Posts

Showing posts with the label திரைவிமர்சனம்

காக்கா முட்டை

Image
இயக்குனர் மணிகண்டனை ஒளிப்பதிவாளராய் கேள்விப்பட்டிருந்தேன். முதல் முறையாக நான்கைந்து வருடங்களுக்கு முன் இயக்குனர் அருண் வைத்யநாதன், கார்த்திக் சுப்பாராஜுடன், மணிகண்டனின் அலுவலகமான கோடம்பாக்கத்தில் மூன்றாவது மாடி அறையில்  சந்தித்ததாய் நியாபகம்.. கார்த்திக் சுப்புராஜின் பல குறும்படங்களுக்கு அவர் தான் ஒளிப்பதிவாளர். அப்போது அவர் விண்ட் என்ற ஒரு குறும்படத்தை எடுத்திருந்தார்.

கொத்து பரோட்டா- 2/03/15

Image
Bench Talkies No.1 ஆங்கிலத்தில், இந்தியில், ஏன் மலையாளத்தில் கூட குறும்படங்களின் தொகுப்பாய் திரைப்படங்கள் வந்திருக்கிறது. ஆனால் குறும்படம் இயக்கியவர்களை இயக்குனர்களாய் கொண்டாடும் தமிழகத்தில் இன்று வரை குறும்படங்களை தொகுப்பாய் அமைத்து படம் வெளியானதில்லை. ஏற்கனவே பாலசந்தர் அவர்கள் ஒரே படத்தில் இரண்டு கதையை கொடுத்திருந்தார். சமீபத்தில் எஸ்.ஏ.சி ஒரே படத்தில் ரெண்டு கதைகளை வைத்து படம் எடுத்திருந்தார். குறும்படங்கள் இயக்கி, தயாரித்து, அதன் மூலமாய் உடனடியாய் திரைப்படம் இயக்க வாய்ப்புக்காகத்தான் பல பேர் குறும்படம் எடுக்கிறார்கள். ஆனால் குறும்படத்திற்கென்று தனி மார்கெட், அதன் மூலம் வருமானம் என்று ஒர் வழியுள்ளதை இன்னும் நிறைய பேர் கண்டறிய முயலவே இல்லை. இன்றளவில் ஏவிஎம்மிலோ, ஆர்.கே.வியிலோ குறும்படம் எடுத்துவிட்டு, யூ டியூப்பில் போடுவதை தவிர்த்து பத்து பைசா காசு பார்க்க முடியாமல் தொடர்ந்து கோடம்பாக்க கனவுடன் வளைய வருகிறவர்களுக்கு அதை பணமாக்க, குறும்படங்களை காசு கொடுத்து பார்க்கை வைக்க முயலுங்கள் என்று அடிக்கடி நான் பங்கேற்கும் மேடைகளில் சொல்லிக் கொண்டேயிருப்பேன்.  அதை கார்த்தி தன் வெற்றியின...

கொத்து பரோட்டா - 29/12/14

Image
தொட்டால் தொடரும் வழக்கமாய் நான் கடந்து சென்ற வருடங்களை ரீவைண்ட் செய்து பார்க்கும் பழக்கமில்லாதவன். நல்லதோ கெட்டதோ எல்லாத்தையும், அனுபவிச்சு, உணர்ந்து, புரிந்து, திகைத்துதானே கடந்து வந்திருக்கிறோமென்பதால் கூட இருக்கலாம். ஆனால் 2013 ஜூலையில் கமிட் ஆகி,  பற்பல தடைகளைத் தாண்டி, படப்பிடிப்பு முடிந்து, பர்ஸ்ட் காப்பி தயாராகி, சரியான வெளியிடும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது எங்களது ”தொட்டால் தொடரும்”. இது என் முதல் படமாதலால் இதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் ஒர் பாடமாய்த்தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நல்லா எழுதுறவன், , அறிவா பேசுறவனெல்லாம் நமக்கு துணையாய் தோதா இருப்பாங்கன்னு  அவசியமில்லைங்கிறதை புரிஞ்சிக்க பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. சும்மா வருவாளா சுகுமாரி?. எப்ப ரிலீஸ்? என்று கேட்பவர்களுக்கு, வரிசையாய் பெரிய படங்களின் அணிவகுப்பு இருப்பதாலும் ரிலீஸ் செய்வதற்கான சரியான நேரத்தை கணக்கிட்டு கொண்டிருக்கிறோம். வரும் ஜனவரி 2015 தொட்டால் தொடரும் உங்கள் பார்வைக்கு @@@@@@@@@@@@@@@@@@

குபீர்

Image
கதையேயில்லாம படமெடுக்கிறேன் என்று பார்த்திபன் சார் சொன்னாரு. ஆனா அவரை எல்லாம் தூக்கி சாப்புடறாப்புல வந்திருக்கிறப் படம் குபீர். பேரே அல்லு குல்லா இருக்கில்ல. படம் பார்க்கலாமென்று நண்பர் அழைத்த போது இந்த வார பத்து படங்களில் ஒன்றாய்த்தான் நினைத்துப் போயிருந்தேன். முழுக்க முழுக்க புதுமுகங்கள். ரொம்பவும் சாதரணமான விளம்பரங்கள். இதில் ஏ சர்டிபிகேட் படம் வேறு. அசுவாரஸ்யமாய்தான் போய் உட்கார்ந்தேன்.

கொத்து பரோட்டா - 11/08/14

Image
சென்ற வாரம் பதிவர்கள் இணைந்து உருவாக்கிய பரோட்டா கார்த்தி எனும் குறும்பட விழாவிற்கு சென்றிருந்தேன். நான் போய் சேர்வதற்குள் குறும்படம் ஒளிபரப்பப்பட்டு, வெளியிட்டு விட்டார்கள். பதிவர்கள் மின்னல் வரிகள் கணேஷ் பெற்றுக் கொண்டாராம். தொட்டால் தொடரும் ஆரம்பித்ததிலிருந்து பதிவர்கள் யாரையும் சந்திக்க முடியவில்லை. சுரேகா, அவரது உதவியாளர், கே.ஆர்.பி, சிவகுமார், கோவை ஆவி, சீனு, சேட்டைக்காரன், மூத்த பதிவர் சுப்பு தாத்தா வந்திருந்து வாழ்த்தினார் என நண்பர்கள் பல பேர் வந்திருந்தது சிறப்பாக இருந்த்து விழா. குறும்படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்வதாய் சொல்லியிருந்தேன். விழாவில் கலந்து கொண்ட பதிவர்களுக்காக தொட்டால் தொடரும் படத்தின் வெளிவராத ட்ரைலரையும், பெண்ணே.. பெண்ணே பாடல் காட்சியையும் போட்டுக் காட்டினேன். நன்றாக இருந்ததாய் சொன்னார்கள். வழக்கம் போல நிகழ்ச்சி முடிந்தும் வேடியப்பனின் கடையின் கீழ் கூட்டம் நடந்தது. நெடுநாள் கழித்து ஒர் சிறப்பான மாலையாய் அமைந்தது பரோட்டா கார்த்தி குறும்பட விழா. @@@@@@@@@@@@@@@@@@@

Oohalu Gusa Gusalade

Image
கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டிக்கெட் விற்று சாதனை படைத்திருப்பதாய் வெற்றி விழா கொண்டாடினார்கள் என்று இணையதளங்களில் படித்த போது எனக்கு தெரிந்து இந்தியாவில் இத்தனை டிக்கெட் விற்று சாதனை என்று விழா கொண்டாடிய படம் இதுவாகத்தான் இருக்குமென்று தோன்றியது. படம் சில வாரங்களுக்கு முன்னமே ஆந்திராவில் வெளியாகி வெற்றிபடமாய் அறிவிக்கப்பட்டது என்று சொன்னார்கள். பெரிய நடிகர்கள், வாரிசு நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற படங்களை ஓட விடமாட்டேன் என்கிறார்கள் என்று தெலுங்கு திரையுலகமே புலம்பிக் கொண்டிருப்பதாய் ஒர் செய்தி வேறு உலா  வந்து கொண்டிருக்கும் வேளையில் இப்படத்தின் வெற்றி புருவம் உயர்த்தி கவனிக்க செய்தது. 

கொத்து பரோட்டா -16/09/13

தொட்டால் தொடரும் படப்பிடிப்பு பத்தாம் தேதி முதல் ஆரம்பித்து வருகிற பதினேழாம் தேதியுடன் முதல் ஷெட்டியூல் இந்திய சினிமா நூற்றாண்டு விழா விடுமுறை காரணமாய் முடிந்து, 25ஆம் தேதி முதல் இரண்டாவது ஷெட்டியூல் ஆரம்பமாகிறது. நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டியதுதான். ஆனால் அதற்காக ஒரு வார காலம் விடுமுறை என்பது கொஞ்சம் ஓவர் என்றே தோன்றுகிறது. இதனால் நிறைய தயாரிப்பாளர்கள் அவதிப்பட வாய்ப்பிருக்கிறது. பிரபல நடிகர், நடிகைகள் தேதிகள் குழப்படிக்க வாய்ப்பிருக்கிறது. யார் யார் எல்லாம் பங்கேற்க்க போகிறார்களோ அவர்களை தவிர மற்றவர்கள் அவர்கள் வேலையை செய்யலாம் என்று வைத்திருக்கலாம். @@@@@@@@@@@@@@@@@@@

Ankur Arora Murder Case

Image
அங்கூர் ஆரோரா என்கிற சிறுவன் வயிற்று வலி காரணமாய்  ஷெகாவத் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப் படுகிறான். அவனுக்கு சாதாரண அப்பண்டிஸ் ஐய்டீஸ் என்று முடிவெடுக்கப்பட்டு ஆபரேஷன் நடக்கிறது. ஆபரேஷனுக்கு முன் வாய் மூலமாய் ஏதும் சாப்பிடக் கூடாது என்ற விதியை சிறுவன் மீறி விடுகிறான். ஆனால் அதை ஆபரேஷனுக்கு முன் சொல்லியும் விடுகிறான். ஆனால் அதை கண்டு கொள்ளாத சீப் டாக்டர் கே.கே.மேனன் ஆபரேஷன் செய்துவிடுகிறார். வெற்றிகரமாய் முடிக்கப்பட்ட ஆபரேஷனுக்கு பின் மூச்சுதிணறல் ஏற்பட்டு சிறுவன் கோமாவுக்கு போய் இறந்துவிடுகிறான். ஆஸ்பிட்டலில் இருக்கும் நேர்மையான ட்ரையினி டாக்டர் ஒருவரால் அது டாக்டரின் கவனமின்மை காரணமாய் ஏற்பட்டது என்று தெரிய கோர்டுக்கு வருகிறது கேஸ். பின்பு என்ன ஆனது என்பது தான் கதை.

குட்டிப்புலி

Image
  பக்கத்தூர்காரைங்க மேட்டு தெரு பொம்பளைகிட்ட வம்பு பண்ணான்னு சசிகுமார் அப்பாரு ஊடு பூகுந்து அவனை வெட்டுறாரு. வெட்டிட்டு தப்பிக்கையில மாட்டிகிறாரு. மாட்டினா முவம் தெரிஞ்சிரும்னு கூட வந்தவுக கிட்ட சொல்லி தலைய வெட்டி கொல்ல சொல்லி சாமியா ஊருக்குள்ள இருக்காரு. அப்பாரு மாரியே புள்ளையும் வளரக்கூடாதுன்னு வழக்கமா இந்த மேரி வேஷத்துக்குன்னே பொறப்பெடுத்திருக்கிற என்னைப் பெத்த தாயி சரண்யா நினைக்குது. பொறவு என்ன ஆவும்? அதும் மதுரை பக்கப் படம். வெட்டிக்கு சரக்கடிச்சிட்டு, லந்து பண்ணிட்டு திரிஞ்சிட்டு, ரவுடித்தனம் பண்ணாம அப்புறம் என்ன மதுரைப்படம். அதையேத்தேன் செய்யுறாரு நம்ம சசிகுமாரு. என்னதேன் ரெளடித்தனம் பண்ணிட்டு திரிஞ்சாலும் அவர் எம்.சி.ஆர் மாதிரி, நல்லதுக்குத்தேன் திருடுவாரு, பொம்பளைப்புள்ளைங்கள ஏறெடுத்தும் பாக்க மாட்டாரு. நியாயத்துக்குத்தான் அடிப்பாரு. அவருக்கு ஒரு கண்ணாலத்தை செஞ்சி பாத்திரமுன்னு ஆத்தாகாரி தலையால தண்ணி குடிக்கிறா மவன் வேணாங்குறான். என்னடான்னா.. நான் தெனம் ரவுடித்தனம் செஞ்சிட்டு திரியறவன் நாளை பின்ன எனக்கெதாவது ஒண்ணுன்னா என் ஆத்தாகாரி மாதிரி என் பொண்டாட்டி அழுவக் கூடாதுங்...

Shootout at Wadala

Image
காண்டே, ஷூட் ஆவுட் இன் லோக்கன்ட்வாலா, போன்ற படங்களின் இயக்குனர் சஞ்செய் குப்தாவின் இயக்கத்தில் 1982 மும்பையில் நடந்த அஃபீஷியல் என்கவுண்டரைப் பற்றிய படம். 

யாருடா மகேஷ்?

Image
ட்ரைலர் வெளியீடான அன்றைக்கு பார்த்த மாத்திரத்தில் பற்றிக் கொண்ட படம். தமிழில் ஒரு அடல்ட் காமெடி வரப் போகிறது என்ற நினைப்பே ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் கொடுத்தது. படம் ஏ சர்டிபிகேட் வாங்கியதும் சரி. விட்டு விளையாடியிருக்காங்க போல என்ற நினைப்பை ஏற்படுத்திய படம். அவ்வளவு எதிர்ப்பார்ப்பையும் படம் பூர்த்தி செய்ததா?

நான் ராஜாவாகப் போகிறேன்.

Image
ஹிமாச்சல் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஜீவா தன்னைப் போலவே இன்னொருவர்  ராஜா என்ற பெயரில் சென்னையில் இருப்பதாய் ராணுவத்தில் வேலை செய்யும் சிம்மா மூலம் தெரிய வருகிறது. நம்மைப் போலவே ஒருவன் இருக்கிறான் என்று தெரிந்த பிறகு சும்மா இருக்க முடியுமா? தன்னைப் போல் இருக்கும் ஒருவனை தேட முயன்று அவரது தோழியை கண்டுபிடித்து, சென்னை வருகிறார். ஜீவாவை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. ஏன்? எதற்கு? என்ன காரணம்? யார் அந்த ராஜா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லியிருக்கிறார்கள்.

பரதேசி

Image
  பி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட படம். சமீபகாலமாய் பாலா இலக்கியவாதிகளோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், இம்முறை நாஞ்சில் நாடன்.

ஒன்பதுல குரு

Image
Comedy is a Serious business என்பார்கள். காமெடி படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம், மற்றவர்களை கிண்டல் செய்தும், படங்களை பரோடி செய்தாலும் சிரிக்க வைப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இவர்கள் கற்றுக் கொள்ள நம்மை பகடை காயாக்கியிருக்கிறார்கள். avvvv.. வலிக்குது.தேவையில்லாமல் இந்த படத்தை விமர்சிக்கிறேன் என்று உங்களை இம்சிக்க விரும்பாததால்... ஒன்பதுல குரு வந்தால்  பொண்டாட்டிய விட்டு ஓடிருவாங்களாங்கலாம்.. அதுவே படமா வந்தா நாம தியேட்டரை விட்டு ஓடிரணும்.  முடியல.. கேபிள் சங்கர் டிஸ்கி: முடிந்தவரை எல்லோருக்கும் இதை ஷேர் செய்து மக்களை காப்பாற்ற வேண்டுகிறேன்.

சில்லுனு ஒர் சந்திப்பு

Image
 விமலுக்கும் ஓவியாவுக்கும் பள்ளியிலேயே காதல். வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள விழைகிறார்கள். பின்பு சில வருடங்களுக்கு பிறகு விமல் அமெரிக்காவிலிருந்து வருவதாய் காட்டுகிறார்கள். அங்கே ஓவியா என்றொரு ஜீவனைப் பற்றி ஏதும் சொல்லப்படவேயில்லை. என்னடா இது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே தீபாஷாவின் மேல் காதல் கொள்கிறார். இருவர் வீடும் இவர்களை சேர்த்து வைக்க பாடுபடுகிறது. அடக்கமான, கலாச்சார காவலராய் வளர்ந்திருக்கும் தீபாஷாவுக்கு விமலின் ஸ்கூல் காதல் பற்றி தெரிய வர, இருவரும் பிரிகிறார்கள். பிரிவுக்கு பிறகு ஒரு நாள் ஓவியாவை சந்திக்க, என்னவானது என்பதுதான் கதை.

டேவிட்

Image
 நாளைய இயக்குனரின் ஒரிஜினலான விஜய் அமிர்தராஜ் சோனி பிக்ஸில் நடத்திய குறும்பட நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் இப்படத்தின் இயக்குனர் பிஜோய் நம்பியார். அந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவருக்கு ஹாலிவுட் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு அளிக்கப்படும் என்ற விஷயம் அறிவிப்போடு நின்றுவிட, வெற்றி பெற்ற இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராய் சேர்ந்து பணி புரிந்து விட்டு, சைத்தான் என்கிற ஒரு படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்தவர். இவரின் அடுத்த படம் எனும் போது எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. கூடவே விக்ரமின் ஹிந்தி அறிமுகம் வேறு. ஆனால் ஒரு விஷயம். முன்னமே சொல்லி விடுகிறேன். இது செமி தமிழ் படம். பாதி படத்துக்கு மேல் டப்பிங் தான். நிச்சயம் இப்படம் தமிழ் சமூகத்திற்கு கொஞ்சம் கூட ஒத்துவராத கதைக்களன் எனவே தயவு செய்து தமிழில் பார்க்காமல் இந்தியில் பார்த்தீர்களானால் நல்ல அனுபவம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் .

நீ தானே என் பொன்வசந்தம்.

Image
  விண்ணைத்தாண்டி வருவாயாவிற்கு பிறகு கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். அதற்கு முக்கிய காரணம், இளையராஜாவின் இசை. பாடல்கள் வெளியாகி கிட்டத்தட்ட ரெண்டு மாதங்களுக்கு மேல் இருந்தாலும் இன்றும் இசை ரசிகர்களிடையே இப்பட பாடல்களைப் பற்றி சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பனித்துளி

Image
தமிழ்நாட்டில் படமெடுப்பதைவிட, வெளிநாட்டில் படமெடுப்பது சுலபம், செலவும் குறைவு. அதிலும் பெரிய நடிகர்கள் இல்லாமல் இருந்தால் இன்னும் செளகர்யம். படம் பூராவும் அமெரிக்காவிலோ, அண்டார்டிக்காவிலோ எடுத்துவிட்டு, ஒரு பாட்டு, ரெண்டு காமெடி, என்று பத்து நிமிஷம் இங்கே உள்ள யூனிட், டெக்னிஷியன்களை பயன்படுத்தி தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட படமாக்கிவிடலாம். அப்படிப்பட்ட ஐடியாவில் பல வெளிநாட்டு எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள் கதையை அவர்கள் ஊரில் வைத்து தயாரிக்கிறார்கள். ஆனால் படத்தை  வெளிநாட்டில் எடுத்துவிட்டு, பார்க்க மட்டும் நமக்கு விதித்திருக்கிறதே என்று நினைக்கும் போது கொடுமையாய் இருக்கிறது.அப்படிப்பட்ட ஒரு படமாய்த்தான் பனித்துளியை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆயிரம் விளக்கு

Image
பிப்ரவரி 14 படத்திற்கு பிறகு சுமார் ஐந்தாண்டுகளுக்கு மேலான இடைவெளியில் இயக்குனர் ஹோசிமின் தயாரித்து இயக்கியுள்ள படம். ரிலையன்சின் விநியோகத்தில் வெளிவந்துள்ள படம்.

உன்னை போல் ஒருவன். - திரை விமர்சனம்

Image
என்னுடய விமர்சனங்களில் எ.வ.த.இ.மா. படம் என்று சில படங்களை சொல்லி எழுதியிருக்கிறேன். அதாவது எப்போது வரும் தமிழில் இந்த மாதிரி படம் என்று.. இப்போது வந்திருக்கிறது.. அப்படி எதிர்பார்த்த ஒரு தமிழ் படம்.. உன்னை போல் ஒருவன். வீட்டுக்கு காய்கறி வாங்கிப் போகும் பையிலிருந்து விழுந்த தக்காளியை கூட விடாமல் பொறுக்கிக் கொண்டு போகும் ஒரு குடும்பஸ்தன். ஒரு சாதாரணன். சென்னையின் ஐந்து, ஆறு இடங்களில் பாம் வைத்துவிட்டு, கமிஷனருக்கு போன் செய்கிறான், நான்கு தீவிரவாதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி பூங்காவான தமிழ்நாடு கந்தர்கோளமாகிவிடும் என்று. அப்போது சூடு பிடிக்கும் கதை, படம் முடியும் வரை குறையவேயில்லை. அப்படி ஒரு வேகம். சமீப காலங்களில் படத்தில் வரும் காட்சிகளுக்கு கைதட்டல் கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. இதில் பல காட்சிகளுக்கு நாம் நம்மை மறந்து கைதட்டிவிடுவோம் அவ்வளவு ஷார்ப். இரா.முருகனின் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம். முக்கியமாய் லஷ்மி, மோகன்லால் பேசும் காட்சிகள், அரசாங்க அதிகாரிகளுக்கிடையே நடக்கும் பகைமைகள், போராட்டங்களை கிண்டலும், நக்கலுமாய் பேசும் வ்சனங்கள், கமலுடன், மோகன்லால் பேசும் வசனங்கள், க...