Posts

Showing posts with the label rajinikanth

Box Office - Coolie

  Coolie Box Office Report சினிமா ரசிகர்கள் அனைவரும் நாளைய முதல் காட்சிக்காக எக்ஸைட்மெண்டோடு காத்திருக்கிறார்கள். நிச்சயம் இப்படம் பெரு நகரங்களை தவிர மற்ற நகரங்களில் 18 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதித்தது தொடர்பாக பிரச்சனைகள் வரத்தான் போகிறது. சரி வசூல் விவரத்துக்கு வருவோம். லோகி-ரஜினி காம்பினேஷன் தான் படத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு ஒரு முக்கிய காரணம். உடனே கமல் ரசிகர் என்றெல்லாம் தூக்கிக் கொண்டு வரக்கூடாது. அப்படியானால் இதே எக்ஸைட்மெண்ட் வேட்டையனுக்கு வந்திருக்க வேண்டும். முதல் நாள் வசூல் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே பெரும் டிக்கெட் விற்பனையை செய்திருக்கிறது. குறிப்பாய் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் கூலிக்கு தமிழ், அடுத்து தெலுங்கு, பிறகு இந்தி, பின்பு கன்னடம் என டிக்கெட் புக்கிங்கில் எதிர்பார்ப்பு வெளியாகியிருக்கிறது . இது வரை ப்ளாக் செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தமிழ் வர்ஷனுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் டிக்கெட்டுகள் இந்திய அளவில் விற்றிருக்கிறது என்கிறார்கள். மொத்தமாய் இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 11 லட்...

ரஜினிகாந்த ஆஸ்பிட்டலில் அனுமதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மீண்டும் உடல் நிலை சரியில்லாமல், ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் காரணமாய் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்போது அவரது உடல்நிலை சரியாக இருப்பதாகவும்,மேலும்  இரண்டு நாட்களுக்கு ஐ.சி.யூவில் வைத்து கண்காணிக்கப் போவதாகவும் ஹாஸ்பிட்டல் தரப்பு சொல்கிறது. அவரது உடல் நிலை தேறி ராணா வெற்றி வாகை சூட பிரார்த்தனை செய்வோம். http://www.ndtv.com/article/india/rajinikanth-hospitalised-for-breathlessness-103434?utm_source=feedburner&utm_medium=twitter&utm_campaign=Feed%3A+NdtvNews-TopStories+%28NDTV+News+-+Top+Stories%29

ரஜினியின் “ரானா” போஸ்டர் வெளியீடு

Image
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கும் ரானா திரைப்படத்தின் போஸ்டரை அதன் தயாரிப்பாளர் ஈராஸ் இண்டர்நேஷனலும், சவுந்தர்யா ரஜினிகாந்தும் வெளியிட்டிருக்கிறார்கள்.  கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ஆர்.ரத்னவேலுவின் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், தீபிகா படுகோன், இலியானா மற்றும இன்னொரு பிரபல நடிகை நடிக்கவிருப்பதாய் செய்திகள் உலவுகிறது. எந்திரன் படத்தின் பட்ஜெட்டை பார்த்து தங்களால் ஆகாது என்று ஐங்கரனிடம் கைவிரித்த நிறுவனம் தான் இந்த ஈராஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.   எஸ்