Rocket Singh – Hindi Film Review
சக்தே இந்தியா இயக்குனர் ஷமீன் அமின், பழைய ஜெய்தீப் சஹானி, யாஷ் சோப்ரா, சமீபத்திய ஹிட் பாய் ரன்பீர் கபூர், என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். ஹர்பிரீத் சிங் ஒரு பிலோ ஆவரேஜ் டிகிரி பாஸ் செய்த மாணவன். அதனால் அவன் வாழ்க்கையின் அடுத்த கட்டமாய் தான் ஒரு சேல்ஸ் மேன் ஆக போவதுதான் தன் லட்சியமாய் எடுத்துக் கொண்டு, ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் சேல்ஸ் ட்ரையினியாய் சேர, ஒரு நேர்மையான தாத்தாவால் வளர்க்கப்பட்ட ஒரு அப்பாவி இளைஞனின் சேல்ஸ்மேன் செய்ய வேண்டிய தகடு தத்தங்கள் எதுவும் தெரியாமல் குழப்பிவிட்டுவிட, அதனால் அவனை அவனுடய் அலுவலகத்தில் அவனுடய் அதிகாரியும், எம்.டியும் கூட வேலை செய்பவர்களூம் அவனை கீழ்தரமாய் பேசி சேல்ஸுக்கு போக விடாமல் ஆபீஸிலே முடக்கி, ட்ரெயினிங் முடித்து போகச் சொல்ல.. அதே ஆபீசிலிருந்து ராக்கெட் சேல்ஸ் கார்பரேஷன் என்று ஆரம்பித்து எப்படி முன்னேறுகிறான் என்பது தான் கதை. ராக்கெட் சிங்காக ரண்பீர்கபூர், முகத்தில் தெரியும் இன்னொசென்ஸ் மிக அருமையாய் இந்த கேரக்டருக்கு பொருந்துகிறது. ஆரம்ப இண்டர்வுயூ காட்சியில் பென்சிலை தூக்கி போட்டு அதை விற்க சொல்லி கேட்கும் சேல்ஸ் மேனேஜரி...