25லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும், வாசக பெருமக்களுக்கும் நன்றி...நன்றி..நன்றி

இந்த புத்தகம் இது வரையில் இந்தியாவில் வெளியாகவில்லை என்றாலும் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்களை வைத்து உருவான விவாதங்களினால் சூடு ஏறி, விஷயம் இந்திய அரசின் காதுகளுக்கு எட்டி, இன்று குஜராத்திலும், மஹாராஷ்ட்ராவிலும் இப்பதகத்தை தடை செய்திருக்கிறார்கள்.
புத்தகத்தில் காந்தியை ஒரு நிறவெறியர் என்றும் பைசெக்ஸுவல் என்று சொல்லியிருக்கிறாராம். அதாவது காந்திக்கும் ஜூயிஷ் உடற்பயிற்சியாளர் Herman Kallenbach என்பவருக்கும் இடையே செக்ஷுவல் தொடர்பு இருந்ததாக சொல்லப் பட்டிருக்கிறது.
ஊரில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் ஆளாளுக்கு திடீரென காந்தி பாசம் ஏறி அறிக்கை விட ஆரம்பித்திருக்கிற நேரத்தில், காந்தியின் பேரனான துஷார் காந்தி இந்த தடையுத்தரவை வன்மையாக கண்டித்திருக்கிறார். தடையை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சாப்பாட்டுக்கடை -கல்யாண பவன் பிரியாணி