கொத்து பரோட்டா -03/11/14
அசோக்நகர் பஸ்ஸ்டாண்ட் ஞாயிறு இரவு. அவ்வளவாக கூட்டமில்லை. கிட்டத்தட்ட எல்லா பஸ்களும் காலியாக்வே இருந்தது. கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்தார்கள். நண்பர் செந்தில் மன்னார்குடி பஸ்ஸுக்காக காத்திருந்தார். பஸ்ஸுக்கு காத்திருக்கையில் பணக்காரன் அவனுக்கான வசதி கிடைச்சா காசைப் பத்தி கவலைப்படமாட்டான். ஏழை அதிகமா காசு கேட்டா சண்டைக்கு வருவான். அதிகமான மிடில் க்ளாஸ்தான் ரெண்டுத்துக்கும் போக முடியாம அவஸ்தை படுவான் என்று சொல்லிக் கொண்டிருக்க, மதுரைக்கு போக பக்கா கிராமத்து குடும்பம் ஒன்று ஆட்டோவில் வந்திரங்கியது. மீட்டரைப் பார்த்து காசை சரியாய் கொடுத்தவர்கள் மதுரை பஸ்ஸுக்காக காத்திருக்க, ஒரு பஸ் ரொம்ப நேரமாய் ஆட்களுக்காக காத்திருக்க, இவர்களைப் பார்த்த பஸ்காரன் “அண்ணே மதுரைண்ணே.. வாங்க..” என்றதும் “எவ்வளவு?” என்று கேட்டார் பெருசு. உடன் நான்கு டிக்கெட்டுகள் என்று கண்ணாலயே கணக்குப் போட்டு, தோராயமாய் ஒர் அமெளண்டை சொல்ல, அது கட்டுப்படியாகாது என பெண்கள் கூட்டம் அமைதியாய் முகத்தை திருப்பியது. அவர்களது ரியாக்ஷனைப் பார்த்த பெருசு “வேணாம்பா.. நீ ஆள் ஏத்தி கிளம்பறதுக்கு லேட்டாவும்” என்று மறுத்தார். “அண்ணே.....