Thottal Thodarum

Sep 12, 2011

கொத்து பரோட்டா - 12/09/11

சென்னை டூ திருநள்ளாருக்கு முன்னேற்பாடில்லாத ஒரு பயணத்தை துவக்கினோம் நானும் கே.ஆர்.பியும். சென்னை டூ பாண்டி சல்லீசாக, நூறு ரூபாய்க்கு ஏசியெல்லாம் போட்டுக் கூட்டிப் போனார்கள். அங்கிருந்து சிதம்பரம் நல்ல பஸ். ஆனால் கீக்கிடம். சிதம்பரம் டூ காரைக்கால் படு மோசமான பஸ். காரைக்கால் டு திருநள்ளார். ஆட்டோ மினிமம் 100. திரும்புகையில் டாடா ஏஸில் திருநள்ளார் டூ காரைக்கால் 5 ரூபாய். அங்கிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஏசி பஸ். 280 ரூபாய். படு மோசமான பாடியில் இருந்தது. ஏசி ஏதோ புழுங்காத அளவில்.ஆயிரம் ரூபாயில் கொஞ்சம் டீலக்ஸ், ஏசி பஸ்களில் ஆறு நூறு, ஏழு நூறு கிலோமீட்டர்கள் பயணிக்க முடிவது நன்றாக இருந்தாலும், பஸ்ஸுக்கு அடித்து பிடித்துதான் ஏறி திணற வேண்டிய நிலையில் இருக்கிறது நமது போக்குவரத்து துறை. . தமிழகம் முழுவதும் பஸ்கள் நிறைய இருக்கத்தான் செய்கிறது. ஆனால் படு மோசமான நிலையில். உடனடியாய் இதை அரசு கவனிக்க வேண்டும். காசு கொடுத்தும் நல்ல சர்வீஸ் இல்லையென்றால் எதிர்காலத்தில் தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் போக்குவரத்து துறையும் வருவதை தடுக்க முடியாது. லோக்கல் ஆட்கள் பெரும்பாலும் டாடா ஏஸ் போன்ற வண்டிகளில் பயணப்படுவதை மிகவும் விரும்புகிறார்கள். பஸ்ஸை விட ஒரு ரூபாய் அதிகம்.சாப்பாட்டுக்கு நிறுத்திய இடம் சிதம்பரம் தாண்டி ஒர் நான் - வெஜ் கடையில். சைவம் சாப்பிடுபவர்கள் ரொம்பவும் அவஸ்தை பட்டார்கள்.
#########################################################


பதிவுலகத்திற்கு வந்ததிலிருந்து எனக்குள் ஒரு ஆர்வம் இருந்து கொண்டேயிருந்தது. நாம் ஏன் ஒரு திரட்டியை உருவாக்க கூடாது என்று. அதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருந்தாலும், பொருளாதாரம் என்கிற ஒரு விஷயம் அதை கைக்கெட்டாமலேயே வைத்திருந்தது. ஆனால் நண்பர் சிங்கப்பூர் ஜோசப் அவர்களிடம் இந்த ஐடியாவை சொன்னதும். பொருளாதாரத்துக்கு நானாச்சு. மற்ற விஷயங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். உடனடியாய் வேலையை ஆரம்பித்து இதோ கடந்த சில மாதங்களாய் டெஸ்டிங் எல்லாம் முடிந்து உங்களிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது நம் யுடான்ஸ். ஜோசப், மட்டுமில்லாமல் இன்னும் சில பதிவர்கள் இதில் இணைந்துள்ளனர். யுடான்ஸில் உங்களது பஸ்ஸுகளையும் இணைக்க முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் இந்த திரட்டியை நீங்கள் வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன். விரைவில் யுடான்ஸ் சார்பாக நிறைய போட்டிகள், மற்றும் பரிசுகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. உடன் யுடான்ஸில் இணைந்து உங்களது தளமான யுடான்ஸை முன்னிறுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். யுடான்ஸ் தளத்தின் விளம்பரத்தை உங்களது வலைப்பதிவில் வெளியிட்டு மேலும் பலரை சென்றடைய வேண்டுகிறோம்.உடான்ஸில் இணைய : http:// www.udanz.com
####################################################
அடல்டரி
சேரி என்கிற பெண்ணுக்கு மூணு வயது. வூசூய் என்கிற ஆணுக்கு ஆறு வயது. இவர்கள் இருவரும் ஜோடியாய் இணைபிரியாமல் இருந்தார்கள். அப்போது அவர்களுடன் வந்து சேர்ந்தாள் மேலி என்கிற பதினைந்து வயதானவள். அவளுக்கு வூசூய் மேல் அன்பும் காதலும் பீறிட, நெருக்கமாய் பழக ஆரம்பித்தாள். வூசூயும் எல்லா ஆண்களைப் போலவே ரெட்டை ஜோடியுடன் உல்லாசமாய் இருந்தான். இதை கண்டு பொறாமையாலும், மிகுந்த அன்பாலும் அவதிப்பட்ட சேரி. வேறு வழியேயில்லாமல் வூசூய்யை அடித்துக் கொன்று விட்டாள். என்னடா மூணு , ஆறு, பதினைது வயசுல இவ்வளவு கொடூரமாவா? என்று யோசிக்கிறீர்களா? இவைகள் எல்லாம் புலிகள். அமெரிக்க மிருக காட்சி சாலையில் நடந்த நிகழ்ச்சி இது. ஆம்பளைங்களை பொறுத்த வரை மனுஷனாயிருந்தாலும், மிருகமாயிருந்தாலும் ஒரே கஷ்டம்தான் போலிருக்கு. ம்ஹும்.
####################################################
ஓபிசிட்டி
சைனாவிலா, அல்லது வியட்நாமிலா என்று தெரியவில்லை. பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் ஓபிசிட்டியாக இருந்தால் அவர்களுடய பெற்றோர்களுக்கு ஆள்விட்டு சொல்லியனுப்பி,உடன் உடல் எடையை குறைக்க சொல்லி உத்தரவிடுகிறார்கள். அதையும் மீறி சில பெற்றோர்கள் அவர்களை கவனிக்க தவறிவிடுவதால் சமீபத்தில் அரசே அந்த குழந்தைகளை தங்களின் பொறுப்பில் ஹாஸ்டல் போல ஒரு இடத்தில் வைத்து, உடல் எடையை குறைத்து அனுப்புகிறார்களாம். என்னா அக்கரைடா..
#####################################################
ஜாதி இரண்டொழிய வேறில்லை
வர வர யாரைத்தான் ஜாதிக் கட்சியின் படத்தில் போடுவது என்று விவஸ்தையில்லாம போய்விட்டது. ஜாதியில்லை என்று சொன்னவர்களின் படத்தைக்கூட ஜாதிக் கட்சிகள் பயன்படுத்துகிறது என்று நானும் அண்ணன் அப்துல்லாவும் பேசிக் கொண்டிருந்த போது காந்தி பற்றி பேச்சு வந்தது. செட்டியார்கள் அவர்கள் பங்குக்கு காந்தியை வைஸ்யா என்ற இனத்தை சேர்ந்தவராதலால் இங்குள்ள வாணிப செட்டியார்கள் அவரை தங்கள் இனத்தவராக இணைத்துக் கொண்டு, அவரின் படத்தை போட ஆரம்பித்துவிட்டார்கள் என்று சொல்லிக் கொண்டு வரும் போதே ஒரு பெரிய பேனர் அங்கே போட்டிருக்க, அதில் வாணிப செட்டியார்களின் ப்ளக்ஸில் காந்தியும் சிரித்துக் கொண்டிருந்தார். வாணியர் குல விடிவிளக்கு ஆர்.பன்னீர் செல்வத்தை விட சிறியதாய்.
###################################################
சந்தோஷம்
கடந்த 25 நாட்களில் என்னுடய சினிமா வியாபாரம் பதினோரு காப்பிகள் டிஸ்கவரி புக் பேலஸில் மட்டுமே விற்பனையாகியிருக்கிறது. என்னுட்ய முதல் சிறுகதை தொகுப்பான லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும் இரண்டாவது பதிப்பு கண்டிருக்கிறது.
##################################################
மங்காத்தா
தமிழில் மங்காத்தாவுக்கு கிடைத்த ஓப்பனிங் சமீபத்திய தமிழ் சினிமாவின் எல்லா ஓப்பனிங்கையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது. அது ஒன்றும் ஆச்சர்யமில்லை என்றாலும் தெலுங்கிலும் அதே அளவுக்கு ஓப்பனிங் கிடைத்திருப்பதாய் தகவல். சமீபகாலமாய் எல்லா  பெரிய பட்ஜெட் தெலுங்கு படங்கள் ஊத்திக் கொண்டு ரொம்பவே காய்ந்து போயிருக்கும் ஆடியன்ஸுக்கும், தெலுங்கு மார்கெட்டுக்கும் மங்காத்தா பெரிய பூஸ்டராய் அமைந்திருக்கிறதாம். மங்காத்தாடா..
########################################################
ராம்நாட்டில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றிருக்கிறது போலீஸ். இதே தேவர் குரு பூஜையின் போது நடந்திருந்தால் துப்பாக்கி சுட்டிருக்குமா?. எங்கே போனார்கள் போன வார தமிழின காவலர்கள்?. மூன்று பேர் உயிர் மட்டும் தான் உயிரா? தயவு செய்து யாரும் இதற்காக தீக்குளிக்காதீர்கள். வெறும் தியாகி பட்டமும், இரண்டு பக்க கட்டுரை மட்டுமே மிஞ்சும்
############################################################

இந்தப்படத்தில் ஒரு ஐரணியிருக்கிறது. அது என்ன என்று கண்டுபிடித்துச் சொல்லுங்க பார்ப்போம்.
###############################################
தத்துவம்
We always wish we could have changed our past.... without realizing that the past has already changed us..!!!

உன்னிலிருக்கும் குழந்தைத்தனத்தை உயிர்ப்போடு வை. ஏனென்றால் அதுதான் உன்னில் இருக்கும் மனிதத்தை உயிர்ப்போடு வைக்கிறது.

Never Regret anything. because at one time it was exactly what you wanted
#################################################
ப்ளாஷ்பேக்
தமிழ் சினிமாவில் என்றைக்குமே நிரந்தரமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்களில் ஒன்று. எந்த காலத்திலும் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் பாடல். மிக சிம்பிளான ட்யூன். இண்டர்லூடில் வரும் ப்ளூட் அட்டகாசமாய் உருக்கும். இளையராஜாவின் குரலில் இருக்கும் ஒரு விதமான ரானெஸ்.. பாட்டுக்கு இன்னும் ஒரு பெப்பை கொடுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
############################################################
சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கர் வைல்ட் கார்ட் ரவுண்டில் ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல் ஆரோமலே. Awesome.  என்னமா பாடினார் அவர். சாதாரணமாக லைவில் இந்தப்பாடலை அவ்வளவு சுலபமாய் பாட முடியாது. அவ்வளவு கஷ்டமான பாடல். வாழ்த்துக்கள் ஸ்ரீநிவாஸ். மிக அருமையான குரல் வளமிருக்கிறது இவருக்கு. நித்யஸ்ரீயின் ரியாக்‌ஷனை பாருங்கள்.

#########################################################
அடல்ட் கார்னர்
புருஷனும் பொண்டாட்டியும் தங்களுக்குள்ள அடிக்கடி சண்டை ஏற்படுவதை சரி செய்வதற்காக மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் போகலாம்ன்னு முடிவு செஞ்சாங்க. மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங்குக்கு போனார்கள்.

டாக்டர் 'உங்க பிரச்சனை என்ன, சொல்லுங்க' என்றார். புருஷன் அமைதியாக என்ன சொல்லலாம், எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கும்போதே பொண்டாட்டி பட படவென்று பட்டாசு போல பொரிந்து தள்ளினாள். கிட்ட தட்ட இருபது நிமிஷங்கள் கல்யாணம் ஆனா நாள்ல இருந்து அன்று வரை ஏற்பட்ட எல்லா சண்டையையும் மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்.


டாக்டர் புருஷனை பார்க்க, புருஷன், 'இது தான் சார் பிராப்ளம், இப்போ புரிஞ்சுதா சார்' என்று சொன்னான். டாக்டர் கூலாக, 'ஆள் ரைட் சரி செஞ்சிடலாம்,' என்று சீட்டை விட்டு எழுந்து பொண்டாட்டி பின்னால் வந்து நின்று அவள் கழுத்தில் கை போட்டு தலையை முன்பக்கமாக கொண்டு வந்து அவள் உதட்டில் முத்தம் கொடுத்தார். அப்படியே கையை கீழே கொண்டு போய்  இடுப்போடு சேர்த்து தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டார். அவள் கழுத்தை தன் நுனி மூக்கால் வருடினார். புருஷன் நடப்பது கனவா, நிஜமா என்று கண் மூடாமல் பார்த்து கொண்டிருந்தான். பொண்டாட்டி வாய் திறக்காமல் திக் பிரமை பிடித்தது போல அமர்ந்து இருந்தாள். டாக்டர் புருஷனிடம், 'இப்போ பாருங்க உங்க மனைவி எவ்ளோ அமைதியா இருக்காங்க.. வாரத்துல இரண்டு நாளாச்சும் அவங்களுக்கு இது மாதிரியான அரவணைப்பு தேவைபடுது. அதனால உங்க வேலையை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு இரண்டு நாள் அவங்களுக்காக ஒதுக்குங்க, போதும். எல்லாம் சரியாகிடும்' என்றார்.
 அதற்கு புருஷன், 'சரி டாக்டர். அவளுக்காக ரெண்டு நாள் ஒதுக்கிடறேன்.. செவ்வாய்கிழமையும் வெள்ளிகிழமையும் இங்கே கூட்டிகிட்டு வந்தா போதுமா டாக்டர்?' என்று கேட்டான்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

32 comments:

Kishore Kumar said...

வழக்கம் போல் சூப்பர் கொத்து...

• » мσнαη « • said...

Divine parotta with side dish ...


///ஐரணி //// ...

பார்ப்பினியத்தை எதிர்க்கும் கட்சியில் ஒரு அய்யர்......????

Philosophy Prabhakaran said...

முதல் பத்தியை ஜாக்கி பதிவில் இருந்து சுட்டிருக்கீங்க போல...

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

kalakkal-

valthukkal

Ŝ₤Ω..™ said...

Irony..

திமுகவில் ஒரு அய்யர்...

சதீஷ் மாஸ் said...

அந்த ஆட்டோ பின்னாட் இருக்கறது... அது திமுக கலர் அய்யர் என எழுதி இருந்தாலும் அதில் வெள்ளை நிறமும் இருப்பதால் அதிமுக(கருப்பு, வெள்ளை, சிவப்பு) ... அதற்கு கீழே கருப்பு,சிவப்பு,கருப்பு நிறத்தில் வாசுகி என எழுதி இருப்பதால் அது மதிமுக என தோன்றுகிறது...

Babu said...

nadappavar, cycle, bike,bus, auto ellam ore salayil ! correcta cable?

CS. Mohan Kumar said...

யு டான்ஸ் நம்ம நண்பர்களுடையதா? தெரியாம போச்சே. நம்ம ப்ளாகையும் இணைச்சுடுறேன். வாழ்த்துக்கள் கேபிள் மற்றும் ஜோசப்

சீனி பாட்டை நானும் இன்று தான் ப்ளாகில் பகிர்ந்தேன் (சூப்பர் சிங்கர் பற்றிய தனி பதிவில்)

அப்புறம் பஸ்ஸில் பகிர்பவைகளை தொகுத்தே வர வர கொத்து போட ஆரம்பிச்சிடீங்க ஓகே ! பஸ் எல்லாரும் படிப்பதில்லையே !

CS. Mohan Kumar said...

நான் தனி மெயிலில் ஒரு கேள்வி கேட்டிருந்தேன்,. பதில் அனுப்புங்க பிஸி யூத் சார்

jayaramprakash said...

என் மணி அய்யர்.எம் வாசுகி.

jayaramprakash said...

என் மணி அய்யர்.எம் வாசுகி.என்ன ஒரு பாச பிணைப்பு

Jags said...

Madhikettan Salai Review please.

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் கேபிள்ஜி.

பிரசன்னா கண்ணன் said...

எல்லாரும் கட்சி , கொடின்னு பாக்குறாங்க .. I guess its "காவல் 103"??

DR said...

மணி ஐயர் மற்றும் வாசுகி ஐரணி ஆக இருந்தாலும், கீழே போட்டு இருக்கும் வாசகம், காவல் துறை வாடகைக்கு கிடப்பதாக பொருள்கொள்ள தோன்றுகின்றது...

அப்போ அது இல்லையா ?

Jana said...

Hi boss After Long Time :)
Cable always Rock :))

தருமி said...

/இதே தேவர் குரு பூஜையின் போது நடந்திருந்தால் துப்பாக்கி சுட்டிருக்குமா?.//

எனக்கும் இதே கேள்வி தோன்றியது.

Sharmmi Jeganmogan said...

Udanzல் சேர்ந்தாச்சு...
ஓட்டுப்பட்டையும் போட்டாச்சு!

(கிரிஷ்ணா வந்தாச்சு, நிலா வந்தாச்சு tuneல் வாசிக்கவும்)

N.H. Narasimma Prasad said...

இந்த வார கொத்து பரோட்டா சூப்பர். அதிலும் கடைசியாக வந்த அடல்ட் கார்னர் செம.

MANO நாஞ்சில் மனோ said...

பல்சுவை விருந்து...!!!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழு...

settaikkaran said...

பரோட்டா சூடாவும் சுவாரசியமாவும் இருந்திச்சு! :-)

இளம் பரிதி said...

thala rocks....MANKATHADA....

சி.கிருபா கரன் said...

கேபிள் அண்ணே நானும் வாணிய செட்டியார் வகுப்பை சேர்ந்தவன் தான், என்ன செய்றது இந்த மாதிரி சில பண்ணி செல்வம்(டுபாகூர்) தொல்ல தங்க முடிரதில்லை.

சந்தியா said...

கொத்து சூப்பர்....

சந்தியா said...

நானும் திரட்டிக்கு போயிட்டு வாறன்..

இனிமேல் இளமைத் தோற்றத்தில் நடிப்பதில்லை-அஜித் அதிரடி முடிவு

R. Jagannathan said...

Nice Udanz!

DMK - Auto Iyer ஐ விடுங்க; ஊராட்சி தேர்தல் நடு நிலையோடு நடத்த கலைஞர் வேண்டுகோள் விடுத்த தேர்தல் அதிகாரி யார் தெரியுமா?
*
*
*
*
சோ. ஐயர்!

என்ன காம்பினேஷன் பெயர்! கலைஞர் மீண்டும் தோற்றதும் இவர் என்ன பாடு படப்போகிறாரோ!

-ஜெ.

sri said...

Hi sir Iam Narayanan at living Karaikal.Next time you viset thirunallur .pl.callMy no-9944938388

”தளிர் சுரேஷ்” said...

பல்சுவை பதிவு!அருமை!

ரிஷி said...

வணக்கம் சங்கர். Udanz உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

//Domain: udanz.com; Title: uDanz - Tamil Blogs Aggregator; Description: Udanz - Tamil Blogs Aggredator. Keywords: uDanz, யுடான்ஸ் ...
//

இத்தளத்தின் meta description-ல் aggredator என பிழையாக இருக்கிறது. சர்ச் எஞ்சினுக்கு அவசியமான ஒரு இடத்தில் பிழை காணக் கிடைப்பது வருத்தத்திற்குரியது. உடனடியாக சரிசெய்யவும்.

தோழமையுடன்
ரிஷி

ரிஷி said...
This comment has been removed by the author.
aotspr said...

சூப்பர் கொத்து.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com