Thottal Thodarum

Aug 13, 2012

கொத்து பரோட்டா -13/08/12

வெள்ளியன்று திரைப்பட இலக்கிய சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டேன். ஏற்கனவே இச்சங்கத்தின் இரண்டாவது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தேன். இந்நிகழ்வினை நடத்தும் உதவி இயக்குனர் விஜயன் கைக் காசை செலவழித்து கடந்த ஓராண்டாய் இந்நிகழ்வை நடத்தி வருகிறார். அவருக்கு என் பாராட்டுக்கள். எழுத்தாளர் தமிழ்மகன் திரைத்துறையில் எழுத்தாளர்கள் பங்கினை பற்றியும், களஞ்சியம் தமிழ் திரைத்துறை இன்றைக்கு சந்தித்து வரும் ப்ரச்சனைகள் குறித்து ஆவேசமாய் பேசினார். தனஞ்செயன் தமிழ் திரையில் இலக்கியவாதிகளை எப்படி பயன் படுகிறார்கள். அப்படியே பயன் படுத்த நினைத்தாலும் அதை செயல்படுத்த முடியாது போன காரணம் என்ன என்பதை சுவாரஸ்யமாய் விளக்கினார். சுரேகாவும் தமிழ் சினிமாவின் சூழல் பற்றி பேசினார். பாலு மகேந்திரா சினிமாவுக்கு எல்லோரும் கதை தேவை என்று சொன்னார்கள் சொல்கிறார்கள். நான் எடுத்த அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை போன்ற படங்களில் என்ன கதை இருந்தது ஓடியது? என்று கேட்டார் பதிலில்லை. நான் இந்த ஆண்டு வெளியான படங்களைப் பற்றியும், தமிழ் சினிமா ஏன் தோல்வியின் பின் செல்கிறது? எங்கே தமிழ் சினிமா எனும் பொன்முட்டையிடும் வாத்தை அறுக்கிறார்கள் என்பதை எனக்கு தெரிந்த வியாபார முறையில் சொன்னேன். விழா இனிதே நிறைவுற்றது. நன்றி விஜயன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@


வலைப்பதிவர் திருவிழா
சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா என்ற ஒரு நிகழ்வை நம் சென்னை வலைப்பதிவர்கள் பலர் இணைந்து வருகிற 26ஆம் தேதி நடத்தவிருக்கிறார்கள். பல புதிய, பழைய, இனி எழுதப்போகும் வலைப்பதிவர்கள் பலர் இணைந்து இந்த நிகழ்ச்சித் தேரை இழுக்கவிருக்கிறார்கள்.  நிகழ்ச்சியில் கவிதை புத்தக வெளியீடு, மூத்த பதிவர்களுக்கான பாராட்டு, புதிய பதிவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிகழ்வு, கவியரங்கம் என்று பல சுவாரஸ்ய நிகழ்வுகளை நடத்தவிருக்கிறார்கள். இது நம் விழா அனைவரும் ஒன்று சேர்ந்து விழாவை சிறப்பாக நடத்த அனைத்து ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் வரவிருக்கிறார். பல இளம் வலைப்பதிவர்கள் மிக ஆர்வமாய் இவ்விழாவை தங்கள் வீட்டு விழாவாக எடுத்து நடத்த முனைந்து வருவது பாராட்டுக்குரிய விஷயமாகும். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிவாஜி த பாஸ் விரைவில் 3டியில் வரப்போகிறது. சத்தமேயில்லாமல் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாய் ப்ரசாத் லேப்பும், ஏவிஎம்மும் இணைந்து முழுக்க, முழுக்க நம் ஊர் ஆட்களைக் கொண்டு திறம்பட வெளிக் கொண்டு வந்திருப்பதாய் பார்த்தவர்கள் சொன்னார்கள். இந்த சிவாஜி 3டி வெளிவந்து வெற்றியடைந்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் பல பெரிய நடிகர்களின் படங்கள் 3டியில் வெளிவருவம். இதனால் தமிழ் நாட்டில் 3டி தொழில்நுட்பத்தில் திரைப்படங்கள் திரையிடும் திரையரங்குகளும் அதிகமாகும். அவ்வசதிகள் இல்லாத அரங்குகள் தங்களை தயார் செய்து கொள்ளும். தமிழ்நாட்டில் ரெகுலர் 3டி படங்களை திரையிடும் வசதி கொண்ட அரங்குகள் சுமார் நாற்பதோ அல்லது ஐம்பது மட்டுமே என்கிறார்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேங்க்ஸ் ஆப் வசேப்பூர் இரண்டு பாகங்களும் பார்த்தாகிவிட்டது. ரெண்டையும் பார்த்துவிட்டு எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எழுதுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனாலும் இதற்கு எதற்கு இரண்டு பாகம் என்ற கேள்வியும் என்னுள் எழாமல் இல்லை. பட்.. ஒரு கலைஞனின் சுதந்திரத்தில் நாம் தலையிட முடியாது. தலைவன் ராம்கோபால் வர்மாவின் ரத்த சரித்திரத்தின் ரெண்டு பாகங்களையும் பார்த்தவன் நான். தன்பாத் நகரில் இரண்டு பிரிவு முஸ்லிம் சமூகத்தினரிடையே உள்ள வன்மத்தை தான் இரண்டு பாகங்களிலும் சொல்லியிருக்கிறார். மிக தைரியமாய் பல விஷயங்களை  இந்தியத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின்  காமம், வன்மம், வக்கிரம், அன்பு, காதல் என்று எல்லாவற்றையும்.  முதல் பாகத்தில் கணவன் மனைவியை செக்ஸுக்கு ஆழைக்க, கர்ப்பிணியாக இருக்கும் அவள் மறுக்க, "நீ காலை மட்டும் விரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல அவள் டாக்டர் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்கிறாள். “ நீ ஏன் இப்படி அடிக்கடி வயிற்றைத் தள்ளிக் கொண்டு இருக்கிறாய்?” என்றதும், “எல்லாத்துக்கு காரணம் நீதானே. இல்ல நீ ஊருக்கு போகும் போது அல்லா வந்தா .........டு  போனார்” என்பது போன்ற வசனங்கள் பேசப்பட்டிருக்காது. இப்படி படம் பூராவும் பல விஷயங்களை இரண்டு பாகங்களிலும் மேக்கிங்கிலும், கதை சொன்ன விதங்களிலும், கேரக்டர்களிலும் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டேயிருக்கிறார்கள். எனக்கு முதல் பாகத்தை விட இரண்டாவதுதான் மிகவும் பிடித்திருந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
உன்னை முழுமையாய் அறிந்து கொள்பவனை விட முழுமையாய் ஏற்றுக் கொள்கிறவன் தான் தேவை.

நம்பிக்கையில்லாத உறவு சிம்கார்ட் இல்லாத செல்போனைப் போல சும்மா விளையாட்டுக்குத்தான் வைத்திருக்க முடியும். உறவை

நான் உன்னை உதாசீனப்படுத்தவில்லை. எனக்காக மெனக்கெடுவாயா என்று காத்திருக்கிறேன்.

டெசோ மாநாடு ஈழ தமிழர்களுக்காகன்னு அவங்களுக்கு தெரியுமா? # டவுட்டு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
சமீபத்தில் பார்த்த குறும்படமிது. ஒரு தெருவோர விபசாரிக்கும், அவளை கூப்பிட்டுப் போகும் கஸ்டமருக்குமான உரையாடல்தான் படம். படம் நெடுக நேரடியாகவே கொசசை வார்த்தைகளைச் சொல்லி அதிர வைத்திருக்கிறார்கள். ஆனால் படம் ஆரம்பத்தில் நமக்கு கிடைக்கும் அதிர்ச்சி கொஞ்ச நேரத்திலேயே விலகி, அவர்களுடன் பயணிக்க வைத்த விதத்தில் இப்படம் வெற்றி பெற்று விட்டது என்றே சொல்ல வேண்டும்.விபசாரியாய் நடித்த பெண்ணின் நடிப்பும் கேஸ்டிங்கும் அருமை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
விளம்பரமும் பஞ்சாயத்தும்
இந்த விளம்பரம் நம்மூரில் வர ஆரம்பித்ததும் நம்மூர் பெண்ணியவாதிகள், பெண் கவிஞர்கள், எழுத்தாளர்கள் எல்லோரும் காச்சு மூச்சென கத்த ஆரம்பித்துவிட்டார்கள் . "Feel Like A Virgin" என்கிற பாடலுடன் ஆரம்பிக்கும் இந்த 18 Again  என்கிற பெண்கள் பிறப்புறுப்புக்கான க்ரீமை பற்றியதாகும். இந்த க்ரீமினால் பதினெட்டு வயது பெண்ணின் வஜைனா போல “டைட்டாக” மாறிவிடும் என்பதுதான் இந்த விளம்பரத்தின் கான்செப்டாக இருக்கிறது. ஆனால் நிஜத்தில் இந்த ப்ராடெக்டினால் பெண்களின் பிறப்புறுப்பில் வரும் பல ப்ரச்சனைகளுக்கு பதிலிருக்கிறது என்றாலும் இதை இந்தியாவில் மார்கெட் செய்யும் நிறுவனம் “டைட்டாக’ என்பதைத்தான் முன்னிறுத்தி விளம்பரப்படுத்துயிருக்கிறது. இந்த விளம்பரத்தை குறித்து பிரபல எழுத்தாளர் மீனா கந்தசாமி ஃபேஸ்புக்கில் இந்த “டைட்” என்ற வார்த்தையின் காரணமாய் இந்திய ஆண்களின் வற்புறுத்தலினால் இந்த ப்ராடெக்டை பெண்களிடத்தில் வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிக்கிறார்கள் என்றும்    கற்பு மற்றும் கன்னித்தன்மைக் குறித்து அதிகம் கவலைப்படும் இந்திய அண்களை  இந்த விளம்பரம் தூண்டிவிடுமென்றும் சொல்லியிருக்கிறார். லீனா மணிமேகலை இந்த மாதிரியான உலகில் சமூகத்திலிருக்க வெட்கப்படுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். சர்ச்சைகள் ஆரம்பித்துவிட்டது. இந்த ப்ராடெக்டைப் பற்றிய கட்டுரையை படிக்க எனக்கு இந்த விளம்பரம் எடுத்த விதம் பிடித்திருந்தாலும் ஃபைனல் டச்சாய் வயதான பெண்மணி வைத்து முடித்திருப்பது.. கொஞ்சம் ஓவராய்த்தான் தெரிகிறது. எனவே நானும் இதை கண்டிக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@
Piano Guys பியானோவும், செல்லோவும் இணைந்து ஆக்கிரமிக்கும் அற்புத இசையை, கொள்ளைக் கொள்ளும் விஷூவலோடு பார்த்துக் கேட்டு மகிழுங்கள்
#########################################
ப்ளாஷ்பேக்
கோபுர வாசலிலே.. இப்படத்தின் பாடல்கள் வெளியான போது பைத்தியம் பிடித்தார்ப் போல இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். முக்கியமாய் ஜானகியின் மயக்கும் குரலுக்காகவும், பாடலின் கூடவே  வரும் ப்ளூட்டும், பி.ஜி.எம்மில் வரும் வயலினும் சேர்ந்து ஒவ்வொரு முறை கேட்கும் போது ஒரு விதமான எக்ஸ்டஸியில் கண்ணீர் துளிர்க்காமல் போகாது. விஷுவலாய் பி.சியின் ஒளிப்பதிவு, சொக்க வைக்கும் பானுப்பிரியா..  நம்ம மொட்டை.. ம்ம்ம்.. என்னத்த சொல்ல. 
####################################
அடல்ட் கார்னர்
சர்தாரிணி ஒருத்திக்கு பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தன. உடனடியாய் தன் கணவனைப் பார்க்க வேண்டும் என்று அவள் அடம்பிடிக்க, கணவன் மேல் உள்ள பிரியத்தில் அவள் கூப்பிடுகிறாள் என்று நினைத்து நர்ஸ் அவசர அவசரமாய் கூப்பிட்டு வர, வந்தவுடன் அவள் அவனைப் பார்த்து கத்த ஆரம்பித்தாள். “அன்னைக்கே சொன்னேன் நாய் மாதிரி செய்ய வேண்டாம்னு கேட்டியா? இப்ப பாரு..” என்றாள்.
கேபிள் சங்கர்

Post a Comment

26 comments:

azeem basha said...

காலி படம் ரொம்ப அருமையாக இருந்தது அந்த பெண் யதார்தத்தை அருமையாக சொல்கிறாள்

azeem basha said...

மிக அருமையான படம் காலி அந்த பெண்ணின் கருத்துகள் மிக அருமையாக இருந்தது

thanjai gemini said...

me the first

தணல் said...

//இந்த ப்ராடெக்டைப் பற்றிய கட்டுரையை படிக்க//

கட்டுரை மற்றும் விளம்பரத்துக்கான லிங்க் இரண்டையும் சாருவின் தளத்தில் இருந்து தான் எடுத்தீர்கள் என்று நினைக்கிறேன். அதையும் குறிப்பிட்டிருக்கலாம்!

தணல் said...

//இந்த ப்ராடெக்டினால் பெண்களின் பிறப்புறுப்பில் வரும் பல ப்ரச்சனைகளுக்கு பதிலிருக்கிறது//

அப்படியே என்னென்ன பதில் என்றும் சொன்னீர்களானால் புண்ணியமாகப் போகும். 'பதிலு'க்கு என்னென்ன பின்விளைவுகள் ஏற்படலாம் என்பதையும் அவர்களிடமே கேட்டுச் சொன்னால் இன்னும் நன்று!

தணல் said...

//வயதான பெண்மணி வைத்து முடித்திருப்பது.. கொஞ்சம் ஓவராய்த்தான் தெரிகிறது. எனவே நானும் இதை கண்டிக்கிறேன்.//

ஆன்ட்டியை வைத்து முடித்திருந்தால் பிடித்திருக்குமோ?

தணல் said...

//பெண்ணின் வஜைனா போல “டைட்டாக” மாறிவிடும்//

க்ரீமை வாங்கி அவளுக்கு கொடுத்து அவளிடம் அதைப் பூசைச் சொல்லி டைட்டாக்கி! எதுக்கு அவ்வளவு கஷ்டம்? 'அதை'ப் பெருசாக்க மருந்து எடுத்துக் கொண்டால் எளிதாக டைட் ஆகிடுமே!

தணல் said...

//இந்த விளம்பரம் நம்மூரில் வர ஆரம்பித்ததும் நம்மூர் பெண்ணியவாதிகள், பெண் கவிஞர்கள், எழுத்தாளர்கள் எல்லோரும் காச்சு மூச்சென கத்த ஆரம்பித்துவிட்டார்கள்//

இதில் உமக்கு என்ன பிரச்சனை? அவர்கள் அவர்களை நோக்கி வீசப்படும் வலையை அறுக்க முயல்கிறார்கள். சத்தமாக இருந்தால் நீர் காதை மூடிக்கொண்டு போகவேண்டியது தானே?

தணல் said...

கட்டுரையையும் விளம்பரப் படத்தையும் நீங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து எடுத்திருக்கலாம் என்பதைப் பிறகு புரிந்து கொண்டேன் (நான் சாருவின் தளத்தில் இருந்து பார்த்தேன்). எனவே முதல் கமென்ட் எனது தவறு. மன்னிக்கவும்.

Gujaal said...

Aunty, her costume and her dance is nice, 18again or not!

Cable சங்கர் said...

தணல். இந்த செய்தியை இணையத்தில் பார்த்துவிட்டு அதன் லிங்ககை கொடுத்திருக்கிறேன். நானே கண்டு பிடித்ததாய் எங்கும் சொல்லவில்லை. அதே போல பெண்ணியவாதிகள் எழுத்தாளர்கள் எதிர்க்க ஆர்ம்பித்துவிட்டார்கள் என்பது செய்தி. அவ்வளவு தான்.

Cable சங்கர் said...

.//அப்படியே என்னென்ன பதில் என்றும் சொன்னீர்களானால் புண்ணியமாகப் போகும். 'பதிலு'க்கு என்னென்ன பின்விளைவுகள் ஏற்படலாம் என்பதையும் அவர்களிடமே கேட்டுச் சொன்னால் இன்னும் நன்று!//

இதை அந்தக்கம்பெனிக்கு எழுதி கேட்டால் நன்றாக இருக்கும்
:)

கோவை நேரம் said...

காலை வணக்கம்...தல..
கொஞ்சம் ஆபாசமான வார்த்தை அந்த படத்தில் இருந்து இருந்தாலும் அதை எழுத்தில் கொண்டு வந்து இருந்திருக்க வேண்டாம்...

Cable சங்கர் said...

@kovai neram
அவஙக்ளே டயலாக்கை எழுதித்தான் எடுத்திருக்காங்க..:)

FOOD NELLAI said...

குறும்படம், விளம்பரம்-விமர்சனம் கொத்து பரோட்டா சுவையைக் கூட்டுது.

Ponchandar said...

பார்டர் ரஹ்மத் புரோட்டா போல் அருமையாக இருக்கிறது.

arul said...

gangsof wasserpur patri siriya vimarsanam arumayaga irunthathu

ANaND said...

இந்த 18 கிரிமினால் கண்டிப்பாக கேன்சர் வரும் ....

இதை பயன்படுத்த சொல்லி என்னை கொடுமை படுத்துகிறார் என மனைவியும் ..பயன்படுத்தவில்லை என கணவர்களும் விவாகரத்து கேட்பார்கள்...

இயற்கையை மாற்ற முயலும் எந்த ஒரு நடவடிகையும் பிரச்னையைத் தரும்

G.Ragavan said...

சங்கர், ஒரு கேள்வி.

தமிழில் 3டி படங்கள் புதிதல்ல. மை டியர் குட்டிச்சாத்தான் வெற்றி பெற்ற போதே நிறைய 3டி படங்கள் வெளிவந்து வெற்றி பெறாமல் போயின.

அதற்குக் காரணம் மிக எளிது. படத்திற்குக் கதையும் திரைக்கதையும் எவ்வளவு தேவையானவை என்று புரிந்து கொள்ளாமல் எடுத்ததுதான்.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகள் கழித்து மறுபடியும் 3டி படங்கள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் வெளிவந்துள்ளது.

இப்பொழுதும் பார்த்தால் அவதாருக்குப் பிறகு 3டிக்காக வெற்றி பெற்ற படம் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. சில ஆங்கிலப் படங்கள் 2டி மற்றும் டிஜிடைஸ்டு 3டியில் வருகின்றன. பெரும்பாலும் அவை குழந்தைகளுக்கான படங்க்ள்.

இந்தச் சூழலில் தமிழில் 3டி படங்கள் தொடர்ந்து வெளியாவது நடக்கக்கூடியதா? அல்லது கதைக்கு பிரம்மாண்டம் என்றில்லாமல் பிரம்மாண்டத்துக்குக் கதை என்றானது போல ஆகிவிடுமா? உங்கள் கருத்து/ஊகம் என்ன?

சாதிக் said...

உங்கள் மனதில் அப்படி என்ன இஸ்லாமியர் மீதான வன்மம் என தெரியவில்லை..!!
ஆட்டோக்காரர்களித்திலும் முஸ்லிம் ஆட்டோக்காரர்களே உங்கள் கண்ணில் படுகின்றனர்...
படங்களிலும் இப்படி அசிங்கமான வசனங்கள்தான் உங்கள் மேற்கோளில் இடம்பெற்கின்றது...!!
எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்...!!

Kovai Senthil said...

அந்த ஸ்கூல் பையன் சுப்பர்.

தணல் said...

// இந்த செய்தியை இணையத்தில் பார்த்துவிட்டு அதன் லிங்ககை கொடுத்திருக்கிறேன். நானே கண்டு பிடித்ததாய் எங்கும் சொல்லவில்லை. //

கேபிள்ஜி, அது எனது தவறு தான்.

//இதை அந்தக்கம்பெனிக்கு எழுதி கேட்டால் நன்றாக இருக்கும :)//

நீங்கள் 'இன்னும் பல பிரச்சனைகளுக்கு பதில்' என்று குறிப்பிட்டிருந்ததால் தான் கேட்டேன்! அதெல்லாம் உங்களைப் போன்ற 'யூத்'துகளுக்குத் தான் தேவை! நான் அறிந்து கொள்ள விரும்பியது அந்தக் கம்பெனியைத் தோலுரிக்கத்தான்.

Cable சங்கர் said...

சாதிக் ஏன் உங்களுக்கு இந்த தாழ்வு மனப்பான்மை. என் நெருங்கிய நண்பர்களில் பலர் இஸ்லாமியர்கள். இது சினிமா பற்றியது.

Cable சங்கர் said...

தணல் தோலுரிப்பதற்கு வேறு க்ரீம்கள் இருக்கிறது.:))

Cable சங்கர் said...

//இந்தச் சூழலில் தமிழில் 3டி படங்கள் தொடர்ந்து வெளியாவது நடக்கக்கூடியதா? அல்லது கதைக்கு பிரம்மாண்டம் என்றில்லாமல் பிரம்மாண்டத்துக்குக் கதை என்றானது போல ஆகிவிடுமா? உங்கள் கருத்து/ஊகம் என்ன?//

நிச்சயம் பெரிய பட்ஜெட் படங்கள் 3டியில் வெளீயாகி வெற்றியடையும் போது தொடர்ந்து 3டி படங்கள் எடுக்கப்படும் என்பதே என் ஊகம்.

தணல் said...

// தோலுரிப்பதற்கு வேறு க்ரீம்கள் இருக்கிறது.:))//

உங்க கதைல வர்ற ஹீரோவுக்கு அதை போட்டுதான் தோலுரிச்சு விடுறீங்களா கேபிள்ஜி? :-) :-)