Mayasabha-Telugu Web Series

 மாயசபா.



இரண்டு பேர். மாணவர்கள். விவசாய குடும்பத்திலிருந்து வந்த கே.கே.ஆருக்கு அரசியலில் இறங்கி ஊருக்கு நல்லது செய்ய ஆசை. இன்னொரு பக்கம் டாக்டருக்கு படிக்கும் எம்.எஸ்.ஆர். ரெட்டியிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஒரு ரவுடியிச குடும்பத்திலிருந்து வருகிறவர். இவருக்கு டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதைத்தவிர வேறு ஆசை இல்லை. எமர்ஜென்ஸி காலத்தில் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். இவர்களின் அரசியல் வாழ்க்கை ஆந்திர அரசியலில் மிக முக்கியமானது. சந்திரபாபு நாயுடு, ராஜசேகர ரெட்டி இருவரைப் பற்றிய கதை. இருவரும் ஒன்றாய் அரசியலில் வளர்ந்து, ஒரே கட்சியிலிருந்து, என்.டி.ஆரின் மருமகனாகி, என்.டி.ஆர்- சிவபார்வதியின் பிரச்சனையால் கட்சியை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து ஆட்சியமைத்த கதை.
நண்பர்கள் இரு துருவமாக மாறும் நேரம் வரை இந்த சீசன் போகிறது. சந்திரபாபு நாயுடுவாக ஆதிபினிசெட்டியும் ராஜசேகர ரெட்டியாக சைத்தன்யா ராவும் நடித்திருக்கிறார்கள். என்.டி.ஆரை ஆர்.சி.ஆர், என்றும் நாகேஸ்வரராவை ஏ.சி.ஆர், என அழைக்கிறார்கள். ஆந்திர அரசியல் தெரிந்தவர்களுக்கு செம்ம சுவாரஸ்யமாய் இருக்கும் இந்த சீரிஸ். ஆங்காங்கே சில பல கற்பனைகளையும் கலந்தடித்திருக்கிறார்கள். என்.டி.ஆராய் சாய் குமார். இந்திரா காந்தியால் தான் என்.டி.ஆர் அரசியலுக்கு வந்தார் என்பதும் இந்திரா காந்தியின் எமர்ஜென்ஸி அபத்தம். ஆந்திராவில் ஸ்ட்ராங்கா இருப்பதால் அங்கே பொம்மலாட்ட ஆட்சி நடத்தியது. மாநிலமெங்கும் வியாபித்திருக்கும் ஜாதி அரசியல். என எல்லாவற்றையும் மிக தைரியமாய் பேசியிருக்கிறார் எழுதி, இயக்கிய தேவ் கட்டா. கே.சி.ஆருக்கும் ஒரு நடிகைக்கும் இடையே ஆன காதல் ஒரு நல்ல ட்ராக். அதில் வரும் டிவிஸ்ட் செம்ம. அதே நாயகியோடு மாமனார் ஆடும் பாடலை பார்க்கும் காட்சி, இந்திரா தன் மகன் சஞ்சய் காந்தி தன்னை எதிர்த்ததினால் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டார் என்பது போல பல காட்சிகள் நேரிடையாய் சொல்லாமல் மறைமுகமாய் சொன்னது. ஆந்திர அரசியலில் காய் நகர்த்தும் பல அரசியல்வாதிகளை தெரிந்தவர்களுக்கு மற்ற நடிகர்களின் ந்டிப்பு இன்னும் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. ஆட்சியை பிடிப்பது வரை முடிகிறது இந்த சீசன். சந்திரபாபு நாயுடுவையும், ஒய்.எஸ்.ஆரையும் எங்கேயும் குத்தாமல் அவர்கள் பதவிக்கும் வந்தும் ஏன் எதையும் அவர்கள் ஆசைப்படி செய்ய முடியவில்லை என்பதையும். ஜாதி அரசியல் எந்த அளவிற்கு ஆந்திர அரசியலில், சமூக கட்டமைப்பிடையே அழுகிப் போய் கிடக்கிறது என்பதி மிக தைரியமாய் சொல்லியிருக்கிறது இந்த் சீரீஸ். டோண்ட் மிஸ். #mayasaba #adi #SaiKumar #SonyLIV #teluguseries2025cablesankar
பி.கு. இது முழுக்க முழுக்க கற்பனை கதைதானாம்.
🙂

Comments

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

சாப்பாட்டுக்கடை - மன்னார்குடி டேஸ்டி செட்டிநாடு மெஸ்

செக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்