Posts

Showing posts with the label udhayam theater

அஸ்தமனமாகும் உதயம்

Image
  அஸ்தமனமாகும் உதயம் தனியாய் சினிமா போக ஆரம்பித்த காலம் அது . அப்போது தான் உதயம் திரையரங்கத்தை திறந்தார்கள் . முதலில் திறக்கப்பட்டது உதயம் மற்றும் சந்திரன் என்று தான் நினைக்கிறேன் . மற்ற தியேட்டர் வேலை நடந்து கொண்டிருந்தது . முதன் முதலில் அங்கே ரிலீஸான படம் ரஜினியின் சிவப்பு சூரியன் . சைக்கிளில் சென்று படம் பார்த்தேன் . சைக்கிள் பார்க்கிங், அங்கே விற்கும் சமோசா, கூல்டிரிக்ச் எல்லாம் சேர்த்து 10 ரூபாய்க்குள் படம் பார்த்துவிட்டு வந்துவிடலாம் . உதயத்தின் பெரிய ஸ்க்ரீனைப் பார்த்ததும் மிகவும் ஆச்சர்யமாய் இருந்தது . இன்றைக்கு போல மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் இல்லாத காலம் . ஒரே கட்டிடத்தினுள் நான்கைந்து காம்ப்ளெக்ஸ் தியேட்டர்கள் தான் அப்போதைய பேஷன் . சிவப்பு சூரியனில் மொக்கை வாங்கினாலும் , அட்டகாசமான ஒரு திரையனுபவத்தை கொடுத்தது உதயம் தியேட்டர் . உதயம் ஆரம்பித்த காலத்தில் பில்லர் பக்கம் மட்டுமே கொஞ்சம் ஆங்காங்கே கூட்டம் இருக்கும். அந்தப் பக்கம் கே.கே.நகர். எதிரே வடபழனி பக்கம்  போகப் போக இருளோ என்று இருக்கும். எங்கம்மா இந்த ஏரிய...