Box Office - Coolie

 Coolie Box Office Report

சினிமா ரசிகர்கள் அனைவரும் நாளைய முதல் காட்சிக்காக எக்ஸைட்மெண்டோடு காத்திருக்கிறார்கள். நிச்சயம் இப்படம் பெரு நகரங்களை தவிர மற்ற நகரங்களில் 18 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதித்தது தொடர்பாக பிரச்சனைகள் வரத்தான் போகிறது. சரி வசூல் விவரத்துக்கு வருவோம்.
லோகி-ரஜினி காம்பினேஷன் தான் படத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு ஒரு முக்கிய காரணம். உடனே கமல் ரசிகர் என்றெல்லாம் தூக்கிக் கொண்டு வரக்கூடாது. அப்படியானால் இதே எக்ஸைட்மெண்ட் வேட்டையனுக்கு வந்திருக்க வேண்டும். முதல் நாள் வசூல் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே பெரும் டிக்கெட் விற்பனையை செய்திருக்கிறது. குறிப்பாய் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் கூலிக்கு தமிழ், அடுத்து தெலுங்கு, பிறகு இந்தி, பின்பு கன்னடம் என டிக்கெட் புக்கிங்கில் எதிர்பார்ப்பு வெளியாகியிருக்கிறது
.
இது வரை ப்ளாக் செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தமிழ் வர்ஷனுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் டிக்கெட்டுகள் இந்திய அளவில் விற்றிருக்கிறது என்கிறார்கள். மொத்தமாய் இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 11 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியிருக்கிறதாய் சொல்கிறார்கள். இந்திய அளவிலான முதல் நாள் வசூல்
Box Office Report: Coolie -All Language -Indian Gross
1 Day- 24 Crores (Approx)
Blocked Ticket open Aanal இன்னுமொரு பத்து கோடி ஏறும்.

Comments

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

சாப்பாட்டுக்கடை - மன்னார்குடி டேஸ்டி செட்டிநாடு மெஸ்

செக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்