உலகின் மிகப் பெரிய கார்பரேட் கம்பெனியின் சி.ஈ.ஓ பதவிக்காக எட்டு மிகச் சிறந்த ஆட்கள் பல நிலைகளை கடந்து, கடைசி நிலை தேர்வுக்காக வருகிறார்கள். அவர்கள் யாருக்கும் எந்த கம்பெனி தங்களை வேலைக்கு சேர்க்கிறது, போன்ற் எந்த விபரங்களும் சொல்லப்படுவதில்லை. ஒரு மூடிய அறையில் எட்டு மேஜை நாற்காலிகள், அதில் ஒரு பேப்பரும், பென்சிலுமிருக்க, ஒரு செக்யூரிட்டி கார்ட், கிட்டத்தட்ட ரோபோ போல இருக்க, பரிட்சையை நடத்துபவர் வந்து பரிட்சைக்கான ரூல்ஸ்களை சொல்கிறார். யாரும் பரீட்சை தொடங்கி முடியும் வரை வெளியே செல்ல முயலக்கூடாது. யாரும் அங்கிருக்கும் செக்யூரிட்டி கார்டுடன் பேச முயலக்கூடாது, இந்த தேர்வை நடத்தும் ஆட்களிடம் தொடர்பு கொள்ள முயலக்கூடாது, கேள்வித்தாளை எந்த விதத்திலும் சேதப்படுத்த கூடாது. இதையெலாம் மீறினால் அவர்களை தகுதியற்றவர்களாக முடிவு செய்து செக்யூரிட்டி கார்ட் வெளியேற்றிவிடுவார் என்று சொல்லிவிட்டு அங்கிருக்கும் டைமரை ஆன் செய்துவிட்டு என்பது நிமிஷங்களில் பரிட்சை முடியும் என்று சொல்லிவிட்டு போகிறார்.
எல்லோரும் சுறுசுறுப்பாய் கேள்வித்தாளை எடுத்துப் பார்த்தால் அதில் ஒன்றுமேயில்லை. ஆளாளுக்கு குழம்பிப் போய் யோசித்துக் கொண்டிருக்க, எட்டு பேரில் ஒரு சைனீஸ் பெண் ஒரு முடிவெடுத்து பேப்பரில் எழுத ஆரம்பிக்க, கேமராவின் மூலம் அவள் எழுதுவது படிக்கப்பட, செக்யூரிட்டி கார்ட் அவள் தோள் மீது கைவைத்து பேப்பரை சேதப்படுத்தியதாய் சொல்லி வெளியேற்றுகிறான். அப்போது அங்கிருக்கும் ஒரு வெள்ளையன் எழுந்து எல்லோருடனும் பேச முற்படுகிறான். நாம் அவர்களுடன் தான் பேச முற்படக்கூடாதே தவிர நம்முள் பேசலாம் என்று சொல்லி, எல்லோரும் ஒன்று சேர்ந்து கேள்வியை கண்டுபிடிப்போம் என்று குழு சேர்க்கிறான். அது மட்டுமில்லாமல் கூட இருக்கும் அத்தனை பேருக்கும் நான் வெள்ளையன்,கருப்பன், ப்ளாண்ட் முடிக்காரி, ப்ரவுன், என்றெல்லாம் பேர் வைத்து அழைக்கிறான். அப்போது அந்த அறையில் இருக்கும் அல்ட்ரா வைலட் லைட்டை காண்பித்து இதில் ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிறது என்றும் எல்லோரும் அவரவர்களின் பேப்பரை அந்த வெளிச்சத்தில் வைத்து பார்த்தால் நிச்சயம் ஏதாவது விளங்கும் என்று முயற்சிக்கிறார்கள். ஆனால் பலன் ஒன்றுமில்லை. அப்போது அந்த லைட்டுகளை உடைத்து போட, உள்ளேயிருந்து இன்னொரு விளக்கு எரிகிறது.
அதன் பிறகு அவர்கள் முயற்சிக்கும் ஒவ்வொரு விஷயமும் தோல்வியில் முடிய வெள்ளைக்காரன் தன் சக போட்டியாளர்களை வெளியே அனுப்ப செய்த முயற்சிகளால் இன்னும் இரண்டு பேர் வெளியேற்றப்படுகிறார்கள். இவர்கள் கும்பலில் முதல் டேபிளில் இருப்பவன் ரொம்பவும் நொந்த நிலையில் ப்ரெஞ்ச் மட்டுமே பேசிக் கொண்டு, தனியனாய் இருக்கிறான். இவர்கள் கூப்பிட்டாலும் அவன் ரியாக்ட் செய்யாமல் இருக்க, அவனுக்கு செவிடன் என்று பெயர் வைத்து கலாய்க்கிறான் வெள்ளையன். ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரின் பின்னணியையையும் தெரிந்து கொள்ள, அதில் ஒரு பெண் இவர்கள் வேலைக்கு வந்திருக்கும் நிறுவனத்திலேயே வேலைபார்ப்பவள் என்று தெரிகிறது எனவே அவளை சித்ரவதை செய்து கேள்வியை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். இதன் நடுவே வெள்ளையனுக்கும், கருப்பனுக்கு தகறாறு முற்றி அவனை அடித்து வீழ்த்து கட்டிப் போட்டு விடுகிறான் கருப்பன். வெள்ளையனுக்கு ஒரு வியாதி அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒரு மாத்திரை வீதம் போடவில்லை என்றால் உயிர் போய்விடும். அவன் உடல் நிலை மோசமாக அவனுக்கு தரும் மாத்திரையை எடுத்து ஒளித்து வைத்து விடுகிறான் பழுப்பு காரன். இப்படி உயிருக்கு போராடும் வரை நாம் போய்விட்டோமேன் என்று ப்ளான்ட் நிற முடிக்காரி போராடி சாக்கடையில் விழுந்த மாத்திரையை எடுத்து க் கொடுத்தவுடன் அவன் துரிதமாய் சரியாகிறான். கண் திறந்தவன் எல்லோரையும் மீண்டும் தன் ஆளூமையால் வெளியேற்ற முற்படுகிறான் அதில் தோல்வியடையும் போது, தன்னைத் தானே செக்யூரிட்டி கார்டு துப்பாக்கியை எடுத்து சுட்டு தற்கொலை செய்ய முற்பட துப்பாக்கி சுட மறுக்கிறது. அதே துப்பாக்கியை எடுத்து கருப்பன் அவனை சுட முயற்சிக்க அப்போது சுட மறுக்க, அந்த துப்பாக்கியை செக்யூரிட்டியின் கையில் வைத்து வெள்ளையன் சுட முயற்சிக்க சுடுகிறது. இப்போது மிச்சம் இருக்கும் ப்ளாண்ட் முடிக்காரி, கருப்பன் , வெள்ளையன் மட்டுமே இருக்க, துப்பாகியை காட்டி ப்ளாண்ட் முடிக்காரியை வெளியே துரத்துகிறான். மீதம் இருக்கும் கருப்பனை சுட முயற்சிக்கும் வேளையில் அவனை ரூமின் வாய்ஸ் ரெகக்னேஷன் மூலம் விளக்கணைத்து காப்பாற்ற முயற்சிக்க, கருப்பன் சுடப்பட்டு இறக்கிறான்.
தான் மட்டுமே இருப்பதால் தனக்குத்தான் அந்த வேலையை கொடுக்க வேண்டும் என்று கேட்க, அவன் தகுதியற்றவனாய் வெளியேற்றப்படுகிறான். ஏனென்றால் நேரம் முடிவதற்கு முன் தங்களை அவன் தொடர்பு கொண்டதற்காக. செவிட்டு ப்ரெஞ்சு பேசும் ஆள் வெளியேறும் முன்பு க்ளாக்கை ரீசெட் செய்துவிட்டதை எவரும் கவனிக்கவில்லை அதனால் வெள்ளையன் நேரத்திற்கு முன் அவர்களை தொடர்பு கொண்டதை சொல்லி வெளியேற மிச்சம் இருக்கும் ப்ளாண்ட் மீண்டும் அறைக்குள் நுழைந்து கீழே விழ்ந்திருக்கும் செவிட்டு ஆளின் கண்ணாடியையும், கீழே இருந்த கண்ணாடி தூள்களையும் எடுத்து வைத்து பேப்பர் வாட்டர் மார்கில் இருக்கும் கேள்வியை அதாவது Question .1 என்றிருப்பதை கண்டு பிடிக்கிறாள். அவளை வேலைக்கு சேர்ந்து கொள்ள அழைக்கிறார்கள். அவள் மறுக்கிறாள். பிறகு ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வேளைக்கு போட்டிக்கு வந்தீர்கள் என்று கேட்க இறந்து கிடந்த கருப்பனை காட்டி இப்படி எல்லாம் எனக்கு வேலை தேவையில்லை என்று சொல்கிறாள். அதற்கு அவர்கள் யார் அவன் இறந்தவன் என்று சொன்னது என்று அவனை மயக்கத்திலிருந்து எழுப்புவிக்கிறார்கள். அந்த புல்லட்டின் உள்ள் காயம் உடனடியாய் ஆற அவர்கள் கண்டு பிடித்த காப்சூல் தான் இருக்க, அவன் சீக்கிரமே சரியாகி எழுகிறான். முன்னால் செவிடனாக சொல்லப்பட்டவர் தான் ஒரிஜினல் சீஇஓ என்று அறிமுகபடுத்தப்பட்டு, தங்களில் கம்பெனியின் கண்டுபிடிப்பான இந்த மருந்தை நிறைய அளவில் தயாரிக்க முடியாது அதனால் மற்றவர்களிடம், அன்பு, பாசம், பரிதாபம், குறிக்கோள், புத்திசாலித்தனம், விடாமுயற்சி, கடின உழைப்பு என்று எல்லா குவாலிட்டியுடன் உள்ள ஒரு டைரக்டரை தேர்வு செய்யத்தான் இந்த பரீட்சை என்று விளக்க, அவள் பதவியை ஏற்றுக் கொள்கிறாள்.
இக்கதையை கிட்டத்தட்ட ஏன் முழுக்க சொன்னேன் என்றால் ஒரே அறைக்கும் நடக்கும் கதையில் நிறைய விஷயங்களை சொல்கிறார்கள். வெறும் டயலாக்குகளால் மட்டுமே புரியக்கூடியவை. நான் சில முக்கிய காட்சிகளை மட்டுமே இங்கு உங்களூக்காக சொல்லியுள்ளேன். இன்னும் பல் சுவாரஸ்யங்கள் இப்படத்தில் அடங்கியுள்ளது. ஒரே ஒரு அறையில் ஒன்னரை மணி நேரம் நம்மை அங்கிங்கு திரும்ப விடாமல் உட்கார வைத்த திரைக்கதையும், எக்ஸிக்யூஷனும் அட்டகாசம். நிச்சயம் வித்யாசமான படம் விரும்புபவர்களுக்கு ஒரு ரத்தினம்.
The Exam – A different Low budget thriller.
டிஸ்கி: இதை ஒரு ஸ்பாயிலராக கருதுபவர்கள் கடைசி வரியை மட்டும் படித்துவிட்டு படம் பார்க்கவும். படித்துவிட்டு பார்த்தால் இன்னும் சுவாரஸ்யத்துக்கு நான் கேரண்டி.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
ஆனால் தெளிவாக அவர்களுக்குள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று இப்போது உங்கள் விமர்சனம் படித்துதான் தெரிந்துகொண்டேன். நான் ரெகமண்ட் செய்துபடம் பார்த்தவர்கள் படம் போர் அடிப்பதாக சொன்னார்கள்.
http://www.jackiesekar.com/2010/07/exam-2009.html
i know few,which i am listing below.Most of the films are very interesting.
i)12 angry men
ii) Conspiracy -2001
iii) The man from the earth-2007
iv) Sleuth
Go over this link to get the top 10 single location movies:
http://www.top10films.co.uk/archives/806
http://in.answers.yahoo.com/question/index?qid=20100113165158AAwC6YE
படத்தின் சிறப்பே பார்ப்போரை கேள்வி என்னவாக இருக்கும் என்று சீட்டின் நுனிக்கே வரவைப்பது தான். அடுத்து என்ன ஆகுமோ என்று நகம் கடிக்க வைத்துவிடுவார்கள். என்ன ஒரு கதைக்களன், தமிழில் இப்படி ஒரு படம் வராதா என்று ஏங்க வைத்த படம். மேலும் அவர்கள் CEO பதவிக்கு ஆள் எடுக்கமாட்டார்கள் பர்சனல் செக்கரட்டரி வேலைக்கு தான் ஆள் எடுப்பார்கள். இது போன்ற படங்களை அறிமுகப்படுத்துவதை வரவேற்கிறேன்.
ஆனால் உங்களிடமிருந்து இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை.