சாப்பாட்டுக்கடை
சரியான பசி நேரத்தில் எதையாவது சாப்பிடுவோம் என்று கிடைத்ததை சாப்பிடுவது ஒரு விதம் அப்படி சாப்பிட்ட பிறகு பசியில்லைனா வாயில் வைக்க வழங்காது என்று சொல்லி பார்த்திருக்கிறோம். ஆனால் எப்போதும் அது போல நாம் சாப்பிடுவதில்லை. மனிதனுக்கு மிகப் பெரிய விஷயமே அதிகமோ, கொஞ்சமோ நல்ல சாப்பாடு என்பது வாழ்வில் முக்கியமான, இன்றியமையாத விஷயமாகத்தான் இருக்கிறது. சுவையான சாப்பாட்டுக்கான தேடல் ஒவ்வொரு மனிதனுள் இருக்கத்தான் செய்கிறது. கொத்து பரோட்டாவில் நான் சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று உணர்ந்த சின்ன சின்ன ஹோட்டல்கள், கையேந்திபவன், பெரிய ஹோட்டல்கள் வரை அறிமுகபடுத்தி வந்ததிற்கு மிகப் பெரிய வரவேற்பை கொடுத்து வருகிறீர்கள். பல நண்பர்கள் வெளியூரிலிருந்து சென்னை வந்ததும் சில சமயம் குடும்பத்தோடு நான் சொல்லியிருந்த கடைகளுக்கான வழியை எனக்கு போன் செய்து விசாரித்து போவார்கள். சில பேர் வருகிற போதே ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு வருபவர்களும் உண்டு. சில நண்பர்கள் எனக்கு போன் செய்து ஒருகுறிப்பிட்ட கடையை சொல்லி அது எந்த கொத்து பரோட்டாவில் இருக்கிறது என்று தேடி போயிருக்கிறார்கள். சில சமயம் என் ஞாபக அடுக்குகளிலிருந...