Thottal Thodarum

Sep 17, 2011

வந்தான் வென்றான்.

vv கோவின் வெற்றிக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜீவாவின் படம். பாஸ் (எ) பாஸ்கரனுக்கு பிறகு வாசன் வீஷுவல்ஸின் அடுத்த படைப்பு என்ற் இரண்டு வெற்றியாளர்கள் ஒன்று சேர்ந்ததால் ரசிகர்களிடையேயும், விநியோகஸ்தர்களிடையேயும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.


vv5 சிறு வயதில் தன் சொந்த தம்பியை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு மும்பைக்கு ஓடி போகிறார் நந்தா. மும்பையில் பிரபல தாதாவாக உருவாகி நிற்கும் நந்தாவை பார்க்க ஜீவா முயற்சிக்கிறார். தொடர் முயற்சிக்கு பிறகு அவரை சந்திக்கவும் செய்கிறார். என்ன விஷயம் என்று கேட்டால் தான் ஒரு பெண்ணை காதலித்தேன் என்று காதல் கதையை சொல்கிறார். கடைசியில் அந்த காதலி என்னை விட்டு பிரிந்துவிட்டாள். அவளை அடைய வேண்டுமானால் ஒரு பிரச்சனை என்கிறார். அவளுடய அப்பாவை ஒரு தாதா கொன்று விட்டான். அவனை போலீஸில் சரணடைய செய்தால் தன்னை மணப்பதாக சொல்லியிருக்கிறாள் எனவே அந்த கொலையை செய்தவன் நீதான் மரியாதையாய் வந்து சரணடைந்துவிடு என்று கேட்கிறார். பிறகு நடந்தது என்ன என்பதை தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்க..
vv4 கேட்பதற்கு அட நல்லாருக்கே அப்படின்னு தோணும். ஆனால் மொத்த படமாய் பார்க்கும் போது ரொம்பவும் சிரமாமாய் இருக்கிறது. அதற்கு காரணம் திரைக்கதை. படம் முழுக்க ஜீவா தான் நந்தாவின் தம்பி என்று அதிர்ச்சியாய் சொல்கிறார்கள். ஆனால் படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே நமக்கு தெரியும் இவர் தான் நந்தாவின் தம்பி என்று. இப்படி இவர்கள் டிவிஸ்ட் என்று நினைத்து வைத்த காட்சிகள் எல்லாமே இப்படித்தான் போகிறது. அதன் பிறகு ஜீவா சொல்லும் காதல் கதை ஆரம்பத்தில் சுவாரஸ்யமாய் இருந்தாலும், ஜீவாவை கல்யாணம் செய்ய அவர் சொல்லும் விஷயம் டெப்த்தேயில்லை. ஏன் டெப்த்தாக இல்லை என்பதை சொன்னால் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற சுவாரஸ்யம் கூட இல்லாமல் போய்விடும் என்பதால் உங்கள் ரிஸ்கில் விட்டுவிடுகிறேன்.
vv1 ஜீவா வழக்கம் போல ஸ்மார்ட்டாக இருக்கிறார். பாடுகிறார். ஆடுகிறார் சண்டை போடுகிறார். மற்றபடி ஸ்பெஷலாய் சொல்ல ஏதுமில்லை. சின்ன வயது நந்தாவின் கேரக்டருக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் இம்பாக்ட் கதை பூராவும் இருந்தால் நன்றாய் இருந்திருக்கும் பட் வேஸ்ட் ஆப் பில்டப். அவ்வப் போது காரில் வந்து துப்பாக்கியால் சுடுவதும், முகத்தை தீவிரமாய் வைத்துக் கொண்டு பார்ப்பதை  தவிர வேறேதும் சொல்வதற்கில்லை. டாப்ஸி மிகவும் வத்திப் போயிருக்கிறார். ஆடுகளத்தில் மனதை கொள்ளைக் கொண்டவரா இவர். ம்ஹும் கன்னமெல்லாம் ஒட்டி சிரிக்கும் போது கொஞ்சம் லேசாய் நடு முதுகில் ஜில்லிடுகிறது. படத்தில் இருக்கும் ஒரே ஒரு ரிலாக்ஸேஷன் சந்தானம் தான் ஆனால் அவரும் ஏதோ ஒட்ட வைத்த காமெடியாய் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார் அவ்வளவே.
vv3 தமனின் இசையில் அஞ்சனா, அஞ்சனா பாடலும், காஞ்சன மாலா பாடலும் கேட்கும் படியாய் இருக்கிறது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். இப்போதும் அஃதே. ஆனால் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பாடகர்கள் குரலை டெக்னோ வாக்கி கீச்சிட வைக்கப் போகிறார்?. பல சமயம் எரிச்சலாக இருக்கிறது. பி.ஜி. முத்தையாவின் கேமரா பளிச். பாடல் காட்சிகளிலும், கேரளா நீர்வீழ்ச்சி பின்னணியில் வரும் அந்த காட்டேஜ் செட்.. அருமை.

எழுதி இயக்கியவர் ரா. கண்ணன். கதையின் கடைசி ட்விஸ்டை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார். ஆனால் அந்த ட்விஸ்ட் நமக்குள் எடுபடவேண்டுமானால் அவர் சொல்லும் கதை அள்ளிக் கொண்டு போகும் காதல் கதையாய் இருக்க வேண்டாமா? இரண்டு சீனுக்கு ஒரு முறை கொட்டாவி விட வைக்கும் திரைக்கதை இம்சை படுத்துகிறது. படத்தில் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர் வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர். பல இடங்களில் அட போட வைக்கிறார். சில இடங்களில் விக்ரமன் பட பாணியில் ஜீவா பேசிக் கொண்டேயிருப்பது மிகையாக இருந்தாலும், வசனங்களால் நிறைவாகிறது.
வந்தான் வென்றான் – வந்தான்.. சென்றான்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

11 comments:

குரங்குபெடல் said...

"வந்தான் வென்றான் – வந்தான்.. சென்றான்."

Sorry . . .

Over Attack . . .


Thanks

Unknown said...

ivvalavu neram waiting !!

ரைட்டர் நட்சத்திரா said...

எதிர்பார்த்த ரிசல்ட்

K.MURALI said...

Mokkai padam.

AED 35 waste

'பரிவை' சே.குமார் said...

KO - vetriku piraku Rowthiram, Vanthan vendraan tholviya pochche...

aduththa padam jeevavukku vetrip padamaga amaiyattum.

IlayaDhasan said...

அப்ப வந்துச்சு ஆனா வெல்லல ?
கமல் படத்தில் இனி முத்தம் இல்லை?

அப்துல் கபூர் said...

வந்தான்-கொன்றான்!

Jana said...

நெனைச்சேன் :)

கார்த்தி said...

இந்தப்படத்தை நான் ரொம்ப நம்பி ஏமாந்துட்டன். எனக்கு பாடல்கள் நன்றாக பிடித்திருந்தன. படத்தில் சந்தானத்தை தவிர வேறொன்றும் இல்லை!!

aotspr said...

படம் சுமார்தான்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Marimuthu Murugan said...

வந்தான்
வெந்தான்