தமிழ் சினிமா ரிப்போர்ட் ஜூன் 2012

இந்த ஆண்டின் வெற்றிப் படங்களின் ஒன்றான கலகலப்பின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடி பட ஜுரம் எல்லா இயக்குனர்களுக்கு தொற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் வழக்கம் போல நிறைய சின்னப் படங்களும், பெரிய படங்களும் வெளியான மாதமிது.


மனம் கொத்திப் பறவை
எழிலின் இயக்கத்தில் வெகு நாட்களுக்கு பிறகு வெளியான படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்போடு சிவகார்த்திகேயனின் மெரினா வந்து கிளம்பிவிட்ட சுவாரஸ்யமும் சேர்ந்து கொள்ள, மிக சிறிய பட்ஜெட்டில் நண்பர்களின் உதவியோடு சுமார் 2 கோடிக்கு தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை சாக்ஸ், மற்றும் அய்யப்பன் குழுவினர் மேல் விலைக்கு வாங்கி அதை சுமார் ஐந்து கோடிக்கு வியாபாரம் செய்து கொடுத்துவிட்டதாய் தகவல்.  ஆனால் படம் முதல் நாள் முதலே தியேட்டரில் முப்பது பேர் நாற்பது பேருடனே ஓடியதால் பெரிய வசூல் இல்லாமல் போனது. மேற்ச்சொன்னவர்களின் இன்ப்ளூயன்ஸால் நிறைய மல்ட்டிப்ளெக்சுகளில் மட்டும் ஒரு காட்சியும், அரைக்காட்சியுமாய்.. சூப்பர்ஹிட் விளம்பரம் கொடுத்துக் கொண்டிருப்பதும் தான் நடந்துக் கொண்டிருக்கிறது. பல மல்ட்டிப்ளெக்ஸுகளில் ஷோ கேன்சல் ஆகி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராய் எழிலுக்கும் அவர் தம் நண்பர்களுக்கும் ஹிட் படமாய் அமைந்தது.

தடையறத் தாக்க
ட்ரைலரே கொஞ்சம் நன்றாக இருக்க, பெரிய எதிர்பார்ப்பில்லாமல் போய் உட்கார்ந்தால் அட என்று ஒரு சுவாரஸ்ய ஆரம்பத்தோடு படம் ஆரம்பித்து சடசடவென முடித்து அனுப்பினார்கள். நல்ல மேக்கிங்க். அருண் விஜய்யின் அண்டர்ப்ளே பர்பாமென்ஸ். நல்ல ஒளிப்பதிவு, பின்னணியிசை எல்லாம் சேர்ந்து நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுத்தாலும், படத்தின் பட்ஜெட், மற்றும் மற்ற விஷயங்கள் எல்லாம் சேர்ந்து அவர்கள் செலவு செய்த தொகையின் பாதியைக் கூட வசூலிக்காதது பெரிய வருத்தமே.. முன்னரே பட்ஜெட்டில் சரியாய் கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் வெற்றிப்படமாய் அமைந்திருக்கும்.

கிருஷ்ணவேணி பஞ்சாலை
 சின்ன பட்ஜெட் படமாயிருந்தாலும், அதை தனித்துவமாய் தெரிய வைக்க செய்த நூதன முயற்சி, நல்ல ப்ரோமோ, நல்ல களம்,  டீசெண்டான ஒளிப்பதிவு,  இனிமையான பாடல்கள் என்று அமைந்திருந்தாலும், வீக்கான திரைக்கதையினால் மக்களிடையே சென்றடையாமல் போன படம்.

சகுனி
இம்மாத பெரிய பட்ஜெட் படம். கார்த்தியின் நடிப்பில் வெகு நாட்களுக்கு பிறகு வந்த படம். சுமார் 23 கோடிக்கு வேந்தர் மூவிஸாரால் தமிழக திரையரங்க விநியோகத்திற்கு மட்டுமே வாங்கப்பட்ட படம். தமிழ், தெலுங்கு என்று சுமார் எழுபது கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆன படம்.  ஆனால் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும், எம்.ஜி கொடுத்த தியேட்டர்காரர்களுக்கும் வந்ததா? என்றால்  இல்லை என்று சொல்லும் லெவலில்தான் இப்படத்தின் வசூல் இருந்த்தாய் பல தியேட்டர்காரர்களின் கருத்து. ஒரு சில ஏரியாக்களில் சில தியேட்டர்காரர்கள் அடித்து பிடித்து கொடுத்த எம்.ஜியை கவர் செய்திருக்கிறார்கள். இந்தப்படமும் தயாரிப்பாளருக்கும், வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தருக்கும் லாபமாயிருந்தது. எண்ட் பாயிண்டில் தியேட்டரில் எம்.ஜி கொடுத்து திரையிட்டவர்களுக்கும், படத்தை எதிர்பார்த்துப் போன ரசிகர்களுக்கும், தோல்விப்படமாய் அமைந்தது.

இந்த மாதம் தயாரிப்பாளர்களுக்கு லாபமான மாதமாய் அமைந்தது.
ஆவரேஜ் லிஸ்டில் வேண்டுமானல் சகுனியை சேர்த்துக் கொள்ளலாம்.

Comments

ஆர்வா said…
எல்லாமே சரியான அலசல்....
// கலகலப்பின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடி பட ஜுரம் எல்லா இயக்குனர்களுக்கு தொற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில்//

ஓக்கே. ஓக்கே :-)
Balaganesan said…
exact& clean report ...super...cable ji
சுந்தர் சி- யின் முரட்டுக்காளை எந்த மாசம்பா ரிலீஸ் ஆச்சி?? சத்தமே காணோம்.. :)
naren said…
////இந்த ஆண்டின் வெற்றிப் படங்களின் ஒன்றான கலகலப்பின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடி பட ஜுரம் எல்லா இயக்குனர்களுக்கு தொற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில்////

;)) கலகலப்பை போலவே, காப்பி பேஸ்ட்டாக தில்லு முல்லு ரேடியாகி கொண்டிருப்பதை பத்திதானே சொல்றீங்க. ஆனால் ஒண்ணு, உங்க பெயர் இந்தவாட்டி போஸ்டரில் வர்லே, பதிவுலக கேபிள்சங்கரின் அதிதீவிர ரகஸிய ரசிகர்கள், படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் )))
erimalai said…
This comment has been removed by the author.
எந்த மாத ரிப்போர்ட் என்று தெரியாமல், பில்லா 2வும், நான் ஈயும் எந்த மாதமும் வந்ததுஎன்று தெரியாமல் பின்னூட்டமிடும் இவர்களை என்னன்னு சொல்றது ம்ஹும்.
லக்கி இது மே மாத ரிப்போர்டின் தொடர்ச்சி. அதனால் தான் கலகலப்புடன் ஆரம்பித்திருக்கேன். இந்த வருடத்தில் இதுவரை இரண்டே இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் தான் ஓகே.வா..:))
நாளை மாலை எங்கள் எடக்கு மடக்கு தளத்துக்கு வரவும்
Ragupathy said…
Hi Cable

There is no reports or review found about murrattu kalai movie, you told that you will not publish review for the movies worked.

but why you skipped this movie (Murrattu Kalai) in review and reports.

I am sorry to say that you are not perfect commentator who gives opinion to other movies. you should bold against to review all the movies without doing any favour to anyone.

I like your reviews, but i feel I want to inform about this. don't take it in bad , Think about it.

regrets for the inconvenience happened.

Thanks,
Ragupathy
Ragupathy
முதலில் ஏதோ ஓரளவுக்கு கண்ணுக்கு தெரிந்த படங்களைத்தான் அதன் வசூலைப் பற்றியெல்லாம் எழுத முடியும். ரிலீஸானதே தெரியாத முரட்டுக்காளையை எல்லாம் லிஸ்டில் கூட சேர்க்க முடியாது. அது மட்டுமில்லாமல் நான் அந்த படத்தின் விமர்சனம் எழுதாதது நான் அப்படத்தை பார்கவில்லை என்பதும் இன்னும் சொல்லப் போனால் பார்க்க தவிர்த்தேன் என்றே சொல்லலாம்..:))
Ragupathy said…
Thank you cable for your clarification and authorized to publish my opinion.
I am fan of your blog and also would like to appreciate your postings like Kothu parotta Kettal kidaikkum etc (this give eye opener to the people in modern era)

-Ragupathy

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்