Thottal Thodarum

Aug 4, 2012

மதுபானக்கடையின் அவலங்கள்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சினிமாவை தயாரிக்கப் படும் பிரயத்தனங்களை விட அதை வெளிக் கொண்டு வருவதற்கு பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டும். அதுவும் மதுபானக்கடை போன்ற படங்கள் வெளிவர எல்லா குட்டிக்கரணங்களும் அடித்தே ஆக வேண்டும் எனும் போது ஏண்டா படம் தயாரித்தோம் என்று யோசிக்கத் தோன்றும்.


கோவையைச் சேர்ந்த கமலகண்ணனும் அவரது அண்ணனும் விளம்பரப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தவர்கள். அங்கே ஒரு சினிமா க்ளப் ஒன்றை நடத்தி நல்ல சினிமாக்களை பார்த்த பாதிப்பின் காரணமாய் நாமு ஒரு படமெடுக்கலாம் என்று முடிவெடுத்து, தங்கள் சொந்த காசில் ஒரு 7டி கேமராவை வாங்கி, ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, அதை டாஸ்மாக் பாராக்கி, நடிகர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து,  வழக்கமாக படப்பிடிப்புகளிடையே வரும் ப்ரச்சனைகள் அனைத்து சந்தித்து படத்தை முடித்துவிட்டார்கள். இந்த சிரமங்கள் எல்லாம் தெரிந்துதான் எடுத்தார்கள். அதனால் சிம்பதி தேவையில்லை. ஆனால் அதற்கு பிறகு நடந்த கூத்துதான் அவர்கள் எதிர்பாராதது.

சென்சார் சர்டிபிகேட் வாங்க படத்தை அதிகாரிகளுக்கு போட்டுக்காட்டிய போது, அவர்கள் சொன்ன பதில் அநியாயம். இந்தபடம் பொதுமக்கள் பார்வைக்கே செல்லக்கூடிய வகையில் இல்லை என்று சொல்லி சர்டிபிகேட் தர மறுத்திருக்கிறார்கள். இது முதல் அதிர்ச்சி. தமிழ் சினிமாவில் எவ்வளவோ வக்கிரங்களும், ஆபாச நடனங்களும், வசனங்களும் பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர் படங்களில் அதுவும் “யு” சர்டிபிகேட் கொடுத்து, வரிவிலக்கோடு அனுமதித்த இந்த குழுவின் இந்த பதிலால் ஆடிப் போகாமல் என்ன செய்ய முடியும் ஒரு தயாரிப்பாளர்/ இயக்குனரால்?

ஊரெல்லாம் டாஸ்மாக் பாரை அனுமதித்துவிட்டு, அதில் நடக்கும் காட்சிகளை காட்டக்கூடாது என்றால் எஸ்.எம்.எஸுக்கு எப்படி யு சர்டிபிகேட் கொடுத்தார்கள்?. மக்கள் பார்க்கத்தகுந்த படங்களுக்கான விதிகள் என்ன? என்று கேட்டதற்கு வேறு வழியில்லாமல் “ஏ” சர்டிபிகேட் கொடுத்து விட்டார்கள் அதுவும் பெரும் போராட்டத்திற்கு அப்புறம். சரி சர்டிபிகேட் வாங்கியாகிவிட்டது.  தமிழ் சினிமாவின் விநியோகஸ்தர்களுக்காக காட்சிகள் போடப்பட்டது.  ஒரு மாதிரியான மிக்ஸ்ட் ஒப்பீனியன் தான் அவர்களிடம் வந்தது.  அதனால் உடனடியாய் வியாபாரம் ஆகவில்லை.

ஒரு திரைப்படத்தின் முக்கியமான வருமானம் அப்படத்தின் சாட்டிலைட் டிவி ஒளிப்பரப்பு உரிமை மூலமாய்த்தான் வரும். அதற்கு பிறகுதான் எப்.எம்.எஸ். போன்ற வெளிநாட்டி ஒளிபரப்பு, மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமை மூலம் வரும் பணம். ஆனால் இந்த படத்தை சாட்டிலைட்டிலும் விற்க முடியவில்லை. ஏனென்றால் “ஏ” சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட படங்களை இந்திய சாட்டிலைட் சேனல்களில் ஒளிபரப்பக்கூடாது என்று சட்டம். அப்படியே ஒளிபரப்பினாலும் இரவு பதினோரு மணிக்கு மேல் தான் ஒளிபரப்ப வேண்டும் என்ற சட்டம் இருக்கிற்து. இதனால் தான் சமீபத்தில் “டர்ட்டி பிக்சர்’ எனும் படத்தின் ஒளிபரப்பு தடுக்கப்பட்டது. சரி.. அப்போது “ ஏ” சர்டிபிகேட் படங்கள் எல்லாம் ஒளிபரப்ப கூடாது என்றால் பல படங்கள் ஒளிபரப்பு ஆகியிருக்கிறதே என்று கேட்பீர்கள். அதற்கு தனி சென்சார் இருக்கிறது. இம்மாதிரி “ஏ” மற்றும் “யு/ஏ” சர்டிபிகேட் பெற்ற படங்களை டிவிக்காக மறு சென்சார் செய்து “யூ/ஏ’ வோ அல்லது “யூ” சர்டிபிகேட் வாங்கப்பட்டு விற்கப்பட்ட படங்கள் மட்டுமே விலைக்கு வாங்கப்படும். இந்தப்படம் முழுக்க முழுக்க பாரிலேயே எடுக்கப்பட்டதால் யூ/ஏ வாங்கினாலும் எல்லா கட்டுகளுக்கு பிறகு ஏதுவும் மிஞ்சாது என்ற முடிவில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை யாரும் வாங்க முன்வரவேயில்லை. எனவே இந்தப்படம் போட்ட முதலீட்டை எடுக்க வேண்டுமென்றால் தியேட்டரில் வெளியிட்டு அதன் மூலம் மட்டுமே எடுக்க முடியும்.

நான் பொறுப்பில் இருக்கும் விநியோகக் கம்பெனியும் சாட்டிலைட் உரிமம் கிடைக்காது என்பதால் பின்வாங்கிக் கொள்ள, அவர்களே சொந்த செலவில் படத்தை வெளியிட முடிவு செய்து தேதி அறிவித்தார்கள்.  அப்போதும் ப்ரச்சனை... சென்னையின் முக்கிய மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் எல்லோரும் இப்படத்தின் பெயருக்காகவே தங்கள் தியேட்டரில் வெளியிட மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் தியேட்டரில் தான் “Hang over" 'Cocktail'  போன்ற படங்கள் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.  ஆங்கிலத்தில் சொன்னால் அது ஸ்டைல் தமிழில் சொன்னால் அது அசிங்கம். என்ன கொடுமையடா.. இது.

மதுபானக்கடை படத்தை பற்றி உயர்த்திச் சொல்லவோ,இல்லை விளம்பரப்படுத்தவோ, இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படமெடுக்கிறார்கள் என்று சிம்பதி தேடவோ, அதனால் இப்படத்திற்கு ஆதரவு கொடுங்கள் என்று சொல்லவோ அல்ல. இம்மாதிரி புது முயற்சி செய்ய வரும் இளைஞர்களின் ஆர்வத்தை முளையிலேயே நசுக்கிக் கொண்டிருக்கும் இந்த சிஸ்டைத்தைப் பற்றி என் ஆதங்கத்தை பகிரவே இக்கட்டுரை. 

Post a Comment

21 comments:

CS. Mohan Kumar said...

செம கட்டுரை கேபிள். சினிமாவின் உள்ளே இருப்பதால் உங்களுக்கு படங்கள் பற்றி இவ்ளோ விஷயங்கள் தெரிகிறது

கோவை நேரம் said...

வணக்கம்..தல..சரியான புள்ளி விவரம்...

கோவை நேரம் said...

யம்மாடி...நம்ம ஊர் காரங்க இவளோ கஷ்டபட்டு இருக்காங்களா..?

உலக சினிமா ரசிகன் said...

சபாஷ்...சங்கர்.
கை கொடுங்கள்...
இந்த துணிச்சலான பதிவுக்கு உங்களை தலை வணங்குகிறேன்.
நீங்கள்...ஒரு இயக்குனராகவோ,தயாரிப்பாளராகவோ உங்கள் படம் சென்சாருக்கு போகும் போது இந்த பதிவை மனதில் வைத்தே உங்களை நிச்சயம் பழி வாங்குவார்கள்.
இருந்தும் சென்சார் என்ற மிருகத்தை துணிச்சலாக கேள்வி கேட்ட ஆண்மைக்கு...ஸ்பெஷல் பாராட்டு.

Anonymous said...

சாட்டிலைட் டிவிக்களில் ஒளிபரப்பமுடியாது என்பதிலாவது நியாயம் இருக்கிறது.ஆனால் தியேட்டர்காரர்கள் செய்ததும் சென்ஸார் ஆட்கள் செய்ததும் அப்பட்டமான அநியாயம்.

டாஸ்மாக் காட்சிகள் இல்லாத படங்களே இல்லை. குடிக்காத கதாநாயகனே தமிழ்ப்படங்களில் இல்லை. யூ சர்ட்டிபிகேட்டுடன் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்துவிட்டு குடிக்கிற காட்சிகளை காட்டுவதை விட, பெயரிலேயே மதுபானக்கடை என்று சொல்லிவிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்களை வரவழைக்கிற இந்தப்படம் திரையிடப்பட வேண்டும்.

கொதிக்குது எனக்கு...சில்லுனு ஒண்ணு அடிக்கணும்...வரட்டா!!!

Thirumalai Kandasami said...

நேற்றே பார்க்கலாம் என்று இருந்தேன் ..சரி இன்று போகலாம் என்று பார்த்தால் அதிர்ச்சி..பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்கி விட்டார்கள்..என்ன கொடுமை இது..
http://in.bookmyshow.com/buytickets/?srid=CHEN&eid=ET00010547&cid=&did=20120804&ety=MT

Unknown said...

Nalla purithal

sathish said...

Fame இல் அட்லீஸ்ட் ஒரு ஷோ ஆவது ஓட்டுகிறார்கள்.

பெண்கள் கூட்டம் இந்த படத்திற்கு வராது என்று நினைத்திருக்கலாமோ?

எவ்வளவு மொக்கையாய் படம் எடுத்தாலும் இந்த மல்டி பிளெக்ஸ்களில் ஓட்டுவார்கள். சகுனியை எல்லாம் சகட்டு மேனிக்கு ஓட்டுகிறார்கள். இந்த படத்திற்கு போனால் இரண்டாம் கிளாஸ் பையனே பாதியில் எழுந்து வந்து விடுவான்.

ஒரு ரிச்சான பாரில் நடக்கும் கதை, புஜபலத்தை எல்லா சீனிலும் காட்டிகொண்டிருக்கும் சல்மான்கான் டைப் பாலிவுட் ஹீரோக்கள், இடையில் நிப்பிள், பேண்டி தெரிய ஆடும் நாலைந்து கிளப் டான்ஸ் என்றிருந்தால், திரையிடுவதில் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

பாரின் சரக்கு ஒஸ்தியா? லோக்கல் சரக்கு ஒஸ்தியா? சொல்லுங்க!

ஆனால் இப்படத்திற்கு சுத்த தமிழில் பெயர் வைத்ததற்கு வரி விளக்கு கிடைத்ததா?

என்ன இருந்தாலும் தியேட்டர்காரர்கள் செய்தது மாபெரும் தவறு.

படம் எப்படி? ஒருமுறை பார்க்கலாமா? fame இல் ஆவது போய் பார்க்கிறேன்.

Anonymous said...

சத்யம் தியேட்டர் ஏன் இப்படத்தை வெளியிடவில்லை என்பது இப்போதுதான் தெரிகிறது. தகவலுக்கு நன்றி.

rajamelaiyur said...

//இம்மாதிரி புது முயற்சி செய்ய வரும் இளைஞர்களின் ஆர்வத்தை முளையிலேயே நசுக்கிக் கொண்டிருக்கும் இந்த சிஸ்டைத்தைப் பற்றி என் ஆதங்கத்தை பகிரவே இக்கட்டுரை.
//

சென்சார் போர்ட் செய்யும் கூத்துக்கு அளவே இல்லை .. எப்படி எப்படி ........ எப்படி என என படத்தில் கட் பண்ணுவார்கள் ஆனால் ஆடியோவில் அப்படியே வரும் ..

rajamelaiyur said...

இன்று

சே குவேரா ஒரு வரலாற்று நாயகன்

வவ்வால் said...

கேபிள்ஜி,

இப்படம் வெளியாக கஷ்டப்பட வேண்டும் என்பது அறிந்ததே,சின்னப்பட்ஜெட்ப்படம் ,ஸ்டார் வேல்யு என எதுவுமே இல்லை.

சேது போன்ற படங்கள் வெளிவர என்ன திணறியது ,ஆரண்யக்காண்டம் என்ன போராடியது என்பதெல்லாம் பார்த்தால் நிலைமை புரியும்.

ஆனால் இந்த இடத்தில் சில கேள்விகள்?

1)//நான் பொறுப்பில் இருக்கும் விநியோகக் கம்பெனியும் சாட்டிலைட் உரிமம் கிடைக்காது என்பதால் பின்வாங்கிக் கொள்ள,//

ரெட்ஜெயண்ட் வாங்கி வெளியிட்ட மைனா வின் சாட்டிலைட் உரிமையே விஜய் தான் வாங்கியது.

எனவே விநியோகஸ்தர் சாடிலைட் உரிமை பத்தி கவலைப்பட வேண்டியதில்லை.

அடிமாட்டு விலைக்கு ஒட்டு மொத்தமாக எல்லா உரிமையும் சின்ன தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கிவிட துடிக்கும் விநியோகஸ்தர்களே சாட்டிலைட் , வெளிநாடு என எல்லாத்தையும் ஒரு சொற்ப தொகைக்கு வாங்கி தயாரிப்பாளருக்கு ராமம் போடுவார்கள்.

2)மல்டிபிளெக்ஸ் செயல்பாடும், வருமான பிரிப்பும் வேற வகை ,சத்யமில் தியேட்டர் வாடகை கட்டினால் கூட சின்னப்பட்ஜெட் படம் என்றால் வெளியே போல சொல்லக்கூடியவர்கள், ஒரு காட்சி போட்டதே பெரிய விஷயம்.

3)முதல் படம் செய்பவர்கள் சென்சார் கைட் லைனுக்குள் உட்பட்டு செய்திருக்கலாம்.

ஒரு தகவலுக்கு ,சுப்ரமணியபுரம் , வெளிநாட்டு உரிமையும், சேட்டிலைட் உரிமையும் விற்பனையாகம் ஆகாமல் விநியோகம் மட்டும் நடந்தது. கடைசியில் ஸீ டி.வி தான் சொல்ப தொகைக்கு வாங்கியது,தியேட்டர் கலக்‌ஷனில் தான் லாபம் பார்த்தார்கள்.

எதுக்கு சொல்கிறேன் என்றால் தியேட்டர்கள்,விநியோகஸ்தர்கள்,சென்சார் செய்கிற கட்டுப்பாடுகளையும் தாண்டி படம் நன்றாக இருந்தால் ஓட்டமுடியும் என்பதற்காக.

shortfilmindia.com said...

Pala thagavalkal thavaranavai vaval

குரங்குபெடல் said...

அண்ணே Multiplex கதையை விடுங்க அண்ணே . .

போரூர் கோபாலக்ரிஷ்ணாவில்

ரெண்டே நாளில் படம் தூக்கப்பட்டு

சரித்திர நாயகி Sunny Leon நடித்த

Jism 2

போடப்பட்டு உள்ளது

வவ்வால் said...

கேபிள்ஜி,

என்ன தவறானவை, விநியோகஸ்தர் ஏன் சேட்டிலைட் உரிமம் வேண்டும் என கேட்க வேண்டும்,அவரிடம் சேனல் இருக்கா ,இருந்தாலும் தனி தனியே கட்டுப்படியாகும் விலை எனில் கொடுப்பார்கள்.

ஆஸ்கார் ரவிச்சந்த்திரன் எத்தனைப்படத்திற்கு சேட்ட்லைட்ஸ் ரைட் வாங்கினார்?

புதிய,சின்ன, அனுபவமில்லாத தயாரிப்பாளர்கள் படம் விற்றால் போதும் போட்டக்காசு எடுக்க எல்ல உரிமையும் தருவார்கள், மற்றபடி சேட்டிலைட் ,ஓவர் சீஸ் எல்லாம் என்கிட்டே ஒரு தொகைக்கு கொடுத்தா தான் படமே விநியோகம் செய்வேன் என சொல்லும் வியோகஸ்தர் தயாரிப்பாளரை கொள்ளை அடிக்கிறார் என்றே சொல்லலாம்.

வவ்வால் said...

யோவ் .கு.பெ

போரூர் கோபால க்ரிஷ்ணா, பானுவில் எல்லாம் கில்மாவுக்கு தான் வரவேற்பு.

ஆனாலும் மக்கள் "மதுபானக்கடை"னு பேரு பார்த்து ஏதோ ஸீன் தேருமான்னு வந்து இல்லாத கடுப்பில்ல தியேட்டர் சீட்டை உடைச்சு இருக்கும் போல :-))

மணிவண்ணன் ஒடு படத்த்தில சொல்றாப்போல என்னது ஆலமர மஞ்சாயத்து சீன் இல்லையா , அப்புறம் எப்புடி படம் ஓடும்ன்னு ,அதே போல சாராயக்கடைல குத்து பாட்டு , கிளுகிளுப்பு இருக்கணும்னு மக்களை கெடுத்து வச்சு இருக்காங்கப்பா.

காமெடிப்படமான கலகலப்பை கூட கிளுகிளுப்பா அஞ்சலி, ஓவியாவை எக்ஸ்போஸ் செய்து தான் ஓட விட்டாங்க, முதல் வரிசையில இருந்து கடைசி வரிசை ஆடியன்ஸுக்கு வரைக்கும் படத்தில ஸீன் வைக்கணும் :-))

Jackiesekar said...

என்னதான் மாற்று சினிமா வேண்டும் என்று போரராடினாலும் இது போன்ற பின் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டியது கொடுமையிலும் கொடுமை.

”தளிர் சுரேஷ்” said...

சிறந்த முயற்சிகளுக்கு முதலில் சறுக்கல்கள்தான்!பின்னர் எழுச்சி பெறும்! நல்ல பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

pichaikaaran said...

இது போன்ற தகவல்களை தரக்கூடிய , திரைத்துறையை சார்ந்த ஒருவர் , வலைத்தளத்தில் இயங்குவது , மகிழ்ச்சிக்குரியது...

காப்பிகாரன் said...

சூப்பர் சூப்பர் வேண்டபட்டவங்களுக்கு மட்டும் என்ன எடுத்தாலும் சர்டிபிகட் குடுபாணுக இவங்க மாறி ஆளுங்கலாலா தான் உருபுடாம போகுது

இளம் பரிதி said...

சார் உங்க சினிமா வியாபாரம் புக் 'மதி நிலையம் 'ரிலீஸ்ல தரம் சூப்பரா இருக்கு .....ஈரோடு புத்தகக் காட்சில பார்த்தேன் .....நான் கிழக்குல அநியாய விலைக்கு வாங்கி அது பேப்பர் பேப்பரா வந்துடுச்சு ....