Rangeen- Hindi Web Series Review
ஆதர்ஷ் ஒரு நேர்மையான பத்திரிக்கையாளன். சொந்தமாய் பத்திரிக்கை ஒன்றை பார்ட்னருடன் நடத்தி வருகிறான். அவனுக்கு அழகான மனைவி நைனா. குழந்தைகள் இல்லை. நைனா வேறொரு இளம் வாலிபனான சன்னியுடன் சல்லாபம் செய்து கொண்டிருப்பதை ஆதர்ஷின் அக்கா பசங்கள் வீடியோ எடுத்து அனுப்ப, கையும் களவுமாய் மாட்டிக் கொள்கிறாள். சன்னியை துறத்திக் கொண்டு போய் மிஸ்ஸாகி, அவன் யார் என்று கண்டுபிடிக்கும் போது தான் தெரிகிறது. அவன் ஒரு ஜிகாலோ என்று. நான் ஒருவன் இருக்க, அவள் ஏன் ஜிகோலோவை தேடினாள் என்பது அவனது ஆண் ஈகோவை தட்டிவிட, மனைவி அவனை எதிர்கொள்ள முடியாமல் ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லி, அம்மா வீட்டில் போய் கிட்டத்தட்ட ஒளிந்து கொள்கிறாள். பத்திரிக்கையாளனான ஆதர்ஷுக்கு தானும் ஒரு ஜிகோலோ ஆக வேண்டும் என்று முடிவு செய்து ஜிகாலோ ஆகிறான். அதன் பின் என்ன ஆனது என்பது தான் கதை. செம்ம நாட்.
ஆதர்ஷாக வினீத் குமார் சிங். மனைவி தன்னை விட்டு வாடகை ஆணை தேர்ந்தெடுத்தது குறித்து ரியாக்ட் செய்யும் இடமாகட்டும், ஜிகாலோ பற்றி தெரிந்து கொள்ள விழைந்து ஏடாகூடமான இடங்களில் மாட்டிக் கொள்ளும் இடமாகட்டும், ஜிகாலோவாக மாறி க்ளையண்டுகளை இம்ப்ரஸ் செய்ய விழையும் இடமாகட்டும் செம்ம நடிப்பு. நைனாவாக நடித்திருக்கும் ராதிகா தேஷ்பாண்டேவின் நடிப்பு சிறப்பு. குறிப்பாய் கணவனிடம் கையும் களவுமாய் மாட்டிக் கொண்டவுடன் அவரது ரியாக்ஷன், அதன்பின்னான செயல்கள். அவனை மெல்ல தன்னை உணர்தல். அப்பா அம்மாவிடம் தன் பிரச்சனைகளை சொல்லாமல் இருக்கும் போது குழம்புமிடம். ஜிகலோவான சன்னியை ஒரு முறை அல்ல பல முறை அழைத்து சுகித்திருக்கிறேன் என்பதை குற்றவுணர்வு இல்லாமல் பேசுமிடம் என ஆங்காங்கே சிக்சர் அடிக்கிறார். சன்னியாக நடித்திருக்கும் ஷாருக் ராணாவுக்கு செம்ம கேரக்டர். துள்ளலான ஜிகாலோ. அதை வைத்து பணம் சம்பாரித்து லண்டனுக்குபோய் செட்டிலாக ஆசைப்பட்டு காசு சேர்த்துக் கொண்டிருக்க, இந்த நைனா பிரச்சனை அவனது வாழ்க்கையை மாற்றிப் போட்டு விடுகிறது. பின்னால் அவரது எரக்டைல் டிஸ்பங்க்ஷன் பிரச்சனை. அதனால் ஏற்படும் மன உளைச்சல். குடும்பத்தில் அவர் செய்யும் வேலை தெரிந்ததும் நடக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு மிக சிறப்பு. ஹை எண்ட் பொத்திக் நடத்தும் சித்தாரா செம்ம கேரக்டர். சித்தாராவாக ஷீபா சட்டா. கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். அவரது குரலில் உள்ள மடுலேஷன் தனி நடிப்பை கொடுத்திருக்கிறது.
செம்ம ப்ரைமைஸ் சும்மா விறுவிறுவென போக வேண்டாமா? அங்கே தான் இந்த சீரீஸில் சிக்கல். மிக மெதுவாக.. அதுவும் சில எபிசோடுகளில் மிகவும் மெதுவாகப் போகிறது. கதை என்னவோ செக்ஸ் சம்பந்தப்பட்டதாய் இருந்தாலும் சின்னதாய் ஒரு அழுத்தமான ஸ்மூச்சிங் கூட இல்லை என்பது இக்கதைக்கு ஒட்டாத விஷயமாய் இருக்கிறது.
ஹைஃபை பெண் கஸ்டமர்கள். அவர்களின் செக்ஸ் தேவை. செக்ஸ் தேவை மட்டுமில்லாது ஏன் அவர்கள் ஜிகாலோக்களை செலக்ட் செய்கிறார்கள் என்பதை வெளிப்படையாய் காட்டாமல் எங்கேயும் அவர்களை ஜட்ஜ் செய்யாமல் காட்டுவதாய் சொல்லிவிட்டு, ஆண்களை அவர்கள் ஜட்ஜ் செய்யும் விதமாய்தான் காட்சிகள் இருக்கிறது. எல்லா பெண்களும் ஏதோ ஒருவிதத்தில் ஆண்களிடம் இதை எதிர்பார்த்தேன் அதனால் என்பது போல காட்சிகள் வருகிறது. ரவுடியின் பெண்டாட்டியாய் வரும் ஜிக்னு கேரக்டர் தவிர. க்ளைமேக்ஸில் நெஞ்சை நக்கிவிடுவார்களோ? என்று பயந்து கொண்டிருந்த விதத்தில் முடியாவிட்டாலும் பெரிய அளவில் வாவ் போட வைக்கவில்லை. இந்த சீரீஸை எழுதி இயக்கியவர்கள் அமர்தீப் கல்சின், அமீர் ரிஸ்வி.
ஜிகாலோஸ் பற்றி வெளிநாட்டு சீரீஸ்கள் நிறைய வந்திருக்கிறது. இந்திய அளவில் வெளியான சி.ஏ.டாப்பர் எனும் நெட்ப்ளிக்ஸ் சீரீஸ் பெரிய ஹிட். அது தவிர தமிழில் முழுவதும் ஜிகிலோக்கள் வாழ்வைப் பற்றி நான் எழுதிய ‘நான் ஷர்மி வைரம்” தவிர சாரு போன்றோர் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் அவை எல்லாம் முழு ஜிகிலோக்கள் நாவல் இல்லை. இப்போது இந்த ரங்கீன். ஜிகிலோக்கள் பற்றிய கதை தான். ஆனால் அதை செக்ஸுவலாய் காட்டாமல் எமோஷனலாய் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஜிகாலோஸ் பற்றி வெளிநாட்டு சீரீஸ்கள் நிறைய வந்திருக்கிறது. இந்திய அளவில் வெளியான சி.ஏ.டாப்பர் எனும் நெட்ப்ளிக்ஸ் சீரீஸ் பெரிய ஹிட். அது தவிர தமிழில் முழுவதும் ஜிகிலோக்கள் வாழ்வைப் பற்றி நான் எழுதிய ‘நான் ஷர்மி வைரம்” தவிர சாரு போன்றோர் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் அவை நான் ஷர்மி வைரம் போல முழு ஜிகிலோக்கள் நாவல் இல்லை. நான் பல முறை இந்நாவலை திரைக்கதையாக்கி எடுக்க தயாராகியும் ஏதோ ஒரு விதத்தில் தயாரிப்பாளர்களின் தயக்கத்தால் தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இம்மாதிரி சீரீஸ்களின் வெற்றி நிச்சயம் ஒர் வழியை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

Comments