சாப்பாட்டுக்கடை - சேட்டு சப்பாத்திக்கடை
சைதாப்பேட்டை பூக்கார தெருவுக்கு எதிரில் உள்ள தர்மராஜா கோவில் தெரு சப்பாத்தி கடை சேட் என்றால் எல்லோருக்கும் தெரியும். சப்பாத்தி என்றால் சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமான கடை. எனக்கு நினைவு தெரிந்து பள்ளி படிக்கும் காலத்திலிருந்து அவர் கடை வைத்திருக்கிறார். அப்போதெல்லாம் அதே தெருவின் ஆரம்ப முனையில் ஒரு குட்டிக்கடையில் மாலையில் சப்பாத்தியும், பூரியும் போடுவார். சூடான உப்பிய பூரியுடன் தக்காளி குருமாவை சாப்பிட ஒரு பெரிய கூட்டமேயிருக்கும். பின்பு அதே தெருவில் பழைய கடைக்கு பகக்த்திலிருந்த கோயிலுக்கு அருகில் இருந்த ஒரு பெரிய கடையாய் பார்த்து பிடித்து சப்பாத்தி மட்டுமே போட ஆரம்பித்தார்.