EE.Ma.yau V/S மதயானைக்கூட்டம்.
EE.Ma.yau V/S மதயானைக்கூட்டம். எப்போது பார்த்தாலும் எப்படா இந்த மாதிரியெல்லாம் ஒரு படம் தமிழ்ல வரும்னு மலையாள படங்களை கொண்டாடிக் கொண்டேயிருக்கிறோம். மீண்டும் ஒரு மலையாளப்படத்தைப் பார்த்து கொண்டாட வேண்டிய கட்டாயம். இந்த ஈ.மா.யூ. ஆனால் அதே நேரத்தில் நம் பக்கத்திலிருந்தும் இது போன்ற படங்கள் வந்திருக்கிறது. அது எதற்காக கொண்டாடப்படாமல் போனது என்பதை பற்றியும் பேச வேண்டும். முதலில் இ.மா.யூ. ரொம்பவே சிம்பிளான கதை. கடற்கரை கிராமம். வாவேச்சன் ஊர் வருகிறார். வரும் போதே வாத்து ஒன்றை பிடித்துக் கொண்டு வந்து மனைவியிடம் சமைக்கச் சொல்கிறார். சின்னதாய் மனைவியிடம் தோள் தட்டி ரொமான்ஸ். மகள், மருமகளிடம் விசாரிப்பு. மகனுக்காக காத்திருந்து வந்தவனுடன் பிராந்தி களி. கூடவே பேச்சு சுவாரஸ்யம் ஏற, தன் தந்தைக்கு நடந்த இறுதி ஊர்வலத்தைப் பற்றி பேச்சு போகிறது. அப்படியான ஊர்வலம் ஊரிலேயே நடந்ததில்லை என்கிறார். அதை விட உயர்ந்த தரமான ஊர்வலத்தை உனக்கு நான் செய்வேன் என்று மகன் சத்யம் செய்கிறான். சத்யம் செய்த சில நிமிடங்களில் வாவேச்சன் சரக்கின் போதையில் கீழே வீழ்ந்து மரிக்கிறார். மகன் அவருக...