள் எடுக்கும் படத்தை விட நல்ல சினிமாவை குறைந்த செலவில் எடுத்து அவர்களை காப்பாற்ற முடியும்.. நம்பிக்கை இருக்கிறது அனானி.. நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள்.