Thottal Thodarum

Mar 21, 2011

கொத்து பரோட்டா-21/03/11

SK D1 F1 V3 (1) PNM D3 F1 V3
மீண்டும் என்னுடய புத்தகம் ஒன்று விரைவில் வெளியாக இருக்கிறது. இம்முறை உங்களின் மனம் கவர்ந்த “கொத்து பரோட்டா”வைத்தான் “ழ” பதிப்பகம் வெளியிடுகிறது. கொத்து பரோட்டாவுடன், கே.ஆர்.பி. செந்தில் எழுதிய “பணம்”, என்.உலகநாதன் எழுதிய “சாமான்யனின் கதை” “வீணையடி நீ எனக்கு” ஆகிய புத்தகங்ளையும் வெளியிடுகிறார்கள். எல்லா புத்தகத்திற்கும் உங்களின் தொடர்ந்த  ஆதரவு வேண்டுமென்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
  KB D4 F1 V1 VNE D1 V4 
*****************************************


மீண்டும் ஒரு இலவச தேர்தல் அறிக்கை கதாநாயகியாய் வெளிவந்திருக்கிறது. இதைப் பற்றி ஆளாளுக்கு விமர்சனம் செய்தாலும் வெற்றிப் பெற்ற ஒரு பார்முலாவைத்தானே வெற்றிக்கு அருகிலிருப்பவர்கள் தொடர்வார்கள். ஏற்கனவே இலவசத்திட்டத்தினால் டிவி, கேஸ் அடுப்பு ஆகியவைகளை வரப் பெற்றவர்கள் நிச்சயம் அவர்களூக்கு ஓட்டுப் போடத்தான் விழைவார்கள். இதற்கு மாற்றாக எதிர்க்கட்சிகளும் ஆளுக்கொரு லேப்டாப் இலவசமாய் கொடுக்கப் போவதாய் பேச்சு அடிபடுகிறது. எது எப்படியோ.. நம்ம காசு நம்மகிட்டயே வந்தாச் சரி என்று எண்ணும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  மாவட்டதிற்கு ஒரு பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி, முதியோர்களுக்கு இலவச பஸ் வசதி, உயர்கல்வி மாணவர்களுக்கான லேப்டாப் போன்ற திட்டங்கள் எல்லாம் கொஞ்சம் ஞாயமானதென்றே தோன்றுகிறது. அப்படியே உயர்கல்விவரை இலவசமாய் கொடுத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.
#########################################
என் மனைவியிடம் கேட்டேன் “உன் ஓட்டு யாருக்குன்னு?” “என்னை பொறுத்த வ்ரை தொண்ணூறு ரூபா பருப்பு வித்த போது ஐம்பது ரூபாய்க்கு கொடுத்த ஆள் யாரோ அவங்களுக்குத்தான் என்றாள். நியாயவிலைக் கடை மூலமாய் கிடைக்கப் பெறும் பொருட்கள் தரம் குறைந்திருந்ததாக இருக்கும் என்ற ஒரு களங்கத்தை இந்த அரசின் விநியோக முறையில் களைந்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இன்றும் என் வீட்டில் ரேஷ்ன் கடை அரிசி, மளிகைப் பொருட்கள், பருப்பு, எல்லாவற்றையும் வாங்கி உபயோகித்துக் கொண்டுதானிருக்கிறோம். நன்றாகவேயிருக்கிறது. நிச்சயமாய் நான் ஒரு திமுக கட்சிக்காரனோ, அனுதாபியோ கிடையாது. திமுகவுக்கு பதில் அதிமுகவைத் தவிர யாரை வேண்டுமானாலும் ஆதரிக்க சொல்லுங்கள் நான் அவர்களை ஆதரித்து திமுகவை மூதரிக்கிறேன்.
###################################### 
பத்திரிக்கையாளர் பிலிம் நியூஸ் ஆனந்தனுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. பேச்சின் நடுவே உங்களது சினிமா தகவல்களையெல்லாம் இணையத்திலோ, அல்லது கம்ப்யூட்டரைஸ்டாகவோ வைத்திருக்கிறீர்களா? என்று கேட்ட போது, நானும் அதற்கு பல முயற்சி செய்து செலவு செய்தும் பார்த்துவிட்டேன். யாரும் சரியாக செய்து தர மாட்டேன்கிறார்கள். பாதியிலேயே ஓடிவிடுகிறார்கள். கொஞ்சம் நல்லவங்களா பொறுமையா வேலை செய்து, அவ்வளவு டேட்டாவை காப்பாத்தி வச்சிருக்கிறத அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகணும் முடிஞ்சா பாருங்க என்றார். கம்ப்யூட்டரில் விற்பன்னர்களாக இருக்கும் நம் நண்பர்கள் யாராவது அவருக்கு உதவ முடியுமென்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். தமிழ் சினிமாவின் விக்கிபீடியா அவர்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஒரு பெரிய ஒளிப்பதிவாளருடனான விவாதத்தில் சினிமாக்களின் விமர்சனங்களைப் பற்றி பேச்சு வந்தது. என்னுடய விமர்சனங்களால் ஈர்க்கப்பட்டவர்களில் அவரும் ஒருவர். பேச்சு மிக சுவாரஸ்யமாய் போய்க் கொண்டிருந்த நேரத்தில், விகடனை ஒரு பிடி பிடித்தார். அவர்கள் எப்படி ஒரு படத்திற்கு மார்க்கு போடலாம். மார்க்கு யார் போடணும்? நல்லா படிச்சு வாத்யாரா இருக்கிறவன் தானே மார்க்கு போடணும்? நீ விமர்சனம் செய்யி.. ஆனா மார்கு போடாதே! மார்க்கு போட நூறு சதவிகீதம் சினிமாவை கரைச்சு குடிச்சிருக்கணுமில்ல.. உனக்கு தெரியுமா நூறு சதவிகிதம்? அதான் தெரிஞ்சிருச்சு இல்ல.. லட்சணம். இப்பவும் சொல்றேன்.. நீ விமர்சனம் செய் ஆனால் மார்க் போடாதேன்னு திரும்பத் திரும்பச் சொன்னாரு. எனக்கென்னவோ சரியாத்தான் பட்டுது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஃபீலிங்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
என்னவோ தெரியவில்லை கோபிகிருஷ்ணனின் ”உள்ளேயிருந்து சில குரல்கள்” படிக்க ஆரம்பித்ததிலிருந்து, பக்கங்கள் மற்ற புத்தகங்கள் போல பரபரவென ஓட மாட்டேன் என்கிறது. எழுத்தின் சுவாரஸ்யம் காரணமாக அல்ல, அதில் வரும் மனநலம் குன்றியவர்களின் வாழ்க்கையை ஒவ்வொரு அத்யாயம் படித்ததும் மனதினுள் ஓடும் எண்ணங்களால் தான் ஓட்டம் நிற்கிறது. அசை போடுகிறது. எவ்வளவு மெல்லிய இழை மனதானது. இதற்கெல்லாம் கூட மனநலம் குன்றுமா?என்று யோசிக்க வைக்கும் பல சில்லி விஷயங்கள் அவர்கள் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது?. நாமெல்லாம் அறுபடாமல் ஓடிக் கொண்டிருப்பது அதிசயம் தான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Kite_dnger1 slitneck
சென்ற வாரம் பேப்பரில் வந்த ஒரு செய்தியை பார்த்ததும் மனம் கனத்துப் போனது. பீச் பக்கமாய் வண்டியோட்டிக் கொண்டுவந்த தம்பதிகளின் இரண்டரை வயது பெண் குழந்தை காத்தாடி விடும் மாஞ்சா கயிற்றால் கழுத்து அறுபட்டு இறந்தாள் என்பதுதான். அந்த பெற்றோர்களின் கதறல் அந்த செய்தியை படித்ததிலிருந்து உள்ளுக்குள் கேட்டுக் கொண்டேயிருந்தது.காத்தாடிக்கு மாஞ்சா போடும் போது, நூலை மாஞ்சாவோடு ஊறவைத்து அப்படியே பறக்க விடுவார்கள். காத்தாடியை கீழிறக்கும் போது நூல் காய்ந்து வரும். அப்படி வரும் போது நாம் வேகமாய் இழுக்கும் போது கை விரல்களை கிழித்துவிடும். அவ்வளவு ஷார்ப்பாக இருக்கும் அந்த நூல் ரோட்டில் வண்டியில் போகிறவர்களின் கழுத்தில் மாட்டி கழுத்து நரம்பு அறுந்தால் அவ்வளவு தான். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலோ, பீச், பார்க் போன்ற இடங்களில் காத்தாடி விடுவதற்கான தடையுள்ளது. போலீஸார் கொஞ்சம் கவனம் கொண்டு அதை முறைப்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலுள்ள படங்களைப் பார்த்தால் நீங்களே காத்தாடி விட நாலு முறை யோசிப்பீர்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ப்ளாஷ்பேக் தமிழ் படங்களை விட வருடக் கணக்கில் ஓடிய தெலுங்குப் படம். ஹிந்தியில் கேட்கவே வேண்டாம். அங்கும் மெஹாஹிட். இப்படத்தில் மெலடியான ரெண்டும் பாடல்கள் இன்றும் கிளாஸிக்காக இருந்தாலும், இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். எல்.ஆர்.ஈஸ்வரியின் காந்த குரலில் ஒலிக்கும் பாடலைப் பாருங்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குறும்படம் ராசி, சொல்ல சொல்ல இனிக்கும் ஆகிய படங்களை இயக்கிய திரு.முரளிஅப்பாஸின் குறும்படம். கொஞ்சம் சீரியஸ் ஜெனரை சேர்ந்தது. வைத்திருக்கும் ஷாட்களில் ஒரு தேர்ந்த சினிமா கலைஞனின் கைவண்ணம் தெரிகிறது. கொஞ்சம் எடிட் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். உங்களின் பார்வைக்கு
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வாழ்த்துக்கள் நண்பர் ஜாக்கி சேகரின் அழகு தேவதைக்கும், பாஸ்டன் ஸ்ரீராமின் ஏஞ்சலுக்கு என் இனிய அன்பான முத்தங்களுடன் வரவேற்பு. நணபர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
############################################
தத்துவம்
ஒவ்வொரு வெற்றிப் பெற்ற மனிதனுக்கும்  ஒரு வலியுள்ள கதையிருக்கிறது. ஒவ்வொரு வலி மிகுந்த கதைக்கும் ஒரு வெற்றிகரமான முடிவிருக்கிறது. எனவே வலியை தாங்கிக் கொண்டு வெற்றிக்கு அடி போடு.

வாழ்க்கையில் போரா? காதலா? எது முக்கியம் என்று கேட்டால் நான் போரைத்தான் சொல்வேன். ஏனென்றால் போரில் வாழ்வோ அல்லது சாவோ ஒன்று நிச்சயம். ஆனால் காதலில் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அவதிப்பட நேரிடும். – ஹிட்லர் சொன்னதாம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அடல்ட் கார்னர் ஒரு டீனேஜ் பெண் கடைக்குப் போய் ஒரு பாக்கெட் காண்டம் கேட்டாள். கடைக்காரனால் அதை நம்பமுடியவில்லை. உடனே அவளிடம் ‘இந்த சின்ன வயசில உனக்கு எதுக்கும்மா காண்டம்? இன்னும் உன் குழந்தை முகத்தில பால் வடியுது” என்று சொன்னான். அதுக்கு அவள் சொன்னாள் ‘அது பால் இல்ல சார்” என்று.
####################################################
 சேர்வா
பாப் கிறிஸ்டோ என்கிற வெளிநாட்டு நடிகர் இந்தியா முழுவதும் உள்ள மொழிகளில் அட்லீஸ்ட் பாதியிலாவது நடித்திருப்பார். அமிதாப்பில் ஆரம்பித்து, கமல்,ரஜினி, நாகார்ஜுன், வெங்கடேஷ், என்று தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மற்றும் சில மொழிகளில் சுமார் 700க்கும் மேற்ப்பட்ட படத்தில் நடித்தவர். அந்த காலத்தில் வெள்ளைக்காரனுடன் சண்டை என்றால்  கமலும், ரஜினியும் இவருடன் தான் போடுவார்கள். நேற்று பெங்களூரில் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 72.
#######################################################
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

48 comments:

K.MURALI said...

Nice kothu.

தமிழ்வாசி பிரகாஷ் said...

கொத்து பரோட்டா செம டேஸ்ட்டு...


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

தமிழ் 007 said...

வெளியாகவிருக்கும் நான்கு புத்தகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

sugi said...

All the Best! Nice kothu parotta..

bandhu said...

புத்தகங்களுக்கு வாழ்த்துக்கள்.
அடல்ட் ஜோக் மிக மிக கேவலமாக உள்ளது, பெடோபில் சாயலுடன்.
அதே போல், தி மு க விற்கு ஒட்டு போடுவதற்கு 2G ஊழலெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது!

குடுகுடுப்பை said...

அடல்ட் கார்னரில் 18 வயதுக்கு குறைந்த கதாபாத்திரத்தை உபயோகிப்பது எனக்கு தவறாகப்படுகிறது.

க ரா said...

அடல்ட் கார்னர தவிர்த்து மிச்ச எல்லாம் ஒ.கே.. நீங்களாது இந்த அடல்ட் ஜோக்ஸ கொஞ்சம் பார்த்து போடுங்க..

Hemanth said...

திரு சங்கர்,

Film News ஆனந்தன் அவர்களின் கோப்புகளை பதிவேற்றம் செய்வதில் எனக்கும் ஆர்வமுண்டு. நான் உங்களுடுன் சேர்ந்து இதில் பயணப்படுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன் . ஆனால் ஒன்று - நான் மலேசியாவில் வசிக்கின்றேன் - சென்னை வர இயலாது. அது பிரச்சனை ஆகுமோ ?

We can talk about this at a leisure time - please let me know. I am reachable on itshemanth@gmail.com , தொலைபேசி - +60 17 884 8272

இவண் - Hemanth

sriram said...

வாழ்த்துக்கு நன்றி கேபிள்..
ஆசுவாசப் படுத்திக் கொண்டு ஓரிரு நாட்களில் தொலைபேசுகிறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

karthik said...

Nice

அவிய்ங்க ராசா said...

வாழ்த்துக்கள் கேபிள் அண்ணா(அண்ணான்னு கூப்பிடலாம்ல??)
ஏஜோக்கை தவிர்க்க முடியாவிட்டாலும் குடுகுடுப்பையார் சொல்லியபடி, அட்லீஸ்ட் 18+ இருக்கும்பாடியாது பார்த்துக்கொள்ளலாமே..

சி.வேல் said...

cabel டிவி இலவசமாக ஜெயலலிதா தருவேன்னு சொன்ன பிறகு நீங்க எப்படி அவருக்கு ஒட்டு போடுவிங்க , எல்லாம் ஒரு உல்குத்து இல்லாம இருக்குமா

Prabu M said...

//நாமெல்லாம் அறுபடாமல் ஓடிக் கொண்டிருப்பது அதிசயம் தான். //

இந்த‌ சிந்த‌னை மிக‌வும் க‌வ‌ர்ந்த‌து....

மாஞ்சா நூல் விஷ‌ய‌த்தில் ம‌ன‌ம் கொதித்த‌து... இதுபோன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளால்தான் இன்னும் சென்னை மேல் ம‌ரியாதை வ‌ருவ‌தில்லை...

அட‌ல்ட் கார்ன‌ரில் ஒரு மைன‌ரை வ‌ர‌ம்புமீறி சித்த‌ரித்திருப்ப‌து ஸாரி... ம‌ட்ட‌மான‌ டேஸ்ட்...

Cable சங்கர் said...

@murali
நன்றி

@தமிழ்வாசி
நன்றி

@தமிழ் 007
நன்றி

2சுகுணா
நன்றி

@பந்து
நன்றி.
திமுகவுக்கு ஓட்டுப் போடுவதில் பெரும்பாலான மக்களின் அடிப்படைத் தேவை தீர்விலேதான் இருக்கிறது என்பது என் நம்பிக்கை.

@குடுகுடுப்பை
ஓகே தலைவரே.. இப்ப மாத்திட்டேன் .

@இராமசாமி
ஓகே...

@ஹேமந்த்
நிச்ச்யம் உங்களுடன் பேசுகிறேன்.

@ஸ்ரீராம்
ஓகே

கார்த்திக்
நன்றி

@அவியிங்க ராசா
ஓகே.. அண்ணேன்னு கூப்பிட மதுரைக்காரன் உனக்கில்லாத உரிமையா..?

கூப்பிடாட்டி கொண்டேபுடுவேன்.:)

Cable சங்கர் said...

சி.வேல்
ஜெயலலிதா இன்றளவில் அவருடய தேர்தல் அறிக்கையாக எதையும் அறிவிக்கவில்லை. அப்படியே அவர்கள் இலவசமாய் அளித்தாலும்..அது எங்கள் மூலமாய்த்தான் வரும். எங்களுக்கு மாச காசு வாங்க அலையத் தேவையாக இருக்காது.

Cable சங்கர் said...

பிரபு.எம்.
காத்தாடி மேட்டரில் சென்னை மட்டுமல்ல பல ஊர்களில் இந்த நிலைமைதான். படத்திள் உள்ள நபர்கள் சென்னை வாசிகிடையாது.

Unknown said...

இலவசங்கள் எப்படி குடுக்கப்படுகிறது என்பதை நன்றாக அறிந்த உங்களைப்போன்றவர்கள் அதை பாராட்டிப்பேசுவது..

தி.மு.க வின் தீவிரத்தொண்டனே நீர் வாழ்க..

Cable சங்கர் said...

அதனாலத்தான் சொல்றேன் தலைவரே.. எப்படிக் கொடுக்கப்படுகிறது என்று தெரிந்த்தால் தான்..அப்படியாவது வாங்கிக்கோங்கன்னு சொல்றேன்.

iniyavan said...

கொத்து புரோட்டா அருமை.

நன்றி!

அப்புறம் உங்கள் புத்தகத்திற்கு வாழ்த்துக்கள்.

பிரபல பதிவர் said...

//திமுகவுக்கு பதில் அதிமுகவைத் தவிர யாரை வேண்டுமானாலும் ஆதரிக்க சொல்லுங்கள் ///

தலையெழுத்து அதான்னா என்ன செய்ய முடியும்.....
1 லட்சம் கோடி கடன்.... 2 லட்சம் கோடி ஊழல்....... ர‌வுடிய‌ஸ‌த்தின் உச்ச‌க‌ட்ட‌ம்.....
நாங்க‌ள்லாம் ஓட்டு போட‌ வ‌ர‌முடியாது... அத‌னால‌ வாய் பேச‌ முடியாது.....

ஆனாலும் எனது ந‌ண்ப‌ர்க‌ளிட‌மும், உற‌வின‌ர்க‌ளிட‌மும்.... அம்மாவுக்காக‌ கேன்வாஸ் செய்கிறேன்....

ஏன்னா அதிமுக‌ வ‌ந்தால்.... ஜெ,ச‌சி கும்ப‌ல் ம‌ட்டும்தான் ஆடும்....இந்த‌ குரூப் வ‌ந்தால் த‌மிழ்நாடு க‌ருணாநாடு ஆயிடும்....

shortfilmindia.com said...

வேட்பாளர் லிஸ்டே தனக்கு தெரியாமல் வந்துவிட்டது என்று சொல்லியிருப்பதை பார்த்தால் தெரியவில்லை. கட்சியாரிடம் இருக்கிறது என்று. தொடர்நது ஆதரித்துக் கொண்டிருக்கும் ஜுவியே நேற்றைய இதழில் எல்லாக்கட்சிக்கும் ஒரு பொது செயலாளர்னா அதிமுகவுக்கு 9 ந்னு சொல்லியிருக்காங்க.

shortfilmindia.com said...

ரவுடியிஸம் எல்லாம் கொஞ்சம் எக்ஸாசரேட்டட்.. போன கலைஞர் ஆட்சியை விட இப்போது கிட்டத்தட்ட அடியோடு இல்லை என்றாலும் இந்த விஷயத்தில் அமைச்சர் ரவுடிகளை கூட அடக்கி வைத்திருந்தததில் அம்மா ஒரு படி மேல் தான்.

Jackiesekar said...

வாழ்த்துக்கு நன்றி கேபிள்... உங்கள் அரசியல் நிலைபாடுதான் என்னுடையதும்...

CS. Mohan Kumar said...

அடுத்த புக்கிற்கு வாழ்த்துகள் சங்கர் நாராயண் ! ஆமாம் அது என்ன புக் அட்டையில் எர்டேல்லுக்கு இலவச விளம்பரம்??

காத்தாடி பற்றி நானும் எழுத நினைத்திருந்தேன், நீங்கள் எழுதியது நன்று. நிறைய பேரை சென்று அடையும்

பிரபல பதிவர் said...

//வேட்பாளர் லிஸ்டே தனக்கு தெரியாமல் வந்துவிட்டது என்று சொல்லியிருப்பதை பார்த்தால் தெரியவில்லை///மப்புல ஏதாவது உளறீருப்பாங்க தல....

மத்தபடி இந்த 2ஜி யால எழவு எங்க பேரும் சேந்து கெட்டு போச்சு.... தமிழன் என்றால் திருடன் என்றுதான் பார்க்கிறார்கள்.... கண்ணுக்கு தெரியாமல் வித்யாசமாக நடத்த தொடங்கிவிட்டனர்....

வெளிமாநில தமிழ் நண்பர்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்

Just a Postman said...

if u intrested please visit http://postmanpostmartem.blogspot.com

'பரிவை' சே.குமார் said...

Parotta Arumai... nalla vanthirukku...

King of sivakasi said...

Dai, ஜாக்கி சேகர்,

Un vellai ya paru. DMK is waste.

Arivazhagan said...

Voices like yours (and mine) are getting drowned in the hysteria of 2G scam. ADMK with Jaya had two terms as ruling party and every one knows how they performed. DMK with all its faults is still the best option.

VISA said...

//திமுகவுக்கு பதில் அதிமுகவைத் தவிர யாரை வேண்டுமானாலும் ஆதரிக்க சொல்லுங்கள் நான் அவர்களை ஆதரித்து திமுகவை மூதரிக்கிறேன்.
//

Same here....

kchandru said...

நன்றி ஷங்கர் அண்ணா

Unknown said...

ஹிட்லர் தத்துவம் அருமை.வழக்கம் போல் அருமை

Anonymous said...

Dear Sankar Sir,

I am also interested to join on Film News Anand Sir's database work. What should I do ?

Cable சங்கர் said...

preetham.. please do contact me regarding this

pichaikaaran said...

அண்ணை. பில்ம் நியூஸ் ஆனந்தன் அவர்களை எனக்கு அறிமுக படுத்துங்கள் . அவரிடம் ஒரு டவுட் கேட்கணும்

ராஜரத்தினம் said...

இந்தியாவில் என் வீட்டில் துணி துவைக்கும் பெண்மணி கூட உங்கள் தலைவரின் கதாநாயகியை (விஜயகுமாரி அல்ல) பார்த்த பிறகு நான் கேட்டேன் உன் வோட்டு யாருக்கு என்று அவர் தெளிவாக சொன்னார் இலவசங்கள் தொடர்ந்து வராது. டீவிக்கு கேபிள் கனெக்‌ஷன் போல். அதிலும் குடும்ப வருமானத்திற்காகத்தான் இலவசம். அதனால் நான் அம்மாவுக்குதான் போடுவேன் என்றார். உங்கள் வோட்டாவது நாளை 40ரூபாய் பருப்பு கொடுத்தால் மாற்றி விடுவீர்கள். அவர்கள் என்றுமே Strong. அப்புறம் அது என்ன உங்க உடன்பிறப்புகளின் code Word ஆ... அதிமுக தவிர யாருக்கு வேண்டுமானாலும் போடுவேன் அதற்காக நான் திமுக அனுதாபி கிடையாதுன்னு ஒரே மாதிரி கூவறீங்க?

pichaikaaran said...

என் பின்னூட்டத்தின் வாக்கியம் தவறு . என்னை அவரிடம் அறிமுகம் செய்து வையுங்கள் என்பதே நான் சொல்ல விரும்பியது

Sukumar said...

வாழ்த்துக்கள் பாஸ்..

Mon Cibus said...

Do you know 2G, I think You are reading newspaper,pls do? Not only that,I am from Madurai, So I will not vode for DMK.

Unknown said...

i don't expect hit blogger like supporting one political party.

pichaikaaran said...

"அமிதாப்பில் ஆரம்பித்து, கமல்,ரஜினி,"

ஹ ஹ... அண்ணே .. நீங்க என்னதான் முயன்றாலும்...

அய்யோ... வேண்டாம்..போதும்...

Sivakumar said...

பின்னூட்டங்கள் கூட கொத்து பரோட்டா மாதிரி உள்ளன. மினி கொத்து பரோட்டா போடலாம்..

Unknown said...

வெறும் ஊடகங்களின் ஆதிக்கத்திலான ஒரு பிரம்மை தான் உங்களின் தி மு க மீதான அபிப்பிராயம்.ஒரு ரூபாய் அரிசி கொண்டு வந்ததால் ,நடுத்தர மக்கள் கஞ்சி மட்டும் தான் குடிக்க வேண்டிய சூழ்நிலையை உண்டாக்கினர். 32ரூபாய் இருந்த பருப்பின் விலை - இப்போது 55 - 75 ரூபாய் . ஒரு கிலோ சர்க்கரை -35 ரூபாய். நண்பரே ஸ்பெக்ட்ரம் தாண்டியும் பல இன்னல்கள் உண்டு .அதே சமயத்தில் அ தி மு க மீதும் முழு உடன்பாடு இல்லை. ஆனால் ஆட்சி மாற்றம் என்ற அஸ்திரம் தொடர்ந்தால்தான் தான் தோன்றிதனம் குறையும் .மக்களின் மன நிலையும் இன்று அதுதான்..... http://jskpondy.blogspot.com/2011/03/blog-post_20.html

செல்வமுரளி said...

கேபிள் சங்கர் சொல்லுங்க. என் நிறுவனம் சார்பில் திரு.பிலிம்நீயூஸ் ஆனந்தன் அவர்களிதன் தகவல்களை டிஜிட்டலைஸ் செய்ய நான் முன்வருகிறென்.......

shortfilmindia.com said...

@jackie sekar
நன்றி ஜாக்கி

@மோகன்குமார்
சும்மா..
நிஜமாகவே இதைப்பற்றி எழுதணுமின்னு இருந்தேன். அதற்கு முக்கிய காரணம் டெல்லியிலிருக்கும் சந்துருதான்.

@சிவகாசி மாப்பிள்ளை
ஹி..ஹி.

shortfilmindia.com said...

@சே.குமார்
நன்றி

@கிங் ஆப் சிவகாசி.

மிஸ்டர்.. உங்கள் கருத்துக்களை மரியாதையாக சொல்லலாமே?

@அறிவழகன்
இவர்களின் ஊழல் என்பது இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இவர்களுக்கு மாற்றாய் அதிமுக என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.

2விசா
கீரீன் பிஞ்ச்

@சந்துரு
எதுக்கு?

@நந்தா ஆண்டாள்மகன்
நன்றி

@ராஜரத்தினம்.
அவ்வளவு யோசிக்கிறவர் நிச்சயம் உங்கள் வீட்டில் வேலைக்காரியாக இருக்க முடியவே முடியாது.. நிச்சயம் நான் கூவவில்லை. நீங்கள் தான். எங்கே நாங்கள் சொல்வது பலித்துவிடுமோன்னு சொல்றுற மாதிரி இருக்கு

@சுகுமார் சுவாமிநாதன்
நன்னி

@அனிதா
ஏன் நான் கூட அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டேன். நான் பல வருடங்களாய் பேப்பர் படித்துவருவதால் எடுத்த முடிவு

@லஷ்மி
ப்ளாக்கர் ஏதாவது ஒரு பார்ட்டியை சப்போர்ட் செய்யக்கூடாதா?

@சிவகுமார்
போட்டுடலாம்

shortfilmindia.com said...

@ஜெ.சதீஷ்குமார்
ஊடகங்களின் பிரமை என்று உங்கள் பிரமையை ஏன் திணிக்கிறீர்கள். இதில் என் கருத்து என்னவென்றால் அட்லீஸ்ட் ஒரு ரூபாய்க்கு அரிசி வைத்து கஞ்சியாவ்து குடிக்க முடிகிறது அல்லவா..

பருப்பின் விலை. மற்றும் பல பொருட்களின் விலைவாசி ஏறியது ந்ம் தமிழ் நாட்டில் மட்டும்தானா? இந்தியாவெங்கு விலைவாசி ஏறித்தான் இருக்கிறது. இல்லையென்று சொல்லாதீர்கள். அப்படி விலை ஏறிய நாட்களில். நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் தரமான பொருட்களை கொடுத்தார்கள் அல்லவா அதை ப் பாராட்ட வேண்டும்.

ஆட்சி மாற்றம் என்கிற அஸ்திரத்தை தொடர்ந்து மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்தால் சரி.. எப்படியும் அடுத்த ஆட்சி நம்மளது கிடையாது அடிக்கிற வரைக்கும் அடிப்போம்னு அடிச்சிட்டு போயிட்டேயிருப்பாங்கன்னும் யோசிக்கலாம்.

@செல்வமுரளி
அவரிடம் பேசிவிட்டு சொல்கிறேன்.

ராஜரத்தினம் said...

//அவ்வளவு யோசிக்கிறவர் நிச்சயம் உங்கள் வீட்டில் வேலைக்காரியாக இருக்க முடியவே முடியாது.. //

என்ன சொல்ல வருகிறீர்கள் யோசிக்கிறவங்க திமுகவுக்கு வோட்டு போட மாட்டங்கன்னுதானே? அந்த பெண்மணி என் வோட்டு அம்மாவுக்கு என்று சொன்னதும், அவர் துணி துவைப்பதும், இலவசங்கள் பொய் என்றதும் உங்கள் blog சத்தியமா 100க்கு 100 உண்மை.