சைதாப்பேட்டை பூக்கார தெருவுக்கு எதிரில் உள்ள தர்மராஜா கோவில் தெரு சப்பாத்தி கடை சேட் என்றால் எல்லோருக்கும் தெரியும். சப்பாத்தி என்றால் சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமான கடை. எனக்கு நினைவு தெரிந்து பள்ளி படிக்கும் காலத்திலிருந்து அவர் கடை வைத்திருக்கிறார். அப்போதெல்லாம் அதே தெருவின் ஆரம்ப முனையில் ஒரு குட்டிக்கடையில் மாலையில் சப்பாத்தியும், பூரியும் போடுவார். சூடான உப்பிய பூரியுடன் தக்காளி குருமாவை சாப்பிட ஒரு பெரிய கூட்டமேயிருக்கும். பின்பு அதே தெருவில் பழைய கடைக்கு பகக்த்திலிருந்த கோயிலுக்கு அருகில் இருந்த ஒரு பெரிய கடையாய் பார்த்து பிடித்து சப்பாத்தி மட்டுமே போட ஆரம்பித்தார்.
கையேந்தி பவன் தான். ஆனால் அடுப்பிலிருந்து எடுக்கும் சூடான சப்பாத்தி, ரொட்டிக்கு அவர் கொடுக்கும் சென்னா,மற்றும் தக்காளி குருமா, ப்ளஸ் பச்சை வெங்காயம் எல்லாவற்றையும் சூடான மிகவும் சாப்டான, அதிகமாய் எண்ணையில்லாத சப்பாத்தியுடன் சப்பிட்டால் ம்ம்ம்ம்ம். நிஜமாவே டிவைன். உள்ளே போவது தெரியாது. இப்போது அங்கே தோசை, இட்லி, கூட சாம்பார், ரெண்டு வித சட்னிகள், வெஜிட்டபிள் ரைஸ், மதியம் சாம்பார் சாதம், தயிர்சாதம் கூட கிடைக்கிறது படு நியாயமான விலையில். நாலு தோசைக்கல்லில் ஒரே நேரத்தில் சப்பாத்தியை போட்டு அதில் ஒரு ஸ்பூன் எண்ணையை விட்டு, அடிப்பக்கம் காய்ந்து தீய்வதற்குள் ஒவ்வொரு சப்பாத்தியையும் அடுத்த பக்கம் திருப்பிப் போடும் லாவகம் இருக்கிறதே அதைப் பார்க்கவே கண் கோடி வேண்டும். நிச்சயம் தவறாமல் சென்னையில் சைதாப்பேட்டையை க்ராஸ் செய்ய வேண்டிய நேரமிருந்தால் ஒரு விசிட் அடித்து விடுங்கள்.
********************************************************************
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
அடடாடா.. படிக்கும்போதே நாக்குல ருசி தெரியுது (கடுப்ப கெளப்பாதீங்கய்யா)
தகவலுக்கு நன்றி.......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Nalla chappathi...ninaivugal.....
Supera irukkum...antha kadai
sappathi.....
//தி.நகர் பேருந்து நிலைய எதிர்லையும் இதே மாதிரி ஒரு கடை இருக்கு//
நானும் சாப்பிட்டிருக்கேன்.
ட்ட்ட்ட்ட்டேஎய்ய்ய்ய்ய்ய் ரேஏஏஏஏஏஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்
வணக்கம்.
முந்தைய கமெண்ட்டில் ரேஸ்கள் என்பதை ரேஸ்கல் என்று மாற்றி வாசித்துக்கொள்ளவும்..
டுபாக்குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
என்ன கொஞ்ச நாளா சைதாபேட்டை விட்டு வெளியே வர்றதில்லையா? என்னா மேட்டர்?//
சைதை தமிழரசி எனும் பெயரில் படம் எடுக்கிறாரோ என்னவோ..
நான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்