
இதுவும் ஒரு சமோசா கடைதான். சத்யம் தியேட்டருக்கு எதிரே ஒரு சிறு கடையாய் இருக்கும். இங்கு சுண்டல், ஜிலேபி, சமோசா ஆகியவை இருக்கும். இவர்களுடய ஸ்பெஷாலிட்டியும் சமோசாதான். இவ்விடத்திலும் போடப் போட, காலியாகிக் கொண்டேயிருக்கும். வெங்காயம் இல்லாத உருளை மசாலா. மசாலாவின் டேஸ்ட் மட்டும் கொஞ்சம் காரமாய் இருக்கும். ஒரு சமோசா ஏழு ரூபாய். அங்கே கொடுப்பது போல் மந்தார இலையில் தராமல், கப்பில் தருவார்கள். சூடான சமோசாவோடு, சுண்டலையும் சேர்த்து சாப்பிடுபவர்கள் நிறைய பேர். எனக்கு இவர்களது சுண்டல் அவ்வளவாக பிடிக்காது.

ரெண்டு சமோசா வாங்கி நன்றாக உடைத்து, அதில் ஒரு கரண்டி கார சட்னியை ஊற்றி, அதன் மேல் சுண்டல் மசாலா கிரேவியை ஒரு கரண்டி ஊற்றி, அதன் மேல் ஃபைனல் டச்சாய் கார சட்னியை ஊற்றிக் கொண்டு, பொடிசாய் நறுக்கிய வெங்காயத்தை ஒரு தூவு தூவி, சமோசாவை கிரேவியோடு சாப்பிட்டுப் பாருங்கள்.. டிவைன். சத்யம் தியேட்டரின் உள் நுழையும் வாயில் இந்த கடையின் முன்பாக இருந்த வரை, நைட் ஷோ அரம்பிக்கும் நேரம்வரை ஜரூராக நடந்து கொண்டிருந்த வியாபாரம், நுழைவாயிலை மாற்றிவிட்டதால் குறைந்துவிட்டது என்கிறார்கள்.
Comments
padikkum pothu navil echchil urukirathu...