Thottal Thodarum

Aug 11, 2012

பனித்துளி

தமிழ்நாட்டில் படமெடுப்பதைவிட, வெளிநாட்டில் படமெடுப்பது சுலபம், செலவும் குறைவு. அதிலும் பெரிய நடிகர்கள் இல்லாமல் இருந்தால் இன்னும் செளகர்யம். படம் பூராவும் அமெரிக்காவிலோ, அண்டார்டிக்காவிலோ எடுத்துவிட்டு, ஒரு பாட்டு, ரெண்டு காமெடி, என்று பத்து நிமிஷம் இங்கே உள்ள யூனிட், டெக்னிஷியன்களை பயன்படுத்தி தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட படமாக்கிவிடலாம். அப்படிப்பட்ட ஐடியாவில் பல வெளிநாட்டு எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள் கதையை அவர்கள் ஊரில் வைத்து தயாரிக்கிறார்கள். ஆனால் படத்தை  வெளிநாட்டில் எடுத்துவிட்டு, பார்க்க மட்டும் நமக்கு விதித்திருக்கிறதே என்று நினைக்கும் போது கொடுமையாய் இருக்கிறது.அப்படிப்பட்ட ஒரு படமாய்த்தான் பனித்துளியை உருவாக்கியிருக்கிறார்கள்.Short term memory loss என்கிற வியாதியை வைத்து இயக்குனர் அவர் காலத்தில் பார்த்த ஆராதனா, ஏக் துஜே கேலியே, போன்ற படங்களினால் இன்ஸ்பயர் ஆகி அரத பழசான லாஜிக்கே இல்லாத ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். கதை என்றால் டாக்டருக்கு படிக்கும் காதலி, சாப்ட்வேர் காதலன், அப்பா ஒரு டெரர் வில்லன். அப்பா ஏக்துஜே கேலியே அப்பா போல ஒரு வருஷம் தன் பெண்ணை பார்க்காமல் இருந்தால் தான் கல்யாணம் என்று ரூல்ஸ் போடுகிறார். காதலியை அடைவதற்காக அமெரிக்கா போகிறான். போனவனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி, மெமரி லாஸ் ஆகிறது. பழைய காதல் மறந்து போனதால் புது காதல், புது வாழ்க்கை என்று ஓடுகிற போது அமெரிக்க பழங்குடிகள் கொடுக்கும் கில்மா சரக்கை அடித்து அரை குறை ஞாபகம் வந்து ஹீரோவும் குழம்பி, நம்மையும் குழப்பியடித்து, வில்லன் மாமனாரை மிரட்டி, ஹீரோவுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லையென பொறி கலங்க வைத்திருக்கிறார்கள். முடியலைடா சாமி.
ஆஜானுபாகுவான கணேஷ் வெங்கட்ராமன் எவ்வளவோ முயன்று யூத்தான ஆளாய் காட்டிக் கொள்ள பிரயத்தனப்பட்டாலும்,ஹீரோயின் முகத்திற்கு அருகே கண்களை ரொமாண்டிக்காக வைத்துக் கொண்டு முத்தா கொடுக்க வரப் பார்க்கும் போது பயமாய்த்தான் இருக்கிறது. ஹிரோயினையும் சில பல காட்சிகளில் அநியாய க்ளோசப்பில் கண்களில் ரூஜ் எல்லாம் போட்டு பூச்சாண்டியாய் காட்டுகிறார்கள்.  படத்தில் நடிப்பவர்கள் எல்லோரும் ஜோக் அடித்தால் கூட பத்து செகண்ட் இடைவெளியோடுதான் ஜோக்கடிக்கிறார்கள். டயலாக் எல்லாம் படு அபத்த அமெரிக்கத் தமிழ் மாடுலேஷனில்...  
ஹீரோ, மற்றும் வில்லன் அறிமுகத்திற்கு ஒரு காட்சி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.. அட..அட.. ஒரு ஆள் உயிரோடு எரிக்கப்பட, அவனைக் காப்பாற்ற ஹீரோ போக, அவனை காப்பாற்ற விடாமல் ஹீரோவை வில்லனின் அடியாட்கள் சண்டையிட, எரியூட்டப்பட்ட மனிதர் முழுவதும் எரிந்து போகும்வ் வரை சண்டையிட்டுக் கொண்டேயிருப்பது செம காமெடி. ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை பற்றியெல்லாம் ஒண்ணியும் சொல்ல முடியாத அளவிற்கு மோசம் என்றே சொல்லவேண்டும். ஹீரோவின் நண்பராய் வரும் கேரக்டர் அடிக்கும் அரத பழசான ஜோக்குகள் தான் நமக்கு ரிலீப் என்றால் மிச்ச படம் எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அமெரிக்க தமிழ்ர் திரைப்படங்களை பார்க்க கூடாது என்கிற ஒரு முடிவை எடுக்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் அச்சமுண்டு அச்சமுண்டு  போன்ற நல்ல படத்தையும், அதை இயக்கிய அருண் வைத்தியநாதன் போன்றோரைப் பார்க்கும் போது அம்மாதிரி முடிவு எடுப்பது தவறு என்றும் தோன்றுகிறது. அருண் போன்றோர்தான் நம்பிக்கையை கொடுக்கிறார்கள். 

மோகமுள் படத் தயாரிப்பாளர் ஜானகிராமனின் மகன் நட்டி குமார் மற்றும் டாக்டர் ஜேவின்  இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். அமெரிக்காவில் இருந்து கொண்டு தமிழ் சினிமாவை ஒரு படி தூக்கி வைத்தே ஆக வேண்டும் என்று கங்கணம்  கட்டிக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால் படியைத் தூக்கி தலையில் போட்டிருக்கிறார்கள். ம்ஹும்.  Post a Comment

11 comments:

rajamelaiyur said...

//தமிழ் சினிமாவை ஒரு படி தூக்கி வைத்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால் படியைத் தூக்கி தலையில் போட்டிருக்கிறார்கள்
??

//

நச் கமென்ட் ...

TESO மானமுள்ள தமிழன் கவனத்திற்கு

ஆர்வா said...

என்னத்த சொல்ல.. இந்தப்பாடவதி திரைப்படங்களைப் பத்தி சொல்ல....

பால கணேஷ் said...

பனிதுளின்னு படிக்கறதுக்கே கோரமா அவ்ங்க வெச்ச தலைப்பை நீங்களாவது பனித்துளின்னு அழகா மாத்திப் போட்டீங்களே... டாங்ஸு.

Ivan Yaar said...

திரு கேபிள் சங்கர் அவர்களே,

சினிமா துறையை சேர்ந்த உங்களக்கு தெரியும் சினிமா எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று.
ஒரு சினிமா வெற்றி பெற்றால் அச் சினிமாவில் பங்கு பெற்ற பல பேரின் வாழ்வு முன்னேறும்.

தயவு செய்து சினிமா பற்றி நெகடிவ் ஆக விமர்சனம் செய்வதை குறைத்து கொள்ளவும். உங்கள்
ப்ளாக் பார்த்து பல பேர் படத்தை பார்க்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது. உங்கள்ளுக்கு தெரியும்
நீங்கள் வலை அரங்கில் எவ்வளவு பிரபலம் என்று.

தினமலர் சினிமா விமர்சனம் பாருங்கள். அதில் எவ்வளவு மொக்கை படம் ஆனாலும் அதை
பாராட்டியே போடுவார்கள்.

வவ்வால் said...

கேபிள்ஜி,

//தமிழ்நாட்டில் படமெடுப்பதைவிட, வெளிநாட்டில் படமெடுப்பது சுலபம், செலவும் குறைவு. அதிலும் பெரிய நடிகர்கள் இல்லாமல் இருந்தால் இன்னும் செளகர்யம்.//

உண்மை...உண்மை..உண்மையை தவிர வேறொன்றும் இல்லை. கலக்கலா சொன்னிங்க ,அருமை!

//அமெரிக்க தமிழ்ர் திரைப்படங்களை பார்க்க கூடாது என்கிற ஒரு முடிவை எடுக்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் அச்சமுண்டு அச்சமுண்டு போன்ற நல்ல படத்தையும், அதை இயக்கிய அருண் வைத்தியநாதன் போன்றோரைப் பார்க்கும் போது அம்மாதிரி முடிவு எடுப்பது தவறு என்றும் தோன்றுகிறது. அருண் போன்றோர்தான் நம்பிக்கையை கொடுக்கிறார்கள். //

ஒண்னியுமே புரியலை , அமெரிக்க தமிழர் படம் பார்க்கலாமா ,கூடாதா?

அப்புறம் அமெரிக்க தமிழர்கள் ,தமிழ் நாட்டு தமிழர்கள் படத்தை பார்க்க கூடாதுன்னு சொல்லிடப்போறாங்க ..ஓவர் சீஸ் ரைட்ஸ் லாஸ் ஆகிடும்.

-------

unmaiyalan said...

soul kitchen அப்படியே காப்பி அடிச்சி தன் சொந்த கதை மாதிரி சொதப்பி எடுத்த சுந்தர் c யின் கலகலப்புக்கு ?..........

Cable சங்கர் said...

@unmaiyalan

அந்த படத்தோட ரிசல்டும், வசூலும், எல்லாருக்கும் தெரியுமே அதை தனியா வேற சொல்லணுமா உண்மையாளன்.

Cable சங்கர் said...

//தினமலர் சினிமா விமர்சனம் பாருங்கள். அதில் எவ்வளவு மொக்கை படம் ஆனாலும் அதை
பாராட்டியே போடுவார்கள்.//

பாருங்க நீங்களே எப்படி சொல்றீங்க> அப்ப என்னாத்துக்கு விமர்சனம் எழுதணும்.

Vivek said...

Cable sir...watched 22 female kottayam after ur review. Its wonderful...I like to read ur reviews for the below movie.
1. ee adutha kalathu (U might suggest to some tamil producer after watching it...its too good and different)
2. Ritu

Please watch it and put ur reviews soon....

Ravikumar Tirupur said...

விரைவில் மொக்கை படங்களால் உங்களுக்கே மெமரி லாஸ் ஆக போகிறது பாருங்கள்

Dwarak R said...

// ஹீரோ, மற்றும் வில்லன் அறிமுகத்திற்கு ஒரு காட்சி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.. அட..அட.. ஒரு ஆள் உயிரோடு எரிக்கப்பட, அவனைக் காப்பாற்ற ஹீரோ போக, அவனை காப்பாற்ற விடாமல் ஹீரோவை வில்லனின் அடியாட்கள் சண்டையிட, எரியூட்டப்பட்ட மனிதர் முழுவதும் எரிந்து போகும்வ் வரை சண்டையிட்டுக் கொண்டேயிருப்பது செம காமெடி

padikkum pothe ennakku kannula thanni vanthurchu sirichi.

padam partha neenga seema enjoy than ponga.