Thottal Thodarum

May 16, 2009

சர்வம் - திரைவிமர்சனம்

81B760E1B673431CE8B15A8E5B591F

இயக்குனர் விஷ்ணுவர்தனின் பில்லாவுக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த படம். சர்வம். மனிதனின் வாழ்க்கையில் ஒரு நொடியில் நடக்கும் சம்பவங்கள் அவர்களின் வாழ்கை பாதையையே மாற்றிவிடும். அப்படி மாறும் நேரத்தில் அவர்கள் வாழ்க்கையை எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பதே கதை.
3357139024_8c00c9fb48

ஒரு விபத்தில் தன் மனைவியையும், குழந்தையும் பறிகொடுத்த ஈஸ்வர், அந்த விபத்துக்கு காரணமானவரின் பத்து வயது இதய நோய்  பிரச்சனையுள்ள பையன். தன் மகனை இழந்ததால் உன்னையும் உன் மகனையும் பிரிப்பேன் என்று அந்த பத்து வயது சிறுவனை கொல்ல அலையும் ஈஸ்வர்.  ஒரு சக்ஸஸ்புல் ஆர்கிடெக் கார்த்திக், அவன் துறத்தி, துறத்தி காதலிக்கும் டாக்டர் சந்தியா.. இவர்களுக்கு இடையே நடக்கும் ஒரு சம்பவம் எப்படி ஒரு இணைப்பு உருவாகி அந்த பத்து வயது சிறுவனை ஈஸ்வரிடமிருந்து காப்பாற்ற கார்த்திக் போராடுகிறான் என்பதை வெள்ளிதிரையில் பாருங்கள்.
 

முதல் பாதி முழுவதும் இரண்டு கதைகளாய் பயணிக்கும் திரைக்கதை, இடைவேளைக்கு பிறகு ஒரு கோட்டில் பயணிக்கிறது. முதல் பாதி முழுவதும் கார்த்திக்குக்கும், சந்தியாவுக்கும் இடையே நடக்கும் காதல் காட்சிகள் ஆங்காங்கே இளமையாய் இருந்தாலும், இண்ட்ரஸ்டாக இல்லை, அந்த சர்ச் காட்சி இதயத்தை திருடாதே வை ஞாபகமூட்டுகிறது.

நான் கடவுளில் உக்கிரமாய் பார்த்த ஆர்யா இதில் இளமை துள்ளும் இளைஞனாய், அசப்பில் சில காட்சிகளில் ஆண்டனியோ பண்ட்ரஸ் போல் இருக்கிறார். பெரிதாய் நடிப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார். திரிஷா வரும் காட்சிகளில் எல்லாம் ஒரு விதமான மென் சோகத்துடன் அழகாய் இருக்கிறார். மற்றபடி சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமில்லை.3356320675_f0489fd4a0

தெலுங்கு நடிகர் ஜே.டி.சக்ரவர்த்தி அமைதியாய், ஆர்பாட்டமில்லா வில்லத்தனத்தை ஒரு அடிபட்ட பார்வையிலேயே வெளிபடுத்துகிறார். அவர் கொல்ல துடிக்கும் சிறுவன் அவ்வளவு ஸ்மார்ட் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  அவனின் அப்பாவாக பிரிதிவிராஜின் அண்ணன்.. அப்படியே வயசான பிரிதிவிராஜ் மாதிரி இருக்கிறார்.

சர்வத்தின் ஹீரோ.. ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா தான். இளமை துள்ளும் காதல் காட்சிகளாகட்டும், இரண்டாம் பாதியில் வரும் சேஸிங்காகட்டும் மனுஷன் பின்னியிருக்கிறார். அதிலும் திரிஷாவின் ஹாஸ்பிடல் காட்சிகளில் ஒரு வெயிட் பிளீச் கொடுத்து, ஒரு விதமான ஏஞ்சலிக் பீல் ஆகட்டும், மூணாறு காட்டில் நடக்கும் சேஸிங், ஆக்‌ஷனாகட்டும்  சூப்பர்ப் நீரவ்.

316924B135DE57871E98A8130E06D

பிண்ணனி இசை தவிர யுவன் இப்படத்தில் ஒரு லெட்டவுன் தான். பல இடங்களில் இளையராஜாவின் இசை என்று சொல்லியே பயன்படுத்தும் காட்சிகள், பிண்ணனி இசைக்கு ராஜாவை விட்டால் இன்னொருவர் வரவில்லை என்பதை நிருபணமாக்குகிறது.

ஆர்யா திரிஷாவை பார்கும் போதெல்லாம் பிண்ணனியில் இளையராஜா இசை பாடுவதும், ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களில் ரஜினிகாந்தையும் சேர்த்து கலாய்ப்பது, ஆர்யாவின் ந்ண்பர் சிம்பு படத்து வர சொல்ல, காதலுக்காக  தான் தற்கொலை செய்யப்போவதாய் சொல்ல, அதை கவனிக்காத நண்பன் டேய் அப்படின்னா அஜித் படத்துக்கு டிக்கெட் வாங்குகிறேன் என்பதும் சரி காமெடி.

காதல் படமாய் ஆரம்பித்து, பாரலலாக ஒரு திரில்லரை சொருகி இரண்டு கதைகளை சொல்ல ஆரம்பித்து, பின் ஒர் நேர் கோட்டில் பயணிக்கும் படியான திரைக்கதையில், இரண்டு கதைகளிலும் மனதை ஆக்கிரமிக்கும் ஆணித்தரமான காட்சிகள் வேண்டும். அது இல்லாத்தால் பரபரவென பறக்க வேண்டிய படம் தொங்கி போய் யார், யாரை கொன்றால் என்ன, காப்பாற்றினால் என்ன என்று நிற்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் விஷ்ணு.

சர்வம் – கிருஷ்ணார்பணம்

டிஸ்கி

ஐங்கரன் கம்பெனிக்கு யாரோ சூனியம் வைத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது. இல்லைன்னா இப்படி ஊர்ல இருக்கிற பெரிய டைரக்டர், பெரிய ஆர்டிஸ்ட் என்று எல்லாரையும் வச்சு படங்கள எடுத்தும், இன்னைய வரைக்கும் அவர்களால் ஒரு ஹிட் கூட கொடுக்க முடியவில்லை. இவர்கள் இழந்தது சில நூறு கோடிகள்.  இன்னும் பாக்கி இருக்கிறது மிஷ்கினும், தங்கர்பச்சனும்தான். யாராவது காப்பாத்துங்கப்பா





கொத்துபரோட்டா 15/05/09 ஐ படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

40 comments:

வேத்தியன் said...

நல்ல விமர்சனம்...

நீரவ்ஷா தான் கலக்கியிருக்கிறார்...

நான் நேற்றே என் பார்வையை எழுதியிருக்கேன் சங்கர் அண்ணே...

வந்து பார்க்கவும்...

பிரேம்ஜி said...

//சர்வம் – கிருஷ்ணார்பணம்//

:-))

Vidhya Chandrasekaran said...

நல்லாருங்க:)

மேவி... said...

த்ரிஷா க்கு குத்து பாட்டு இருக்கா?????

த்ரிஷா கவர்ச்சியா இருக்காங்கள ????

எம்.எம்.அப்துல்லா said...

இங்க பாருய்யா!!!! அவனவன் எலக்சென் பீவர்ல டிவில ரிசல்ட் பார்த்துக்கிட்டு இருக்கப்ப ஒரு ஆளு பதிவு போடுறாரு...அதப் படிச்சுட்டு ஒரு ஆளு பின்னூட்டம் போடுறான் :)))

Umesh said...

nethiyadi review thalaiva!

http://theumeshblog.blogspot.com/2009/05/sarvamum-sariyillai.html

check this out for a Very Very Funny review of Sarvam!

Anbu said...

படம் பார்க்கலாமா அண்ணா.
கொஞ்ச நாளாக வேலை அண்ணா.அதான் பின்னூட்டம் போடவில்லை.

அன்பேசிவம் said...

வணக்கம் சங்கர்,
நல்ல விமர்சனம், அந்த இளையராஜா பின்னணி இசை எந்தப்படம் சார், எவ்வளோ யோசித்தும் நியாபகம் வரவில்லை.

Umesh said...

@above

It's from "Pallavi Anu Pallavi" sir!

சி தயாளன் said...

//இங்க பாருய்யா!!!! அவனவன் எலக்சென் பீவர்ல டிவில ரிசல்ட் பார்த்துக்கிட்டு இருக்கப்ப ஒரு ஆளு பதிவு போடுறாரு...அதப் படிச்சுட்டு ஒரு ஆளு பின்னூட்டம் போடுறான் :)))
//

:-)))) அதுக்கு படம் மேல் போல தெரிகின்றது

asker said...

நானும் படம் பார்த்தேன் 21 grams படத்தோட தழுவல்தான் , உங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது

வந்தியத்தேவன் said...

ஒற்றைவரியில் சொல்வதாயின்
சர்வம் கர்மம்

நீரவ் ஷா, யுவன் ஏமாற்றவில்லை இசைஞானியின் அந்தப்பாடல் எந்தப்பாடல் என்ன படம் என்பதை அறியத்தாருங்கள்.

மணிஜி said...

adi pinnivitruven..vendturu

Cable சங்கர் said...

//நீரவ் ஷா, யுவன் ஏமாற்றவில்லை இசைஞானியின் அந்தப்பாடல் எந்தப்பாடல் என்ன படம் என்பதை அறியத்தாருங்கள்//

மணிரத்னத்தின் pallavi anupallavi க்ன்னட படத்தில் வரும் ரீரிக்கார்டிங்.. அதுமட்டுமில்லாமல் “மெல்ல மெல்ல என்னை தொட்டு மன்மதன் “ என்று வருகிற தமிழ் பாடலும் உண்டு.. அநேகமாய் அது கரும்புவில் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை.

சரவணகுமரன் said...

//துறத்தி, துறத்தி //

துரத்தி துரத்தி

சரவணகுமரன் said...

அப்ப நல்லா இல்லையா? பாட்டு பிடிச்சிருந்தது... அதுக்காக போய் பார்க்கிறேன்.

கோபிநாத் said...

தல

டிஸ்கியை நினைச்ச தான் கவலையாக இருக்கு...பாவம் மிஷ்கின்.

Ashok D said...

ஏமாத்திடாய்ங்கலா?
விஷ்னுவர்தன் சரக்கு அவ்வளவுதானா?
சர்வம் – கிருஷ்ணார்பணம் -பாவம்

Muruganandan M.K. said...

நல்ல விமர்சனம்.

ஆ.சுதா said...

நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க.

ஆ.வியில் உங்கள் கதைப் படித்தேன்
நன்றாக இருந்தது.

Cable சங்கர் said...

//நல்ல விமர்சனம்...

நீரவ்ஷா தான் கலக்கியிருக்கிறார்...

நான் நேற்றே என் பார்வையை எழுதியிருக்கேன் சங்கர் அண்ணே...

வந்து பார்க்கவும்...//

நன்றி வேத்தியன்.. கண்டிப்பாய் பார்க்கிறேன்.

Cable சங்கர் said...

நன்றி பிரேம்ஜி.. வித்யா அவர்களின் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

//த்ரிஷா க்கு குத்து பாட்டு இருக்கா?????

த்ரிஷா கவர்ச்சியா இருக்காங்கள ????

//

உங்களுக்கான படமில்ல மாயாவி..

Cable சங்கர் said...

//இங்க பாருய்யா!!!! அவனவன் எலக்சென் பீவர்ல டிவில ரிசல்ட் பார்த்துக்கிட்டு இருக்கப்ப ஒரு ஆளு பதிவு போடுறாரு...அதப் படிச்சுட்டு ஒரு ஆளு பின்னூட்டம் போடுறான் :)))//

:):)

Cable சங்கர் said...

//nethiyadi review thalaiva//

மிக்க நன்றி உமேஷ்.. நிச்சயமாய் உஙக்ள் பதிவை பார்க்கிறேன்.

Cable சங்கர் said...

//படம் பார்க்கலாமா அண்ணா.
கொஞ்ச நாளாக வேலை அண்ணா.அதான் பின்னூட்டம் போடவில்லை//

வேலைய பாருங்க அன்பு..

Cable சங்கர் said...

நன்றி டொன்லி. அஸ்கர்.. உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி முரளி, வந்தியத்தேவன்.

Cable சங்கர் said...

//adi pinnivitruven..vendturu//

வர வர ஸ்பிலிட் பெர்சனாலிட்டி ஆகிட்டு வர்றீங்க தண்டோரா.. :)

Cable சங்கர் said...

மாத்திர்றேன் சரவணக்குமாரன்.. சுட்டிகாட்டியமைக்கு நன்றி.. படம் சுமார் தான்.

Cable சங்கர் said...

//தல

டிஸ்கியை நினைச்ச தான் கவலையாக இருக்கு...பாவம் மிஷ்கின்//

அவங்க ரெண்டு பேர் படமாவது அவங்களுக்கு ஓடட்டும்.. கோபிநாத்..

Cable சங்கர் said...

///ஏமாத்திடாய்ங்கலா?
விஷ்னுவர்தன் சரக்கு அவ்வளவுதானா?
சர்வம் – கிருஷ்ணார்பணம் -பாவம்//

என்ன விஷ்ணுவர்தன் சரக்கு வச்சிருந்தாரா..? சொல்லியிருந்தா நைட்டு யூஸ் பண்ணீயிருக்கலாமே தலைவா..

Cable சங்கர் said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி டொக்டர்.. முருகானந்தம்..

Cable சங்கர் said...

//நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க.

ஆ.வியில் உங்கள் கதைப் படித்தேன்
நன்றாக இருந்தது//

கதைக்கான கருத்துக்கும், விமர்சனத்துக்கான வாழ்த்துக்கும், மிக்க நன்றி முத்துராமலிங்கம்

thamizhparavai said...

உங்க விமர்சனத்தை விமர்சனம் பண்ணுற அளவுக்கு பெரிய ஆள் இல்லை நான். நல்லா இருக்கு. ‘சர்வம்’ பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. படத்தை மிக எதிர்பார்த்தேன். இப்படி ஆகி விட்டதே...

‘மெல்ல மெல்ல’ பாடல் இடம் பெற்ற படம் ‘வாழ்க்கை’ என நினைவு.(சிவாஜி நடித்தது. இப்பாடலுக்கு சில்க் நடித்திருப்பார்(..?))

புருனோ Bruno said...

// பல இடங்களில் இளையராஜாவின் இசை என்று சொல்லியே பயன்படுத்தும் காட்சிகள், பிண்ணனி இசைக்கு ராஜாவை விட்டால் இன்னொருவர் வரவில்லை என்பதை நிருபணமாக்குகிறது.//

யுவனுக்கு சரக்கில்லை என்பதை காட்டுகிறதா.

ஷண்முகப்ரியன் said...

//என்ன விஷ்ணுவர்தன் சரக்கு வச்சிருந்தாரா..? சொல்லியிருந்தா நைட்டு யூஸ் பண்ணீயிருக்கலாமே தலைவா..//

இந்தப் ‘பஞ்ச்’தான் சூப்பர்,ஷங்கர்.:):)!

Ganesan said...

ஐங்கரன் கம்பெனிக்கு யாரோ சூனியம் வைத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது.


யாரு வீட்டு காச யாரு நிர்வகிக்ரார்? அது தான் அங்க பிரச்சனையே. அண்ணே

Anonymous said...

உங்களுக்கு ஐங்கரனை காப்பாத்த முடியும் என்று நம்பிக்கை இருக்கிறதா???
இருந்தால் சொல்லுங்கள் .............

Cable சங்கர் said...

//உங்களுக்கு ஐங்கரனை காப்பாத்த முடியும் என்று நம்பிக்கை இருக்கிறதா???
இருந்தால் சொல்லுங்கள் .............//
100 சதவிகிதம்.. நிச்சயமாய் இவர்கள் எடுக்கும் படத்தை விட நல்ல சினிமாவை குறைந்த செலவில் எடுத்து அவர்களை காப்பாற்ற முடியும்.. நம்பிக்கை இருக்கிறது அனானி.. நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள்.