உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ..?
பத்திரிக்கைத்துறை நண்பர் ஒருவர் அவரை சந்திக்க அழைத்திருந்தார். அவரை சந்திக்க டி.நகர் நோக்கி போய்க் கொண்டிருந்த போது போன் அடித்தது. நண்பர்தான் “சார்.. எங்க இருக்கீங்க?” “டி.நகர் பனகல் பார்க்கிட்ட இருக்கேன் நண்பரே” ”அப்ப 30 மினிட் வந்திருங்க..” என்றார் எனக்கு புரியவில்லை.. பனகல் பார்க்கிலிருந்து நடிகர் சங்கம் போவதற்கு எதற்கு அரை மணி நேரம்? என்று யோசித்தபடி, ‘நண்பா.. அதுக்கு எது அரை மணி நேரம்?” என்று கேட்டதும். ‘சரி ஓகே நீங்க நடிகர் சங்கம் வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். நான் நடிகர் சங்கம் போனதும் அதற்கு நேர் எதிரே ஒரு பெரிய போர்ட் வைத்திருந்தார்கள். 30 MINUTES என்று. அதன் வாசலில் நண்பர், பத்திரிக்கையாளர் பாலா நின்றிருந்தார். இப்போது புரிந்துவிட்டது அவரை இதைத்தான் சொல்லியிருக்கிறார் என்று. என்ன இடம்ணே இது? என்று கேட்டபடி உள்ளே போனேன். அங்கே அழைத்துச் சென்று மேலாளரை அறிமுகப்படுத்தினார். அவர் சொன்ன கான்செப்ட் செம இண்ட்ரெஸ்டிங். அது மட்டுமில்லாமல் யுனிக்காகவும் இருந்தது. பெரும்பாலான பகல் நேரங்களில் பிஸினெஸ் செய்யும் நண்பர்கள், மற்ற துறை நண்பர்கள் எங்காவத...