Thottal Thodarum

May 27, 2009

ஆட தெரியாத ஆட்டக்காரி..

EVM ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் ஜெயலலிதா மட்டும் லூசுத்தனமாய் ஒரு அறிக்கை விடுவார். மின்ண்ணு ஓட்டு இயந்திரங்களை பயன் படுத்த கூடாது என்று. ஒவ்வொரு முறை ஓட்டு போட்டுவிட்டு வெளியே வரும் போதும் மிண்ணனு இயந்திரங்களில் அதிமுகவுக்கு ஓட்டு போட்டால், திமுகவுக்கு விழுகிறது என்று சொல்லிவிட்டு தான் செல்வார். அவர் அப்படி சொல்ல ஆரம்பித்த தேர்தலில் அவர் தான் வென்றார். ஆனாலும் இதை ஒரு வழக்கமாகவே சொல்லி வருகிறார்.

இப்போது அவரின் வழியை பின்பற்றி.. பமக தலைவர் மருத்துவரும் அவரே ஒரு புரோக்ராய் செய்த ஒரு மினியேச்சர் மின்ணனு இயந்திரத்தை வைத்து டெமோ காட்டியிருக்கிறார். அப்படி புலம்பும் லிஸ்டில் லேட்டஸ்டாய் ஒருவர் சேர்ந்திருக்கிறார். நம்ம விஜயகாந்த். வருகிற இடைதேர்தலில் மிண்ணனு இயந்திரங்களை பயன் படுத்த கூடாது  என்று கோர்ட்டை நாடியிருக்கிறார்.
voting

எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் இவர்களை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான அறிக்கைகள் வெளிவந்திருக்கிறதாக தெரியவில்லை. அப்படி ஒவ்வொரு ஆளும்கட்சியும் எளிதாய் ப்ரோக்ராம் செய்து வெற்றி பெற முடியுமானால், எதற்காக இப்படி இழுபறி அரசாகவோ, மைனரிட்டி அரசாகவோ வரும் அளவிற்கு மின்ணணு இயந்தரங்களை செட் செய்ய வேண்டும். நல்ல மெஜாரிட்டி வரும் மாதிரி செட் செய்ய முடியாதா என்ன..?

இவர்களின் கூற்று போல் ஆங்காங்கே சில இடங்களில் மின்ணணு பெட்டியை பொதுமக்கள் பயன் பாட்டுக்கு முன்பே சின்ன சின்ன பிரச்சனைகள் வந்த போது, அதை சரி செய்திருக்கிறார்கள். அப்படி நடந்த  சம்பவங்கள் மொத்த இந்தியாவில் மிக சொற்பமே. சாதாரண் ஓட்டு சீட்டு முறையில் நடக்கும், கள்ள ஓட்டு, பூத் கேப்சரிங், போன்ற பல அசம்பாவிதங்கள் இந்த மின்ணனு முறையால் தடுக்க பட்டிருக்கிறது.

தவறான கூட்டணிகளாலும், கொள்கைகளாலும், தேவையற்ற அறிக்கைகளாலும், மக்கள் மனதிலிருந்து வெளியேறியதன் காரணத்தை ஆராயாமல், இம்மாதிரியான அட்டு அறிக்கைகளை விட்டுக் கொண்டு, தங்கள் புண்களை தாங்களே நக்கி கொள்வது கேவலமாய் உள்ளது.

உலக நாடுகள் பலவும் நம்முடய மின்ணணு இயந்திரத்தை மெச்சி அதை தங்கள் நாட்டு தேர்தலுக்கு பயன் படுத்த நினைக்கிற இந்நேரத்தில் இவர்களின் அறிக்கைகள் இந்த பழமொழியைத்தான் ஞாபக படுத்துகிறது.

”ஆட தெரியாத ஆட்டக்காரி, மேடை கோணல்னு சொன்னாளாம்”


Post a Comment

64 comments:

அருண்மொழி said...

அயோத்தி ராமர் கோயில் பற்றி பா.ராகவன் என்ன கூறுகிறார்

http://arunmozhi985.blogspot.com/2009/05/blog-post_27.html

நையாண்டி நைனா said...

present anna.


appalikaavum vaaren.

Sukumar said...

சோக்கா சொன்ன தலீவா...

எம்.எம்.அப்துல்லா said...

இஃகிஃகிஃகி

Sukumar said...

டாக்டர் அய்யாக்கு இந்த ஒட்டு, மெஷினு அல்லாம் புடிக்காது... எவனாவது ராஜ்யா சபா எம்.பி போஸ்டும் கொடுத்து மந்திரி பதவியும் கொடுத்தா குஜாலாயிடுவாரு...

தராசு said...

//ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் ஜெயலலிதா மட்டும் லூசுத்தனமாய் ஒரு அறிக்கை விடுவார்.//

அப்ப மத்த நேரத்துல.....,,,,

Truth said...

இந்த EVM வெளியிடறதுக்கு முன்னாடி பல வகையான சோதனைகள் நடத்தி வெற்றியாக இருந்தால் மட்டுமே அவை தேர்தலுக்கு உபயோகப் படுத்துப்படுகின்றன. இந்த EVPக்கு பின்னால் பலரது உழைப்பு உள்ளது. அப்படி அவ்வளவு சோதனைகளின் பின்னர் வெளிவந்திருக்கும் இந்த இயந்திரங்களை ஒரே வாக்கியத்தில் 'தவறாக வேலை செய்கிறது' என்று சொல்பவர்களிடம் சரியான சாட்சி இல்லாத பட்சத்தில் அவர்கள் மீது எலக்ஷன் கமிஷன் மான நஷ்ட வழக்கு ஒன்று பதிவு செய்ய முடியாதா?

சரவணகுமரன் said...

முக்கியமா செல்லாத ஓட்டுக்கள் தவிர்க்கப்பட்டு இருக்கிறதே...

ஸ்ரீ.... said...

சரியான பதிவு. வாய்ச்சொல் வீரர்கள் இனிமேலாவது திருந்தட்டும்.

ஸ்ரீ....

கலையரசன் said...

வக்கத்தவனை வாத்தியார்ராக்கு,
போக்கத்தவனை போலீஸ்சாக்கு,
அறிவில்லாதவனை அரசியல்வாதியாக்கு!!

மாம்ஸ்! நரம்பில்லாத நாக்கால் நாலுபக்கமும் வாதாடலாம் ஆனால் நியாமுன்னு ஒண்னு..
இருக்குல்ல? இருக்குல்ல? இருக்குல்ல?

Renga said...

இம்மாதிரியான தொழிநுட்ப அறிவு இல்லாத அரசியல் வாதிகளை தேர்தல் கமிஷன் மூலமாக தடை செய்ய வேண்டும்..

biskothupayal said...

விஜயகாந்த் வர வர வெத்துகாந்த் ஆயிட்டார்

Sanjai Gandhi said...

அட்ரஸ் மாறி வந்துட்டேனா? :)

சுந்தர் said...

நாட்டின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளும் ,இம்மாதிரியான விமர்சனங்களை புறந்தள்ள வேண்டும்.

குசும்பன் said...

அண்ணே ஒரு பதிவு எழுதி மக்களிடம் இருந்து பின்னூட்டம் வரவில்லை என்றால் என்ன நினைக்கிறோம், பதிவு போட்ட நேரம் ஊரில் லீவு, மாலை 5 மணிக்கு அப்புறம் எல்லாரும் வீட்டுக்கு போய் இருப்பாங்க, பிரபல பதிவர் சண்டை போட்ட பதிவுக்கு கூட்டம்போய்விட்டது, நம்ம பதிவு போட்ட நேரம் பார்த்து அனைவரும் பதிவு போட்டு முதல் பக்கத்தில் இருந்து தூக்கிட்டாங்க என்று நமக்கு நாமே எத்தனை சப்பை கட்டு சொல்லிக்கிறோம்.... பதிவு நல்லா இல்லை போல என்று ஒத்துப்பதே இல்லை:)

பாவம் கோடி கோடியா கொட்டி எலக்சனில் நின்னு தோத்தவங்களுக்குதான் அந்த வலி தெரியும் பாவம் விடுங்க வாங்கி ஆப்பு ரொம்ப தூரம் பாய்ந்திருப்பதால் இப்படிதான் ஏதாவது அனத்துவாங்க கண்டுக்காதீங்க:))))

குசும்பன் said...

”ஆட தெரியாத ஆட்டக்காரி, மேடை கோணல்னு சொன்னாளாம்”//

எங்க ஊருல இன்னும் கொஞ்சம் ”டீசண்டா நாலு நல்ல வார்த்தை” போட்டு சொல்லுவாங்க:))))

Ashok D said...

தலைவரே நீங்க ரொம்ப தைரியசாலி தான்...

டைரக்டர் மேலே யாராவது அன்பாயிருந்தா.. அப்படியே அம்மா.திமுக கட்சிக்கு forward பண்ணுங்கப்பா...இந்த பதிவ

Vidhya Chandrasekaran said...

வுடுங்கண்ணே. அவங்களே நொந்து போயிருக்காங்க.

க.பாலாசி said...

அவங்க வயித்தெரிச்சல் அவங்களுக்குதான் தெரியும்.

முரளிகண்ணன் said...

கேபிள்.

உங்கள் பதிவு கலக்கல் என்றால்,


குசும்பனின் கமெண்ட்

கலக்கலோ கலக்கல்

Arun Kumar said...

இன்னும் ஒரு மேட்டர் இருக்கு,
electronic voting machine உபயோகபடுத்துவதால் ஏகப்பட்ட மரங்கள் பேப்பருக்காக அழிக்கபடுவது தடுக்க படுகிறது.

பரிசல்காரன் said...

நச்!

ஒரே ஒரு மாற்றம் இந்தத் தேர்தலில்..

இவர்கள் சொல்வதை எரிச்சலோடு மறுத்தும் பேசும் சுஜாதா இப்போது நம்மிடையே இல்லை!!! :-((

நர்சிம் said...

//உலக நாடுகள் பலவும் நம்முடய மின்ணணு இயந்திரத்தை மெச்சி அதை தங்கள் நாட்டு தேர்தலுக்கு பயன் படுத்த நினைக்கிற இந்நேரத்தில் இவர்களின் அறிக்கைகள் இந்த பழமொழியைத்தான் ஞாபக படுத்துகிறது.//

பளார்.ஹும்ம்ம்

selventhiran said...

அண்ணே உங்க ஊர்ல 'ஆட்டக்காரின்னா' சொல்லுவாய்ங்க.... எங்கூர்ல ஹி... ஹி... அண்ணாச்சி கிட்ட கேளுங்க.

Cable சங்கர் said...

வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி.. அருண்மொழி, நைனா..

Cable சங்கர் said...

//சோக்கா சொன்ன தலீவா..//

அவ்ளோ புட்சிக்கீதா.. சுகுமாரூ..

Cable சங்கர் said...

//இஃகிஃகிஃகி//

அவ்வளவு காமெடியாவா எழுதிட்டேன்.. :)

Cable சங்கர் said...

//டாக்டர் அய்யாக்கு இந்த ஒட்டு, மெஷினு அல்லாம் புடிக்காது... எவனாவது ராஜ்யா சபா எம்.பி போஸ்டும் கொடுத்து மந்திரி பதவியும் கொடுத்தா குஜாலாயிடுவாரு...//

இனிமே எலக்‌ஷனே இல்லாம பமகவை ஆட்சிக்கு கொண்டுவரணும்னு கூட சொல்வாரு..

Cable சங்கர் said...

//அப்ப மத்த நேரத்துல.....,,,,//

அதுசரி... தராசண்ணே..

Cable சங்கர் said...

//இந்த EVM வெளியிடறதுக்கு முன்னாடி பல வகையான சோதனைகள் நடத்தி வெற்றியாக இருந்தால் மட்டுமே அவை தேர்தலுக்கு உபயோகப் படுத்துப்படுகின்றன. இந்த EVPக்கு பின்னால் பலரது உழைப்பு உள்ளது. அப்படி அவ்வளவு சோதனைகளின் பின்னர் வெளிவந்திருக்கும் இந்த இயந்திரங்களை ஒரே வாக்கியத்தில் 'தவறாக வேலை செய்கிறது' என்று சொல்பவர்களிடம் சரியான சாட்சி இல்லாத பட்சத்தில் அவர்கள் மீது எலக்ஷன் கமிஷன் மான நஷ்ட வழக்கு ஒன்று பதிவு செய்ய முடியாதா?//

இவங்களையெல்லாம் மனுசனாவே தேர்தல் கமிசன் மதிக்கிறதுல்ல போலிருக்கு டுரூத்..

Cable சங்கர் said...

//முக்கியமா செல்லாத ஓட்டுக்கள் தவிர்க்கப்பட்டு இருக்கிறதே...//

இதுவும் ஒரு முக்கியமான விஷயம் சரவணகுமரன்..

Cable சங்கர் said...

//சரியான பதிவு. வாய்ச்சொல் வீரர்கள் இனிமேலாவது திருந்தட்டும்.

ஸ்ரீ....//

நன்றி ஸ்ரீ..

Cable சங்கர் said...

//விஜயகாந்த் வர வர வெத்துகாந்த் ஆயிட்டா//

அவரும் அவரு சைடுக்கு எதையாவது சொல்லணுமில்ல..

Cable சங்கர் said...

//இருக்குல்ல? இருக்குல்ல? இருக்குல்ல?//

இது என்ன நியாயத்துக்கு எக்கோவா..?
கலையரசன்

Cable சங்கர் said...

நன்றி ரெங்கா.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

//அட்ரஸ் மாறி வந்துட்டேனா? :)//

ஏன் சஞ்செய் நானெல்லாம் இப்படி எழுத மாட்டேன்னு நினைச்சீங்களா..? இப்படியும் எழுதுவோமில்ல..:)

Cable சங்கர் said...

//நாட்டின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளும் ,இம்மாதிரியான விமர்சனங்களை புறந்தள்ள வேண்டும்//

சரியான முடிவு.. தேனீ.. சுந்தர்..

Cable சங்கர் said...

//பாவம் கோடி கோடியா கொட்டி எலக்சனில் நின்னு தோத்தவங்களுக்குதான் அந்த வலி தெரியும் பாவம் விடுங்க வாங்கி ஆப்பு ரொம்ப தூரம் பாய்ந்திருப்பதால் இப்படிதான் ஏதாவது அனத்துவாங்க கண்டுக்காதீங்க:))))//

பதிவ விட உங்க பின்னூட்டம் நல்லாருக்குண்ணே..

Cable சங்கர் said...

//எங்க ஊருல இன்னும் கொஞ்சம் ”டீசண்டா நாலு நல்ல வார்த்தை” போட்டு சொல்லுவாங்க:)))//

ஏன் நான் நல்லாருக்கிறது உஙக்ளுக்கு பிடிக்கலையா..?

Cable சங்கர் said...

//தலைவரே நீங்க ரொம்ப தைரியசாலி தான்...

டைரக்டர் மேலே யாராவது அன்பாயிருந்தா.. அப்படியே அம்மா.திமுக கட்சிக்கு forward பண்ணுங்கப்பா...இந்த பதிவ//

வீரம்னா என்ன தெரியுமா அசோக்.. பயமில்லாம நடிக்கிறது.. புரிஞ்சிக்கோங்க..

Cable சங்கர் said...

//வுடுங்கண்ணே. அவங்களே நொந்து போயிருக்காங்க.//

அதுக்குன்னு இப்படியா கேனத்தனமா பேசுறது. வித்யா.

Cable சங்கர் said...

//அவங்க வயித்தெரிச்சல் அவங்களுக்குதான் தெரியும்//
அப்ப மின்ணணு இயந்திரத்தில் தில்லுமுல்லு என்பதை நீஙக்ள் ஆதரிக்கிறீர்களா.. பாலாஜி..?:(

Cable சங்கர் said...

//கேபிள்.

உங்கள் பதிவு கலக்கல் என்றால்,


குசும்பனின் கமெண்ட்

கலக்கலோ கலக்கல்//
நிஜம்தான் முரளி..

Cable சங்கர் said...

//இன்னும் ஒரு மேட்டர் இருக்கு,
electronic voting machine உபயோகபடுத்துவதால் ஏகப்பட்ட மரங்கள் பேப்பருக்காக அழிக்கபடுவது தடுக்க படுகிறது.//

ஆமாம் அருண் இதுவும் ஒரு நல்ல தகவலே..

Cable சங்கர் said...

//நச்!

ஒரே ஒரு மாற்றம் இந்தத் தேர்தலில்..

இவர்கள் சொல்வதை எரிச்சலோடு மறுத்தும் பேசும் சுஜாதா இப்போது நம்மிடையே இல்லை!!! :-((//

அவர் இல்லைன்னா என்னா..? நாமெல்லாம் இல்லையா.. ????

Cable சங்கர் said...

//பளார்.ஹும்ம்ம்//

நன்றி நர்சிம்..

Cable சங்கர் said...

//அண்ணே உங்க ஊர்ல 'ஆட்டக்காரின்னா' சொல்லுவாய்ங்க.... எங்கூர்ல ஹி... ஹி... அண்ணாச்சி கிட்ட கேளுங்க.//

நானே கஷ்டப்பட்டு ஒரிஜினலை தவிர்த்து எழுதியிருக்கேன்.. நீங்க வேற....

ஷண்முகப்ரியன் said...

நம்க்கேற்ற அரசியல்வாதிகள்.
அரசியல்வாதிகளுக்கேற்ற நாம்.ஆவதும் நம்மாலே.அழிவதும் நம்மாலே.இதில் யாரைக் குறை கூறுவது?

asker said...

http://todaycinemanews.blogspot.com/

Rafiq Raja said...

நெத்தியடி அடிச்சிட்டீங்க சங்கர். ஒவ்வொரு முறையும் தோற்றபின் இவர்கள் பண்ணும் அலம்பல் தாங்க முடியவில்லை... இப்போது டாக்டரும், நடிகரும் இதில் கூட்டு வேற... எத பத்தி பேசுறதுன்னே தெரியாமல் அருமையான ஒரு ஓட்டுப்பு இயந்திரத்தை பற்றி அவதூறு பரப்பி கொண்டிக்கிறார்கள்.

சரி தோற்றவர்களின் பிதற்றலை ஏன் கண்டு கொள்ள வேண்டும். அவர்கள் ஆற்றாமை, அழுது விட்டு போகட்டும் :)

ÇómícólógÝ

அறிவிலி said...

கேரளாவில் இது போல் முட்டாள் அரசியல்வாதிகள் சில வருடங்களுக்கு முன்பு வழக்கு போட்டார்கள். மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஒரு சாட்சியாக EVM ஐ டெமொன்ஸ்ட்ரேட் செய்து காட்டி வழக்கு தேர்தல் கமிஷனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன்.

//I remember his ironic, dry wit in a travel piece in which he traverses the backwaters of Kerala to install EVMs, only to be challenged in court by a Leftist politician who suspects electoral foul play. The EVM wins the case, is sent to the polls and, with a twist in the tale, the man who lost in court wins the election.//

நன்றி : http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=a39ffaed-4a0d-4c83-ba7f-881c8c17f78a

க.பாலாசி said...

//அவங்க வயித்தெரிச்சல் அவங்களுக்குதான் தெரியும்//
அப்ப மின்ணணு இயந்திரத்தில் தில்லுமுல்லு என்பதை நீஙக்ள் ஆதரிக்கிறீர்களா.. பாலாஜி..?:(//

அப்படி இல்ல சார். வயித்தெரிச்சல் படுகிறவர்கள் எல்லாம் நேர்மையானவர்கள் இல்லையே.

க.பாலாசி said...

தில்லு முல்லு என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

அத்திரி said...

அம்மாவையே கலாசுறீங்களா?

செந்தில்குமார் said...

சங்கர்ஜி...

என்ன திடீர்னு இப்படி அம்மா, மருத்துவர் அய்யா, கேப்டன் எல்லாரையும் சாடிட்டீங்க... ?

ஏதோ பாவம் அவங்க தோல்விய மறைக்க/மறுக்க ஒரு முயற்சி பண்றாங்க... என்ன அது "முழு பூசணிக்காவ ஒரு பருக்கைல மறைக்க " முயர்ச்சிக்கற மாதிரி தெரியுது..

EVM எந்திரத்த அவ்ளோ கஷ்டப்பட்டு கண்டுபுடிச்சு, சோதனை செய்தவங்க எல்லாம் கொமாளிங்கங்கர மாதிரி இவங்க சொல்லறது .. கேக்கறதுக்கு சிரிப்பு தான் வருது..

Thamira said...

கூமுட்டைகளுக்கு வேறென்ன தெரியும்.? இப்படி நல்ல விஷயங்களையும் குறை சொல்வதைத் தவிர்த்து.?

வசந்த் ஆதிமூலம் said...

ஒரே ஒரு மாற்றம் இந்தத் தேர்தலில்..

இவர்கள் சொல்வதை எரிச்சலோடு மறுத்தும் பேசும் சுஜாதா இப்போது நம்மிடையே இல்லை!!! :-((

வேதனை பகிர்வுடன்.....

Cable சங்கர் said...

வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி.. அறிவிலி..காமிக்காலஜி..

Cable சங்கர் said...

//நம்க்கேற்ற அரசியல்வாதிகள்.
அரசியல்வாதிகளுக்கேற்ற நாம்.ஆவதும் நம்மாலே.அழிவதும் நம்மாலே.இதில் யாரைக் குறை கூறுவது?

//

:(

Cable சங்கர் said...

//அம்மாவையே கலாசுறீங்களா?

//

எனக்கு அப்பவே தெரியும் அத்திரி நீஙக் ஒரு அம்மா ஆதரவாளர்ன்னு..

Cable சங்கர் said...

//சங்கர்ஜி...

என்ன திடீர்னு இப்படி அம்மா, மருத்துவர் அய்யா, கேப்டன் எல்லாரையும் சாடிட்டீங்க... ?

ஏதோ பாவம் அவங்க தோல்விய மறைக்க/மறுக்க ஒரு முயற்சி பண்றாங்க... என்ன அது "முழு பூசணிக்காவ ஒரு பருக்கைல மறைக்க " முயர்ச்சிக்கற மாதிரி தெரியுது..

EVM எந்திரத்த அவ்ளோ கஷ்டப்பட்டு கண்டுபுடிச்சு, சோதனை செய்தவங்க எல்லாம் கொமாளிங்கங்கர மாதிரி இவங்க சொல்லறது .. கேக்கறதுக்கு சிரிப்பு தான் வருது..

9:06 PM

//

இப்படி தேவையில்லாம பேசறத நினைச்சாத்தான் பயங்கர காண்டாவுது.. செந்தில்

Cable சங்கர் said...

நன்றி ஆதி, வசந்த் ஆதிமூலம்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..

Anonymous said...

The only point to oppose EVM is, it won't allow malpractice.

Unknown said...

Shankar,

Sorry for my English.

First you need to understand one thing.

Other state politician, they are not running any TV channel specific for the party.so It is possible in Tamil nadu .our politicians are technically improved because of we leader in IT compare with other state also leader in shortcuts to reach the destinations.It's Possible in Tamilnadu .